Home » Articles » சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்

 
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்


செலின் சி.ஆர்
Author:

ஹலோ… எப்படியிருக்கீங்க! சக்சஸ் உங்கள் சாய்ஸ் தொடருக்கும், ஆடியோ சிடிக்கும் நீங்கள் கொடுத்து வரும் மகத்தான ஆதரவுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

சுயதொழில்(Business) செய்யும் நிறையபேர், “என்மேல், என்ன தவறுன்னே தெரியல, எப்பவுமே நஷ்டமாகுதே.. ஒரு முறைன்னா பரவாயில்லே.. தொடர் தோல்வியாவே இருக்கே…” என்று புலம்பிக் கொண்டிருப்பார்கள். இதற்கு காரணம் தகுதியானவர்களுடன் தொழில்முறை உறவு (Business contact) வைத்துக்கொள்ளாமல் கொஞ்சம் கூட தகுயில்லாதவர்களுடன் வியாபாரம் செய்வதுதான்.

ஆழமாய் யோசித்துப் பாருங்கள். நீங்கள் யாருடனெல்லாம் தொழில்ரீதியாக கூட்டு வைத்திருக்கிறீர்கள்., பேசுகிறீர்கள் என்று யோசித்துப் பாருங்கள். அவர்களின் முகங்களை நினைவுக்குக் கொண்டுவரும்போது தகுதியில்லாவர்கள் யார் யாரென உங்கள் உள்ளுணர்வு சொல்லும் ஒவ்வொரு கணமும் நமது உள்ளுணர்வு (Instinct) சொல்வதைக்கேட்டு, அதன்படி நடந்தாலே நமது தோல்விகளில் பலவற்றைத் தவிர்க்கலாம். ஆனால், நாம் அப்படி செய்யவே மாட்டோம். எப்போதுமே நமது உள்ளுணர்வு சொல்வதற்கு எதிராகத்தான் காரியங்களை செய்வோம். எடுத்துக் காட்டாக, ஒரு நபரை முதலில் சந்திக்கும் போதே அல்லது தொலைபேசியில் பேசும்போதே, “இந்த ஆள் பேசுவதே ஒழுங்காயில்லை, ஒரு தரமான வியாபாரி போலில்லாமல் பொறுப்பற்றுப் பேசுகிறான். இந்த ஆளை நம்பி காரியத்தில் இறங்காதே… என்று உங்கள் ஆழ்மனம் சொல்லும். ஆனால், நீங்கள் அதை அசட்டை செய்துவிட்டு, “பிஸினஸ்ல எல்லாருடைய contactம் முக்கியம். வாய்ப்பை விடக் கூடாது….” அப்படி இப்படி என்று உங்களுக்கு நீங்களே சமாதானம் சொல்லிக் கொண்டு, கண்ணை மூடீக்கொண்டு களத்தில் இறங்குவீர்கள். எந்தவித முன்பணமும் வாங்காமல், உங்களது பொருட்களைக் கொடுப்பீர்கள். அடுத்த நாளே அவற்றை விற்று தொகையை செலுத்துவதாய் ஜம்பம் அடித்துப் போகும் அந்த நபர் மாதம் ஒன்றாகியும் இரண்டாகியும் திரும்பியே பார்க்க மாட்டார். அதைவிட கொடுமை, நீங்கள் ஃபோன் செய்தால் கூட எடுக்கமாட்டார். வேறொரு நம்பரிலிருந்து ஃபோன் செய்தீர்களென்றால், பில்கேட்ஸ் ரேஞ்சுக்கு படு பொறுப்பாய் ‘ஹலோ’ சொல்வார்.

அழைத்தது நீங்கள் தான் என்று தெரிந்தவுடன் அசடு வழிவார். அங்கே அவர் பேய் முழி விழிப்பது உங்களுக்கு இங்கே தெரியும். சரி, உங்கள் குரலக் கேட்டவுடனாவது கொஞ்சம் குற்ற உணர்ச்சியோ இல்லை பொறுப்போ வருமா…? ஊஹூம்.. எருமை மாடு மீது மழை பெய்வதைப் போல அதே கதைதான். “கட் பண்ணுங்க, நான் உடனே கூப்பிடறேன்…” என்று அவசர அவசரமாய் இணைப்பைத் துண்டித்து விடுவார். அவ்வளவுதான்… ஃபோன் செய்வார்… என தவமாய் தவமிருந்தீர்ளென்றால், நீங்கள்தான் பைத்தியக்காரர். ஃபோனும் வராது. உங்கள் பொருளும் திரும்பக் கிடைக்காது. “நீங்க விக்கலேன்னாலும் தயவு செய்து என் பொருளையாவது திருப்பித் தாங்க….” என்று அழாத குறையாய் கேட்டுப் பார்த்தாலும் பிரயோஜனமிருக்காது. கடைசியில் தண்டச் செலவு ஆனாலும் பரவாயில்லை என்று புலம்பிக் கொண்டு, அந்த எருமைத்தோல் நபரைத் திட்டிக்கொண்டு ஒரு ஆட்டோவையோ, காரையோ எடுத்துக கொண்டு அவனது இடதிற்கே போய் உங்கள் பொருளை எடுத்துக் கொண்டு வருவீர்கள். அப்பொழுதும் குற்றவுணர்ச்சி கொஞ்சமும் இல்லாமல், ஏதோ தனது சொத்தை தாரை வார்த்துக் கொடுப்பது போல, “தாரளமாய் எடுத்துக்கிட்டுப் போங்க….” என்று அள்ளிக் கொடுப்பான். உணர்ச்சிகளை வெளியே காட்டிக் கொள்ளாமல் (பெரிய Business contactல்ல எப்படி கோப்ப்ட முடியுமாம்…?) வெறுப்பையும், கோபத்தையும் எச்சிலுடன் சேர்த்து விழுங்கி, வீட்டிற்கு வந்து பார்சலைப் பிரித்தால், “இனிமேல் என்னை பாதி விலைக்குக் கூட விற்க முடியாது…” என்று பல்லிளிக்கும் உங்கள் பொருட்கள். உணவுப் பொருளாயிருந்தால் கேட்கவே வேண்டாம். எப்படி இருக்கும் என்ற ஆர்வத்தில் அந்த ஜென்ம்ம் திறந்து பார்த்து விட்டு அப்படியே வைத்திருக்கும். பூசனம் பூத்து புழு எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும். தலையிலடித்துக் கொண்டே, அக்கவுண்ட் ரெஜிஸ்டரில் நஷ்டக்கணக்கு எழுதுவீர்கள்

உங்கள் ஆழ்மனம் சொல்வதைக் கேட்காமல், நம்பக்கூடாதவர்களை நம்பியதால் உங்களுக்கு என்னென்ன விதங்களில் பாதிப்பு?

1. மன உளைச்சல்.
2. நேர விரயம்.
3. புதிய, நல்ல வாய்ப்புகளைப் பயனபடுத்த முடியாமல் போதல்.
4. ஃபோன் செலவு
5. BP எகிறுதல்
6. தோல்வி மனப்பான்மைக்கு உள்ளாதல்
7. அதீத தலைவலி
8. தூக்கமின்மை
9. நம்பிக்க இழப்பு
10. பொருள் இழப்பு, பண நஷ்டம்

“என்னங்க.. உங்களுக்கும் தொழிலில் இப்படிப்பட்ட அனுபவம் ஏற்பட்டிருக்கிறதா? எப்படி இந்த சூழலை சமாளித்தீர்கள் என்று, “சி.ஆர். செலின்” என குறிப்பிட்டு தன்னம்பிக்கை முகவரிக்கு எழுதி அனுப்புங்கள். இது மாதிரியான பொறுப்பற்ற (Irresponsible) ஜென்மங்களை எப்படி சமாளிப்பது? நஷ்டத்திலிருந்து நீங்கள் எப்படி தப்பிப்பது? என அடுத்த இதழில் பேசுவோம்.

– தொடரும்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2007

பென்சன்
அதிகரிப்போம் தன்னம்பிக்கையை நகைச்சுவையால்
வாசிப்பே மனிதனின் சுவாசிப்பு
சேவைச் செய்தி
மக்களின் நலனே பதவியின் பலன்
இதுதான் வாழ்க்கை
சிந்தனைத்துளி
பயிலரங்கச் செய்தி
குறிக்கோள்களை எளிதில் அடைய உதவும் அற்புத வழிமுறைகள்
கோழியும் குஞ்சும்
ருசியா? பசியா?
உழைக்கும் மனப்பான்மை குறைந்து வருகிறது
உள்ளத்தோடு உள்ளம்
மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்ட ஆண்டு விழா
மனதின் மொழி
வேரில் பழுத்த பலா
தடைகளைத் தாண்டுங்கள்
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்
புதிய பார்வை, புதிய வார்த்தை, புதிய வாழ்க்கை ஒரு புத்துலக கோட்பாடு
திறந்த உள்ளம்