Home » Articles » புதிய பார்வை, புதிய வார்த்தை, புதிய வாழ்க்கை ஒரு புத்துலக கோட்பாடு

 
புதிய பார்வை, புதிய வார்த்தை, புதிய வாழ்க்கை ஒரு புத்துலக கோட்பாடு


திருவள்ளுவர் ம
Author:

புதியதோர் உலகம் செய்வோம் – என்றார் பாவேந்தர்.

புதிய உலகமா? நல்லது… ஆனால் அதை எப்படி ஆக்குவது?

என்று என்னுள் எழுந்த வினா!….

இல்லை இல்லை… அதுதான் என்னுள் விழுந்த விதை!

சிந்தித்தேன்.. சிந்தித்துக் கொண்டே சென்றேன்.

புதிய வானம்?

புதிய நட்சத்திரங்கள்?

புதிய உயிரினங்கள்?

புதிய மனிதர்கள்? – எப்படி எப்படி எப்படி?

என எழுந்த வினா.. என்னை அணு அணுவாகத் துளைத்தது. உறக்கம் பிடிக்கவில்லை. உண்ண முடியவில்லை…..

“உள்ளத்துள் நல்ல உள்ளம்
உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா”…..

என்று கண்ணன் சொல்வதாக அவனது தாசன் எழுதி வைக்க-
சீர்காழி கோவிந்தராஜன்
வெண்குரலில் பாடிய பாடல்தான்
நினைவுக்கு வருகிறது.

அப்படித்தான் விழித்துக் கிடந்தது என் மனது….

அதனால் முளைத்து வளர்ந்தது தான் “புதிய பார்வை”.

புதிய உலகம் என்பது புதிய மனிதர்களால் ஆவதுதான் அல்லவா?

புதிய மனிதர்களை எதனால் ஆக்க முடியும் என்று யோசித்தேன்…..

“புதிய மனம்” வாய்த்துவிட்டால் அவர்களை “புதிய மனிதர்கள்” என்று அழைக்கலாம் என்று தோன்றியது. சரி புதிய மனதை எப்படி ஆக்குவது என்று ஒரு கேள்வி முளைத்தது. புதிய பார்வையால் தான் புதிய மனதை ஆக்க முடியும் என்றொரு விடையும் நாளடைவில் எனக்கு கிடைத்தது.

சரி… “புதிய பார்வை” எப்போது கிடைக்கும்? என்றொரு குமிழ் என்னுள் தோன்றி மறைந்தது…. அப்போதுதான் இன்று புதிதாய் பிறந்தோம்”… என்னும் பாரதியின் குரல் என்னுள் எதிரொலித்தது. உடனே எப்படிப் புதிதாய் இறப்பது என்னும் அடுத்த வினா எழுந்தது.

ஒவ்வொரு நாள் புலரும்போதும்,
மூடிய மனிதர்களின் கண்கள் மலரும்
போதும்,

நமது எண்ணங்கள் புதிதானால் நமது பார்வை புதிதாக்கும்

மனம் முழுதும் திறந்து –
முன்பதிவும் ஏதுமின்றி
மேகமின்றித் துடைத்துப் போட்ட வானம்
மாதிரி
“ஒரு வெளி” நமக்குள் வாய்த்தால்
எப்படியிருக்கும்!

தனி மனிதன், சமூகம், அதன் சடங்குகள், சம்பிரதாயங்கள்
என எல்லாம் புதியவையாய் புதுப்பிக்கப்படுவமல்லவா?

எல்லாம் நாம் பார்க்கும் பார்வையால் மட்டுமே முடியும்….

பார்வைதான் எத்தனை மகத்துவமானது? சற்றே சிந்தித்துப் பாருங்கள்….ஒரே நிகழ்வை ஒரே சம்பவத்தை ஒரே பொருளைப் பார்க்கும் வெவ்வேறு மனிதர்களின் பார்வைகள் ஒரே மாதிரியாகவா இருக்கின்றன?

பார்வைகள் மாறிக்கொண்டே இருப்பதால் தான் புதிய கொள்கைகள், கோட்பாடுகள் சமூகப் பொருளாதாரப் பண்பாடு மாற்றங்கள், நோய்கள், மருந்துகள் கண்டுபிடுப்புகள் என எல்லாமே!

காந்தியின் பார்வை வேறு – நேதாஜியின் பார்வை வேறு…..

காமராஜரின் பார்வை வேறு நேதாஜி – அண்ணாதுரையின் பார்வை வேறு, புத்தரின் பார்வை வேறு, மகாவீரரின் பார்வை வேறு-

சங்கரரின் பார்வை வேறு – பெரியாரின் பார்வை வேறு-

இந்தியப் பார்வை வேறு – அமெரிக்கப் பார்வை வேறு –

மாமனிதர்களின் பார்வை மாற்றம் ஒரு புறமிருக்க……

குறுகிய பார்வை, தொலைத்தூரப்பார்வை, பறவைப்பார்வை…. என எத்தனையோ பார்வைகள். நம்மால் பார்க்கப்படுகின்றன அன்றாடம்!

யாராவது எதையாவது முழுமையாகப் பார்த்திருப்பார்களா? என்பது ஐயமே! அவரவர் நோக்கில் அவரவர் கடமை நிறுவிச்சென்றுள்ளனர்.

யானையைப் பார்த்த குருடர்கள் யானையை முழுமையாகக் கண்டார்களா? என்ன?

ஆகவே பார்வை மாற்றமே….. காட்சி மாற்றமாய் ஆகி நிற்கிறது என்பது தெளிவாகிறது.

நமது பார்வைக்கேற்றார்போல் காட்சியளிக்க இந்தப் பிரபஞ்சம் காத்திருக்கிறது.

எனவே, நேற்றுவரை இருந்த முன்பதிவுகள் இல்லாமல்…

இன்று புதிதாய் பிறந்த மனோபாவத்தோடு எதையும் – புதிதாக,

யாரையும் புதியவராய்ப் பார்க்கும் “புதிய பார்வை” வாய்த்துவிட்டால் உலகே புதிதாக மாறிவிடும் என்பது உண்மைதானே.

திரையிட்ப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுக் கிடக்கும் மனதை – முழுவதுமாய்த் திறந்து வைத்திருந்தால் எல்லாம் எப்போதும் புதிதாய் தெரியும். இதற்கு ஒவ்வொரு கணமும் நாம் “போகி” கொண்டாடப் பழக வேண்டும். சென்ற நிமிடம் நமது மனதில் நிற்கக்கூடாது.

அடுத்த கணம் குறித்த கவலையும் கூடாது.

இக்கணத்தில் – இவ்விடத்தில் – இருக்க வேண்டும்.

நடப்பதை முழுமையாகக் கவனிக்க வேண்டும்.

கண்கள் ஓரிடமும் மனது வேறிடமுமாய் விலகி நின்றால் பார்வை முழுமையுறாது.

புதிய பார்வை பெற்றுவிட்டால் பழைய சலிப்பும் – அலுப்பும் வெறுப்பும் கவலையும் நொடியில் மறந்து விடும்.

புதிய பார்வை கொண்ட மனிதர்களால் தான் பூமிக்குப் புதிய வார்த்தைகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

ஏசுவின் புதிய பார்வை தான் “பைபிள்” திருவள்ளுவரின் புதிய பார்வை தான் “திருக்குறள்”

கலிலியோவின் புதிய பார்வை தான் “உருண்டைப் பூமி”

நியூட்டனின் புதிய பார்வை தான் “புவியீர்ப்பு விசை”

பில்கேட்ஸின் புதிய பார்வை தான் “விண்டோஸ்”

காந்திஜியின் புதிய பார்வை தான் “அஹிம்சை”

தெரசாவின் புதிய பார்வைதான் “நிர்மல் ஹிருதயம்”

தாகூரின் புதிய பார்வைதான் “சாந்திநிகேதன்”

இப்படி.. இன்று நடந்து வரும் ஒவ்வொரு மாற்றமும், யாரோ சிலரின் புதிய பார்வைகளால்தான் சரித்திரமாகிவிடுகிறது.

புதிய பார்வைகளே… புதிய வார்த்தைகளாக வெளிவந்து அந்த வார்த்தைகளே நாளடைவில் புதிய வாழ்க்கையாகப் பரிணமித்திருக்கிறது. அதாவது புதிய எண்ணமே புதிய சொல்லாகி, புதிய செயலுக்கு வழி கோலுவதாக இருக்கிறது.

இந்தப் புதிய பார்வையும், புதிய வார்த்தையும், புதிய வாழ்க்கையும், வர்த்தகம் பொருளாதாரம், அரசியல், சமூகம், இலக்கியம், அறிவியல், கணிப்பொறி, ஆன்மீகம் என வாழ்வின் அத்தனைத் துறைகளிலும் தனது முத்திரைகளைப் பதிக்கும்போது ஏற்றமுறும் மாற்றங்களை இந்த உலகம் சந்தித்தே தீரும்!

அப்படி மக்களின் பார்வை புதிதாக மாறும் போதுதான் இந்த உலகும் புதியதோர் பொலிவோடு வலம் வரும். எனவேதான்… இன்று மட்டுமல்ல என்றென்றும் நிலைத்து நிற்கும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2007

பென்சன்
அதிகரிப்போம் தன்னம்பிக்கையை நகைச்சுவையால்
வாசிப்பே மனிதனின் சுவாசிப்பு
சேவைச் செய்தி
மக்களின் நலனே பதவியின் பலன்
இதுதான் வாழ்க்கை
சிந்தனைத்துளி
பயிலரங்கச் செய்தி
குறிக்கோள்களை எளிதில் அடைய உதவும் அற்புத வழிமுறைகள்
கோழியும் குஞ்சும்
ருசியா? பசியா?
உழைக்கும் மனப்பான்மை குறைந்து வருகிறது
உள்ளத்தோடு உள்ளம்
மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்ட ஆண்டு விழா
மனதின் மொழி
வேரில் பழுத்த பலா
தடைகளைத் தாண்டுங்கள்
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்
புதிய பார்வை, புதிய வார்த்தை, புதிய வாழ்க்கை ஒரு புத்துலக கோட்பாடு
திறந்த உள்ளம்