Home » Articles » திறந்த உள்ளம்

 
திறந்த உள்ளம்


admin
Author:

தன்னம்பிக்கை சூலை இதழ் கண்டேன். அமரர் டாக்டர் இல.செ.கந்தசாமி அவர்களின் அறிவை மழுங்கச் செய்யும் நாற்காலிகள் எனும் நாற்காலிகள் தலைப்பில் எழுதியிருந்தது நல்லவற்றை நிலைநாட்ட துன்பங்களை ஏற்றுத்தானாக வேண்டும் என்ற கருத்து பசுமரத்தாணி போல் இதயங்களில் பதி(வு)யச் செய்தது. திரு. Jc S.M. அருள்நிதி பன்னீர்செல்வம் தன்னம்பிக்கை பயிற்சியாளர் கூறியதுபோல, வாத-விவாதங்களை தவிர்த்து தன்னம்பிக்கையை வளர்த்தால் போதும் என்ற கருத்து சூப்பரோ – சூப்பர், திரு.ம.திருவள்ளுவர் எழுதிய தலைமைக்குத் தேவை ஆறுமுகங்கள் மிக அற்புதம் – இதனை வாழ்க்கையில் கடைப்பிடித்தாலே வாழ்வோ வளம்தான். சி.ஆர். செலின் எழுதிய சக்ஸஸ் – கட்டுரை விழிக்கு மட்டுமல்ல நல்ல வழிக்கும் வழிகாட்டியாய் அமைந்திருந்தது. பயனுடையதாயிருந்தது சு. செந்தில்ராஜா எழுதிய கவிதை “குழந்தைத் தொழிலாளர்கள் – நெகிழச் செய்தது. சூலை இதழ் மலர்க்கிரீடம் சூட்டும்படியாய் திகழ்ந்தது.
-“கவிமுரசு” சு. இலக்குமணசுவாமி, மதுரை

உள்ளத்தோடு உள்ளம் தொடங்கி மக்களின் கடமையை, விழிப்புணர்ச்சியை, வலியுறுத்திய “அறிவு மழுங்கச் செய்யும் நாற்காலிகள்” பகுதி மிக அருமை. மனப்பூர்வமான முயற்சி மகத்தான வெற்றி! என்ற தலைப்பில் பவனி வந்த டாக்டர். நல்லா G. பழனிசாமி உழைப்பால் உதித்த உத்தமர் அவர்களுக்கு என்னின் பணிவான வணக்கங்கள். நன்றிகள். “மனோசக்தியின் மறுவடிவமே பிரார்த்தனை” கட்டுரை மிக அருமை. “வேரில் பழுத்த பலா” மனதின் ஆற்றலைப் பேசும் தொடரில் ஜெ. கமலநாதனின் மனதில் பதித்து வைக்கும் படியான கருத்துக்கள். அறிஞர்களின் சிந்தனைதுளி மிக அருமை. “வாதம், விவாதம், பிடிவாதம் விதாண்டாவாதம்” பற்றிய கட்டுரை அருமை. ‘தலைமைக்குத் தேவை ஆறுமுங்கள்’ ம. திருவள்ளுவர் அவர்களின் கட்டுரை வாசிப்பவர்களின் மனதில் முகாமிட்டது. “சக்சஸ் உங்கள் சாய்ஸ்” – சி. ஆர். செலின், ஜெ. மணவழகன், இமயஜோதி திருஞானாந்தா சுவாமிகள், மோனோலித் வாழ்கை – ப. யோகதா, முனைவர் வெ. செல்வசுரமணியன் போன்றவர்களின் கட்டுரைப் பகுதிகள் மிக அருமை.

தங்கவேலு மாரிமுத்து, பேரா. ஆ. ரத்தினசாமி, இவர்களுக்கு என்னின் முதற்கண் முத்தான வணங்கங்கள்’ நன்றிகள். மேலும், இதுதான்வாழ்க்கை என்ற பகுதியும், கவிதைப் பகுதிகளும் மிக மிக அருமை என்றால் மிகையாகாது.
-த.தேவிஸ்ரீ, வாளசிராமணி,
முசிறி வட்டம், திருச்சி மாவட்டம்.

ஆகஸ்ட் இதழில் முகப்பு அட்டையில் இடம் பெற்றுள்ள இனிப்புச் சகோதரர்களின் (திரு. K.T. வெங்கடேஷ் ராஜா – திரு. K.T. சீனிவாராஜா நேர்காணல் – திகட்டாத இனிப்பாகவே அமைந்திருந்தது. தன்னம்பிக்கை பல்லாயிரக் கணக்கான வாசகர்களில் நானும் ஒருவன் என்பதைப் போலவே, அடையார் ஆனந்தபவன் – இனிப்பகத்தின் பல்லாயிரக்கணக்கான சுவைஞர்களின் நானும் ஒருவன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.

முப்பது ஆண்டுகளில் அவர்கள் அடைந்துள்ள சாதனை முத்துக்கள் குறிப்பிட்ட பக்கங்களுக்குள் நேர்காணலாக அமைந்துவிட்டதென்றாலும் அந்த சாதனை சிகரத்தை எட்டுவதற்குள் அவர்கள் பெற்ற சிரமங்கள் எண்ணில் அடங்காதவை என்பதை நன்றாகவே உணரமுடிகிறது.

நான்கு கிளைகளிலிருந்து நாற்பது கிளைகளாக பெருகியிருப்பதன் சூட்சுமம் வேறிதிலும் இல்லை. உழைப்பு… சோர்வறாத உழைப்பு…. தன்னம்பிக்கையுடனான உழைப்பு.. என்பதில்தான் அடங்கியிருக்கிறது.

நாற்பது கிளைகள் நானூறு கிளைகளாக பல்கிப் பெருகி இனிப்புச் சகோதரர்களின் உள்ளத்தைப் போலவே உயர்வடைய உளமாற வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
-ராஜகுமாரன்,
எழுத்தாளர் புத்தக / பதிப்பாளர், சேலம்.

மூன்றுவித நாட்களின் மாறுபட்ட கருத்தோட்டம் படித்தேன். நாட்காட்டியின் முந்தைய நாள் தாளை தினம் தோறும் கிழிக்கும்போது இன்று புதிதாய் ஒருநாள் பொன்போல் கிடைத்துவிட்டது. இந்நாளில் ஏதும் சாதனை படைக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட வேண்டும்.

ஏனெனில் சென்று கழிந்த நாளின் தாளை கிழிக்கும் போது வள்ளுவப் பெருந்தகைக் கூறியுள்ள “நாளென ஒன்றுபோல் காட்டி உயிர் ஈரும் வாளது உணர்ஆர்ப் பெறின்” எனும் குறட்பாவே செய்துவிட்டு செத்துமடி என்பதை நமக்கு அறிவுறுத்துகிறது.
-புலவர் ந. ஞானசேகரன், திருலோக்கி.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2007

பென்சன்
அதிகரிப்போம் தன்னம்பிக்கையை நகைச்சுவையால்
வாசிப்பே மனிதனின் சுவாசிப்பு
சேவைச் செய்தி
மக்களின் நலனே பதவியின் பலன்
இதுதான் வாழ்க்கை
சிந்தனைத்துளி
பயிலரங்கச் செய்தி
குறிக்கோள்களை எளிதில் அடைய உதவும் அற்புத வழிமுறைகள்
கோழியும் குஞ்சும்
ருசியா? பசியா?
உழைக்கும் மனப்பான்மை குறைந்து வருகிறது
உள்ளத்தோடு உள்ளம்
மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்ட ஆண்டு விழா
மனதின் மொழி
வேரில் பழுத்த பலா
தடைகளைத் தாண்டுங்கள்
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்
புதிய பார்வை, புதிய வார்த்தை, புதிய வாழ்க்கை ஒரு புத்துலக கோட்பாடு
திறந்த உள்ளம்