Home » Editorial » உள்ளத்தோடு உள்ளம்

 
உள்ளத்தோடு உள்ளம்


admin
Author:

ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களால் விபத்து அதிக்கரிக்கிறது. உயிரிழப்புகளும் ஏற்படுகிறது என்பதனால் இரு சக்கர வாகனத்தில் செல்பவர் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை கட்டாயமாக்கக் கோரி உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

சென்னை, மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, சேலம் ஆகிய 6 மாநகராட்சிகளில் ஜூன் முதல் நாளில் இருந்தும் மற்ற மாவட்டங்களில் ஜூலை முதல் நாளிலிருந்தும் கட்டாய ஹெல்மெட் சட்டம் அமல்படுத்தப்படும் என அரசு உத்தரவிட்டது.

இருசக்கர வாகனத்தில் ஓட்டுபவரும், பின்னால் அமர்ந்து செல்பவரும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று அரசு உத்தரவு சொல்ல வாகன ஓட்டிகள் அவசரம் அவசரமாக ஹெல்மெட்டுகளை வாங்கினர். ஹெல்மெட விற்பனையும் சூடு பிடித்தது. ஹெல்மெட் போடாமல் சென்றவர்களை போலீசார் பிடித்து அபராதம் விதித்தனர்.

இருசக்கர வாகனத்தில் உட்கார்ந்து செல்லும் பெண்கள், குழந்தைகள் ஹெல்மெட் அணிவதில் பல சிக்கல் உண்டு என்பதால் கட்டாய ஹெல்மெட சட்டத்தை தளர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஓரிரு நாட்களிலேயே கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்துவதில் போலீசார் தீவிரம் காட்டாமல் இருந்தனர்.

தற்பொழுது மீண்டும் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராம் விதிக்கப்படுகிறது.

இவர்கள் என்ன இப்படி செயல்படுகிறார்கள் என்று நினைத்து நொந்து கொண்டிருக்காமல் ‘ஹல்மெட்’ அணிவதால் தனக்கென்ன பயன் என்பதை மட்டும் ஆழ்ந்து சிந்திப்போம்.

சிந்தித்துப் பார்த்தில் நன்மை கூடுதல் என்றால் அதை ஏற்றுக்கொள்வதில் நாம் ஏன் தயக்கம் காட்ட வேண்டும்.

உயிருக்கு உத்தரவாதம் இல்லாத, இந்த வேகமான உலகத்தில விபத்துகளிலிருந்து இரு சக்கர வாகன ஓட்டிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ள ‘ஹெல்மெட்’ அவசியமதானே! அநாவசியம என்று ஒதுக்குதல் வீணே!

அன்புடன்,
ஆசிரியர் குழு.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2007

பென்சன்
அதிகரிப்போம் தன்னம்பிக்கையை நகைச்சுவையால்
வாசிப்பே மனிதனின் சுவாசிப்பு
சேவைச் செய்தி
மக்களின் நலனே பதவியின் பலன்
இதுதான் வாழ்க்கை
சிந்தனைத்துளி
பயிலரங்கச் செய்தி
குறிக்கோள்களை எளிதில் அடைய உதவும் அற்புத வழிமுறைகள்
கோழியும் குஞ்சும்
ருசியா? பசியா?
உழைக்கும் மனப்பான்மை குறைந்து வருகிறது
உள்ளத்தோடு உள்ளம்
மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்ட ஆண்டு விழா
மனதின் மொழி
வேரில் பழுத்த பலா
தடைகளைத் தாண்டுங்கள்
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்
புதிய பார்வை, புதிய வார்த்தை, புதிய வாழ்க்கை ஒரு புத்துலக கோட்பாடு
திறந்த உள்ளம்