Home » Articles » குறிக்கோள்களை எளிதில் அடைய உதவும் அற்புத வழிமுறைகள்

 
குறிக்கோள்களை எளிதில் அடைய உதவும் அற்புத வழிமுறைகள்


மோகன்குமார் இரா
Author:

சென்ற இதழ் தொடர்ச்சி

4. திட்டம் வகுத்து செயல்படுங்கள்

நாம் குறிக்கோளை அடையும் லட்சிய பயணத்தின் வெற்றி அல்லது தோல்வி என்பது நாம் எந்த அளவு சிறப்பாக அந்த குறிக்கோளை அடைவதற்காக திட்டத்தை வகுத்தோம், திட்டத்தை செயல் படுத்தினோம் என்பதை பொறுத்தே அமை கின்றது.

குறிக்கோளை நோக்கிய பயணத்தின் போது, நீங்கள் உங்கள் வாழ்நாள் குறிக்கோள் அடைவதற்

காக எந்த எந்த நாள், வார, மாத, வருட குறிக்கோள் களை எந்த எந்த காலத்தில் அடைய வேண்டும் என்று முடிவு செய்ய செய்யப்பட்ட குறுகிய கால, நீண்ட கால குறிக்கோள்களை எந்த வழிமுறைகள் மூலம் அடைவது என்பதை மிகவும் உறுதியாக முடிவு செய்ய வேண்டும்.

நீங்கள் உங்கள் குறிக்கோளை நோக்கிய பயணத்தில்

அ) எந்த வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

ஆ) எந்த எந்த குறுகிய கால குறிக்கோள்களை எந்த எந்த காலத்தில் அடையவேண்டும்

இ) யார்? யார்? உதவிகளை நாட வேண்டும்.

போன்ற திட்டங்களை தீட்டி செயல்படா விட்டால், உங்கள் கவனம் சிதறி விடும்.

நீங்கள் எதிர்பார்க்கும் வேகத்தில் உங்கள் லட்சிய பயணத்தை நோக்கி பயணம் செய்ய முடியாமால் போகலாம்.

ஆகவே எந்த எந்த செயல்களை எந்த எந்த காலங்களில் செய்து முடிக்க வேண்டும் என்ற உறுதியான திட்டத்துடன் குறிக்கோளை நோக்கி பயணத்தை ஆரம்பியுங்கள்.

5. திரும்பிப் பாருங்கள்

உங்கள் குறிக்கோள்களில் நீங்கள் மகத்தான வெற்றியை ஈட்ட வேண்டுமானால், அவ்வப்போது உங்கள் செயல் பாட்டினை, உங்கள் சின்ன, சின்ன வெற்றி களை திரும்பிப் பார்ப்பது மிக மிக அவசியம்.

இந்த செயல் உங்கள் லட்சிய பயணத் தில் எளிதாக வெற்றியை ஈட்டு வதில், இரண்டு விதமான தன்மைகளை வழங்குகிறது.

ஒன்று நம்முடைய குறிக்கோள் நோக்கிய செயல்பாட்டில் ஏற்பட்ட குறைபாடுகளை கண்டுபிடித்து நிவர்த்தி செய்யும் வாய்ப்பை வழங்குகிறது.

மற்றொன்று நாம் அதுவரை செய்த சிறிய சிறிய வெற்றிகளை திரும்பிப் பார்க்க வாய்ப்பு ஏற்படுகின்றது.

அந்த வாய்ப்பு மேலும் நம்முடைய வெற்றிப் பயணத்து தேவையான உத்வேத்தையும், உற்சாகத்தையும் நமக்கு வழங்குகின்றது.

மனிதசக்தி மாபெரும் சக்தி. அற்புதமான ஆற்றல்களை கொண்ட மனித மனத்தின் சக்தியை ஒரு அற்புத இலக்கினை நோக்கி குவிப்போ மானால், நம்மால் எத்தகைய உயர்ந்த சாதனை களையும் எளிதில் சாதிக்க முடியும். அன்பு தன்னம்பிக்கை வாசகர்களே!

இன்று வரை இந்த உலகில் யார்? யார்? எப்படிப்பட் சாதனைகள் செய்திருந்தாலும், நிச்சயம் அவர்கள் ஒரு உயர்ந்த குறிக்கோளை நோக்கி அவர்கள் மொத்த திறனையும், சக்தியையும் செலவிட்டிருப்பார்கள். அவர்கள் தங்கள் சாதனை பயணத்தில் எத்தனை தடைகள், தோல்விகள் அவமானங்கள் வந்திருந்தாலும், மீண்டும் மீண்டும் விடாமுயற்சியுடன் செயல்பட்டு வெற்றி வாகை சூடியிருப்பார்கள்.

ஆகவே நம் வாழ்வில் ஒரு உயரிய குறிக் கோளை நிர்ணயிப்போம். குறிக்கோளுக்காக வாழ்வோம். வைராக்கியத்துடன் செயல் படுவோம். தோல்விகளில் இருந்து பாடம் கற்று தடைகளை தாண்டி வீறு நடை போட்டு வெற்றி வாகை சூடுவோம்.

சாதனை சரித்திரத்தில் நமக்கும் ஒரு இடத்தை உருவாக்குவோம்.

உங்களால் முடியும்!

உங்களால் மட்டுமே முடியும்

புறப்படுங்கள் உறுதியான

குறிக்கோளை நோக்கி!

வெற்றி வாகை சூடுங்கள்!

வாழ்த்துக்கள்!


Share
 

1 Comment

  1. premraj says:

    best of information to knoladge ,,most handshoft thing

Post a Comment


 

 


September 2007

பென்சன்
அதிகரிப்போம் தன்னம்பிக்கையை நகைச்சுவையால்
வாசிப்பே மனிதனின் சுவாசிப்பு
சேவைச் செய்தி
மக்களின் நலனே பதவியின் பலன்
இதுதான் வாழ்க்கை
சிந்தனைத்துளி
பயிலரங்கச் செய்தி
குறிக்கோள்களை எளிதில் அடைய உதவும் அற்புத வழிமுறைகள்
கோழியும் குஞ்சும்
ருசியா? பசியா?
உழைக்கும் மனப்பான்மை குறைந்து வருகிறது
உள்ளத்தோடு உள்ளம்
மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்ட ஆண்டு விழா
மனதின் மொழி
வேரில் பழுத்த பலா
தடைகளைத் தாண்டுங்கள்
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்
புதிய பார்வை, புதிய வார்த்தை, புதிய வாழ்க்கை ஒரு புத்துலக கோட்பாடு
திறந்த உள்ளம்