Home » Articles » நிறுவனர் நினைவுகள்

 
நிறுவனர் நினைவுகள்


தியாகராசன் தூசி
Author:

சமுதாயம் என்னும் நிலத்தை நல்வினை நிலமாக திருத்தி தன்னுடைய எழுத்துக்களால் மாற்றிக் காட்டுவேன் என்று கூறியதோடல்லாமல் நடைமுறைப்படுத்தி அறிவு என்னும் நீர்பாய்ச்சி தன்னம்பிக்கை என்னும் நாற்றங்காலை உருவாக்கியவர் நம் அய்யா இல.செ.க. அவர்கள்.

இன்று பல்வேறு தொழில்களில் தங்களை ஈடபடுத்திக் கொண்டவர். பணிகளில் உயர் அலுவலர்களாகவும் பேராசிரியர்களாகவும் பணியாற்றிக் கொண்டிருக்கின்ற அய்யாவின் மாணவர்கள், அவர்களின் வெறிகளுக்கு அடித்தளம் அமைத்துத் தந்த இல.செ.க. அவர்களை நன்றியுடன் நினைவு கூறுகிறார்கள்.

சொல் ஒன்று செயல் ஒன்று என்று இருக்கின்ற காலத்தில் இப்படி ஒருவர் என்று பலரும் வியக்கும் வண்ணம் சொல்லாலும் செயலாலும் வாய்மையோடு வாழ்ந்து, பிறர் வாழ்விற்கு வழிகாட்டியாய் அமைந்தவர்.

அவர் எழுத்தும், பேச்சும், பல்வேறு எழுத்தாளர்களையும், பேச்சாளர்களையும் உருவாக்கித் தந்ததோடு பல்வேறு சாதனையாளர்களையும் தன்முனைப்பாளர்களையும் உருவாக்கித் தந்துள்ளது.

இல.செ.க. அவர்கள் டாக்டர் பட்டத்திற்காக ஆய்விற்கு எடுத்துக் கொண்ட பொருள் “சங்க காலத்தமிழர் வேளாண்மை மரபுகள்” என்பதாகும்.

மக்கள் சமுதாயத்தில் வாழ்வியல் நெறிகளையும் நாகரிகக் கூறுகளையும் பண்பாட்டுச் சிறப்பினையும் வெளிப்படுத்தும் இலக்கியத்தை அனுபவ கருவூலம் என்றும் ஒரு மொழியின் வாயிலாக மக்கள் வாழ்க்கை முறையினை எடுத்து விளக்குவதே இவ்வாய்வின் குறிக்கோளாகக் கொண்டார்.

வேளாண்மைப் பற்றி பல்வேறு மரபுகளைக் குறிப்பாகச் சங்கப் புலவர்களுடைய நுண்ணிய காட்சி அறிவு, இன்றைய பயிர்நூல் வல்லலாரின் ஆராய்ச்சிக்கு உதவக்கூடியது. தமிழகத்துக்குப் பயிர் பச்சைகளை அறிய விரும்பும் பயிர் நூல் வல்லார் சங்க இலக்கியப் பாடல்களை முழு நம்பிக்கையோடு பயிலலாம் என்ற கருத்தே இவ்வாய்வுக்குத் தூண்டுகோலாக அமைந்ததாக அய்யா அவர்கள் கூறி இருக்கிறார்கள்.

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பதினான்கு ஆண்டுகளாகப் பணிபுரிந்த வாய்ப்பும், ‘வளரும் வேளாண்மை’ என்ற வேளாண்மைப் பல்கலைக்கழக அறிவியல் திங்கள் இதழுக்குப் பத்தாண்டுகள் ஆசிரியராக பணியாற்றி போழ்து பெற்ற அனுபவங்களும், தூண்டுகோலுக்கு ஊன்றுகோலாக அனுபவங்களும், தூண்டுகோலுக்கு ஊன்றுகோலாக உதவும் என்ற நம்பிக்கையிலேயே இத்தலைப்பினை மேற்கொண்டார்.

அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பரவிக் கிடக்கின்ற வேளாண்மை மரபுகளைத் தொகுத்து விளக்குவதோடு, பண்டைய மரபுகள் இன்றைய வேளாண்மை அறிவியலுக்கு வழிகாட்டுவதையும், துணை நிற்பதையும், வகுத்து காட்டுவதும், புதிய நுட்பங்களுக்குப் பழைய மரபுகள் அடிப்படையாய் அமைந்துள்ளதை வெளிப்படுத்தும் எண்ணத்துடன் ஆய்வை மேற்கொண்டார்.

சங்க காலத்தில் ‘வேளாண்மை என்ற சொல்லுக்குக் கொண்ட பொருள் அச்சொல் இன்று கொண்டுள்ள விரிந்த பொருள், சங்க காலத்தமிழ் மக்கள் மண்வளத்திற்கேற்ப நிலத்தைப் பகுத்துக் கொண்ட தன்மை, பயிரிடும் முறைகளில் அவர்கள் போற்றிய நுட்பங்கள், பொதுத்தன்மைகள் ஆகியனவற்றை ஆய்வுக்கு உரிய பொருளாக எடுத்துக் கொண்டார்.

இலக்கியத்தை திறனாய்வு செய்யும் நெறிமுறைகள் பல உள. அவற்றுள் ஒன்று கண்டுணர் திறனாய்வு நெறி (Inductive Criticism) “கண்டுணர் முறை” முன்னமே வகுத்த விதிகளைக் கொண்டு ஆய்வது அல்ல, ஒரு நூலைக் கற்கும் போது அதிலிருந்தே விதிகளைக் கண்டு உணர்ந்து ஆய்வது ஆகும்.

இந்நெறி முறைப்படி தொகையிலும் பாட்டிலும் காணப்பெறும் வேளாண்மைச் செய்திகளைத் தொகுத்தும் பகுத்தும் இன்றைய வேளாண்மை அறிவியல் பகுப்பு முறையினை அளவுகோலாகக் கொண்டு அய்யா அவர்கள் ஆய்வை மேற்கொண்டார்கள்.
தொடரும்….

 

1 Comment

  1. Sakthi says:

    ஆர்வம் தருமே ஆனந்தம் அட்டை பட கட்டுரை காணவில்லை Sir.

Leave a Reply to Sakthi


 

 


August 2007

நிறுவனர் நினைவுகள்
திறந்த உள்ளம்
தளர்வறியா மனம் தா
மனிதனும் மனோதத்துவமும்
சமுதாயமும் இளைஞர்களும்
தெய்வம் நீ என்று உணர்
முன்னேற்றத்தின் மூலதனங்கள்
வெற்றிக்கு வழி
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி