Home » Articles » தளர்வறியா மனம் தா

 
தளர்வறியா மனம் தா


தங்கவேலு மாரிமுத்து
Author:

நான் எடுத்து வருகின்ற பயிற்சி வகுப்புகளில், அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுள் ஒன்று.

“நீங்க சொல்றதெல்லாம் சரிதான் சார். ஆனா பிராக்டிக்கலா முடியுமா சார்? ரொம்பக் கஷ்டமா தோணுதே”.

அது, நேர நிர்வாகமாகட்டும், நிதி நிர்வாகமாகட்டும், மனித உறவுப்பயிற்சி வகுப்பாட்டும், மன அழுத்த மேலாண்மை வகுப்பாகட்டும் – இந்தக் கேள்வி, பயிற்சி பெறுகின்றவர்களில் யாராவது ஒருவரிடமிருந்து தவறாமல் வந்து விடும்.

ஒரு காரியம், முடியுமா என்ற சந்தேகமும், அது முடியாது என்ற விடையும் எழுவதற்குக் காரணம், தன்னம்பிக்கை குறைவு மட்டுமல்ல, மனச்சோம்பலும்தான்.

உடற்சோம்பல் போலவே, மனச்சோம்பலும் சாதனைக்குப் பெரிய சவால். மனச்சோம்பல், மனப் பலவீனத்தின் வெளிப்பாடே. பலவீனமான மனம் தடை கண்டால் தளர்ந்து விடும். தளர்ந்த மனத்தால் தடைகளைத் தாண்ட முடியாது.

வெற்றிக்கு வழி என்ன? உழைப்பு.

உழைப்பின் சின்னம் என்ன? கைகள்; கைவிரலகள்.

நமது ஐந்து விரல்களும் அடையாளம் காட்டுவது என்ன?

ஒரு விரல்- இந்தக் காரியம் நல்லவிதமாக முடியும் என்னும் நன்னம்பிக்கை (Positive thinking)

2ம் விரல் – இதை என்னால் வெற்றிகரமாக முடிக்க முடியும். என்னிடம் திறமைகளும் தகுதிகளும் உள்ளன. அவற்றை முழுமையாக வெளிப்படுத்தி வெற்றி காண்பேன் என்னும் தன்னம்பிக்கை (Self Confidence)

3ம் விரல் – என்னைச் சுற்றியிருக்கின்ற நண்பர்கள், உறவினர்கள், எனது அதிகாரிகள், அலுவலக சாகாக்கள், ஊழியர்கள், அனைவரின் ஒத்துழைப்பும் எனக்கு உண்டு. அவர்கள் அனைவரும் நம்பிக்கைக்கு உரியவர்களே. நானும் அவர்களுடைய நம்பிக்கைக்கு உரியவனாக இருப்பேன், என்னும் பரஸ்பர நம்பிக்கை (Mututal Trust).

4ம் விரல் – மனித மனம் மாறுதலுக்குட்பட்டது. என்னதான் பிறரை நம்பினாலும் முக்கியமான விஷயங்களில் முழுவதுமாக நம்பமாட்டேன் என்னும் எச்சரிக்கை (Vigilance)

5ம் விரல் – தவறான முடிவுகள், தவறான முயற்சிகள், தவறான பாதை இவை தவறான முடிவுகளைத்தான் தரும். இந்த சாப்ட்வேர், இறைவன் டிஸைன் செய்த ஆட்டோமேட்டிக் புரோக்ராம். இதில் இன்றுவரை எந்த எரரும் வந்ததில்லை.

முயற்சிப்பது மட்டுமே மனிதனின் கடமை. முடிவுகளோ இறைவனின் உரிமை. ஆனால் இறைவனோ பாரபட்சமற்றவன்.

ஆக, நமது கஷ்டமும், சுகமும், வெற்றியும், தோல்வியும் நமது கர்ம பலன்கள் அன்றி வேறில்லை என்பதே உண்மை.

ஆகவே, தவறான பாதையில் நமது சிந்தனையும் செயல்பாடும் சென்று விடாதிருக்கவும், நம்மை நல்வழியில் நடத்திச் செல்லவும் அந்த இறைவனே துணை என்னும் இறைநம்பிக்கை. (Faith in God)

இதோ நம் கை. பல நம்பிக்கைகள் கொண்ட நம் கை.

இத்தனை நம்பிக்கைகளோடு செயலில் இறங்கிய பிறகும், தடைகளும், தாமதங்களும், சிக்கல்களும், தோல்விகளும் ஒருவனுக்கு வரலாம். வரும்.

இத்தனை நம்பிக்கைகளும் உங்களுடைய அம்புகள். தடைகளும் சிக்கல்களும், விதி விடும் அம்புகள். அம்புகளை எதிர்கொள்வதற்கு அம்புகள் ஏற்றவை அல்ல. அதற்கு ஏற்றது கேடயமே.

உங்களுக்குத் தேவைப்படும் அந்தக் கேடயத்தின் பெயர்தான், நெஞ்சுரம், மன உறுதி (Will Power) அதனால்தான், “மனதில் உறுதி வேண்டும்” என்று பாரதியாரும் எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று அண்ணாவும் சொன்னார்கள்.

ஆம். சிறு தடங்கல் கூட, மனிதனின் மன உறுதியை அசைத்துப் பார்த்து விடுகிறது. எதற்கும் நிலை குலையாத திட சித்தமே ஒருவனை தடைகளைத் தாண்ட வைக்கிறது.

அந்த திட சித்தம், நெஞ்சுறுதி வைராக்கியம் இல்லை என்றால் மனம் தளர்ந்து, நொடிந்து, உடைந்து உட்கார்ந்துவிடுகிறது. இப்படி ஆரம்பத்திலேயே ஆசைகளை கைவிட்டவர்களும் உண்டு.

அதனால் என்ன ஆகும்?

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விடும்?

வெற்றிக்கனி நமக்கு டாட்டா காண்பித்து விட்டு போய்விடும். இதற்கெல்லாம் அடிப்படைக்காரணம் தாக்குப்பிடிக்கும் சக்தி மனதுக்கு இல்லாததால்தான்.

ஆகவே, உங்களைத் தாக்கும் தடைகளையெல்லாம் தூக்கி எறிய, தாக்குப்பிடியுங்கள். கடைசிவரை. அதற்கு தேக்குங்கள் மனதில் உறுதியை.

இதைத்தான்
Quiters never win – Winner never quit என்று ஆங்கிலத்திலும்

விலகி நிற்பவன்
வெல்லுவதில்லை.
வெல்ல நினைப்பவன்
விலகுவதில்ல.

என்று தமிழிலும் சொல்கிறார்கள். இதுவும் நம் கைதான். அத்தனை விரல்களும் இணைந்து, ஆக்கம் காண உறுதி பூண்ட கை.


நீண்டிருந்த உங்கள் ஐந்து விரல்களையும் இப்போது பாருங்கள். இது எதைக் காட்டுகிறது?

வைராக்கியத்தை, தளராத மன உறுதியை (Will Power)

சுதங்கமா முனிவர் சொல்கிறார்,


புறப்படத் தேவை
தன்னம்பிக்கை
போய்ச்சேரும் வரை தேவை
தளரா மனம்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 2007

நிறுவனர் நினைவுகள்
திறந்த உள்ளம்
தளர்வறியா மனம் தா
மனிதனும் மனோதத்துவமும்
சமுதாயமும் இளைஞர்களும்
தெய்வம் நீ என்று உணர்
முன்னேற்றத்தின் மூலதனங்கள்
வெற்றிக்கு வழி
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி