Home » Articles » Miss பண்ணலாமா?

 
Miss பண்ணலாமா?


சௌந்தர்ராஜன் தே
Author:

வாழ்க்கையில் நாம் நிறைய விஷயங்களை தவறவிடக் கூடாது. அது போல நிறைய விஷயங்களைத் தவறவிட (Miss பண்ண வேண்டும். T.V. ன் மெகா தொடர்களை கிரிக்கெட் விளையாட்டை பார்ப்பதை, தேவையற்ற அரட்டைகளை இன்னும் இதுபோன்ற விஷயங்களை தவறவிட வேண்டும்.

குத்துச்சண்டையை நாம் கவனித்திருப்போம். அதில் எதிரியை தாக்க மட்டும் தெரிந்திருந்தால் போதாது. எதிரியின் குத்துக்களிலிருந்து தப்பிக்க (அவர்களின் குத்துக்களை மிஸ் பண்ண) தெரிந்திருக்க வேண்டும். எதிரியின் குத்துக்களை மிஸ் பண்ணுவதால் நாமும் பாதுகாக்கப்படுவோம். எதிரிக்கும் சக்தி இழப்பு ஏற்பட்டு களைப்படைய வாய்ப்புள்ளது. நாம் தாக்கமலே எதிரியின் தாக்கு தலை முழுவதுமாக மிஸ் பண்ணி அவரை முழுவதுமாக களைப்படைய வைக்க முடியும். இதற்கு முழுமையான விழிப்புணர்வும், வேகமும் வேண்டும்.

வாழ்விலும் நம் எதிராளிகளின் குத்துக்களை சொற்களாலும் செயல்களாலும் நம் எதிராளிகள் நம்மை தாக்குவதிலிருந்து தப்பிக்க அதை மிஸ் பண்ணத் தெரிந்திருக்க வேண்டும். நம் எதிராளிகள் சுடு சொற்களையும், தடித்த வார்த்தைகளையும் உள்வாங்காமல் மிஸ் செய்யத் தெரிய வேண்டும்.

யாராவது நம் மூக்கை உடைக்க வந்தால் கத்திக்கொண்டு தாக்க வந்தால் முடிந்த அளவு விலகிக் கொள்வோமா? அல்லது குத்து பார்க்கலாம் என்று எதிர்கொள்வோமா? விலகிக் கொள்வது தானே அறிவுடமை. அதுபோல எதிராளிகளின் வார்த்தைகளை, திட்டுதல்களை உள்வாங்காமல் அதிலிருந்து விலகிக் கொள்ள தெரியவேண்டாமா? இந்த செயல் நம் மனதிற்கு சற்று கடினமாக தெரிந்தாலும், நம் விழிப்புணர்வின் மூலமாகவும், மன பக்குவம் மூலமாகவும் இதை பழக்கத்திறகு கொண்டு வர வேண்டும். மிகப் பெரிய ஞானிகளும், மேதைகளும் கூட தங்கள் வாழ்வில் ஏளன பேச்சுகளையும், திட்டுதல்களையும் தாண்டியே சாதித்திருக்கிறார்கள்.

இந்த பக்குவம் வந்து விட்டால் நம் எதிராளியால் நம்மை காயப்படுத்தவோ, சோகத்தில் ஆழ்த்தவோ முடியாது.
நேசன்
(தே. சௌந்தரராஜன்)


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


July 2007

ஹா(ய்)ஸ்டல்
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்
தலைமைக்குத்தேவை ஆறு முகங்கள்
திறமைதான் நமது செல்வம்
நிறுவனப் பயிற்சிகளில் கேட்கப்பட்ட கேள்விகளும், பதில்களும்
திறந்த உள்ளம்
வாத விவாதங்கள் தவிர்ப்போம்! தன்னம்பிக்கையை அதிகரிப்போம்!
வேரில் பழுத்த பலா
மனோசக்தியின் மறுவடிவமே பிரார்த்தனை
குழந்தைத் தொழிலாளர்கள்
நல்லவை மலர்க!..
சிந்தனைத்துளி
ஆர்.வி.எஸ். கல்வி அறக்கட்டளை
இதுதான் வாழ்க்கை
Miss பண்ணலாமா?
நம்பிக்கை
ஒளிரும் சாதனை
மனப்பூர்வமான முயற்சி! மகத்தான வெற்றி!!
வளமான பாரதம் நனவாகிட உழைப்பைப் பெறுவீர்
நிறுவனர் பக்கம்
நோய்க்கு அல்ல மருந்து, நோயாளிக்கு
உள்ளத்தோடு உள்ளம்
கற்றல் படிப்பு
மோனலித் வாழ்க்கை
தொடர் இயக்கமே வெற்றியின் அடிப்படை