Home » Articles » நம்பிக்கை

 
நம்பிக்கை


admin
Author:

ஒவ்வொரு விடியலையும் நம்பிக்கையோடு எதிர்கொள். ஒவ்வொரு இரவிலும் நம்பிக்கையோடு உறங்கப்போ. மரங்கள் காற்றைச் சுத்தம் செய்கின்றன. நம்பிக்கை மனசை சுத்தம் செய்கிறது. ஓட்டைப் படகு, ஒடிந்த துடுப்பு கரை சேரலாம். கடல் போல் நம்பிக்கை இருந்தால்.

நீ அடுத்தவர் மீது கொண்ட நம்பிக்கை என்பது காசோலை. நீ உன் மீதே கொண்ட நம்பிக்கை எனபது ஏ.டி.எம் அட்டை. நம்பிக்கைகளை எண்ண அலைகளாக மாற்று. அதில் புதிய லட்சியங்களை ஏவுகணைகளாய் ஏற்று. காந்தத்திலிருந்து மின் சக்தி வருவது மாதிரி நம்பிக்கையிலிருந்து முன்னோர்க்கும் எண்ண அலைகள் வரும். போராட்டமே வாழ்க்கை நம்பிக்கையே வெற்றி. நம்பிக்கை சிறு நூல் தான். ஆனால் அந்த நூலில் கட்டி காற்றாடியை அல்ல கற்பாறையையும் பறக்க விடலாம். இளைஞனே இரைப்பையையும் நம்பிக்கையையும் காலியாக விடாதே. ஒரு நாளும் சோர்ந்து விடாதே. கடைசிச் சொட்டு ஈரப்பசை வரை மரம் பூக்கிறது.

இழப்பு என்பது எதுவுமேயில்லை. உன் நம்பிக்கை உன்னிடம் உள்ளவரை. கர்வம் வை. கிராம் கணக்கில். நம்பிக்கை வை கிலோ கணக்கில். நம்பிக்கை இல்லாத இடம் ஒன்றே ஒன்றுதான் கல்லறை.
-கவிஞர் பா. விஜய்யின் ‘சிந்தனைச் சிறகுகள். தொகுப்பாசிரியர் பேராசியர் க. இராமச்சந்திரன்
படித்ததில் பிடித்தது – கவிஞர் இரா. இரவி

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment