Home » Articles » கற்றல் படிப்பு

 
கற்றல் படிப்பு


இரத்தினசாமி ஆ
Author:

படித்தல்

படிப்பு பல வகைப்படும். ஓர் உயர் உணவு விடுதிக்குச் செல்கிறீர்கள். அங்குள்ள இருக்கையில் அமர்ந்தவுடன் உணவு வகைகளை பரிமாறுகிறவர் (menu card ) ஒன்றை கொடுப்பார். அதை வாங்கியவுடன் கண்களை அதன்மேல் பதித்து நகர்த்துகிறீர்கள். சில உணவு வகைகளை அதில் பார்த்து செல்கிறீர்கள்.

ஒருவரின் தொலைபேசி எண்ணைக் காண அதற்கான புத்தகத்தில் பெயர் தேடி எண் காண்கிறீர்கள்.

ஒரு மருத்துவரிடம் ஆலோசனை பெற அமர்ந்துள்ள நீங்கள் உங்கள் முன்னே வைக்கப்பட்டுள்ள வார பத்திரிக்கை ஒன்றை எடுத்துப் பக்கங்களைப் புரட்டுகிறீர்கள். சிலவற்றை படிக்கிறீர்கள். 300 பக்கங்கள் கொண்ட சிறந்த கதைப் புத்தகம் ஒன்றைப் படிக்கிறீர்கள்.

மேற்கண்ட செயல்களில் நீங்கள் என்ன செய்தீர்கள்?

அச்சிடப்பட்ட வார்த்தைகளை வரிகைளை படித்து அப்போதைக்கு தேவை அல்லது அச்சிடப்பட்ட செய்திகள் அனைத்தையும் ஆழ்ந்து படித்து, புரிந்து நிர்ந்தரமாக நினைவில் வைத்துக் கொள்ள தேவையில்லை. அப்போதைக்கு வரிகளின் மேல் கண்ணோட்டம் சில தேவைகளுக்காக நேரத்தை நகர்த்துவதற்காக, அவை தற்காலிக நினைவாற்றலுக்காக,

கற்றல்

கற்றல் என்பது படிக்கும் போதே கண்களை வார்த்தைகள் மேல் நிலைநிறுத்தி அதைப் புரிந்து வரி வரியாக நிதானமாக தெளிந்து படிப்பது. புரியாமல் படிப்பது கற்றல் அல்ல. உங்களின் அறிவு வகுப்பிற்கு வகுப்பு மேலோங்கி வருகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் நீங்கள் படித்தவை நிரந்தர நினைவாற்றலாக மூளையில் புதைந்துள்ளது. தேவைப்படும்போது சட்டென தேடி எடுத்துக் கொள்ளலாம்.

கற்றலில் விரைவு தேவையில்லை. ஒவ்வொருவரின் நிலைக்கேற்ப கற்கும் நேரம் வேறுபடும். புரிந்து, தெளிந்து படிப்பதே முக்கியம். அனைத்தையும் (கணிதம் உட்பட ) மனப்பாடம் செய்து, படித்து, அப்படியே தேர்வுகள் எழுதி மிக நல்ல மதிப்பெண்கள் கூட பெற்றுவிடலாம். ஆனால் உயர் கல்விக்குச் செல்லச் செல்ல உண்மை வெளிப்பட்டு விடும். சில கேள்விகள் கேட்டாலே நீங்கள் கற்றீர்களா, படித்தீர்களா என்பது எளிதில் தெரிந்து விடும்.

எளிதாக கற்றல்

தற்போதைய கல்வித்திட்டத்தில் பாடங்கள் அலகு வாரியாக (unitwise) எழுதப்பட்டிருக்கும். ஒரு அலகைப் பற்றி விரிவாக உள்ளே படிக்கச் செல்லும் முன் அதன் தலைப்பைப் புரிந்து கொள்ளுங்கள். அந்த அலகில் சொல்லப்பட்டிருப்பவை பற்றி சுருக்கமாக முன்னரோ அல்லது இறுதியிலோ கொடுக்கப்பட்டிருந்தால் அதைப் படிக்கவும். பின்னர் அந்த அலகில் சொல்லப்பட்ட செய்திகளுக்கு சிறு, சிறு தலைப்புகள் தரப்பட்டிருக்கும். அவைகளை படித்துப் பாருங்கள்.

ஒவ்வொரு பத்தியின் (para) ஆரம்பமும் முக்கியச் செய்திகளைக் கொண்டிருக்கும். அவைகளையும் படியுங்கள். படங்கள், பட்டியல்கள், வரைபடங்கள், இவைகளையும் கூர்ந்து கவனியுங்கள்.

வகுப்பில் ஆசிரியர் கூறியது, நண்பர்களுடன் அந்த அலகைப் பற்றி கலந்து பேசியது. நீங்களாக மேலோட்டமாக புத்தகத்தில் அந்த அலகைப்பற்றி உள்ள முக்கியச் செய்திகள் இவைகளை வைத்து ஓரளவு அந்த அலகைப் பற்றி அறிவைப் பெற்றிருப்பீர்கள்.

படிக்கும்போது செய்ய வேண்டியவை

கற்பதற்கு ஒருமித்த சிந்தனையும் மனக்குவிப்பும் அவசியம் தேவை. விசாலமான மனதை, எப்படி ஒரு குவிவில்லை(convex lens) ஒளியை ஒரு புள்ளியில் குவிக்கிறதோ அதுபோல புத்தகத்தின் வார்த்தைகள் மீது குவிக்கும்படி செய்தால்தான் அது சரியாக புரியும். விரைவாக கற்றல் நடைபெறும். நினைவில் நின்று நிலைக்கும். அலை பாயும் மனதுடன் படிக்கும் போது கற்றல் நடைபெறாது.

புத்தகத்தில் உள்ள செய்திகள் தானாக உங்களை நோக்கி வராது. நீங்கள் தான்படித்து, அறிந்து, தெளிந்து பெற்றுக் கொள்ள வேண்டும். கற்றல் பணி சுறுசுறுப்பாக நடைபெற வேண்டும். புத்தக வரிகளில் உள்ள செய்திகளை அறிந்து, புரிந்த பின் உங்கள் நடையில் தனி நோட்டில் எழுதும் போதுதான் உங்களுடையதாக மாறுகிறது. கடினமான வேலைதான். ஆனால் இம்முறையைக் கடைப்பிடித்தால் அப்போதே படித்து, அறிந்து பதித்து வைத்து விட்டீர்கள், தேர்வுகள் இனி தேர்ச்சிகளே என்று உறுதியாகச் சொல்லலாம்.

உங்களுக்கு நீங்களே கேள்வி கேளுங்கள்.

படிக்கும் போது மனதை நம்மிடமே வைத்துக்கொள்ள, முக்கியமான, புரியாத வார்த்தைகளை பென்சிலால் புத்தகத்தில் அடிக்கோடிடுங்கள். இது எப்படி முடியும்? அது எப்படி இயங்கும்? இந்த சமன்பாடு எப்படி வந்தது? என்பது போன்ற கேள்விகளை உங்களுக்குள்ளே கேட்டுக் கொள்ளுங்கள். அதற்காக பதிலைப் பெறமுயற்சி செய்யுங்கள்.

அதிகமான கேள்விகள் பிறக்கப் பிறக்க, அந்த அலகைப் பற்றிய அறிவு மேலோங்கியுள்ளது என்பது உறுதி.

குறிப்பு எடுத்தலும், குறிப்பை உருவாக்கலும் (Notes taking and Notes making)

ஆசிரியர் சொல்ல/ எழுத அப்படியே அதை எழுதிக் கொள்வது குறிப்பெடுத்தல் அப்போது மனம் நம்மை விட்டுச் செல்ல வாய்ப்புகள் உள்ளது. குறிப்பை நானே உருவாக்கும்போது மனம் நம்மிடம்தான் இருக்கும். சுறுசுறுப்பாக இயங்கும் அப்போது படித்தலுடன், கற்றலும் இணைந்து நடக்கும்.

“உங்கள் எழுத்துக்களால், புரிந்து தெளிந்த உங்கள் எண்ணங்களால் உருவாக்கப்பட்ட குறிப்புகள் எளிதாய் நிரந்தர நினைவாற்றலாக மாறும்”.

-பெஞ்சமின் பிராங்கிளின்.

அறிவியல், ஆங்கில, தமிழ் அகராதிகளின் அவசியம்

படிக்கும்போது பல சொற்களுக்கு அர்த்தம் புரியாமல் போகலாம். உடனே அதன் அர்த்தத்தை அறிய பயன்படுபவை அகராதிகள். அகராதிகள் நமது சிறந்த நண்பர்கள். நமது படிக்கும் இடத்தில் அவை அவசியம் இருக்கவேண்டும். பொருள் புரிந்து படிக்க அவை பேருதவியாக இருக்கும்.

ஒரு மணி நேரப் படிப்பு – 10 நிமிட இடைவெளி.

மணிக்கணக்காக தொடர்ந்து படிப்பதால் மூளை, கண்கள் சோர்வடைகின்றன. மனம் சலிப்படைகிறது. எனவே 10 நிமிட இடைவெளி தாருங்கள். அந்நேரத்தில் கண்களை உள்ளங்கைகளால் மூடி (palming) நிலையில் ஆழ்ந்த சுவாசத்தை மெதுவாக, மெதுவாக மூக்கின் வழியாக இழுத்து மீண்டும் மெதுவாக மெதுவாக விடவும். 10 முறை செய்யவும். சற்று எழுந்து வெளியே வந்து சுத்தமான காற்றை சுவாசிக்கவும்.

(அடுத்த இதழில் சந்திப்போம்)

 

4 Comments

 1. மாறன் says:

  வணக்கம். வாசிக்கும் பழக்கம் கொண்ட அனைவருக்கும் சீரிய பயன் நல்கும் கருத்துகளை வழங்கிய தங்களுக்குப் பாராட்டுகள். மாணாக்கர் எளிதாகப் புரிந்து செய்ல்படும் வகையிலே எழுதியிருப்பது நன்று. தொடர்ந்து எழுதுக. வாழ்த்துகள்

 2. karthik says:

  ரொம்போ ரொம்பே உபயோகமான மினுட்டம் தொடரட்டும் உங்கள் வெற்றி பணி…….வாழ்த்துக்கள் மிக்க நன்றி 1௦௦௦ டைம்ஸ்

 3. karthik says:

  சீரிய பயன் நல்கும் கருத்துகளை வழங்கிய தங்களுக்குப் பாராட்டுகள். மாணாக்கர் எளிதாகப் புரிந்து செய்ல்படும் வகையிலே எழுதியிருப்பது நன்று. தொடர்ந்து எழுதுக. வாழ்த்துகள்

 4. karthik says:

  கார்த்திக்

  தொடர்ந்து எழுதுக. வாழ்த்துகள்…………

Post a Comment


 

 


July 2007

ஹா(ய்)ஸ்டல்
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்
தலைமைக்குத்தேவை ஆறு முகங்கள்
திறமைதான் நமது செல்வம்
நிறுவனப் பயிற்சிகளில் கேட்கப்பட்ட கேள்விகளும், பதில்களும்
திறந்த உள்ளம்
வாத விவாதங்கள் தவிர்ப்போம்! தன்னம்பிக்கையை அதிகரிப்போம்!
வேரில் பழுத்த பலா
மனோசக்தியின் மறுவடிவமே பிரார்த்தனை
குழந்தைத் தொழிலாளர்கள்
நல்லவை மலர்க!..
சிந்தனைத்துளி
ஆர்.வி.எஸ். கல்வி அறக்கட்டளை
இதுதான் வாழ்க்கை
Miss பண்ணலாமா?
நம்பிக்கை
ஒளிரும் சாதனை
மனப்பூர்வமான முயற்சி! மகத்தான வெற்றி!!
வளமான பாரதம் நனவாகிட உழைப்பைப் பெறுவீர்
நிறுவனர் பக்கம்
நோய்க்கு அல்ல மருந்து, நோயாளிக்கு
உள்ளத்தோடு உள்ளம்
கற்றல் படிப்பு
மோனலித் வாழ்க்கை
தொடர் இயக்கமே வெற்றியின் அடிப்படை