Home » Articles » மோனலித் வாழ்க்கை

 
மோனலித் வாழ்க்கை


யோகதா ப
Author:

இனிய வாசகர்கள் அனைவருக்கும் அன்பான வாழ்த்துக்கள். ஒவ்வொரு நாளையும் ஒரு வெற்றித் திருநாளாக மாற்றி அமைத்துக் கொண்டு சிறப்பாக வாழும் மனநிலைக்கு நாம் வர வேண்டும். அழகிற்கு அழகு சேர்த்தால் எவ்வளவு அழகாக இருக்கும். அதுபோல் நம் வாழ்க்கைக்கு புதியதொரு அர்த்தத்தை சேர்த்தால் இன்னும் சிறப்பாகத் தானே இருக்கும். பிறகு என்ன கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். வாழ்க்கையை விரும்பி வாழுங்கள்.

தலைப்பு

மோனலித் என்றால் பல சிற்பங்கள் செதுக்கப்பட்ட ஒரே பாறை. மோனோலித் வாழ்க்கை என்றால் பல குணாதிசயங்கள் நிறைந்த ஒரு மனிதனின் வாழ்க்கை. நாம் அனைவருமே மோனோலித் வாழ்க்கையைத் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எப்படி என்றால் எவரும் ஒரு சமயம் இருப்பது போல் மற்றொரு சமயம் இருப்பதில்லை. சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு நம் குணங்கள் உண்ச்சிகளாக வெளி வருகிறது. உணர்ச்சிகளிலேயே நம்மை பெரிதும் பாதிப்படையச் செய்வது கவலைதான்.

கவலையை ஒழிக்க எளிமையான முறைகள் உள்ளன.

i) முதலில் மனதில் உள்ள கவலைகளை வெளியே கொண்டு வருதல். ஒரு தாளை எடுத்து என்னென்ன கவலை உள்ளதோ அனைத்தையும் எழுதி விடுங்கள். பிறகு ஒன்றன் பின் ஒன்றாக படித்துப் பார்த்தால் இதெல்லாம் ஒரு கவலையா இதற்காகவா நான் என் பொன்னான நேரத்தை செலவு செய்தேன் என்பது தெரிய வரும்.

ii) ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஏதேனும் ஒரு உண்மைச் சம்பவம் இருக்கும். அதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

iii) அடுத்ததாக சரி இப்படி நடந்து விட்டது. இனி எப்படி இதை சமாளிப்பது எப்படி இதை அணுகுவது அடுத்து நான் என்ன செய்ய வேண்டும் என்று கேள்விகளை மனதில் போடுங்கள்.

iv) முடிவு செய்யும் திறமை உண்டுயெனில் முடிவு எடுத்து செயல்படுத்தலாம். இல்லையென்றால் தாமதம் செய்ய வேண்டாம். பல வழிகளை தேடுங்கள். ஏதாவது ஒன்று நிச்சயம் தென்படும். வில்லியம் ஜோன்ஸ் என்னும் உளவியல் நிபுணர் “செயலில் இறங்கி விடுவது நல்லது. அது சரியோ தவறோ, அதை விடுத்து கவலைப்படுவதை காட்டிலும்” என்கிறார். தவறு என்றால் அதற்குரிய விளைவை பெறுவோம். அதிலிருந்து பாடமும் கற்போம்; மறுபடியும் அதை செய்யாது தவிர்ப்போம்.

v) கவலைகளின் நேரம்

தினமும் பத்திலிருந்து பதினைந்து நிமிடங்களை கவலைப்படுவதற்காகவே ஒதுக்கி விட்டு அதை கவலையின் நேரம் என்றே அழைக்கலாம். இப்படி செய்வதால் இருக்கலாம். கவலை வரும் பொழுது “நான் 7.30 மணிக்கு அந்த கவலையை எடுத்து ஆராய்ந்து பார்த்தால் மிகவும் சிரிப்பாகத் தான் இருக்கும். இப்படி செய்து வருகையில் ஒரு மாதம் கழித்து கவலை பட்டியல் எடுத்துப் பார்த்தால் மிகக் குறைவான கவலைகளே மிஞ்சும்.

மேற்கூறிய வழிகள் கவலை ஏற்பட்டால் எப்படி சமாளிப்பது என்ன செய்வது என்பதை கூறியது. இப்பொழுது எப்படி கவலையே வராமல் தடுப்பது என்பதைப் பார்ப்போம்.

i) மற்ற விஷயங்களில் நம்மை ஒன்றுபடுத்துதல்

கவலைகள் பெரும்பாலும் மனம் எந்த ஒரு வேலையும் செய்யாமல் இருக்கும் பொழுது தான் தோன்றும். ஏனெனில் எல்லா நேரங்களிலும் நம் மனதை முழு ஈடுபாட்டுடன் செயல்படுத்துவது கடினம். இது முறையான பயற்சி பெற்றால் மட்டுமே சாத்தியம்.

ii) நம் பேச்சை நாம் கவனிக்க வேண்டும்

பொதுவாக நாம் பேசுகையில் எதிர் மறையான கருத்துக்கள் வெளிவரும். இது பெரிதும் கவலைக்கு துணைபுரியும். உற்சாகமாக பேசுவோம். ஏதேனும் எதிர்மறையாக பேச நேர்ந்தால் உடனே நிறுத்தி அதற்கு மாற்றாக நல்லைதே பேச முற்படலாம். இது மற்றவர்கள் நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும் அதிகரிக்கும்.

iii) ஒவ்வொரு நாளையும் முழுமையாக உபயோகித்தல்

தினமும் ஒரு கட்டளையை கூறிக் கொள்ளலாம். “இன்று நான் எனக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை சிறப்பாக இறைவனின் துணையோடு செய்வேன் என்ற நம்பிக்கையோடு” படுக்கையிலிருந்து விழித்தெழ வேண்டும். இதை திரும்பத் மறபடியும் மறுபடியும் கூறிக் கொண்டே இருக்கையில் நம் மனமானது சரி இன்று சிறந்ததைத் தான் பெறுவோம் என பதிவு செய்துவிடும்.

மனதில் அமைதியை விதைத்தல்

மனதை அமைதியும் சந்தோஷமும் நிறைந்த எண்ணங்களால் நிரப்ப வேண்டும். எப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்கிறோ அதை உபயோகமாக பயன்படுத்த வேண்டும். நல்ல புத்தகம் இருப்பின் அதை படித்தல் மேலும் நம்மை உற்சாகப்படுத்தும்.

v)சிரிப்பு பயிற்சி

சிரிப்பு என்பது உண்மையிலேயே மிகச் சிறந்த மருந்து. மனம் விட்டு சிரிக்கும் போது ஆரோக்கியமாக வாழ வழி வகுக்கிறது. முக்கியமாக நம் உடலில் இரசாயன மாற்றத்தை சரி செய்யும். சிரிக்கும் போது ஒரு திரவம் சுரக்கும். அதுதான் நம் உடலை நச்சுத்தன்மை நிறைந்த கிருமிகளிடமிருந்து சுத்தம் செய்து இரத்த ஓட்டத்தை சீர் செய்கிறது.

இதுவரை எப்படி வாழ வேண்டும் என்பதைப் பார்த்தோம். இனி நாம் என்ன செய்ய போகிறோம்? பதில் நம் கையில். முயற்சி என்பதை நாம் தான் மேற்கொள்ள வேண்டும். மற்றவர் நமக்காக செய்வார்கள் என்று எண்ணி நம்மை நாம் முட்டாளாக்க கூடாது. எந்த ஒரு செயலையும் ஒரு முறைக்கு மேல் சிந்தித்தால் தெளிவு தானே பிறக்கும். எனவே சிந்தியுங்கள் என் கருத்துக்களை சரி எனப்பட்டால் முயற்சித்து பாருங்கள்.

‘மனமிருந்தால் எதையும் மாற்றி அமைக்க முடியும்’.

 

1 Comment

  1. rajiw says:

    Dear Sister Thankz for the goods..

    Ungala Mathiri nallavargal iruppin enna pol irupavargaya eppodum kakkum

    thank you very much

Post a Comment


 

 


July 2007

ஹா(ய்)ஸ்டல்
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்
தலைமைக்குத்தேவை ஆறு முகங்கள்
திறமைதான் நமது செல்வம்
நிறுவனப் பயிற்சிகளில் கேட்கப்பட்ட கேள்விகளும், பதில்களும்
திறந்த உள்ளம்
வாத விவாதங்கள் தவிர்ப்போம்! தன்னம்பிக்கையை அதிகரிப்போம்!
வேரில் பழுத்த பலா
மனோசக்தியின் மறுவடிவமே பிரார்த்தனை
குழந்தைத் தொழிலாளர்கள்
நல்லவை மலர்க!..
சிந்தனைத்துளி
ஆர்.வி.எஸ். கல்வி அறக்கட்டளை
இதுதான் வாழ்க்கை
Miss பண்ணலாமா?
நம்பிக்கை
ஒளிரும் சாதனை
மனப்பூர்வமான முயற்சி! மகத்தான வெற்றி!!
வளமான பாரதம் நனவாகிட உழைப்பைப் பெறுவீர்
நிறுவனர் பக்கம்
நோய்க்கு அல்ல மருந்து, நோயாளிக்கு
உள்ளத்தோடு உள்ளம்
கற்றல் படிப்பு
மோனலித் வாழ்க்கை
தொடர் இயக்கமே வெற்றியின் அடிப்படை