Home » Articles » திறமைதான் நமது செல்வம்

 
திறமைதான் நமது செல்வம்


தங்கவேலு மாரிமுத்து
Author:

“சார், திறமையிருந்தும் ரொம்பப்பேர் வாழ்க்கையில் தேங்கியே கிடக்கிறார்களே. அது ஏன் சார்?”

இப்படி ஒரு கேள்வியை பார்வையாளர் ஒருவர், எனது ஆளுமைப் பயிற்சி வகுப்பின் போது என்னிடம் கேட்டார். சுருக்கமாக ஒரு விளக்கம் சொல்லி அவருக்கு ஒரு தெளிவைத் தந்தேன். அதையே சற்று விரிவாக இங்கே தந்திருக்கிறேன்.

திறமையிருந்தும் பலர் தோற்பது ஏன்? சில முக்கிய காரணங்களை மட்டும் இங்கே பார்ப்போம்.

1) தங்களிடம் சில திறமைகள் இருக்கின்றன என்பதையே பலர் அறிந்திருப்பதில்லை.
உங்ககிட்ட ஒரு திறமையாவது இருக்கும்ங்க. புரிஞ்சுக்குங்க.

2) தங்களிடம் சில திறமைகள் இருக்கின்றன. என்பதையே பலர் அறிந்திருப்பதில்லை. நம்புங்க. நிச்சயம் உங்க கிட்ட ஒரு திறமையாவது இருந்தே தீரும். கை, கால், காது, மூக்கு இப்படி தவறாமல் கொடுத்த ஆண்டவன், சில திறமைகளையும் கட்டாயம் கொடுத்திருக்காரு.

3) தங்களிடம் என்ன திறமைகள் இருக்கின்றன என்பதை பலர் தேடிக் கண்டுபிடிப்பதே இல்லை.உங்ககிட்ட என்ன திறமை ஒளிஞ்சிருக்குங்கறதை முதல்ல தூண்டித் துருவி கண்டுபிடிங்க.

4) தங்களிடம் உள்ள திறமைகளை பலர் வளர்த்துக் கொள்வதே இல்லை. திறமைங்கறது வைரக்கல் மாதிரி. அதைப் பட்டை தீட்டினால் தான் ஜொலிக்கும்.தொடர்ந்த பயிற்சி மூலமாகவும், அந்த் திறமை சம்பந்மான நவீன விஷயங்களைக் கத்துக்கிறது மூலமாகவும் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

5) தங்களிடம் உள்ள திறமைகளை பலர் வெளிப்படுத்துவதே இல்லை. சரியான சந்தர்ப்பத்துல, சரியான விதத்துல உங்க திறமையை வெளிப்படுத்தலேன்னா, அது இருந்து என்னங்க பிரயோஜனம்? திறமையை துருப்பிடிக்க விடாடீங்க; வெளிப்படுத்துங்க; காசாக்குங்க; சாதனையாக்குங்க.

6) தங்களைச் சுற்றியிருக்கும் வாய்ப்புக்களை பலர் பயன்படுத்துவதே இல்லை.நல்ல நல்ல வாய்ப்புக்கள் கண்ணுக்கு எதிரே வந்து நின்னாக்கூட அவைகளை சரியானபடி பயன்படுத்திக்கலேன்னா திறமை எல்லாம் தூங்கிட்டு தானே இருக்கும். வந்த வாய்ப்பை கெட்டியா பிடிச்சுக்குங்க.

7) தாங்கள் எடுக்க வேண்டிய முயற்சிகளை தள்ளிப்போடுவதே பலரின் பழக்கம்.அடுத்த வாரம் பார்த்துக்கலாமே, ஒண்ணும் கெட்டுப் போயிடாது. அப்படீனு தூங்கிடாதீங்க. நாளை முதல் குடிக்கமாட்டேன். இன்னக்கி மட்டும் ஹி..ஹி… கதைதான்.

8) தங்களுடைய திறமைகளை, தங்களிடம் இருக்கும் சில கெட்ட பழக்கங்களை தள்ளிப்போடுவதே பலரின் பழக்கம்.உங்க சாமர்த்தியத்தையெல்லாம் காட்டி மாங்கு மாங்குன்னு உழைப்பீங்க. நல்லா சம்பாதிப்பீங்க. கையில காசைப்பார்த்ததும் முதல்ல ரேஸூக்கோ, சூதாட்டக் கிளப்புக்கோ போனீங்கன்னா… உழைச்சு என்ன பிரயோஜனம்? கெட்ட பழக்க வழக்கம் ஏதாச்சும் இருந்ததுன்னா முதல்ல அதைத்தொலைச்சு தலைமுழுகுங்க

9) தங்களிடமிருக்கும் திறமைகளை செயல்படுத்துவதில் பயம் தயக்கம். பயமும் தயக்கமும் எதுக்குங்க? என்னால முடியும்ங்கிற தன்னம்பிக்கை ஒண்ணுபோதுங்க. எல்லா திறமையும் ஒவ்வொன்னா வெளியே வந்துடும்.

10) வாழ்க்கையிலே ஜெயிக்க வேண்டும் என்ற ஆர்வமோ அக்கறையோ பலரிடம் இருப்பதே இல்லை. இதுதாங்க எல்லத்தையும் விட ரொம்ப ரொம்ப முக்கியம். இது மட்டும் உங்ககிட்ட எக்கச்சக்கமா இருந்ததுன்னா, தைரியம், தன்னம்பிக்கை, சுறுசுறுப்பு, வேகம், திறமை, புத்திசாலிதனம் எல்லாமே உங்ககிட்ட வந்து ஒட்டிக்கும். அதனால முதல்ல உங்களைப்பபத்தி நீங்க அக்கறைப்படுங்க.உ

ஆக, திறமையிருந்து பலர் தேங்கிக்கிடக்க, காரணங்கள் எத்தனையோ இருந்தாலும், அதில் டாப்டென் இந்த பத்துதான்.

என்ன? உங்கள் மனம் சமாதானமாக வில்லையா? இன்னொரு டாப்டென் தருகிறேன்.

1) முயற்சி எடுப்பார்கள். ஆனால் முட்டுக் கட்டை ஒன்று முளைத்தாலும் மூச்சுத்திணறி நின்று விடுவார்கள். நம்மால் ஆகாது என்று முயற்சிகளைக் கைவிட்டு விடுவார்கள்.

2) சுறுசுறுப்பாகவும் பரப்பாகவும் ஓடுவார்கள். ஆனால் எந்த ஒரு குறிப்பிட்ட குறிக்கோளும் இல்லாமல் எல்லா திசைகளிலும் ஓடுவார்கள்.

3) ஒன்றுக்கும் உதவாத பொழுதுபோக்குகளிலும் கேளிக்கைகளிலும் பெரும் பகுதி நேரத்தை செலவழிப்பார்கள்.

4) தாங்களாகவே எதையும் முன்னின்று தொடங்க மாட்டார்கள். அடுத்தவருடைய நிழலில் பத்திரமாக இருக்கவே ஆசைப்படுவார்கள்.

5) போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து என்பதைத் தீவிரமாக நம்புவார்கள். மேலும் மேலும் வளர வேண்டும் என்கிற ஆசையை அடக்கி வைப்பார்கள்.

6) திறமையால் வளர்வார்கள். ஆனால் எவரையாவது முழுக்க நம்பி. அல்லது எல்லோரையும் நல்லவர்கள் என்று நம்பி ஏமாந்து நிற்பார்கள்.

7) தன்னைத்தவிர யாரையுமே நம்பாமல், தனிக்கட்டையாகவே உழைத்துக் களைத்து ஓய்ந்து போவார்கள்.

8) இருக்கிற ஒரு திறமையை, முழுமையாகப் பயன்படுத்துவதற்குத் தேவைப்படுகின்ற வேறு எக்ஸஃட்ரா திறமைகள் எதுவுமே இல்லாமல் இருப்பார்கள்.

9) தங்கள் திறமைகளைவிட, அதிர்ஷ்டத்தையே அதிகமாக நம்பிக்கொண்டிருப்பார்கள்.

10) இருப்பதை விட்டுவிட்டு பறப்பதைப் பிடிக்க ஆசைப்படுவார்கள். லட்சியத்தை மாற்றிக்கொண்டே இருப்பார்கள்.

இந்த டாப் ட்வன்ட்டியில் ஏதாவது ஒன்று உங்களிடம் இருந்தாலும், உங்களால் உச்சத்தை நிச்சயமாகத் தொடமுடியாது. திறமையிருந்தும் தேங்கிக் கிடக்க வேண்டியதுதான். புரிகிறதா?

புரிந்தது என்று உடனே பக்கத்தைப் புரட்டாதீர்கள். இந்த இருபது காரணங்களையும் இன்னொருமுறை படியுங்கள். உள்ளத்தில் வாங்கிக்கொள்ளுங்கள்..இனி பள்ளித்தில் தேங்கிக்கிடக்க மாட்டீர்கள். உங்கள் திறமை உங்களைக் கைதூக்கி விடும்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


July 2007

ஹா(ய்)ஸ்டல்
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்
தலைமைக்குத்தேவை ஆறு முகங்கள்
திறமைதான் நமது செல்வம்
நிறுவனப் பயிற்சிகளில் கேட்கப்பட்ட கேள்விகளும், பதில்களும்
திறந்த உள்ளம்
வாத விவாதங்கள் தவிர்ப்போம்! தன்னம்பிக்கையை அதிகரிப்போம்!
வேரில் பழுத்த பலா
மனோசக்தியின் மறுவடிவமே பிரார்த்தனை
குழந்தைத் தொழிலாளர்கள்
நல்லவை மலர்க!..
சிந்தனைத்துளி
ஆர்.வி.எஸ். கல்வி அறக்கட்டளை
இதுதான் வாழ்க்கை
Miss பண்ணலாமா?
நம்பிக்கை
ஒளிரும் சாதனை
மனப்பூர்வமான முயற்சி! மகத்தான வெற்றி!!
வளமான பாரதம் நனவாகிட உழைப்பைப் பெறுவீர்
நிறுவனர் பக்கம்
நோய்க்கு அல்ல மருந்து, நோயாளிக்கு
உள்ளத்தோடு உள்ளம்
கற்றல் படிப்பு
மோனலித் வாழ்க்கை
தொடர் இயக்கமே வெற்றியின் அடிப்படை