Home » Editorial » உள்ளத்தோடு உள்ளம்

 
உள்ளத்தோடு உள்ளம்


admin
Author:

உலக மக்கள் தொகை பெருகிக்கொண்டே போகிறது. உணவுத்தேவையும், உறைவிடத்தேவையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

உலக நாடுகள் வேளாண்மையின் மூலம் உணவு விளைபொருட்களின் உற்பத்தியை முதன்மை நிலையில் கருதிப் பெருக்க வேண்டும்.

உலக நாடுகள் அனைத்திலும் உணவுப் பொருட்களின் உற்பத்தியை பெருக்குவதில் கவனம் செலுத்தாமல், மற்ற தொழில்நுட்ப வளர்ச்சிகளிலும் தொழிற்சாலை உற்பத்திப் பொருட்களிலும் தகவல் தொழில்நுட்பங்களிலும், மென்பொருள் உற்பத்திகளிலும், போர்க்கருவி பெருக்குவதிலும் பெரிதும் முனைப்பாயிருக்கின்றன.

உடல் நலம் பேணும் மருத்துவத் துறைகளிலும் தொழில் நுட்பத்தின் வளர்ச்சி மிகப்பெரிய அளவில் இருப்பதால் வளரும் நாடுகள், வளர்ச்சியடையா பின் தங்கிய நாடுகளில் சாதாரண மக்களுக்கு மருத்துவம் -சிகிச்சை ஒரு பெரும் சுமையாகவும் கிட்டாததாகவும் இருக்கிறது.

வேளாண்மை நிலங்கள் குடியிருப்புக் கட்டிடங்களுக்காகவும், தொழிற்சாலைகளுக்காகவும் ஆக்கிரமிக்கப்படுவதால் உணவு உற்பத்தியில் குறைபாடு மற்றும் பற்றாக்குறை நிலவுகிறது.

மேற்கண்ட காரணங்களுக்காகவே காடுகளும் அழிக்கப்படுகின்றன.

தொழிற்சாலை பெருக்கத்தினாலும், உற்பத்தி செய்யப்படும் பொருட்களாலும் சுற்றுச்சூழல் அதிக அளவில் பாதிக்கப்படுகிறது.

வேளாண்மைக் கால்நடைகளின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது. கால்நடைத் தீவனப் பசும் புல்வெளி மேய்ச்சல் நிலங்களும் இல்லை; செடிகொடிகளும் இல்லை; இயற்கை உரங்களும் இல்லை.

செயற்கை உரங்களால் மண் மாசு, நீர் மாசு, சுவாசக் காற்று மாசுபாடுதான் இன்றைய உலகின் நிலை.

உணவுக்காக கால்நடைகள் கொல்லப்பட்டு எண்ணிக்கை குறைந்துவிட்டது.

இந்திய முன்னோர் பசுவை தெய்வமாக வழிபட்டதன் பொருளை சிந்திக்க சிந்திக்க வியப்பும் அவர்களின் ஆழ்ந்த அறிவும் ஆச்சர்யத்தை தருகின்றன.

உலக மக்களின் உணவுத் தேவையை நிறைவு செய்ய இயற்கை வேளாண்மை, வேளாண்மைக் கால்நடைகள், காடுகள் வளர்த்தல், மரம் வளர்த்தல், இயற்கை உரம் பற்றி சிந்தித்தல் இவையெல்லாம் இன்றைய தேவை. இதுபற்றி அனைவரும் சிந்திப்போம்.

அன்புடன்,
ஆசிரியர் குழு.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment