– 2007 – April | தன்னம்பிக்கை

Home » 2007 » April (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    இல.செ.க.வின் சிந்தனை

    • ஒரு வாய்ப்பு நேரும் போது தனக்கு என்றும் பாராமல், நேர்மை எதுவோ அதனைச் செய்பவர்களே மகான்கள் ஆகிறார்கள். மகான்கள் எல்லாம் தன்னம்பிக்கையின் விளைநிலங்கள் போன்றவர்கள்.
    • Continue Reading »

    திறந்த உள்ளம்

    உயர்ந்த வகை உள்ளம் கொண்டவரே இல.செ.க

    இலக்கியம் என்பதே இலக்கை இயம்புவது மக்களின் மன நிலையை மாற்றக்கூடிய உயர்ந்த எண்ணங்களைப் புகுத்தக்கூடிய இலட்சியத்தை குறிக்கோளை உடையதே இலக்கியம் எனக் கூறலாம்.

    Continue Reading »

    இனி மேலாவது..

    நாம் எடுத்துச் செல்ல ஒன்றுமே இல்லை. ஆனால் கொடுத்துச் செல்ல நிறையவே இருக்கிறது என சொல்லிக் கொள்கிறோம். ஆதரிப்பார் யாருமின்றி சாலையில் கையேந்துபவர்களை பார்த்தால் ஓடோடிச் சென்று உதவுவது என்பது எல்லோருக்கும் எளிதாக வந்துவிடக் கூடிய செயல் என்று சொல்லிவிட முடியாது.

    Continue Reading »

    நிராகரிப்பே நிராயுதபாணியின் ஆயுதம்

    தமிழில் வெளியான ஒரு திரைபடத்தை சமீபத்தில் காண நேர்ந்தது.

    ஒரு திரைப்படத்திற்கான கதையும், சம்பவங்களும் ஏதேனும் ஒரு வாழ்க்கையிலிருந்தே பெறப்படுகின்றன என ஒரு சாராரும், திரைப்படத்தைப் பார்த்து தான் சமூக நடப்புகள் நிகழ்கின்றன என ஒரு சாராரும் பன்னெடுங்காலமாய் வாதிட்டு வருகின்றனர். நமக்கு அந்த வாதம் தேவையற்றது. படத்தைப் பார்த்தபோது மனதிற்குள் ஏற்பட்ட வேதனை உணர்வே மிக முக்கியமானது.

    Continue Reading »

    மன அழுத்தத்தை வெல்ல 20 வழிகள்

    ‘உனக்கு ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி. எதை முதலில் சொல்லட்டும்’ என்றான் மகன்.

    ‘நல்ல செய்தியை முதலில் சொல்லு’ – அம்மா

    ‘உன் பொண்ணுகிட்ட அடிக்கடி சொல்லுவியே, எப்படியாவது தனிக்குடித்தனம் போயிடுன்னு’ – அதே மாதிரி தனிக்குடித்தனம் போயிட்டாளாம்.

    Continue Reading »

    அலட்சியம் வேண்டாமே

    அலட்சியம் என்றால் என்ன? அக்கறைக் காட்ட மறுப்பது வாழ்க்கையில் முன்னேறவேண்டும்; மேலும் வளர வேண்டும்; சக்திக்கு உட்பட்ட அத்தனையையும் சாதிக்க வேண்டும். ஊரும் உலகும் போற்ற, பேரும் புகழும் பெற்று, சீரும் சிறப்புமாய், செல்வ சுகங்களோடு வாழ வேண்டும் என்று தன்னைப் பற்றி தானே அக்கறைப்படவில்லை என்றால் என்ன அர்த்தம்?

    Continue Reading »

    பயிலரங்கச் செய்திகள்

    வெற்றியாளர்களின் விளைநிலமாக திகழும கோவை தன்னம்பிக்கை வாசகர் வட்டம் நடத்தும், சுயமுன்னேற்றப் பயிலரங்ம் 25.02.2007 அன்று காலை 10 மணிக்கு கோவை ராம்நகர் ஹோட்டல் மங்களா இன்டர் நேஷனல் அரங்கில் நடைபெற்றது.

    Continue Reading »

    துன்பத்தைக் குறைப்போம்! தன்னம்பிக்கையை அதிகரிப்போம்!

    இனிய வாசகர்களே!

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். நம்மிடம் இருக்கும் தன்னம்பிக்கை சில சமயங்களில் அதிகமாகவும் ஒரு சில நேரங்களில் குறைந்து காணப்படுவதை நாம் அறிவோம். அதிகமாவதற்கு காரணம் நமது வெற்றிகரமான செயல்பாடுகள். பிறரது அங்கீகாரம் மற்றும் பாராட்டுக்கள்.

    Continue Reading »

    விடைபெறும் வினாக்கள்

    நான் டிப்ளமா சிவில் படித்தவன். அன்றிலிருந்து இன்று வரை பல்வேறு முயற்சிகள் செய்து எதிலுமே நிலைபெறமுடியாமல் தடுமாறுகிறேன். (பார்ட்னரோடு லாரி வாங்கி விட்டு, விபத்துக்குப் பிறகு அதைவிட்டு, ஒப்பந்தக்காரராகி இணைந்து கட்டிடப் பணியில் ஈடுபட்டுப் பார்ட்னரால் ஏமாற்றப்பட்டு, மீண்டும் வேறொரு ஒப்பந்தத்தில் ஈடுபட்டுப் பணிபுரிகையில் -பணிபுரியும் போது ஏற்பட்ட விபத்தால் கால் ஒடிந்து – சிகிச்சை பெற்று இப்போது ஓய்வில் இருக்கிறேன்)இப்போது நிறையக் கடன், மனபாரம். எனக்கோ 40 வயது. இரண்டு குழந்தைகள். ஓயாமல இப்படி அடிவிழுந்தால் ஒரு சாமான்ய மனிதன் எப்படி எழுந்து நிற்பது?
    -P. குப்புசாமி, இராமநாதபுரம்.

    Continue Reading »

    என்ன செய்தால் எண்ணியதை அடையலாம்?

    மன சக்தி தான் மாபெருஞ் சக்தி என்று எண்ணற்றவர்கள் சொல்லக் கேட்டும் இது குறித்து நாம் அதிகமாக கவலை கொள்ளவில்லை. மனோசக்தியை அலட்சியப் படுத்தாமல் அதனை அறிந்து பயன்படுத்தப் பழக வேண்டும்.

    Continue Reading »