Home » Articles » நிச்சயம் நான் நல்லாயிருப்பேன்…

 
நிச்சயம் நான் நல்லாயிருப்பேன்…


ஆண்ட்ரூஸ் விஜயகுமார் R
Author:

2 மாத குழந்தையை அரசு பேருந்தின் பின்புறம் மூலையில் வைத்துவிட்டு சென்றதாகவும், அந்த குழந்தையை பழனி அரவிந்த் காப்பகத்தில் ஒப்படைத்து விட்டதாகவும் நாளிதழலில் படித்த செய்தியின் தாக்கத்தில் எழுந்த கவிதை…

அம்மா!
பயணத்தில்
பர்ஸைத் தவறவிடுவார்கள்..
பையைத் தவறவிடுவார்கள்..
என்னைத்
திட்டமிட்டே தவறவிட்டாயே
நியாயமா? தாயே!

உறக்கத்தில்
மனைவியை விட்டுச்
சென்ற புத்தனும்
கானகத்தில்
மனைவியை விட்டுச்
சென்ற நளச் சக்ரவர்த்தியும்

குடும்ப வாழ்க்கை
வேண்டாமென்று போனதாக
புராணம் கூறுகிறது..
இரண்டு மாதக் குழந்தையாய்
என்னை
ஏன் தாயே
விட்டுச் சென்றாய்?
அனாதைகள் போதாதென்று
என்னை விட்டுச் சென்றாயா?

இனி
நான் காலமெல்லாம் தாயன்புக்காக
விழிகளில் வழிகிற
நீருடனா? என் வாழ்க்கை முழுவதும்..

என்னைத் தவறவிடுமுன்
உன்னைத் தவறவிடாமல்
இருந்தால்
எனக்கு இந்த
அவலம் நேருமா?
அனாதைப் பட்டம் கிடைக்குமா?
ஏனம்மா அதைத் தாங்கள்
சிந்திக்க தவறிவிட்டீர்கள்…

காக்கைக்குக் கூட
தன் குஞ்சு பொன் குஞ்சென்று
சொல்லுவார்கள்..

அதற்குமா நான்
குறைந்து விட்டேன்….

பேசப்போகிற முதல் சொல்லே
ம்மா… யாரைப்
பார்த்து நான் சொல்வேன்…

ஒரு நிமிடம்…
ஒரே ஒரு நிமிடம்…
பாலுக்காக நான் அழப்போகும்
காட்சியை…
அனாதையாய்
ரோட்டில் திரியப் போகும்
காட்சியை…

ஏய் என ஏளனமாய்
பேசப் போகும்
இருண்ட காட்சியை… நீ
நினைத்துப் பார்த்திருந்தால்

இதைச் செய்ய மனது
வந்திருக்குமா?

நீ உன் வீட்டில்
நிம்மதியாய்…
நான் என் காப்பகத்தில்
நிம்மதியாய்…
அந்த நிம்மதி கூட
எனக்கு
விபரம் எட்டும் வரை மட்டுமே!

போதும் தாயே!
உன் நினைவு…
நல்லவேளை
பகுத்தாயும் நினைவு எனக்கு
வரும் முன்னரே
இரண்டு மாதக் குழந்தையாய்
விட்டுச் சென்றுவிட்டாய்…

என் வாழ்வு
இனி
அரவிந்த் காப்பகத்தில் தான்…

சாதனையாளனாய்
என் மகன்
எனப் பூரிக்கும் தாய்மார்களுடன்…
அனாதையாய்
என் மகன்
என.. மகளின் வரிசையாய்
நீ நிற்கும்போது…
பஸ்ஸில்… நடைபாதையில்…
போறானே
இவன் அனாதை
என்று சிலர் பேசும்போது
அருகில் இருந்து
அப்போது என்னை
நீ நினைக்கும் போது….

ம்.. பிரயோசனமில்லை தாயே!
காலம் கடந்து விட்டது..
காப்பகம் தான் எனக்கு எல்லாமும்…
அந்த நல்ல அரவணைப்பால்…
நிச்சயம் நான்
நல்லாயிருப்பேன்…
நம்பிக்கை நிறைய உண்டு….

அரசு போக்குவரத்துக்கும்
டிரைவர் அலெக்சுக்கும்
நடத்துனர் ஆறுமுகத்திற்கும்
இன்னும் என்னை ஆதரவாய்
சிந்திப்பவர்களுக்கும் மட்டும்
என் பிஞ்சுமன நன்றி!

-கவிஞர். ஆண்ட்ரூஸ் விஜயகுமார்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2007

விடைபெறும் வினாக்கள்
புத்தம் புது மலரே…
சங்கமம்
பயிலரங்க செய்திகள்…
தேர்வுகள் இனி தேர்ச்சிகளே!
சக்சஸ் உங்கள் சாய்ஸ்
பணியை / தொழிலை விரும்புக
முயற்சி
திறந்த உள்ளம்
புதுமைகள் படைத்திடு! புவனம் வென்றிடு!
விஷ்யு ஹேப்பி 2007
உற்சாகத்தால் உயர்த்துவோம் தன்னம்பிக்கையை
நிச்சயம் நான் நல்லாயிருப்பேன்…
போராடினால் உண்டு பொற்காலம்
இடைவிடாத பெருமுயற்சி
உடல்நலக் குறிப்புகள்
உள்ளத்தோடு உள்ளம்
மேலெழு மனமே…
தன்னம்பிக்கை
வெற்றிகொள்
இதுதான் வாழ்க்கை
இலட்சியத்தை அடைந்திட….
கோவையில் அப்துல்கலாம்
இதுதான் வாழ்க்கை