– 2007 – January | தன்னம்பிக்கை

Home » 2007 » January

 
  • Categories


  • Archives


    Follow us on

    விடைபெறும் வினாக்கள்

    வாழ்வில் வெற்றிபெற “ஒரே வழி”?
    பொள்ளாச்சி அன்புச்செல்வி

    அன்புச் செல்விக்கு எவ்வளவு “சுயநலம்” பாருங்கள்! “சுயநலம்” என்பதைவிட “சோம்பேறித்தனம்” என்று கூடச் சொல்ல்லாம். வெற்றிபெற வேண்டுமாம்!.. அதுவும் “ஒரே வழி” வேண்டுமாம்…! இதெப்படி இருக்கு? எல்லாவற்றுக்குமே உடனடி நிவாரணம் தேடுகிற உலகத்தில் வாழுகிற அன்புச் செல்விக்கு – இப்படி கேட்கத் தோன்றியதில் ஒன்றும் ஆச்சர்யமில்லைதான்.

    Continue Reading »

    புத்தம் புது மலரே…

    இனிய தன்னம்பிக்கையாளர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! புதிய ஆண்டு பிறந்து விட்டது. புத்தாடை அணிந்து கொண்டாடினால் புதிதாகிவிடுமா நம் வாழ்க்கை. இல்லவே இல்லை. ஒவ்வொருவரும் புத்தம் புது மலரைப் போல் அழகாக, மிருதுவாக, வாசை மிகுந்த அனைவரையும் ஈர்க்கும் விதமாக மாறவேண்டும். உங்களுக்கு பூப்போன்ற உள்ளம் வேண்டுமா வாருங்கள் நான் உங்களை அழைத்துச் செல்கிறேன் பூக்கள் நிறைந்த உலகத்திற்கு….

    Continue Reading »

    சங்கமம்

    தன்னம்பிக்கை வாசகர் வட்டப் பதிவுகளில்… பொன் எழுத்துக்களால் பொறிக்கத்தக்க நிகழ்வாக…. கோவை தன்னம்பிக்கை வாசகர் வட்டமும், கோபிச்செட்டி பாளையம் வாசகர் வட்ட நண்பர்களும், இணைந்து வாசகர்கள் “சங்கம்ம்” நிகழ்ச்சி 17.12.2006 அன்று காலை 11 மணிக்கு, இயற்கை அன்னை தன் அழகையெல்லாம் கொட்டி குவித்த தூக்கநாயக்கன்பாளையம் கிராமத்தில் நடைபெற்றது.

    Continue Reading »

    பயிலரங்க செய்திகள்…

    ஸ்ரீனிவாசா அசோசியேட்ஸ் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனர், திரு. சீனிவாசன் அவர்கள் சுயமுன்னேற்றப் பயிலரங்கம் ஒன்றை அந்நிறுவனத்தில பணிபுரியும் பொறியாளர்களுக்கும், அலுவலர்களுக்கும் நடத்த விரும்பினார்.

    Continue Reading »

    தேர்வுகள் இனி தேர்ச்சிகளே!

    மதிப்பிற்குரிய பெற்றோர்களே! மா மனம் கொண்ட மாணவ மாணவியரே! இனிய இளம் நெஞ்சங்களே! வணக்கங்கள் பல, பல.

    Continue Reading »

    சக்சஸ் உங்கள் சாய்ஸ்

    ஆம். அந்த நண்பருக்கும் அதுதான் நிகழ்ந்தது. எவ்வளவு வேகமாய்த் தரையில் அடிக்கப்பட முடியுமோ அவ்வளவு அடிபட்டார். பணப்பிரச்சினை தலைதூக்க, கடன்காரர்களுக்கு பதில் சொல்ல முடியாத நிலைக்கு ஆளான அவரது சொந்த தாயும், மனைவியும் இவர் மீதே தங்கள் எரிச்சலைக் காட்டினார்கள். ‘நீதானே இத்தனைக்கும் காரணம்’ என குற்றஞ்சாட்டத் தொடங்கினார்கள்.

    Continue Reading »

    பணியை / தொழிலை விரும்புக

    முன்னுரை:

    நமது வாழ்வின் பெரும்பகுதியை செய்யும் தொழிலில் செலவிடுகிறோம். ஆகவே, தொழிலில் நிம்மதி – மகிழ்ச்சி பெற முடியவில்லையென்றால் வாழ்க்கையில் நிறைவு பெற முடியாது. பலவகையான தொழில் செய்வோருக்கு இத்தனை ஆண்டுகள் பயிற்சிகள் நடத்திய அனுபவத்தை வைத்து செய்கின்ற தொழிலை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

    Continue Reading »

    முயற்சி

    நம் வாழ்க்கைச் சோலையில் இடையறாது சாதனைப் பூக்கள் மலர வேண்டுமானால் நாம் கைக்கொள்ள வேண்டியது தாழாத முயற்சியாகும். திண்மையான எண்ணத்தோடு முயன்றால் முடியாதது இவ்வுலகத்தில் மட்டுமல்ல எவ்வுலகத்திலும் இல்லை. முயற்சி என்பது சாத்திய முயற்சி, அசாத்திய முயற்சி என இருவகைப்படும். முயற்சி கைக்கூட வேண்டுமானால் காலம், இடம், பொருள், இறையாற்றலின் துணை இந்நான்கும் நமக்கு ஒத்துழைக்க வேண்டும். இயல்பாகவே இந்நான்கும் நமக்கு சாதகமாக இருந்து செய்யும் முயற்சிகள் எளிதாக வெற்றி பெறும். இது சாத்திய முயற்சி எனப்படும். மேற்குறித்த நான்கில் ஏதேனும் ஒன்றோ இரண்டோ நமக்கு சாதமாக இல்லாவிட்டாலும் மேற்கொள்ளும் முயற்சி அசாத்திய முயற்சி எனப்படும்.

    Continue Reading »

    திறந்த உள்ளம்

    ஐயா, நான் ஒரு தனியார் பள்ளியில் யோகா ஆசிரியராக பணிபுரிகிறேன். நான் தன்னம்பிக்கை இதழை தவறாமல் படிப்பவன். இதழில் சுயமுன்னேற்றம், வாழ்வில் வெற்றி அடைய தேவையான வழிகள் போன்றவை குறிப்பிடப்படுவதால், படிப்பதற்கு இனிமையாக இருக்கிறது.
    -எம். கண்ணன், (யோகா மாஸ்டர்),
    அண்ணா நகர், கண்ணனூர், திருச்சி

    Continue Reading »

    புதுமைகள் படைத்திடு! புவனம் வென்றிடு!

    மனித மூளையின் அமைப்பு வலது இடது என்று இரண்டு அரைக்கோளங்களாக (Hemisphere) இருப்பதை அறிவியல் பாடத்தில் அறிந்திருப்போம். அவை வலது பக்கத்து மூளை, இடது பக்கத்து மூளை.

    Continue Reading »