Home » Articles » மனச்சோர்வுக்கு மருந்து

 
மனச்சோர்வுக்கு மருந்து


பழனியப்பன் இல
Author:

அமெரிக்காவின் வெற்றி வாழ்வியல் ஆலோசகர் பேராசியர் டாக்டர் எம்.ஆர். காப்மேயர் உடல் மற்றும் மனச்சோர்வு களிலிருந்து விடுபட மூன்று அற்புதமான வழிகளை மனித குலத்திற்கு அறிமுகப் படுத்தியிருக்கிறார்.

முதல் வழி (1)

“உடலால் உயர்ந்து நில்லுங்கள்” என்பதாகும்.
இது நாம் அனைவரும் ஏழை முதல் பணக்காரர் வரை பாமரர் முதல் படித்தவர் வரை ஏன் ஆண்டி முதல் அரசன் வரை எல்லோருமே எளிதாகப் பின்பற்றக் கூடிய ஒன்றாகும்.

“உடலால் உயர்ந்து நில்லுங்கள்” என்பது நாம் நடந்து செல்லும் முறையைப் பொறுத்தே நமது வாழ்வும் அமைகிறது. எனக் கூறுகிறது. இது முற்றிலும் உண்மை. முழுக்க முழுக்க உண்மை!

ஆம் நடக்கும்போது நாம் எந்த அளவுக்கு உடலை நிமிர்த்தி தளர்வாக நமது கால்களை நம்பி இயல்பாக நடக்கிறோமோ அதைப்பொறுத்தே நமக்கு முதலில் தன்னம்பிக்கை பிறக்கிறது.

ஆம் அதன் வழி நம்மால் முடியும் என்ற மனநிலையும் உருவாகிறது!

பின்னர் அதுவே உற்சாகத்திற்கும் வழி தருகிறது. இதன் விளைவு

நமது ஆளுமை (Personality) மாற்றம் அடைகிறது! அதற்காக அளவுக்கு மீறி தலையை தூக்கி ஆணவ நடை நடக்கக் கூடாது. மேலும் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு அடிமை போல உலாவருவதும் தவறாகும்!

இயல்பான நடைமூலம் அடிமேல் அடி வைத்து தன்னம்பிக்கை உணர்வோடு நடக்க வேண்டும். என்பதற்காகவே காவல்துறைமற்றும் இராணுவத்ûதுறைபணியாளர்களுக்கு நடைப்பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த இயல்பான நடையை இப்போதே தொடங்குவோமே! என்ன தயக்கம்?

இரண்டாவது வழி (2)

“உள்ளத்தால் உயர்ந்து நில்லுங்கள்” என்பது
உள்ளம் என்பதே மனம். உள்ளதை உள்ளத்தின் மூலம் உயர்வாக நடந்து கொள்ளுங்கள் என்பதே இதன் பொருளாகும். “நமது மனம் போல வாழ்வு” என்று நமது கிராமங்களிலே இன்றளவும் சொல்கிறார்களே நாம் சற்று இதனைச் சிந்திக்க வேண்டாமா?

உள்ளுவதெல்லாம் உயர் உள்ளல்! என்றாரே வள்ளுவர் இதுவல்லவா?

நமது எண்ணங்களைத் தூய்மைப்படுத்துவதே இது! எப்படித் தூய்மைப்படுத்துவது? உள்ளத்தில் வயிற்றெரிச்சல் எனும் பொறாமை உணர்வுக்கு ஒது போதும் இடமளிக்கக்கூடாது. வயிற்றெரிச்சல் என்பது கண்ணுக்குத் தெரியாத கட்டி! புண்! நாம் உணர முடியாத நெருப்பு! இது நம்மை பாதாளத்தில் தள்ளி விடும்! ஏன் குழி தோண்டி புதைத்து விடும்!

மற்றவரை வாழ்த்துவதும், அன்பு செலுத்துவதுமே இந்த உணர்வு நம்மை நெருங்காமல் இருக்க நாம் பயன்படுத்த வேண்டிய மருந்துகள்! தடுப்புச் சுவர்கள்! பாதுகாப்புக் கவசங்களுமாகும்.

வயிற்றெரிச்சல் முதலில் நமது உடல், பின்னர் அதனைத் தொடர்ந்து மனம் ஆகியவற்றைப் பாதித்து நம் மீதே நமக்கு வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்தி நமது வாழ்வையே கெடுத்து விடும். இந்த வெறுப்புணர்வு நாம் செய்யும் வேலைக்கு கொஞ்சம் கொஞ்சமாகப் பரவி குடும்ப நலம், தொழில் நலம் ஆகிய இரண்டும் கெடுவதற்கு துணை புரிந்து நம்மை குடிகாரராக, புகைப்பவராக சூதாடியாக மாற்றிவிடும். இதனால் நாமும் கெட்டு அதன் வழி நமது குடும்பத்தையும் நடுத்தெருவில் நாம் கொண்டு வந்து நிறுத்தி விடும் நிலை உருவாகி விடும்.

இதை விட ஒரு மனிதனுக்கு வேறு தண்டனை வாழ்நாளில் வேண்டுமா? என்ன?

ஆகவே எண்ணங்களை உயர்வாக்கி புறத்தூய்மையோடு அகத்தையும் தூய்மைப் படுத்தலாமே! இது சற்று கடினமாகத் தோன்றலாம். மனம் வைத்தால் மிக மிக எளிது.

மூன்றாவது வழி (3)

“ஆன்மீகத்தால் உயர்ந்து நில்லுங்கள்” என்பதாகும்.

ஆன்மீகம் என்று காப்மேயர் குறிப்பிடுவது இறைஉணர்வையே! இறைநம்பிக்கையினையே! இந்த உணர்வு இல்லாதவர்கள் மனிதர்களே அல்ல! ஆம் இது அழுத்தமான உண்மை! நம்மை மீறிய சக்தியே இறைவன்!

அந்த இறைவனை உலகில் மிக மிகப் பெரியவன்!

ஒன்றேகுலம் ! ஆம் மனித குலம் ஒன்றே!

ஒருவனே தேவன்! ஆம் கடவுள் ஒருவரே!

அந்த ஒரே இறைவனை, கடவுளை அவரவர் விரும்பும் பெயர் சொல்லி அழைத்துக் கொண்டிருக்கலாம். அதில் தவறில்லை. அந்த ஒருவனை பல கோணத்தில் பார்ப்பதை மதச் சண்டையாக மாற்றுகிறோமோ அதுதான் மாபெரும் பாவம்! இதற்கு விமோசனமே கிடையாது!

மனிதன் நம்மை மீறிய சக்தியை நம்பி இறைவனாக ஏற்றுச் செயல்படும் போதுதான் மனச்சாட்சி, மனித உறவு, மனித நேயம் ஆகியவை உண்மையிலேயே செயல்படுகின்றன என்று பொருள்! ஆம் நம்மை மீறிய சக்தி நமது செயல் களைக் கண்காணிக் கிறது என்ற உணர்வு ஏற்படும் போதே மனிதன் தவறு செய்யத் தயங்குவான்.

இன்று உல கெங்கும் பல விதமான தவறுகள் அன்றாடம் நடப் பதற்கு இந்த உணர்வு குறைந்து வருவதே அடிப்படைக் காரணமாகும்.

“யாதும் ஊரே! யாவரும் கேளீர்” என்று உலகுக்கு குரல் கொடுத்த நமது உணர்வு பலப்பட இறைஉணர்வே தலையாய வழியாகும்.

இந்த உணர்வு இருக்கும்போது மனிதன் இறைவன் மீது பாரத்தை போட்டுவிட்டு எவ்வளவு சுமையானாலும் சுமக்கிறான். இறைவனே அவற்றைச் சுமப்பது போல ஒரு உணர்வு! அவனுக்கு!

இந்த மூன்றையும் பின்பற்றுபவர்கள் கட்டாயம் மன அழுத்தத்தின் விளைவாக ஏற்படும் மனச்சோர்விலிருந்து முழுமையாக விடுதலை அடைகிறார்கள்.

மனச்சோர்வையும் மகிழ்ச்சியாக இப்படி மாற்றலாமே.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 2005

ஒட்டுநர் மருத்துவராகிறார்…..
இமேஜை வளர்த்துக்கொள்ளுங்கள்
மனச்சோர்வுக்கு மருந்து
வாழ்க்கை என்பதோர் பெருங்கனவு
தாழ்வு மனப்பான்மையை தகர்ப்போம்
இழப்பின் மதிப்பு
நீங்க ஹார்டு ஒர்க்கரா? ஸ்மார்ட் ஒர்க்கரா?
மலரும் மனமும்
நிறுவனர் நினைவுகள்
ஏணிகளும் பாம்புகளும்
தன்னம்பிக்கை
அனைவரும் போற்றும் அருட்தந்தை வேதாத்ரி மகரிஷி
வெற்றி தரும் வேலை நேரம்
திறந்த உள்ளம்
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி!
கூச்சமும் பயமும் நீங்கிட..
அனிதா குப்புசாமி புஷ்பவனம் பேட்டி
முன்னேற்றத்தின் மூலதளங்கள்
உழைப்பால் உயர்ந்தவர்
தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்களுடன் ஓர் நேர்முகம்
நிறுவனர் பக்கம்
உள்ளத்தோடு உள்ளம்