Home » Articles » நம்மை உயர்த்தும் உத்திகள்

 
நம்மை உயர்த்தும் உத்திகள்


இராம சுப்பிரமணியன்
Author:

முன்னுரை

நண்பர்களே… இதுவரை நாம் நம்மைப் பிணைக்கும் சங்கிலிகளாக பணிரண்டு மன உணர்வுகளைப் பார்த்தோம்…. இந்த பணிரெண்டு மன உணர்வுகளும் நம்மை சராசரி மனப்பான்மையோடு கட்டப்போட்டுவிடக் கூடியவை.. இவைகளை கட்டுக்குள் வைத்துக்கொள்ளும் வழி முறைகளை நாம் “நம்மைப் பிணைக்கும் சங்கிலிகள் என்ற கட்டுரைத் தொடர்மூலமாகப் பார்த்தோம்…

இந்தப் பணிரெண்டு சங்கிலிகளின் பிடியில் இருந்து விடுபட்டப் பிறகு அடுத்து என்ன?  என்ற கேள்வி வருகிறது. ஒரு பாத்திரத்திலே பாலை வைக்க வேண்டும் என்றால் முதலில் பாத்திரத்தை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்… அது போல உயர்வான நிலைகளுகுச் செல்ல வேண்டும் என்றால் முதலில் நம்மை கீழ் நிலைகளில் இறுக்கிப் பிடிக்கும் எதிர் மறை மன உணர்வுகளை நாம் கட்டுக்குள் கொண்டு வராமல் இருந்தால், நமது உயர்நிலைகள் எதிர்மறைப் பலன்களை தரக்கூடியவைகளாக மாறி விடும்….

ஆகவேதான் நம்மைப் பிணைக்கும் சங்கிலிகளைப் பற்றி, விரிவாக ஆய்வு செய்ய வேண்டி வந்தது…. நண்பர்களே… அடுத்ததாக உயர்நிலைக்குப்  போவதற்கு தேவையான உத்திகளைப் பார்ப்போம்…. “நம்மை உயர்த்தும் உத்திகள்..” என்று தலைப்பிட்டுள்ளேன்.. அறிவு இலக்கியங்கள் எல்லா மொழிகளிலும் நிறையவே காணக் கிடைக்கின்றன… (Wisdom Literature).  அப்படிப்பட்ட அறிவு இலக்கியங்களிருந்து திரட்டபட்ட முத்துக்களின் சரமாகவே இந்த “நம்மை உயர்த்தும் உத்திகள்…” என்ற கட்டுரைத் தொடரைப் படைக்க விழைகிறேன்… உங்களுடைய ஒத்துழைப்பையும் ஆக்கபூர்வமான விமர்சனங்களையும் எதிர்நோக்குகிறேன்…

நன்றி.

நம்மை உயர்த்தும் உத்திகள் (1) சவால்களை நேசியுங்கள்.

ஓர் இராணுவ உயர் அதிகாரி தனது கூடாரத்தில் இருந்தார்… ஓட்டத்துடன் உள்ளே நுழைந்தார். ஓர் இராணுவ வீரர்… நுழைந்தவர் பதட்டத்துடன்  பேசினார்..”ஸார்… எதிரிகள் நம்மை எல்லாப் பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டு விட்டார்கள்…. ” இராணுவ அதிகாரி பதட்டப்படுவார்  என்று அந்த வீரர் எதிர்பார்த்திருக்க வேண்டும்.. ஆனால் மாறாக அந்த இராணுவ அதிகாரி உற்சாகக் குரல் கொடுத்தார்”  அற்புதம்… நல்ல வாய்ப்பு… எந்த திசையில் வேண்டுமானாலும் நாம் தாக்குதல் தொடுக்கலாம்…

சவால்களை களிப்புடன் எதிர்கொள்ளும் அந்த இராணுவ அதிகாரியின் இந்த மனோபாவமே நாம் கைக் கொள்ள வேண்டிய முதல் உத்தி…. சவால்கள் நம் வாழ்க்கையை உயரே தூக்கிச் செல்வதற்கான உந்து தளங்கள்… (Challenges are the sping boards for success).  சவால்களை மட்டும் நாம் களிப்புடன் எதிர்நோக்க ஆரம்பித்து விட்டால், வெற்றியை நோக்கிய நமது பயணம் வெகுவாக வேகப்படும்….

ஆனால், பலருக்கு சவால் என்பது ஒரு பயமுறுத்தும் வார்த்தை… சாவலை ஒரு திரைப்பட வில்லனைப் பார்ப்பது போலத்தான் நாம் பார்க்கிறோம்… (திரைப்பட வில்லன்கள், கதாநாயகனிடம் அடிக்கடி சவால் விடுவது ஒரு காரணமாயிருக்கலாம்…)  சவால்கள் நம்ம அழிக்க வருகின்ற சக்திகள் என்பது போன்ற ஒரு தோற்றத்தை நாம் நமது மனதில் வடிவமைத்து வைத்திருக்கிறோம்..

ஆனால் அது தவறான பிம்பம்… உண்மையிலேயே சவால் என்பது மாறுவேடத்தில் வந்திருக்கிற ஆசீர்வாதம்… (A challenge is a blessing in disguise). அது நம்மை பொடிப்பொடியாக உதிர்த்துப் போடக் கூடிய க்ரைண்டிங் வீல் அல்ல. அது நம்மை பட்டைத் தீட்டி, ஒரு சிறந்த வைரமாக ஒளிர்விக்க கூடிய ஒரு வாய்ப்பு…..

ஒவ்வொரு சவாலுக்குள்ளும் ஒரு வாய்ப்பு இருக்கிறது.. சவாலை பயத்தோடு பார்க்காமல்,  அதில் மறைந்திருக்கும் வாய்ப்பைப் பார்த்து ஊக்கம் பெறுவது ஒரு அற்புதமான உத்தி…

வாழ்க்கையில் வெற்றி பெற்ற அனைவரும் சவால்களை சந்தித்த காரணத்தாலேயே வெற்றி பெற்றிருக்கிறார்கள்.. பழம்  பெரும் காப்பியங்களைப் படித்தோம் என்று சொன்னால், அதன் கதாநாயகர்கள் மிகப்பெரும் சவால்களை சந்திப்பது புரியும்.  ஊக்கத்துடன் அந்த சவால்களை அவர்கள் சந்திப்பதனாலேயே, காப்பியங்களுக்கு சுவை கூடுகிறது.. அந்த கதநாயகர்கள் வெல்லும்போது, நாமும் வெல்கிறோம்.

இப்போதும் கூட எந்த ஒரு திரைப்படத்திற்கும் அடிப்படையான ஒரு முக்கியத் தேவை உண்டு.. அதை ‘நாட்’ (knot) என்கிறார்கள்… இந்த முடிச்சு’தான் ஒவ்வொரு திரைப்படத்தின் ஆணி வேராக இருக்கிறது… இந்த முடிச்சு எவ்வளவு வலுவானதாக இருக்கிறதோ, அந்த அளவு திரைப்படத்தின் சுவாரஸ்யம் கூடும்…

நமது வாழ்க்கைக்கு சுவாரஸ்யம் சேர்ப்பது இந்த சவால்களே.. சவால்களே இல்லை என்றால் வாழ்க்கை எவ்வளவு பெரிய சூனியமாக, சுவாரஸ்யமாக ஆகி விடும் என்று யோசித்துப் பாருங்கள். சவால்களதான் நமது வாழ்க்கைக்கு ஆர்வத்தையும் அர்த்தத்தையும் தருகின்றன.  சாவல்களை இப்படி ஒரு புதிய கோணத்தில் பார்ப்பது, அவற்றை நமது சிநேகிதர்களாக்கி விடும்.

நமது வரலாற்றிலே பலர் இப்படித்தான் சவால்களை நண்பர்களாக்கிக்
கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பலர் சவால்களைத்தேடிச் சென்றிருக்கிறார்கள்.  சவால்கள் இல்லாத நாட்கள் அவர்களுக்கு வெற்று நாட்கள். அவர்கள் அந்த நாட்களை ஒரு போதும் விரும்பியதில்லை. சவால்களை சந்திது அவற்றோடு உறவாடுவதிலேயே அவர்களின் மகிழ்ச்சி இருந்திருக்கிறது.

அண்ணல் காந்தி அடிகள், ஆபிரகாம் லிங்கன், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், நெல்சன் மண்டேலா, மார்க போலா போன்ற பலர் சவால்களை, நல்ல வாய்ப்புகளாகே பார்த்திருக்கிறார்க்.  சமுதாயத்திற்கு தங்களுடைய அதிகபட்சமான பங்களிப்பதை செய்வதற்கு இந்த சவால்கள் அவர்களுக்கு ஏற்ற வாய்ப்புகளாகவே இருந்திருக்கின்றன.

இதில் மற்றொருமுக்கியமான விஷயம் என்னவென்றால், நமக்குத் தேவையான சாவல்களை நாமே உருவாக்கிக் கொள்ள முடியும். உண்மையில் அனைத்து நோக்கோடு சவால்களை நாம் பார்க்கக் கற்றுக்கொண்டு விட்டால், நமக்கு ஏற்றவாறு சவால்களை நாமே எளிதாக வடிவமைத்துக் கொள்ளலாம்.  பின்னர் அவற்றோடு உறவாடி, அவை தரக்கூடிய வாய்ப்புகளை ஏற்றுக்கொண்டு நம்மை நாமே  உயர்த்திக்  கொள்ளலாம்.

நமது திறமைகள் என்ன என்பதைப் பற்றி, நமக்கு ஒரு தெளிவான கருத்து இருந்தால், அந்தத் திறமைகளின் அடிப்படையில் சவால்களை நாமே உருவாக்கிக் கொள்ளலாம். மேடைப்பேச்சிலே திறமை இருந்தால், மூன்று மாத்ததிற்குள் பதினைந்து மேடைகளில்பேச வேண்டும் என்ற சவாலைநாமே ஏற்படுத்திக் கொள்ளலாம்.  இபடி ஒரு சவாலை நாமே ஏற்படுத்திக்கொண்டு, அதை வெல்வதற்கான முயற்சியை உளப்பூர்வமாக மேற்கொண்டால், மேடைப் பேச்சு கூடி பெறும் பயன் அடையப்போவது நாம்தானே..?

விற்பனையாளர் தங்களுக்கு ஏற்ற சவால்களை தாங்களே வடிவமைத்துக் கொள்ளலாம்.. (ஒரு நாளில்இருபது பேரையாவது சந்தித்துப்பேசுவேன்..) ஒரு மாணவன் தனக்கு ஏற்ற சவாலை தானே உருவாக்கிக்கொள்ளலாம்.. ( ஆறு மாதத்தில் இந்த கணினிப் பயிற்சியை பூர்த்தி செய்வேன்…) இப்படி ஒவ்வொரு மனிதனும் தனக்கு ஏற்ற சவாலைதானே தீர்மானித்துக் கொள்ளலாம்.

ஆகவே சவால் என்பது நாமே வடிவமைத்துக்கொள்ளக்கூடிய ஒரு அற்பது உத்தி என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சவால்களோடு கை கோர்த்துக் கொள்ள வேண்டும். அவைகள் நம்மை உயரே அழைத்துச் செல்லும் ஆற்றல் மிக்கவை.

பயிற்சி முறை

1) உங்களது  ‘பளிச்’ திறமை ஒன்றை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.

2) அது தொடர்பான சவால் எதையேனும் சந்தித்தது உண்டா என்று நினைத்துப் பாருங்கள்.

3) அந்தச் சவாலை எப்படி எதிர் கொண்டீர்கள் என்பதையும் அலசிப்பாருங்கள்.

4) இந்த அனுபவங்களின் அடிப்படையில் ஒரு புதிய சவாலை நீங்களே வடிமைத்துக் கொள்ளுங்ளகள்.

5) இந்த புதிய சவால் மிக எளிதாக இல்லாமலும், மிகமிக கடினமாக இல்லாமலும் நடைமுறைக்கு ஏற்றதாக, சற்று கடினமானதாக இருக்கட்டும்.

6) இந்த சவாலை நேசத்தோடு அணுகுங்கள்.  அது உங்களை உயர்த்திக் கொள்வதற்கான வழி என்பதை உணர்ந்து, அதை எதிர் கொள்ளுங்கள்.  அது வென்றுமுடித்து, மதித்துத் தள்ள வேண்டிய ஒன்றல்ல.. உங்கள் வாழ்க்கையில் உங்களைத் தொடர்ந்து ஊக்குவிக்கக்கூடிய நண்பன் என்ற உணர்வோடு, அதை எதிர்கொள்வதற்கான திட்டத்தை வகுங்கள்.

7) அந்த திட்டத்தைச் செயல்படுத்துங்கள்.

வாழ்த்துக்கள்.. தொடர்ந்து சந்திப்போம்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 2005

எண்ணமே செயலானால் எதிலுமே வெற்றி
எண்ணமே செயலானால் எதிலுமே வெற்றி
கவிதை
விடியலை நோக்கி..
நம்மை உயர்த்தும் உத்திகள்
மலரும் மணமும்
முன்னேற்றத்தின் மூலதளங்கள்
நெல்லை சு. முத்து பேட்டி
பிள்ளைகளை சான்றோனாக்குவதில் பெற்றோர்களின் பங்கு
நாளும் உழைக்க வேண்டும்
நெஞ்சத்தில் புத்துணர்வு பொங்கட்டும்
நிறுவனர் பக்கம்
விடியல்…
உள்ளத்தோடு உள்ளம்
அடுத்தது என்ன?
நீங்களும் சிறந்த நிர்வாகியாகலாம்
எது வெற்றி?
பாதை இங்கே பார்வை எங்கே?
நிறுவனர் நினைவுகள்
எப்படி? எப்படி? எப்படி?
உன்தோள் பெருந்தோள்
எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி!
விற்பனையில் வியத்தகு சாதனைகள் படைக்கலாம்
இலக்கு
மாணவ மாணவியர் கல்வியில், வாழ்வில் வெற்றியடைய
திறந்த உள்ளம்
பேசுவது சரியா?