Home » Cover Story » நெல்லை சு. முத்து பேட்டி

 
நெல்லை சு. முத்து பேட்டி


முத்து சு
Author:

மதி

நண்பர் நெல்லை முத்து அவர்களுக்கு,

“அற்புத விஞ்ஞான விளையாட்டு”
ஓர் அற்புதமான படைப்பு;
குழந்தைகளுக்கு, அறிவூட்டும்.

வாழ்த்துக்கள்!

– ஆ.பெ.ஜெ. அப்துல் கலாம்

இதுவரை தமிழகத்தில் 3 பேருக்கு அறிவியல் தேசியவிருது கிடைத்துள்ளது. விண்வெளி ஆராய்ச்சித்துறையில் இவ்விருது தங்களுக்கு கிடைத்துள்ளது. உங்களைப் பற்றி சொல்லுங்களேன்.

இவ்விருது இந்தியாவில் மத்திய அரசால் தேசிய அறிவியல் தகவல்தொழில்நுட்ப குழுமத்திலிருந்து ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

மேலும், ஊடகங்களின் வழியாக வானொலி, தொலைக்காட்சி மற்றும் அச்சு ஊடகங்கள் வழியாக அறிவியல் கருத்துக்களைப் பரப்புபவருக்கும் இவ்விருது வழங்கப்படுகிறது. சமீபத்தில் இதன் தொகை 1 இலட்சம் வரை வழங்கப்படுகிறது. தனிப்பட்ட முறையிலும் அறிவியலைப் பரப்புவர்களுக்கும் இது வழங்கப்படுகிறது.

மேலும், குழந்தை நிறுவனங்களைச் சார்ந்து அறிவியல் பரப்புவர்களுக்கும் இவ்விருது வழங்கப்படும். இது எல்லா மொழிகளுக்கும், மாநிலத்திற்கும் பொதுவானதொரு பரிசு.

இதுவரை தமிழகத்தை பொருத்தமட்டில், எனக்கு முன்னால் இரண்டு பேருக்கு இப்பரிசு வழங்கப்பட்டது.

குன்றக்குடி அடிகளார் அவர்களுக்கும், அதன்பிறகு எழுத்தாளர் சுஜாதா அவர்களுக்கும் வழங்கப்பட்டது. குன்றக்குடி அடிகளார் காரைக்குடியை அறிவியல் நகரமாக ஆக்கியதில் பெரும் பங்காற்றியதற்கு இவ்விருது வழங்கப்பட்டது. நீண்ட இடைவெளிக்குப்பிறகு, எனக்கு இவ்விருது கிடைத்திருப்பது மகிச்சி தருகிறது.

தங்களின் இளமைப்பருவம் பற்றி சொல்லுங்களேன்…

என்னுடைய பிறப்பு வளர்ப்பு திருநெல்வேலி டவுன். என்னுடய தந்தையார் நகைப்பெட்டி செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். அதன்பிறகு, புகையிலை வியாபாரத்தையும் செய்து வந்தார் அச்சமயத்தில் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ விசுவநாதம் அவர்களின் அறிமுகமும் என் தந்தையாருக்குக் கிடைத்தது.

எங்கள் குடும்பம் மிகச் சாதாரண நிலையிலேயே இருந்தது. வீட்டில் மினசார வசதி கூட கிடையாது. நான் 196 எஸ்.எஸ்.எல்.சி. முடித்தேன். கீழக்கரைப் பள்ளயில்தான் 6,7,8 வகுப்புகளில் படித்தேன். பள்ளியில் படிக்கும்போதே அறிவியல் பாடத்தில் முதல் மதிப்பெண் பெற்றேன். இதுவே எனது முதல் படி.

மேலும், ஓவியப் போட்டியில் 6 ஆம் வகுப்பு படிக்கும்போது முதல் பரிசு வாங்கினேன். ‘கேமல்’ பென்சில் பரிசுபெற்றது நினைவில் உள்ளது.

என் தந்தையாருக்கு நாடகத்தில் மிகுந்த ஈடுபாடு உண்டு. மேலும், பகுத்தறிவுக் கருத்துக்களில் மிக ஆர்வம் கொண்டவர். இதனால் என் உள்ளத்திலும் பகுத்தறிவுக் கருத்துக்கள் நிலைபெற்றன.

பள்ளிப்பருவத்திலேயே படிக்கின்ற பழக்கம் ஏற்பட்டதால், ஊர் நூலகத்திற்கு அடிக்கடி சென்று வந்தேன். நிறைய அறிவியல் கதைகளும், கட்டுரைகளும் படிக்கின்ற வாய்ப்பும் ஏற்பட்டது. என்னுடைய அறிவியல் இஆசிரியர் அவர் வீட்டிற்கு என்னை வரச்சொல்லி, மாணவர் தேர்வுத்தாளைத் திருத்தச் சொல்வார். மற்ற மாணவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் போது, நான் மட்டும் இந்தப் பணியில் ஈடுபட்டதால் ஆசிரியர் என்னைப் பெருமளவில் ஊக்குவித்தார். எஸ்.எஸ். எல்.சி.யில் மாநில அளவில் 40 வது இடத்தைப்பெற்றேன்.

தங்களுக்கு கிடைத்த பாராட்டுகள், பரிசுகள், விருதுகள் பற்றி விளக்கமாக சொல்லுங்கள்.

1973ம் ஆண்டு வேதியியல் இளநிலைப்பட்டப் படிப்பில் கல்லூரி முதல் மாணவனாகச் சிறப்புயர் தகுதியில் (Special Distinction)ல் தேர்ச்சி பெற்றேன்.

ஆதே ஆண்டு 19.11.1973 அன்று திருவனந்தபுரம், விக்கிரம் சாராபாய் விண்வெளி மையத்திலும் 1997 முதல் ஸ்ரீ ஹரிக்கோட்டா, சத்தீஷதவான் விண்வெளி மையத்தில் திண்ம உந்து எரிபொருள் திட்டத் தொடர்ப்புக்குழு மேலாளராகப் பதவி ஏற்றேன்.

அறிவியல் கட்டுரைகள், அறிவியல் புதினங்கள், புனைகதைகள், அறிவியல் இக்கிய்கள், வரலாறுகள், அறிவியல் மொழி பெயர்ப்புகள், போலந்து மற்றும் மலையாளக் கவிதை மொழி பெயர்ப்புகள், திறனாய்வுகள், சிறுகதைகள், குறுநாவல்கள் என ஏறத்தாழ 50 நூல்கள் எழுதியுள்ளேன்.

பல்வேறு இதழ்களில் 250 மேற்பட்ட படைப்புகள் வெளிவந்து உள்ளன.

தமிழ் இணையம் – 99, எட்டாவது உலகத்தமிழ் மாநாடு (1994) , உலகத் திருக்குறள் மாநாடு (1999), பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் சுதேச அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கரத்தரங்கில் தலைமைப் பேருரை (Key-note Address – 1994). தமிழக அறிவியல் பேரவை (புதுவைப் பல்கலைக் கழகம், 24-12-1994), அண்ணாமலைப் பல்கலைக் கழகம் (06-0 5-1997). திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகம் (26-12-1998), கருத்தரங்க மாநாடுகளில் பொது அமர்வுச் சிறப்புரைகள், அனைத்திந்திய அறிவியல் தமிழ்க்கழகம் – திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து நடத்திய ஒன்பதாவது மாநாட்டுத் தொடக்க விழாத் தலைமை (26-02-2000) எனப் பல்வேறு சர்வதேச, தேசிய மாநாடுகளில் சிறப்புறப் பங்கெடுத்துள்ளேன்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (சென்னை), புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் (புதுவை) அனைந்திந்திய அறிவியல் தமிழ்க் கழகம் (தஞ்சாவூர்), தமிழக அறிவியல் பேரவை, சுதேசி விஞ்ஞான இயக்கம் (குன்றக்குடி), அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்ப்பல்கலைக் கழகம், இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றம், மாவட்ட அறிவியல் மையம் (திருநெல்வேலி) , கேரளப் பல்கலைக் கழகம் (திருவனந்தபுரம்), ‘தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பக்குழு’, கோவை, ‘கலைக்கதிர்’ மற்றும் ஜி. தமோதரன் நினைவு அறக்கட்டளை, மராத்தி விஞ்ஞான பரீட்சத்’ (மும்பை) நடத்திய முதலாவது தேசியப் பன்மொழி அறிவியல் எழுத்தாளர் மாநாடு (national Conference for Poplar Science Writers) ஆகிய அமைப்புகளில் ஏறத்தாழ 50 ஆய்வுக்கட்டுரைகள் படைத்துள்ளேன்.

தமிழ்ப் பல்கலைக்கழக்கத்தின் “அறிவியல் களஞ்சிய” வல்லுநர் குழு, “தொல் அறிவியல் துறை”ப் பாடத் திட்டக்குழு மற்றும் இணைப் பேராசிரியர் நியமனக் குழு ஆகியவற்றில் உறுப்பினர். தமிழ்ப் பல்கலைக் கழகத் தொல் அறிவியல்துறை முனைவர் பட்ட இணை ஆய்வு நெறியாளரும் (Go – Guide) ஆவேன்.

அறிவியல் தமிழ்த்தொண்டு பரிசுளையும் பாராட்டுகளையும் விருதுகளையும் தமிழக அரசு முதல் பரிசு (இரண்டு முறை 1989, 2000), அமுத சுரபி – எம்.ஆர்.எல் “அறிவியல் தமிழ் காப்போம் ” பரிசு (1990),அனந்தாச்சாரி அறக்கட்டளைப் பரிசு (1993), தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் வழங்கிய தவத்இரு குன்றக்குடி அடிகளார் நினைவுப் பரிசு (1997), பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சங்க இலக்கியப் பரிசுகள் (மூன்று முறை – 1994, 1997,, 1999), “இலக்கிய பீடம் விருது” (1998), உரத்த சிந்தனை வழங்கிய “ஏகநாத் சிறந்த நூல் பரிசு” (1999) எனப் பல பரிசுகள் பெற்றுள்ளேன்.

மலேசியாவில் நிறுவப்பட்ட உலகத் தமிழ்க் கவிஞர் பேரவையின் தமிழக முதல் மாநாட்டின்போது டாக்டர் கலைஞர் வழங்கிய “கவிமாமணி” விருது; புதுவை அரசு “பாரதி நூற்றாண்டு விழா” வில் வழங்கிய “பாரதிப் பட்டயம்” உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும், தென்னகப் பண்பாட்டு மையமும், திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து திருவனந்தபுரம் நகரில் நடத்திய பாரதிதாசன் நூற்றாண்டு விழாவின் போது கேரள மாநிலத் தொழில் துறை அமைச்சர் மாண்புமிகு கெ. பங்கஜாட்சன் வங்கிய பொன்னாடை கௌரவிப்பு எனப் பிற மாநில அரசு விருதுகளும், சென்னை, ‘உரத்த சிந்தனை’ வழங்கிய “அறிவியல் மாமணி விருது” (1998), நாகர்கோவில் “தமிழாலயம்” அமைப்பு வழங்கிய “அறிவியல் இலக்கியச் சாதனையாளர்” எனப் பல பட்டங்களும் பெற்றுள்ளேன்.

சமீபத்தில் குடியரசுத் தலைவர் “பாரத ரத்னா” டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாமின் ‘இந்தியா 2020’ நூலினை அறிஞர்களுக்காகவும், உயர்நிலைப் பள்ளி மாணவர்களுகாவும் செறிவாக்கியும் எளிமையாக்கி படைத்துள்ளேன்.

மக்கள் தொடர்பு சாதனங்கள் மூலம் அறிவியலைப் பரப்பும் பணியில் சிறப்பாக ஈடுபட்டமைக்காக தேசிய அறிவிய் தொழில் நுட்பக் கவுன்சில் (என்.சி. எஸ்.டி.சி) ரூ. 50 ஆயிரம் பரிசு வழங்கியது. தேசிய அறிவியல் தினத்தை (பிப்.27) ஒட்டி தில்லியில் நடைபெற்ற விழாவில் இப்பரிசு வழங்கப்பட்டது.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 2005

எண்ணமே செயலானால் எதிலுமே வெற்றி
எண்ணமே செயலானால் எதிலுமே வெற்றி
கவிதை
விடியலை நோக்கி..
நம்மை உயர்த்தும் உத்திகள்
மலரும் மணமும்
முன்னேற்றத்தின் மூலதளங்கள்
நெல்லை சு. முத்து பேட்டி
பிள்ளைகளை சான்றோனாக்குவதில் பெற்றோர்களின் பங்கு
நாளும் உழைக்க வேண்டும்
நெஞ்சத்தில் புத்துணர்வு பொங்கட்டும்
நிறுவனர் பக்கம்
விடியல்…
உள்ளத்தோடு உள்ளம்
அடுத்தது என்ன?
நீங்களும் சிறந்த நிர்வாகியாகலாம்
எது வெற்றி?
பாதை இங்கே பார்வை எங்கே?
நிறுவனர் நினைவுகள்
எப்படி? எப்படி? எப்படி?
உன்தோள் பெருந்தோள்
எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி!
விற்பனையில் வியத்தகு சாதனைகள் படைக்கலாம்
இலக்கு
மாணவ மாணவியர் கல்வியில், வாழ்வில் வெற்றியடைய
திறந்த உள்ளம்
பேசுவது சரியா?