Home » Articles » மலரும் மணமும்

 
மலரும் மணமும்


admin
Author:

ஒழுங்கின் உச்சம் நீ!


பரிணாம வளர்ச்சியின் உச்சம்தான் மனிதன்.  மனிதனின் உடல் கூறுக்குள் சுமார் 30,000 மரபுக் கூறுகள் நொடிப்பொழுதும் பிசிரு தட்டாமல் தன் கடமைகளை செவ்வனே செய்து விடுகின்றன.  நாம் உண்ணும் நல்ல உணவு (கவனிக்கவும் நல்ல உணவு) இரசமாகி, இரத்தமாகி, சதையாகி, கொழுப்பாகி, எலும்பாகி, எலும்பினுள் மஜ்ஜை மற்றும் மூளையுமாகி இறுதியில் விந்து நாதமாக வெளிப்படும்.  இந்த மாற்றம் ஒவ்வொஒரு நாளும் ஒழுங்காக நடந்துவிடும்.  இதில் நாம் செய்யும் ஒரே வேலை நல்ல உணவை உண்பது மாதிரமே.. மற்றபடி உண்ட உணவு விந்து நாதம் வரை மாறுவதற்கு நமக்குள் இருக்கும் ஒழுங்கு மாத்திரே.. நாம் உண்டது செரிக்காவிடில் ஆரம்பமாவது தான் மற்ற எல்லா பிரச்சினைகளுக்கும் ஆதாரக் காரணமாகிவிடுகிறது.

அன்பர்களே கடந்த இதழ்களில் அக்ரிமோனி மற்றும் ஆஸ்பென் நபர்களைப் பற்றிப் பார்த்தோம். இவர்களின் எதிர்மறை குணங்கள் அனேகமாக அவர்களைத்தான் அதிகம் பாதித்திருகும்.  ஆனால் இப்போது நாம் காண இருக்கும் ‘பீச்’ நபரின் எதிர்மறை குணத்தால் அவருக்கு கஷ்டம் மற்றவர்களுக்கும் கஷ்டம். பீச் நபர்களின் எதிர்மறை குணங்களை இனி காண்போம்.

பீச் நண்பர்கள் எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் மற்றவர்களிடம் ஒழுங்கையும் நீதியையும், நேர்மையையும் நேரம் தவறாமைய்யும் எதிர்ப்பார்ப்ப்.  எப்பொழுதும் சட்டம் ஒழுங்கு பேசவார்.  இராணுவ ஒழுங்கை சராசரியான நபர்களிடம் எதிர்பார்ப்பார்.  இவரின் வீடு மற்றும் அலுவலகத்தில் எதையும் ஒரு ஒழுங்கோடு வைத்திருப்பார்.   இதில் தவறு இல்லைதான்.  ஆனால் மற்றவர்கள் இந்த பொருட்களை மாற்றி வைத்துவிட்டால் அவர்கள் அத்தோடு தீர்ந்தார்கள். பீச் நபரின், தாம், தூம் கோபத்திற்கு ஆளாக நேரிடலாம். குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்ற கோட்பாட்டின் படி  பீச் நண்பர்களுக்கு அனேகமாக நண்பர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.

மனிதர்கள் யாவரும் பலவீனங்கள் கொண்டவர்களே.. யாரும்நூறு சதவீதம் ஒழுங்குடன் இருந்துவிட முடியாது. ஆனால் இந்த சிறிய விஷயம்  கூட நம் பீச் நண்பர்களுகு புரிவதில்லை. அவரவர்  அனுபவித்த, தெளிந்த மற்றும் உணர்ந்த வித்ததின்படி நடந்து கொள்வர். ஆனால் நம்  பீச் நபர் மற்றவர்களிடம் நூறு சதவீதம் ஒழுங்கை எதிர்பார்த்து ஏமாறும் போது, தாம் தூம் என்று கூச்சல்  போட்டு தன் அமைதியையும் பொறுமையையும் இழப்பர். இப்படி கூச்சல் போடும் போதே அவரிடம் சுய ஒழங்கு அதள பாதாளத்திற்கு சென்று விட்டதை உணர அவளுக்கு பொறுமை இருக்காது.

சரி, பீச் நபர்கள் ஏன் இப்படி சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார்கள்?  நமக்குள் எல்லாம் சரியாக நடந்துவிட்டால் நாம் சாந்தமாகவும் அமைதியாகவும் இருந்துவிடுவோம்.   உள்ளுக்குள்ளேயே ஒழுங்கற்று இருந்தால் வெளியே நாம் அமைதியற்று நிலைகொள்ளாமல் இருப்போம் அல்லவா?  ஆக பீச் நபர்களும் அவ்வித ஒழுங்கற்ற நிலையில் உள்ளுக்குள்ளே இருப்பதால் அமைதியற்று பொறுமை இழந்து வெளியே நடந்து கொள்வார். மகான் அரவிந்தரின் கூற்றுப்படி ஆரோக்கியம் என்பது வெளியில் தெரியும் உள் அமைதியாகும்.  (Health external expression of internal harmony) ஆக உள்ளே ஏற்ப்ட்ட ஒழுங்கு சீர்குலைவை  பீச் நப எதிமறையாக வெளியே அதுவும் தவறாக மற்றவர்களிடத்தில் தேடத் தொடங்குவதால் தேடிக்கொண்டே இருக்கவேண்டியதாகிறது.  இதன் பலனாய் அவர் சுற்றத்தையும் நட்பையும் தேட வேண்டிய நிலைக்கு ஆளாகிறார்கள்.

இனி, பீச் நபர்களின் நேர்மறை குணங்களை பற்றிப் பார்ப்போம். பீச் நபர்கள் தங்களது உள் ஒழுங்கை தங்களது சரியான எண்ணம், சொல், செயல் ( உணவு மற்றும் பழங்கள்) ஆகியவற்றில் திருத்தம் செய்து கொள்வதால் தீர்வு காணமுடியும்.  அதை விடுத்து தன்னைப்போலவோ அல்லது தன்னைவிட அதிகம் ஒழுங்கற்று இருக்கும் நண்பர்களிடம் ஒழுங்கை எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும்   இந்நப்களுக்கு பீச் மலர் மருந்து தரப்படும்போது இவர்கள் உள் ஒழுங்கு படிப்படியாக சரியாகி  வெளியே அமைதி நிலைக்குத் திரும்பி தங்களின் ஒழுங்குபடுத்தும் திறமையை சாதிக்கும் அளவுக்கு வெளிப்படுத்துவர். பீச்  நபர்களின் அதிமுக்கிய திறமையே எதையும் ஒரு ஒழுங்குடன் செய்வதுதான். இவர்கள் முழுமையான நேர்மறை குணத்திற்கு திரும்பும் போது இவர்கள் உலகின் சிற்ந்த அகராதிகளை எழுத வல்லவர்களாக இருப்பர்.  ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியை எழுதியவர் ஒரு உன்னத பீச் நபரே ஆவார். இதைப் போல பீச் நபர்கள் மற்ற மொழிகளுக்கும், அல்லது பல்வேறு பாடத்துறைகளுக்கு சொல் அகராதி எழுதி உலகின் அங்கீகாரம் பெறலாம்.   பீச் நபர்கள் பல்பொருள் அங்காடியோ அல்லது மருந்துகடையோ திறம்பட நடத்தும் இயல்பு  கொண்டவர்கள் ஆவர். இவர்களுக்குத்தான் ஆயிரக்கணக்கான பொருட்கள் அல்லது மருந்துகளை இலவசமாக கையாளும் திறன் இருக்கும்.  சிறந்த  பீச் நபர்கள் நீதிதவறாத நீதிபதிகளாக கடமையாற்றி உலகப்புகழ் பெறுவர்.

பீச் நபர்கள் மனமென்னும் தெய்வீக நீதிமன்றத்தில் சுய ஒழுங்கை கடைபிடித்து பூவுலகின் தன்னிகரற்ற நீதிமானாக திகழ்வர்.

“உள்ளத்தனையது உயர்வு” என்ற வள்ளுவனின் கூற்றுக்கு ஏற்ப ஒழுங்கின் உச்சம் கண்டு வாழ்வின் உச்சம் காண்போம் வா!  ஒழுங்கின் உச்சம் நீ!

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 2005

எளிது எளிது
நிறுவனர் நினைவுகள்
வெற்றி நமது விலாசமாகட்டும்
விற்பனையில் வியத்தகு சாதனை
சுனாமியில் மீண்ட டாக்டர் பெ. இளங்கோ
படிப்பாளிகளை படைப்பாளிகள் ஆக்குவோம்
செயலாக்குவோம்
சாதனையாளர்
முன்னேற்றத்தின் மூலதளங்கள்
ஸ்ரீராம் நிறுவனத்தின் வெற்றிக்கதை
எப்படி எப்படி எப்படி
சோதனை வெல்வோம்.. சாதனை கொள்வோம்!
நேர்காணல்
நீதான் வெற்றியாளன்
மலரும் மணமும்
நம்மைப் பிணைக்கும் சங்கிலி
எங்கும் எதிலும் வெற்றி
பேட்டி
உலகம் உங்கள் கையில்
வெற்றிக்கு கனவு காண்போம்
நிறுவனர் பக்கம்
உள்ளத்தோடு உள்ளம்