Home » Articles » நம்மைப் பிணைக்கும் சங்கிலி

 
நம்மைப் பிணைக்கும் சங்கிலி


இராம சுப்பிரமணியன்
Author:

இம்முறையும் ஒரு கதையுடன் ஆரம்பிப்போம்.. ஒரு கடுமையாக உழைக்கும் தொழிலதிபர்… அவரது வாழ்க்கை இலட்சியமே பல கோடிகளுக்கு அதிபதி ஆவது. அதை நோக்கி எப்போதும் ஓட்டம்.. வேறு எதற்குமே அவருடைய பார்வையில் நிரந்தர இடம் இல்லை….

வழக்கம்போல் ஒரு முறை அவர் தன்னுடைய வீட்டிற்கு இரவு வெகு நேரம் கழித்து வந்தார்  வரவேற்பறையில் அவருடைய மூன்றாவது படிக்கும் மகன் காத்திருந்தான்..தொழிலதிபருக்கு பெரும் கோபம்.

“ஏன் இன்னும் முழிச்சிக்கிட்டிருக்கே.. தூங்கப் போகலியா….?” அவர் தன் மகனிடம் இரைந்தார்….

“உங்களோட கொஞ்சம் பேசணும்பா.” என்றான் மகன் தயக்கமாக…

“என்ன விஷயம்?…” என்றார்..மகனுக்கு தன்னுடன் இப்படிப் பேச எப்படி தைரியம் வந்து என்று சற்றே வியப்பு அவருக்கு….

“உங்களோட ஒரு நாள் சம்பாத்தியம் எவ்வளவோப்பா…?”

அவருக்உ இப்போது கடுமையான கோபம்….

“இது உனக்குதேவையில்லாத விஷயம்.. உனக்கு சாப்பாடு, துணி, படிப்பு இது தாராளமா கிடைக்குதில்ல… அதோட நிறுத்திக்கோ… இப்ப போய் ஒழுங்கா தூங்கு… வந்துட்டான்.. பெரிய மனுஷன் மாதிரி கேள்வி கேட்டுகிட்டு…”

மகன் மசியவில்லை.. தனது குரலில் தைரியத்தை ஏற்றிக் கொண்டு சொன்னான்..

“இல்லப்பபா.. எனக்கு தெரிஞ்சாகணும்..”

“அடிவாங்கி ரொம்ப நாளாச்சி போல.. மறந்திடிடச்சா…” தந்தை உறுமினார்.. மகனை அடிப்பதற்குக கூட அவருக்கு நேரம் ஏது..?

“ப்ளீஸ்..சொல்லுங்கப்பா… உங்க ஒருநாள் சம்பாத்தியம் எனக்கு கண்டிப்பா தெரிஞ்சாகணும்.. ப்ளீஸ்….”
அவனுடைய குரலில் ஒரே நேரத்தில் தொனித்த உறுதியும், நெகிழ்வும் தந்தையை பாதித்திருக்க வேண்டும்…

“ஒரு நாளைக்கு பத்தாயிரம் ரூபாய்…” என்றார் சற்றே பெருமையாக….

“அப்ப ஒரு மணி நேரத்திற்கு..” என்று  இழுத்த மகன் மனக்கணக்கு போட்டான்..” ஒரு மணி நேரத்திற்கு கிட்டதட்ட ஐநூறு ரூபாய்..” என்றவன் முகம் மலர்ந்தான்..

“அப்பா.. ஒரு நிமிஷம் இருங்க…” என்றவன் தன் படுக்கை அறைக்குள் போய் சில கணங்களில் திரும்பி வந்தான்.. அவன் கையில் சில ரூபாய் நோட்டுகள்… அவற்றை அவன் தன் தந்தையிடம் தந்தான்..

“என்ன இது… எதுக்கு இந்த காசு..?” என்றார் தொழிலதிபர் குழப்பமாய்…

மகன் கெஞ்சலாகச் சொன்னான்…

“அப்பா. என்னோட சேமிப்புல இருந்து இந்த பணத்தை உங்களுக்குத் தரேன்..  இது உங்களோட ஒரு மணி நேரத்துக்கான ச்பளம். இந்த ஒரு மணி நேரத்தை நாளைக்கு சாயங்காலம் ஐந்து மணியிலேர்ந்து ஆறு மணி வரைக்கும் என்னோட செலவழிங்க..  ப்ளீஸ்… ஏன்னா… நாளைக்கு என்னோட பிறந்தநாள்.. நான் கேக்க வெட்டினதும் நீங்கதான் எனக்கு ஊட்டி விடணும்…”

தான் வாழக்கையில் எவ்வளவு பெரிய தவறை செய்திருக்கிறோம் என்பதை தொழிலதிபருக்கு அவருடைய கண்களில் பெருகிய கண்ணீர் உணர்த்தியது…
வாழ்க்கைக்கு மதொட்ச்சியான அனுபவங்கள்”  (அனுபவ தாரா) என்ற  ஒரு குறிப்பீடு உண்டு.  இந்த னுபவங்களின் தொகுப்பே வாழ்க்கை.. நிறைய தளங்கள்… நிறைய அனுபவங்கள். நிறைய புரிதல்கள்….

இஇப்படிப் பன்முகமாக பரந்து விரிகின்ற வாழ்க்கையில் பணம் அல்லது புகழ் அல்லது புகழ் என்ற ஏதோ ஒன்றை மட்டும் ஏகோபோக இலட்சியமாக குறித்துக் கொண்டு, அதை மட்டுமே கணக்கில் கொண்டு, தேடி ஓடுவது அபத்தமானது…. மனிதன் கண்கள் குறுக்கப்பட்ட குதிரை அல்ல.. ஒரு இலக்கை மட்டுமே பார்த்துக் கொடு, பக்கத்திலே உள்ள புல்வெளியைகூட கருத்தில் கொள்ளாமல் பாய்ந்து செல்லும் பந்தயக் குதிரைகள் பாவப்பட்டவை.. மனிதனுக்கும் வேண்டாம் இந்த மூர்க்கத்தனம்…

வாழ்க்கைப் பயணத்தில் நின்று நிதானிது அனுபவிக்க வேண்டிய விஷயங்கள் த்தனையோ உள்ளன.. பள்ளத்தாக்கில் கூவுகின்ற  பெறிஆப் பறவையின் குரல், சலசலத்து விழுகையில் ஏதோ சொல்ல நினைக்கும் அருவி, கரைகளுக்குகிடையே கட்டுண்டு ஓடும்நதியில் துள்ளிக் குதிக்கும் வெள்ளி மீன்கள், நெரக்கமான பேருந்து பயணத்தில் காலை மிதிக்கும் பக்கத்து நபர், இந்த வார இராசி பலன்கள், எதற்காகவோ கோபித்துக்கொண்டு நட்பு முறித்து போகும் நண்பன். நள்ளிரவில் குழந்தையின் அழுகுரல்,  கடைசி வீட்டு நாயின்  வாலாட்டுதல் என்று எத்தனையோ விதமான அனுபவங்கள் நமக்கு வாழ்க்கையின் அர்த்தத்தை காட்டிக்கொண்டே உள்ளன.

ஆனாலும் ஏதேனும் ஒருகுறிக்கோளைத் தேடி ஓடுகையில் இத்தனை அனுபவங்களையும் உதறிவிட்டு ஓடுகிறான் பார்வை குறுகிய மனிதன்.. அவனுடய இலக்கை அடைதல் மட்டும் அவனுக்கு மகிழ்ச்சியை தரும் என்ற எண்ணம் அவருக்கு… இது வானவில்லின் அடியில் தங்கப் பானையைத்தேடுவது போல முடிவில்லாதது என்பதை அவன் புரிந்து கொள்ள மறுக்கிறான்..

வாழ்க்கைபலதளங்களை உள்ளடக்ககியது..அதில் ஒவொரு மனிதனுக்கும் பல பாத்திரங்கள் (Roles) உள்ளன… மகன், சகோதரன், கணவன், தந்தை, நண்பன், குடிமகன் என்று பல்வேறு பாத்திரங்கள் அவனுடைய செயல்பாடுக்காக காத்திருக்கின்றன… அதில் ஒவ்வொரு பாத்திரத்துக்கும் இலக்குகள் (Goals) உள்ளன.  இதனைப்பாத்திரங்களையும் இறின் பல இலக்குகளையும் ஒருசேர நினைவில் வைத்திருப்பதே விசாலமான பார்வை.

இந்த விசாலமான பார்வை மட்டுமே வாழ்க்கைக்கு அர்த்தத்தையும் நிறைவையுமே தர   வல்லது. உயரத்தில் தனிமை உள்ளது.  (It is lonely at  the top) இலக்கை அடைந்ததின் வெற்றி மனிதனை வெற்றியை கூடிக் கொண்டாடி மகிழ அவனுக்கு நெருங்கிய சுற்றமும் நட்பு தேவை…

ஆனால் இலக்கை நோக்கி குருட்டுத் தனமான ஓட்டத்தால் சுற்றத்தையும், நட்பையும் இழக்கும் அபாயம் உள்ளது… (ஆரம்பத்தில் சொல்லப்பட்ட கதை இதைத்தான் உணர்த்துகிறது..) அது மட்டுமல்ல.. இலக்கை நோக்கிய வெறித்தனமான ஓட்டம், கடந்து வந்த பாதை எங்கும் எதிரிகளையும் உருவாக்கிவிட வல்லது.. இலக்கை அடைந்தே ஆகவேண்டும் என்ற வெறியில், நல்லவர்களைக்கூட எதிரிகளாக்கிக் கொள்ள முடியும்.

இப்படிக் கண்மண் தெரியாமல் ஓடி இலக்கை அடைந்தாலும் கூட, அந்த வெற்றியை எப்படி அனுபவிக்க முடியும்…?  நெருங்கிய சுற்றமும் உண்மையான நட்பும் இல்லாமையும் திட்டமிட்டு குழி பறிக்க காத்திருக்கும் எதிரிகளையும், வெற்றியில்  பங்கு போட காத்திருக்கும்  போலி நட்பையுமே இந்த வெறிதனமான “இலக்கை அடைதல்” சாதிக்கும்.

– தொடரும்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 2005

எளிது எளிது
நிறுவனர் நினைவுகள்
வெற்றி நமது விலாசமாகட்டும்
விற்பனையில் வியத்தகு சாதனை
சுனாமியில் மீண்ட டாக்டர் பெ. இளங்கோ
படிப்பாளிகளை படைப்பாளிகள் ஆக்குவோம்
செயலாக்குவோம்
சாதனையாளர்
முன்னேற்றத்தின் மூலதளங்கள்
ஸ்ரீராம் நிறுவனத்தின் வெற்றிக்கதை
எப்படி எப்படி எப்படி
சோதனை வெல்வோம்.. சாதனை கொள்வோம்!
நேர்காணல்
நீதான் வெற்றியாளன்
மலரும் மணமும்
நம்மைப் பிணைக்கும் சங்கிலி
எங்கும் எதிலும் வெற்றி
பேட்டி
உலகம் உங்கள் கையில்
வெற்றிக்கு கனவு காண்போம்
நிறுவனர் பக்கம்
உள்ளத்தோடு உள்ளம்