Home » Articles » உலகம் உங்கள் கையில்

 
உலகம் உங்கள் கையில்


மணிமாறன் கடவூர்
Author:

உலகறிந்த ஓர் உண்மையை எடுத்துரைக்கும்போது ‘உள்ளங்கை நெல்லக்கனி போல என்ற உவமையப்புலவர்கள் பயன்படுத்துவது வழக்கம். கணினி, இணையத்தளம், இ-மெயில் போன்றவற்றால் உலகம் உள்ளங்கைக்குள் ஒடுங்கிவிட்டது.  ஆழமான  கடல்களும்,நிமிர்நுத நிற்கும் மலைகளும், விரிந்து உயர்ந்து விளங்கும் வானவெளியும் கூட நமது பயணத்தைத் தடுத்து விடாது. காலையில் கனடா, மாலையில் மாஸ்கோ, இரவில் இந்தியா என்று மனிதன் பறந்து கொண்டிருக்கிறான்.  பறைவகளின் போட்டியாளனாய் மாறிவிட்டான்.

உண்பது, உறங்குவது மட்டும் வாழ்க்கையாக்க்கொண்டவர்கள் முகவரி இழந்து முடங்கிப் போய் மூலையில் நிற்கிறார்கள். உணர்தல், சிந்தித்தல், செயல்படல், தடைவரினும் கலங்காமலும் சோர்வு கொளாமலும் வெற்றியை நோக்கி வீறுநடை போடுதல் ஆகியனவற்றில் அதிகக் கவனம் செல்லுத்துவோர் வாழ்க்கையில் இமயமாய் உயர்கிறார்கள்.

சாதி, மதம், கட்சி, அரசியல் ரீதியாக எழுச்சிகள் ஏற்பட்டுக் கொண்டு இருக்கின்ற.  இன்னும் நமது நாட்டில் மனித எழுச்சி முறையாக ஏற்படவில்லை என்பது பெருங்குறையாக உள்ளது.  அதனை இன்றைய இளைஞர்கள் போக்கிட முன்வர வேண்டும்.  ஒரு குளத்தில் தண்ணீர் வந்து கொண்டிருக்கும்போது எது பழைய தண்ணீர், எது புதிய தண்ணீர் எனப்பிரித்துக் கூற முடியாது.  ஒன்றிக்கலந்து விடுகிறது. அதுபோல இச்சமூகத்தில் ஏய்போரும், ஏமாறுவோரும் உழைப்போரும், உழைப்பைச் சுரண்டுவோரும், நல்லவரும், தீயவரும் பகுத்துக் காண முடியாதபடி பாலில் தண்ணீராய் கலந்து விட்டிருக்கிறார்கள்.

வாழும்போதே வரலாறு படைக்க வேண்டும் என்று உறுதியான எண்ணம் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் நங்கூரம் பாய்ச்சிட வேண்டும். வரலாறுகள் வெறும் வார்த்தைகளால் வடிக்கப்படுவது அல்ல. செயல்திறனால் செதுக்கப்படுபவை எதையும் பிறழ உணர்ந்து பேதமையின் வயப்பட்டு மகிழ்ச்சியைத் தொலைத்து விட்டு மனம் குமறுகின்றார்கள் பலர்.  கூர்ந்து நோக்கி ஆழச்சிந்தித்து முறையாகச் செயல்படுவோர்க்கு முன்னேற்றம் வரவேற்புப் பண்ணிசைக்கும்.

அன்பும், பண்பும் மறக்கப்படுமாயின் வம்பும், வழக்கும் சுற்றி வளைக்கும். எல்லாவற்றையும் தாழிட்டுச் சிறைப்படுத்திவிடலாம். ஆனால் அன்பைச் சிறைப்படுத்த முடியாது. வாழும் நெறியை முறையாக வகையாகப் புரிந்துகொண்டால் தொடர்ந்து வரும் துன்பங்களுக்குத் தோல்வி கொடுக்கலாம். நம் உடலை இயக்கும் உயிர், அங்கிங்கெனாதபடி எங்கும் கலந்து நிற்கும் உயிர், இதயத்துடிப்பிலோ உடலுள் ஓடிக்கொடிருக்கிற குருதி ஓட்டத்திலோ, நாம் விடுகிற மூச்சுக் காற்றிலோ இருப்பதாக மருத்துவர்கள் கூறினாலும் அறிஉலக மாமேதை திருவள்ளுவப்பேராசான், உயிரானது அன்பில் இருக்கிறது ன்பதை உணர்தவே “அன்பின் வழியது உயிர்நிலை” என்று அறுதியிட்டுக் கூறுகின்றார்.

போன ஆண்டில் விளைச்சல் தந்தேன்; இந்த ஆண்டில் தரமாட்டேன் என்று எந்த மரமாவது சொல்லுமா என்று வினவுகிறார்.  கவிஞர் கலீல் ஜிப்ரான். காற்றுக்கு நாமென்ன கைம்மாறு செய்து விட்டோம்;  வெயிலுக்கு நாம் கொடுத்த விலை என்ன?  வீசுகின்ற தென்றலும் வேகமாகப் பாய்ந்து குதித்துவிழும் அருவிகளும் இடையறாது பயணிக்கும் ஆறுகளும் எவற்றுக்காக வேனும் அஞ்சுகின்றனவா!  தயங்குகின்றனவா?  இல்லையே!  த்த்தம் கடமைகளைத் தங்கு தடையின்றிச் செய்து வருகின்றனவே. ஆற்றிவு படைத்த நாம் கடமைகளைச் சய்வதில் ஏன் தயங்கவேண்டும்;  எதற்காகத் தடுமாற வேண்டும்?

வானம் மழை பொழிய மறுக்குமாயின் உலகில் தானமும் தவமும் நடைபெறாது என்கிறார் வள்ளுவர்.  அந்தத் தானம் எனப்படுவது.  உழைப்பால் வந்த செல்வத்தை உவகை மேலீட்டால் தக்கோர்க்குக் தருவது என விளக்குகிறார் பரிமேலழகர்.  உழைக்காமலே வந்த செல்வத்தை வாரி வழங்குவதைக் காணமுடிகிறது. உழைப்பின் மூலம் வந்த செல்வம் கொடுப்பவர்க்கும் பெறுபவர்க்கும் ஈடு இணையற்ற இன்பத்தை எப்போதும் வழங்கும் என்பதை மறுப்பாரில்லை.

உரமும் திறமும் குன்றாத உணர்வு,பெற்ற ஒவ்வொருவரும் வெற்றி முகட்டை எட்டிபிடித்து விடலாம். மஞ்சளும், சுண்ணாம்பும் கலந்தால் சிவப்புத் தோன்றும். இப்படி நிறம் மாறி விடக்கூடாது.  நேர்மையும், உழைப்பும் முயற்சியும் நினைத்ததை நிறைவேற்றி வைக்கும் இலட்சியத்தில் மகுடம் பதிக்கும்.

அரிச்சந்திரன் நாடகத்தைப் பார்த்த ஒருவனிடம் இதன் மூலம் என்ன தெரிந்த கொண்டாய் என்று கேட்டான் ஒருவன். உண்மையே பேசவேண்டும் என்பதைப் புரிந்து கொண்டேன் என்றான் இன்னொருவனிடம் இதே கேள்வியைப் கேட்டான். அவசரத்துக்கு மனைவியை அடகு வைகலாம் என்பதைப் புரிந்து கொண்டதாக அவன் கூறினான்.  எனவே ஒவ்வொருவருக்கும் பார்வையும் நோக்கும் வேறுபடுகிறது என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது.

‘உன்னையே நீ அறிவாய்’ என்பது கிரேக்க நாட்டுப்  பேரறிஞர் சாக்ரட்சின் அறிவு மொழி.  அதை மறந்து ஊர்வாயை மென்று ஒன்றுக்கும் பயனில்லாமல் பொழுது போக்குவதைப் பலரும் அன்றாட நடைமுறைகளாக ஆக்கிக் கொண்டுள்ளனர். சாக்ரட்டீசின் பேச்சு சமுதாயத்தை உயர்த்தியது. நீரோ மனம் பேசியது அச்சமூகத்தை வீழ்த்தியது.எனவே நல்ல பேச்சே சமுதாயத்தை மேம்படுத்தும்.

பனிக்கட்டியில் மதில் அமைத்துக் கொண்டு குழந்தைகளை உள்ளே வைத்துவிட்டுத் தான் வெளியில் இருந்து கொண்டு போர்ப் பயிற்சி பெற்ற நெப்போலியன் உலகின் மாவீரனாக வரலாற்றில் இடம் பிடித்துக்கொண்டான்.  சிந்தனை மலட்டுத் தன்மை உள்ளவர்களால் எதையும் சாதிக்க முடியாது.  ஒரு மனிதன் சிந்திக்கிறவரை, செயல்படுகிறவரை, நடக்கிறவரை இளமையாக இருப்பான்;  நம்மவர்கட்கு வாய்ப்பு வழங்கினால் உலகத்தையே வெல்வார்கள் என்று பெரியார் ஒருமுறை குறிப்பிட்டார்.

தொடரும்…

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 2005

எளிது எளிது
நிறுவனர் நினைவுகள்
வெற்றி நமது விலாசமாகட்டும்
விற்பனையில் வியத்தகு சாதனை
சுனாமியில் மீண்ட டாக்டர் பெ. இளங்கோ
படிப்பாளிகளை படைப்பாளிகள் ஆக்குவோம்
செயலாக்குவோம்
சாதனையாளர்
முன்னேற்றத்தின் மூலதளங்கள்
ஸ்ரீராம் நிறுவனத்தின் வெற்றிக்கதை
எப்படி எப்படி எப்படி
சோதனை வெல்வோம்.. சாதனை கொள்வோம்!
நேர்காணல்
நீதான் வெற்றியாளன்
மலரும் மணமும்
நம்மைப் பிணைக்கும் சங்கிலி
எங்கும் எதிலும் வெற்றி
பேட்டி
உலகம் உங்கள் கையில்
வெற்றிக்கு கனவு காண்போம்
நிறுவனர் பக்கம்
உள்ளத்தோடு உள்ளம்