Home » Articles » வெற்றிக்கு கனவு காண்போம்

 
வெற்றிக்கு கனவு காண்போம்


அகல்யா பத்மநாபன் ஆர்
Author:

இளைஞர்களே கனவு காணுங்கள். உங்களது இன்றைய கனவுகளே நாளைய வெற்றியின் விதைகள்”  இது நம் பெருமதிப்பிற்குரிய குடியரசுத் தலைவர் திரு. அப்துல்கலாம் அவர்கள் இளைய தலைமுறையை சந்திக்கும்போது விடுக்கும் அன்பு வேண்டுகோள்.  எந்த வயதினராயினும் சரி, அவரவர்க்கென்ற கனவுகள் நிச்சயம் உண்டு.  அவை நனவாவது அவரவரது எண்ணத்தின் ஆழத்தைப்பொறுத்தே அமைகிறது  நாம் காணும் கனவுகள் நனவாகுமா என்ற சந்தேகம் பலருக்கு உண்டு.  ஆனால் அதிசயத்தக்க உண்மை என்னவென்றால், சுகமான கனவுகள் நம் மனதில் ரசாயன மாற்றங்களை விளைவிக்கின்றன.  நம் ஆழ்மன எண்ணங்கள், ஆசைகள் மற்றும் ஏக்கங்களே பெரும்பாலும் கனவுகளாக வெளிப்படுகின்றன என்பது உளவியல் வல்லுனர்கள் கூற்று.  எவர் ஒருவர் சாதனை படைப்பதை கனவில் காட்சியாய் கண்டு, அந்தக் கனவினை நனவாக்கும் மனத்திண்மையோடு செயல்படுகிறாரோ, அந்த வெறியாளர் நிச்சியம் வெற்றியாளராகிவிடுவார்.  வரலாறு இன்றும் அத்தகைய வெ(ற்)றியாளர்களின் புகழ் பாடிக் கொண்டிருக்கிறது.

எதையேறும் கண்டுபிடிக்கிறேன் என்று கிளம்பும் நபரை ‘என்ன உன் மனசுல பெரீய… ய கொலம்பஸ்னு’ நினைப்போ? என்று கேட்கிறோம்.  கண்டு பிடிப்பு என்றால் ‘கொலம்பஸ்’ என்ற ஒப்பீடு உலகம் உள்ளளவும் இருக்கும்படி செய்தது அந்த இளைஞனின் லட்சிய வெறியும், கனவும், விடாமுயற்சியும்தான்.  நாடே எள்ளி நகையாடிய போதும், இந்தியாவிற்கு கடல்வழி மார்க்கம் கண்டபிடிக்க வேண்டுமென்ற கனவை அவன் கைவிடவில்லை.  மாலுமிகளாக மரண தண்டனைக் கைதிகள் அனுப்பட்டபோதும் அயரவில்லை. திசைமாறி அலைக்கழிக்கப்பட்டு உடலும் உள்ளமும் சோர்ந்த போதும், கனவுகள், ஏதுமற்ற சாமானியர்கள் கடல்லைக்கும் மேலாக ஆர்ப்பரித்தபோதும்  தன் கனவை  நனவாக்குவதில் உறுதியாக இருந்தான் கொலம்பஸ். அவனது விடாமுயற்சிக்கான பரிசுதான் அமெரிக்கா.  கிழக்கே செல்ல வேண்டிய கப்பல் திசைமாறி பயணித்த போது, விரக்தியின் கொலம்பஸ் தன் கனவை, அதை நனவாக்கும் முயற்சியை கைவிட்டிருந்தால், உலகம் இன்று அவன் பெயரை உச்சரிக்காது.  அவனது முயற்சி திருவினை ஆ(க்)கியது. இருக்கும் நாட்டிற்கு வழிதேடி புறப்பட்டவன், புதிதாக ஒரு நிலப்பரப்பையே கண்டு பிடித்தான். வரலாறும், பூகோளமும் இன்றும் அவனுக்கு வந்தனம் சொல்லிக்கொண்டிருக்கின்றன.

அறிவை விட கற்பனையே அதிமுக்கியம். அழகான கனவே பல கண்டுபிடிப்புகளுக்கு அடித்தளமாய் அமைந்திருக்கிறது என்கிறார் விஞ்ஞானி ஆல்பர்ட்.  ஐன்ஸ்ட்டீன்.  இன்றைய கண்டுபிடிப்புகள் அனைத்துமே நேற்றைய கனவுகளின் வெளிப்பாடேயாகும்.  பறவை பறப்பைத்ப பார்த்துஅதைப்போல் பறக்க விரும்பி மெழுகினால் இறக்கைகள் பொருத்தி, இயற்கையை வென்று பறந்து காட்ட வேண்டும் என முயற்சித்து தோற்றான். இக்காரஸ்’ ஆனால் நடைமுறைக்கு ஒவ்வாத பகல்கனவு காணாமல், பறவையைப்பல் பறந்து,மனிதனைச் சுமந்து செல்லும் சாதனத்தை இயக்கி வெள்ளிக்கண்டவர்கள் ரைட் சகோதரர்கள். அவர்களது கனவுதான் நனவாகி, பரிணாம வளர்ச்சி பெற்று இன்று விண்வெளி ஆராய்ச்சிவரை விரிந்துள்ளது.

‘நாம் காணும் கனவுகளும், எண்ணங்களும்தான் நம் சூழ்நிலைகளாக மாறுகின்றன’ என்கிறார் ஜேம்ஸ் ஆலன்.  எதிர்காலத்தில் என்னவாக வேண்டும்? சமுதாயத்தில் எத்தகைய உயர்நிலையை அடைய வேண்டும்? எந்தத்துறையில் வெற்றிபெற்று முத்திரை பதிக்கவேண்டும்? என்பன போன்றவற்றை கற்பனையில் நாம் காணும்போது நமக்குக் கிடைக்கும் மகிழ்ச்சி மற்றும் தன்னம்பிக்கை, நமது சுயமதிப்பீடு மற்றும் சுயபிம்பத்தை (Self – dignity and self – image) உயர்த்துகிறது.

நம்மால் வெற்றிபெற முடியும். நானும் ஒரு சாதனையாளர்தான் என்ற எண்ணத்தை மீண்டும் மீண்டும் செலுத்துங்கள்.  அவ்வாறு செய்யும்போது நம் ஆழ் மனது தூண்டப்படுகிறது.  ஹார்மோன்கள் சுறுசுறுப்பாக செயல்படத் தொடங்குகின்றன.  நம்பிக்கை உற்சாக ஊற்றை திறந்துவிடும்போது தயக்கம், பயம்  போன் எதிர்மறை உணர்வுகள் தகர்கப்படுகின்றன.  அப்போது நம் திறமைகள் முழுமையாகத் தூடப்பட்டு, ஆக்கப்பூர்வமான செயல்களாக வெளிப்படும்.  ஆகா, நம் கண்ட கனவு நனவாகிவிட்டது என்று நாம் மகிழ்வதன் சூட்சம் இதுதான்.

‘ஹூம்!  எந்த கோட்டையைப் பிடிக்க இப்படி கனா கான்றே? பார்த்து, கனா கண்டு நிஜத்தில் கோட்டை விட்டுவிடாதே’ என்று கிண்டல் செய்பவரும் உண்டு.  அப்படிப்பட்டவர்களுக்கு மத்தியில்தான், தான் கண்ட கனவை மெய்ப்பிக்கும் சாதனையாளர்கள் வாழ்கிறார்கள். நிக்கோலஸ் பட்லர் என்ற பேராசிரியர் மக்களை மூன்று விதங்களாய் பிரிக்கிறார்.  முதலாமவர்கள் தன்னை சுற்றி என்ன நடக்கிறதென்பதையே அறியாதவர்கள்.

இவர்களது நிலை கடைநிலையாகும். இத்தகையவர்கள்  கிடைத்தசந்தர்பங்களை நழுவவிடும் வீணர்கள்.  இரண்டாமவர் என்ன நடக்கிறது என்பதை பார்வையாளர்பல் பார்த்துக் கொண்டிருப்பவர்ள்.  இடைநிலையில் இருக்கும் இத்தகையவர்கள் சோம்பேறிகள்.  சுய முன்னேறத்திற்கு தாமே முட்டுக்கட்டையாக இருப்பவர்கள்.  திறமையிருந்தும் செயலாக்கம் இல்லாது சுற்றித்திரிபவர்கள்.  மூன்றாமவர் செயல்களை, சாதனைகளை நிகழ்த்திக் காட்டுபவர்கள்.  செயல்வீகள், ஆற்றல் மிக்க வழிகாட்டிகள், உலகம் இத்தகைய வழிகாட்டிகளக் கொண்டாடுகிறது.

அமெரிக்க ஜனாதிபதி ஜான் கென்னடி தினமும் பார்வையாளர்களுடன்  சிறிதுநேரம் உரையாடுவது வழக்கம். ஒருமுறை கூட்டத்தினிடையே அவரதுகவனம் பளிச்சென்ற சிரிப்போடு நின்று கொண்டிருந்த ஒரு மாணவன் பால் சென்றது. அவன் கன்னத்தைத் தட்டி ‘சிறுவனே, உன் எதிர்கால கனவு என்ன? என்று வினவினார்.  அவனோ சிறிதும் தயக்கமின்றி, இன்று நீங்கள் இருக்குமிடத்தில் ஒருநாள் நான் இருக்க வேண்டும். அதுவே என் லட்சியக் கனவு என்றான். தெளிவான பதிலில் ஒரு கணம் அயர்ந்த ஜனாதிபதி அவனை வாழ்திவிட்டு சென்றார்.  அந்த சந்திப்பை அவர் மறந்துவிட்டாலும், சிறுவன் தன் கனவை மறக்கவில்லை.  அமெரிக்க ஜனாதிபதியாக  வேண்டும் என்ற நாற்காலிக் கனவை பின்னொரு நாளில் நனவாக்கிக்கொண்டு, வெற்றி முத்திரை படைத்தவர் பில்கின்ட்டடன அவர்கள். இது அவரது வாழ்க்கை வரலாறு உரைக்கும் உண்மை.

– தொடரும்

 

2 Comments

Post a Comment


 

 


February 2005

எளிது எளிது
நிறுவனர் நினைவுகள்
வெற்றி நமது விலாசமாகட்டும்
விற்பனையில் வியத்தகு சாதனை
சுனாமியில் மீண்ட டாக்டர் பெ. இளங்கோ
படிப்பாளிகளை படைப்பாளிகள் ஆக்குவோம்
செயலாக்குவோம்
சாதனையாளர்
முன்னேற்றத்தின் மூலதளங்கள்
ஸ்ரீராம் நிறுவனத்தின் வெற்றிக்கதை
எப்படி எப்படி எப்படி
சோதனை வெல்வோம்.. சாதனை கொள்வோம்!
நேர்காணல்
நீதான் வெற்றியாளன்
மலரும் மணமும்
நம்மைப் பிணைக்கும் சங்கிலி
எங்கும் எதிலும் வெற்றி
பேட்டி
உலகம் உங்கள் கையில்
வெற்றிக்கு கனவு காண்போம்
நிறுவனர் பக்கம்
உள்ளத்தோடு உள்ளம்