Home » Articles » எப்படி எப்படி எப்படி

 
எப்படி எப்படி எப்படி


திருவள்ளுவர் ம
Author:

தன்னம்பிக்கை வாசக நெஞ்சங்களுக்கு என் வணக்கத்தையும் புத்தாண்டு வாழ்த்துக்களையும் வந்திருக்கும் இப்புத்தாண்டு 2005 நம் அனைவருக்கும் புதிய பார்வையையும், புதிய வார்த்தையையும், புதிய வாழ்க்கையையும் வழங்கி சிறப்பிக்கட்டும்.  பொங்கல் திருநாளில் வாழ்வில் நலமும் வளமும் பொங்கிச் சிறக்கவும், மனித குலம் வல்லமை பெற்று உயரவும் கட்டியம் கூறட்டும்.

பழையன கழிந்து புதியன புகுந்திடும் இந்நாளில்  புதிய தொடரோடு உங்களைச் சந்திப்பதில் பூரிப்படைகிறேன்.  வாருங்கள் தோழர்களே..இனியதொரு பயணத்தை இப்போதே தொடங்குவோம்.

எது?  ஏன்? எதனால் என்பெதல்லாம், அறிவைக் கிளறித் தீர்வைக் காண்பதற்காக – நம்மை வாத விவாதங்களுகுட்படுத்தும் வினாக்களாகும்.. எந்தப் பொருள் குறித்த அறிவையும்  நாம் ஒரு நூலகத்திலிருந்தோ, விவாத மேடைகளிலிருந்தோ, கருத்தரங்குகளிலிருந்தோ, நிபுணர்களிமிருந்தோ, ஊடகங்களிலிருந்தோ,  வலத்தளங்களிலிருந்தோ பெற்றுவிடலாம்.  ஆனால் இந்த எப்படி என்கிற நுட்ப இருக்கிறதே இது நுணுக்கமானதொரு விஷயம்.  இது வெறும் அறிவு சார்ந்த விஷயம் மட்டுமல்ல.  இது பெற்ற அறிவை நடைமுறையில் பயன்படுத்திப் பெறுகிற உணர்வைக் குறிப்பதாகும்.

இனிப்பை உணர்ந்திராத ஒருவர் இனிப்பு எப்படி இருக்கும்? – என்று கேட்பார் என்றால் என்ன பதில் கூறமுடியும்? அவரிடம் ஒரு இனிப்பான பதார்த்தத்தைக்கொண்டு வந்து உண்டு பாருங்கள்… இதுதான் இனிப்பு எனச் சொல்லலாமே தவிர வேறெப்படி விளக்க முடியும்?

அப்படி விளக்க முடியாத ஒன்றை விளக்க எத்தனிப்பதே இந்தக் கட்டுரைத்தொடரின் நோக்கம். ஆனால் – இது – பல்வேறு நடைமுறைச் சிக்கல்களுக்கான விடைகளைத் தரும் என்பதாலேயே இந்த முயற்சி.  இந்த முயற்சி பல்வேறு துறை சார்ந்தவர்களுக்குமான ஐயப்பாடுகளை நீக்கும் என்பதில் ஐயமில்லை.

ஒருமுறை, ஒரு பெரிய தொழில் நிறுவனத்தின் கடைநிலை ஊழியர்களுக்கான ஊக்குவிப்புப் பயிலரங்கு நடத்திக் கொண்டிருந்தேன்.  ஒன்றரை மணி நேர வகுப்பின் இறுதியில் – பங்கேற்றவர்களின் கேள்விகளுகுப்  பதிலளிக்கும் முகமாக அரைமணிநேரம் உரையாடினேன்.  பங்கேற்றவர்களின் வயது 20 முதல் 30 வரை இருக்கும்.  ஏறத்தாழ எல்லோருமே குறைந்தது 10ஆம் வகுப்புப் படித்தவர்கள். பலரும் எழுந்து இந்த நிகழவு – இனிமையாகவும் பயனுள்ளதாகவும் இருந்ததென்றும் தங்களுக்கு மிகுந்த ஊக்கம் தருவதாக இருந்ததகாவும் மனந்திறந்து சொன்னார்கள்.  அப்போது எழுந்த ஓர் இளைஞர் கேட்ட கேள்வி என்னை மட்டுமல்ல அங்கிருந்த அந்தத் தொழிலக உரிமையாளர் அவரது துணைவியார் மற்றும் பலரையும் ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது.

அவர் கேட்ட அப்படிப்பட்ட கேள்வியை – நீங்கள் வேறெங்கும் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள் – என்பது மட்டும் நிச்சயம்.

சார்… சிந்திப்பது எப்படி? – என்பதுதான் அவரது கேள்வி. அந்த கணத்தில்தான் எனக்குள் தோன்றியது.  இவ்வளவு நேரமும் – அவர்கள் அத்தனை பேரின் சிந்தனையைத் தூண்டும் விதமாக  பல்வேறு கேள்விகள் கேட்டும், மேலும் பல யுக்திகளையம் கையாண்டு  நிகழ்த்திய பயிலரங்கின் விளைவு இதுதானா என்று எனக்கு நானே கேட்டுக் கொண்டாலும், அந்த இளைஞரின் நேர்மையையும், அத்தனை பேருக்கு முன்னால் எழுந்து நின்று இப்படி ஒரு கேள்வியை கேட்க முனைந்த துணிவையும் என்னால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

அந்தப் பயிலரங்கம் முழுதும் நிகழ்ந்ததெல்லாம் சிந்தனைத் தூண்டல்களாகவே இருந்த போதிலும் சிந்திப்பது எப்படி? – என்றும் கேள்வி விடையளிக்கப்படாமல் தனியாகவே தொக்கி நின்றிருந்தபோதுதான் புரிந்தது; எப்படி – என்னும் கேள்வியின் அற்புதம்.

நமது சித்தர்களுக்கும், மேற்கத்திய விஞ்ஞானிகளுக்கும் உள்ள வித்தியாசமும் இதுவாகவே தென்படுகிறது. நமது சித்தர்கள் மனித வாழ்வியலை ஒருவமாக அனுபவித்தும், அனுமானித்தும், மருத்தவம், ஆன்மீகம் வானவியல் – போன்ற பல்வேறு அறிவியல் துறைகளுக்கான விடைகளைப் பதிவு செய்துவிட்டுப் போயிருக்கிறார்கள்.  அவறைக் கூர்ந்து கவனித்தால் மட்டுமே அவற்றின் உள்ளார்ந்த பொருள் புரியும். எளிதில் எல்லோருக்கும் பிடிபட்டு விடாது. இதுதான் நமது சித்தர்களின் அணுகுமுறை. ஞானத்தால் உணர்ந்தவர்கள் எப்படி தேடிவந்து கண்டு கொள்வார்கள் என்பது அவர்களின் சித்தாந்தம்.

ஆனால் மேற்கத்திய நிபுணர்களின் அணுகுமுறை இதற்கு நேர்மறையானது. அவர்கள் எதையுமே உடைத்து உடைத்து எளிமைப்படுத்தி – எடுத்துச் சொல்வதில் வல்லவர்கள்.  ஆகவேதான் அவர்களின் படைப்புகள் பெரும்பாலும் எப்படி எப்படி என்றே அழைத்து வாடிக்கையாளர்களை வசப்படுத்த முனைகின்றன.

எனக்கு இந்த முறையில் இயற்கையாகவே நாட்டமில்லை.  ஏனெனில் எந்த ஒரு விஷயத்தையும் ஒவ்வொரு தனிமனிதனும் அவனவனுக்கென்ற தனித்தன்மையோடு அணுகி அதற்கான விடையை அல்லது தீர்வை அடைவதுவே உயரிய வழியாகவும் உகந்த வழியாகவும் இருக்க முடியும் என்பது எனது கருத்து.

என்றாலும் இன்றைய நிலையில் பலரும் சில பல  கருத்துக்களைப் புரிந்து கொண்டாலும் அவற்றை எப்படி நடைமுறை சாத்திமாக்குவது என்பதில் பெரும் சிக்கல்களை சந்திக்கிறார்கள் என்பதை – பல்வேறு பயிலரங்குகளிலிருந்து நான் புரிந்து கொண்டேன்.

ஆகவேதான் மனிதனின் எல்லாத் தேவைகளையுமே – அடைவதற்கென்று ஒரு  பொது வழி இருக்கக்கூடும்.  அவற்ற முறையாக எடுத்துரைக்க முடிந்தால் அதை அடிப்படையாகக்கொண்டு தனக்கு உகந்த ஒரு தனி வழியை, வாசகர் ஒவ்வொருவரும் வரையறுத்துக்கொள்ள முடியும் – என்கிற நம்பிக்கையில் இந்தத் தொடரை எழுத அனுபவம் கொண்டவர்கள் மட்டுமல்ல புத்திசாலிகளும் கூட நாம் ஒரு கோடுபோட்டால் அவர்கள் ரோடுபாட்டு விடுவார்கள் என்பது எனது நம்பிக்கை.

அந்த நம்பிக்கையின் அடிப்படையில் வாழ்வியலுக்குத் தேவையான வர்த்தகம், தொழில் முனைதல், அரசியல், சமூகம், பொருளாதாரம் மற்றும் மேலாண்மை என – எந்த்த துறையினரும் முத்திரை பதிக்கத் தேவையான – சாத்தியக் கூறுகளை அலசி ஆராய இருக்கிறோம். இந்தத் தொடர் நிச்சயமாக உங்களின் நுட்பங்களையும் நுணுக்கங்களையும் மேம்படுத்த உங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குப் பேருதவியாகவும், வாசிக்கவிருக்கும் வாசக அன்பர்களுக்கு சுவாரசியமாகவும் அமையும் – என்னும் உறுதி கூறுகிறேன்.  அது எப்படி என்பதைத்தான் வரும் மாதத்திலிருந்து வரிசையாக அறிந்து கொள்ளப் போகிறீர்களே…

தொடரும்….

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 2005

எளிது எளிது
நிறுவனர் நினைவுகள்
வெற்றி நமது விலாசமாகட்டும்
விற்பனையில் வியத்தகு சாதனை
சுனாமியில் மீண்ட டாக்டர் பெ. இளங்கோ
படிப்பாளிகளை படைப்பாளிகள் ஆக்குவோம்
செயலாக்குவோம்
சாதனையாளர்
முன்னேற்றத்தின் மூலதளங்கள்
ஸ்ரீராம் நிறுவனத்தின் வெற்றிக்கதை
எப்படி எப்படி எப்படி
சோதனை வெல்வோம்.. சாதனை கொள்வோம்!
நேர்காணல்
நீதான் வெற்றியாளன்
மலரும் மணமும்
நம்மைப் பிணைக்கும் சங்கிலி
எங்கும் எதிலும் வெற்றி
பேட்டி
உலகம் உங்கள் கையில்
வெற்றிக்கு கனவு காண்போம்
நிறுவனர் பக்கம்
உள்ளத்தோடு உள்ளம்