Home » Articles » சாதனையாளர்

 
சாதனையாளர்


admin
Author:

டாக்டர் சி.வி. அருணா சுபாசினி

நான் 15-10-1967 ஆம் ஆண்டு கோவையில் திருவாளர்கள் கே. வெங்கட்ராமன் – ராம்பாய் அம்மா அவர்கள் இல்லற வாழ்வில் இரண்டாவதாக பிறந்தேன்.  எனக்கு மூத்தவர் என் அண்ணார் ஒருவர்.

கல்வி

முதுகலை சமூகவியல் (எம்.ஏ.) பட்டம் பெற்றேன்.  பின், சித்த மருத்துவ பண்டிட் டிப்ளமோ இன் யோகாசனா மற்றும் நேச்சுரோபதி (இயற்கை வைத்தியம்) டாக்டரேட் இன் அக்கு பஞ்சர், டிப்ளமோ இன் மேக்னடோ, (காந்த வைத்திய முறை) பேச்சுலர் ஆப் எலக்ட்ரோ, ஹோமியோபதி, ரெய்க்கி மற்றும் பிராணா சிகிச்சை பயிற்சி.

குடும்பம்

பதினெட்டு வயதில் திருமணம் கணவர் திரு. வெங்கடேசன் ஒரே மகள் கல்லூரியில் படிக்கிறார்.

சாதனைகள்

1. 27 வருடமாக யோகாசனம்

2. 2000 – வருடத்தில் அகில உலக மருந்தில்லா மருத்துவ மாநாட்டில மதுரையில் டாக்டர்.ஏஞ்சலிகாவன் (லண்டன்) அக்குபஞ்சர் பயிற்சியில் தங்கமெடல் விருது, மாநாட்டில் சிறந்த பங்கேற்பாளர் என்ற பாராட்டு கேடயம்.

3. கண்பார்வை இழந்து விட்டவருக்கு பார்வையை மீட்டு தந்தது போன்றவற்றிற்காக தங்கமெடல ழங்கியவர் டாக்டர் ஆண்டன ஜெயசூர்யா – மெடிசினா ஆல்டர் நேடிவர் – இலங்கை திறந்தவெளி பல்கலைக்கழகம்.

4. 2001 – ல் உலகத் தமிழக கவிஞர்கள் மாநாட்டில் “ஹெடெக் காதல்” எனும் சமுதாய மருத்துவ நூல் வெளியீடு -அமைச்சர் வைத்தியலிங்கம், கவிஞர் சுரதா முன்னிலையில் கலைவாணர் அரங்கு சென்னை.

5. “மருத்துவச் செம்மல்” விருது – இதயகீதம் பொது நல இயக்கம் வழங்கியது.

6. வசந்த வாசல் கவிமன்றத்தின் கவிதாயினி என்ற பட்டம்.

7. 2002-ல் தீவிர நோய்கள் கட்டுப்பாடு ஆராய்ச்சியில் சார்ஸ் நோய் தடுப்பு முறைகள் பல செய்து, பயிற்சி கொடுத்ததற்கான கோவை மயூரா கிளப்பின் “சாதனை மருத்துவர் விருது”

8. தொடர்ந்த சேவைகளுக்கான உழைப்பால் உயர்ந்தோருக்கான “ஆன்மீகத் தத்துவ யோகினி” விருது.

9. 2004 – ல் தமிழ்நாடு மாநில யோகாசன போட்டிகள் கோவில்  பட்டியில் நடந்ததில் யோகாசன சேம்பியன்ஷிப் ஆர்டிஸ்டிக் யோகாசன சேம்பியன் – என இரண்டு தங்க பதகங்கள் வெற்றி.

10. தொடர்ந்து டெல்லி பரிதாபாத் நகரில் நடந்த ஆல் இந்தியா யோகா பெடரேசன் மகரிஷி யோகாசனஸ்தான் நடத்திய ஆல் இண்டியா யோகாசன சேம்பியன்ஷிப் வெள்ளி மெடல், கேடயம் பெற்றது.

11. திருச்சியில் நடந்த மாநில யோகாசன மாநாடு போட்டிகளில் நடன, இசை, யோகா செய்ததில் “யோகா கலா” விருது, வழங்கியவர் திரு பரஞ்சோதி – தமிழ்நாடு மருத்துவ அமைப்பாளர் – திருச்சி.

12. சரியான நேர்த்தியான சிகிச்சைகள் மற்றும் யோக கலையார்வத்திற்கான “சிறந்த யோகாசிரியர்”.

13. “சித்த மருத்துவ தத்துவமணி, பட்டங்கள் ஆசனா ஆண்டியப்பன் யோகாசன பயிற்சி மையம்.  ஒருங்கிணைப்பு அகத்தியர் ஹெர்பல் ரிசர்ச் சென்டர் பேரூர் தமிழ்க் கல்லூரி.

14. பஞ்சபூத யோகாசன பயிற்சியாக “தண்ணீரின் மேல் யாகாசனத்தில் மிதத்தல்”

15. மனவலிமைக்கான “ஆணி படுக்கை மேல் யோகாசனம்” “மேஜிக் மூலம் யோகாசனம் விளக்கம்”

16. கின்னஸ் சாதனையாளர் மேஜிக் அலெக்ஸின் பாராட்டு.

பயிற்சி

நோய் நீக்கும் மருத்துவ சிகிச்சைகளை செய்வதோடு நிற்காமல் இந்தியா முழுதும் இம்முறைகள் பயனடைய நிறைய மருத்துவர்களை உருவாக்கி, குளோபல் நேச்சுர் இன்ஸ்டிடியூசன் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராகவும், கோவை மற்றும் தமிழ்நாட்டின் முன்னணி கல்லூரிகளில் யோகாசனம், ஆரோக்கியப் பயிற்சி பேராசிரியராகவும் உள்ளேன்.  சமுதாய விழிப்புணர்வு முகாம், பயிற்சி மருத்து முகாம்கள் தமிழ்நாடு முழுவதும் நடத்தி வருகிறேன்.

நடைமுறை பயிற்சி வகுப்புகள்

1. தன்னம்பிக்கையை வளர்க்கும் பயிலரங்குகள்
2. “சுபயோகா”வின் வாழ்க்கைத்தர மேம்பாட்டு பயிற்சிகள்
3. “ஸ்டெரஸ் மேனேஜ்மெண் மெமரிபவர்”
4. “பர்ஸாலிடி டெவலப்மெண்ட்”
5. “ஆபரேஷன்களை தவிர்க்கும்  பயிற்சிகள்

எதிர்கால இலட்சியம்

யோகாசன முறைகளில் புதுமுறை சாதகங்கள், யோகா நடன பயிற்சிகளை அமைத்து நுடைமுறைபடுத்துதல்.

2005 பாண்டிச்சேரியில் நடைபெறும் அகில உலக யோகாசன  போட்டியில் பங்கேற்று சாதனைப் படைப்பது.

மாயக்கலை, யோகக்கலை, நடனக்கல்லை இவற்றை இணைத்து தொடர் பயிற்சி தருவது

யோகாசனத்தில் கின்னஸ் சாதனைப் படைப்பது.

“மருத்துவக் குறள்” புத்தகம் காலண்டருடன் வெளியிடுவது.

பல்கலை வல்லுனராக உருவெடுக்க ஒரு பிறப்பு பலபேரை இதுபோல உருவாக்குதே எனது சிறப்பு.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 2005

எளிது எளிது
நிறுவனர் நினைவுகள்
வெற்றி நமது விலாசமாகட்டும்
விற்பனையில் வியத்தகு சாதனை
சுனாமியில் மீண்ட டாக்டர் பெ. இளங்கோ
படிப்பாளிகளை படைப்பாளிகள் ஆக்குவோம்
செயலாக்குவோம்
சாதனையாளர்
முன்னேற்றத்தின் மூலதளங்கள்
ஸ்ரீராம் நிறுவனத்தின் வெற்றிக்கதை
எப்படி எப்படி எப்படி
சோதனை வெல்வோம்.. சாதனை கொள்வோம்!
நேர்காணல்
நீதான் வெற்றியாளன்
மலரும் மணமும்
நம்மைப் பிணைக்கும் சங்கிலி
எங்கும் எதிலும் வெற்றி
பேட்டி
உலகம் உங்கள் கையில்
வெற்றிக்கு கனவு காண்போம்
நிறுவனர் பக்கம்
உள்ளத்தோடு உள்ளம்