Home » Articles » நேர்காணல்

 
நேர்காணல்


admin
Author:

டாக்டர் சி. இராமசாமி

துணை வேந்தர் வேளாண்மைப் பல்கலைக்கழகம்

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் எதிர்வரும் சவால்களாக எதைக் கருதுகிறீர்கள்? அதற்காக உங்கள் திட்டங்கள் என்ன?

இதைப் பொறுத்தவரையில், எதிர்காலத்தில குறைந்து வரும் நீர் வளத்தையும், மண் பற்றாக்குறையையும், உயிர் வளங்களைப் பற்றியும் கருத்தில் கொண்டுள்ளோம்.  அதேபோல், மானாவாரி பயிர் உற்பத்தியில் பின்தங்கியுள்ளோம்.  உலக வாணிப அமைப்பு வந்தபின், ஏற்றுமதிக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன.  அதனால் ஏற்றுமதி வேளாண்மையை ஊக்கமளித்திடல் வேண்டும் இதுதான் நம் எதிர்கால முக்கிய சவால்களாகும்.  எனவே, இதை முடிக்கிவிட்டுள்ளோம். மேலும், வேளாண் மக்கள் சந்தைக்குப் பொருட்களை எவ்வாறு உற்பத்தி செய்வது என்ற அடிப்படைக்கருத்துக்களை பெறவில்லை என்பது என் கருத்து.  சந்தை வசதிகள் (Marketing Infrastructure)  விலைவாசிகள் பற்றிய கணிப்பு ஆகியன முக்கியமானவையாகும்.  ஆனால், தற்போது வேளாண் விலைகள் (Forecasting) பல்கலைக் கழகத்தில் நிறுவியுள்ளோம்.  அதேபோல், தரமான விதைகளை உற்பத்தி செய்து, விவசாயிகள் எல்லோரும் அதை உபயோகிக்க வேண்டும்.

இப்போது, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் போன்றன நம் சுற்றுப்புறச் சூழலுக்கு சாதகமானவையாக உள்ளது.  இவைகளை நம் வேளாண் பெருமக்களிடம் எடுத்துச் செல்லவேண்டும்.  குறிப்பாக, வேளாண் பட்டம் பெற்ற மாணவர்கள், படிப்பு முடித்தபின் தாமாகவே சுயமாக நின்று சொந்தமாக தொழில் செய்யும் முறைகளையும் பயிற்சிகளாக வழங்குகின்றோம். இது அவர்களுக்கு ஒரு நம்பிக்கையூட்டும் விஷயமாகும். இந்த வகையில், இனி, எதிர்வரும் சவால்களை, கருத்தில் கொண்டு எளிதில் சந்திக்க இயலும்.

வேளாண்மைப் பொருளாதார விஞ்ஞானிகளை நீங்கள், உங்கள் பொருளாதார உத்திகளால் பல்கலைக்கழக பொருளாதாரத்தை நிர்வகிக்க எவ்வாறு பயன்படுத்திக் கொள்கிறீர்கள்?

நான் பொருளாதாரத்தில் கற்றுக் கொண்ட பல்வேறு உத்திகளை துணைவேந்தராக பொறுப்பேற்றபொழுது நம்முடைய நிதிநிலைமை மிக மோசமாக இருந்தது.

பல விஞ்ஞானிகளுக்கு அவர்கள் ஓய்வூதியம் கிடைக்காமல் இருந்தது.  அதே மாதிரி, ஆராய்ச்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட பணமெல்லாம் வேறு வகையில் செலவிடப் பட்டிருந்தது.   இவையெல்லாம் நான் மாற்றியமைத்தேன். நிதி சம்பந்தப்பட்ட கோப்புகளை எல்லாம் பரிசோதித்து நிலைமையை அறிந்தேன். சுமார் 40க்கும் மேற்பட்ட உதவிப் பேராசிரியர் மற்றும் இணைப் பேராசிரியர்களின் இடங்கள் காலியாக இருந்தன.  அந்த நிலைமையை மாற்றி, பணியிடங்களை நிரப்பினேன்.  வெளியில் மூலமாக இருந்து வரும் நிதியினை (External Sources) தனி கணக்கு (Account) ஆரம்பித்து, (External Project Funds) மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற கொள்கையில் கடைப்பிடித்தேன்.

அதே மாதிரி, நிறைய செலவினங்களை சிக்கனமாக பயன்படுத்தினோம்.  டெலிபோன், மின்சாரம் போன்ற செலவுகளை சிக்கனப்படுத்தினோம்.

அத்துடன், அரசுடன் பேசி நிதி நிலைமையைப்பற்றி எடுத்துச் சொல்லியதன் விளைவு, சுமார் 50 கோடிக்கு இருந்த பட்ஜெட், தற்போது சுமார் 72 கோடிக்கு உயர்ந்துள்ளது.

வளர்ந்த நாடுகள் விவசாயத் தொழில் நலிவடையாமல் இருக்க நிறைய (Subsidy) மானியங்களைக் கொடுக்கிறது.  அதுவே வளரும் நாடுகள் செய்யும்போது அதை எதிர்ப்பது ஏன்?

இது சரியான முறையல்ல.  ஏனெனில், உலகச் சந்தையிலே நல்ல முறையில் வர்த்தகம் நடைபெற்று பொருள்கெல்லாம் குறைந்த விலையில் கிடைக்க வேண்டும் என்பதுதான் World Trade Organise  – இன் அடிப்படைக் கொள்கை. ஆனால், அந்த மானியங்களைக் கொடுக்கும் வகையில் சில நாடுகள் உறிப்பாக அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகள் கொடுத்து வருகின்றன.

உலக வாணிப அமைப்பு மூலம் தொடர்ந்து நடைபெறும் கொள்கை சம்பந்தமான கூட்டங்களில் கலந்துள்ளன.  இப்போது ஜி -20 எனப்படும் 20 நாடுகள் கொண்ட குழு இதனை எதிர்த்து நிற்பதால், அம்முறை தவறானது என்று உணரப்படுகின்றது.  இதனால் தற்போது ஐரோப்பிய நாடுகள் தங்களின் மானியங்களை குறைத்துக் கொண்டே வருகிறது. அதே மாதிரி ஜப்பானும் இந்த நிலையை கையாண்டுள்ளது  அப்போது அந்த நாடுகள் சில வேலைகளைச் செய்து, எந்த மானியங்களை அனுமதிக்கலாம், எந்த மானியங்களை அனுமதிக்கக் கூடாது போன்றவற்றை முதலிலேயே ஒப்பந்தம் செய்துவிட்டார்கள்.  தற்போது, அவர்கள் குறைப்பதாக உறுதியளித்துள்ளார்கள், அதுவே சரியான முறையாகும்.

இந்திய வேளாண்மை வளர்ச்சியில் தமிழகம் முக்கிய பங்காற்றுகிறது.  இந்த வெற்றிகரமான விவசாய முன்னேற்றத்திற்கு முக்கிய காரணம் என்று எதைக் கருதுகிறீர்கள்?

இந்திய வேளாண்மை வளர்ச்சியில் தமிழகம் பங்காற்றுகிறது என்பது உண்மைதான்.  தமிழகத்தில்தான் உற்பத்தித்திறன் அதிகமாக உள்ளது.  இதற்கெல்லாம் முக்கிய காரணம் தொழில்நுட்பம் தான்.

தமிழக விவசாயிகளின் எதிர்கால பொருளாதாரம் மற்ற துறைகளை ஒப்பிடுகளையில் எப்படி இருக்கும்?

வேளாண்மையைப் பொறுத்தமட்டில் அதை வணிக ரீதியாக மாற்றப்பட வேண்டும். குறிப்பாக நாம் அதிக கவனம் செலுத்த வேண்டியது பயிர்களுக்குரிய உற்பத்தியை அதிகரித்து செலவுகளைக் குறைக்க வேண்டும்.

நல்ல எதிர்காலம் உள்ள பயிர்கள் மக்காச்சோளம், சோயாபீன்ஸ் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும். பழ வகைகளில் மாம்பழம் ஆகியவற்றின் உற்பத்தியினை கவனத்துடன் அதிகரித்து, உற்பத்தித்திறனில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

முக்கியமாக ஏற்றுமதி வேளாண்மையிலும், மானாவரி வேளாண்மை போன்றவற்றிலும் நாம் அதிகமாக கவனம் செலுத்த வேண்டும்.

சந்தைக் கட்டுமானத்தை இன்னும் விரிவாக்கி, விவசாயிகளுக்கு பரவலாக பயன்படும்படி செய்யவேண்டும்.

விவசாயம் ஒரு லாபகரமான தொழிலாக மாற (Industry) உங்களின் அறிவுரை என்ன?

அதாவது உற்பத்தி, பதப்படுத்துதல், விற்பனை இவை மூன்றையும் இணைக்க வேண்டும்.  முதலில் மக்கள் (Consumer) என்ன விரும்புகிறார்கள் என்பதை அறிய வேண்டும்.  அவர்களின் தேவைக்கேற்ப தரமான பொருட்களை உற்பத்தி செய்து பதப்படுத்துதல மற்றும் விற்பனை செய்தல் ஆகிய வழிமுறைகளின் மூலம் நல்ல தொழில் முறையாக அமைந்திட வேண்டும்.

இன்னும், எந்தெந்த வழிகளில் விவசாயத்தை ஓர் இலாபகரமான தொழிலாக மாற்ற முடியும் என்பதைச் சிந்திக்க வேண்டும்.

நதிகளை தேசியமயமாக்கல் மற்றும் கங்கை காவிரி இணைப்பு தமிழக வேளாண்மையில் மாற்றங்கள் தங்கள் கருத்து.

என்னைப் பொருத்தவரையில் கங்கை காவிரி இணைப்பு நடைபெறுவதற்கு உடனே சாத்தியமில்லை.  அதை விடுத்து, அருகிலுள்ள நதிகளை இணைப்பது முக்கிய பணியாக இருக்க வேண்டும்.

நாம் நம்மிடம் இருக்கின்ற வளங்களை சரியாகத் திட்டமிட்டு பயன்படுத்த வேண்டும். நதிநீர் பாசனங்கள் உள்ள வாய்க்கால் வழியே வரும் நீரையெல்லாம் சேதப்படுத்தியுள்ளோம்.  அவற்றையெல்லாம் வீணாக்காமல் சரியான முறைகளில் செலவு செய்தால் நாம் அதில் வெற்றிபெற முடியும்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 2005

எளிது எளிது
நிறுவனர் நினைவுகள்
வெற்றி நமது விலாசமாகட்டும்
விற்பனையில் வியத்தகு சாதனை
சுனாமியில் மீண்ட டாக்டர் பெ. இளங்கோ
படிப்பாளிகளை படைப்பாளிகள் ஆக்குவோம்
செயலாக்குவோம்
சாதனையாளர்
முன்னேற்றத்தின் மூலதளங்கள்
ஸ்ரீராம் நிறுவனத்தின் வெற்றிக்கதை
எப்படி எப்படி எப்படி
சோதனை வெல்வோம்.. சாதனை கொள்வோம்!
நேர்காணல்
நீதான் வெற்றியாளன்
மலரும் மணமும்
நம்மைப் பிணைக்கும் சங்கிலி
எங்கும் எதிலும் வெற்றி
பேட்டி
உலகம் உங்கள் கையில்
வெற்றிக்கு கனவு காண்போம்
நிறுவனர் பக்கம்
உள்ளத்தோடு உள்ளம்