Home » Articles » நிறுவனர் பக்கம்

 
நிறுவனர் பக்கம்


கந்தசாமி இல.செ
Author:

மனிதனுக்கு வருத்தம் எப்போது உண்டாகிறது? தான் எதிர்பார்த்து நடக்காதபோது வருத்தம் உண்டாகிறது.  எதிர்பார்த்தது வேறுவிதமாக நடந்து விட்டாலும் வருத்தம் உண்டாகிறது.  நன்மையை எதிர்பார்த்துத் தீமை ஏற்பட்டாலும் வருத்தம் உண்டாகிறது.  ஆனால் எல்லாவற்றையும்விட செய்யாத ஒன்றினைச் செய்ததாகக் கூறும்போது  நன்மையைச் செய்யப்  போய் பழியைச் சுமக்க நேரும்போது மனிதன் கூடுதலாகவே வருத்தம் அடைகிறான்.

வருத்தம் அடைவது நியாயமா?

சாதாரண மனிதர்கள் தங்களின் சொந்த எதிர்பார்ப்புகளுக்காகவும் ஏமாற்றங்களுக்காகவும் வருத்தம் அடைவது இயல்பே.  அவர்களும், நாளும் சிறசிறு கவலைகளாலும் வருத்தத்தாலும் செத்துச் செத்து மடிகிறவர்கள் என்பது உண்மை.  ஆனால் உண்மையையும் நேர்மயையும் நிலைநாட்ட வேண்டும் என்று விரும்புகின்ற ஒரு மனிதனுக்குத் தான் எதிர்பார்த்து நடக்கவில்லை என்பற்காகவோ, தான் நன்மை செய்யப் போய் நமக்கே பழியாக நேர்ந்து விட்டது என்பதற்காகவோ வருத்தம் ஏற்படக்கூடாது. வருத்தம்  நேர்ந்தால் அவன் பண்பட்ட நிலைக்கு வளரவிலை என்பது பொருள்.

அதனால் ஒரு நியாயத்தை நிலை நாட்ட பழியையும் ஏற்றுக் கொள்ளும் தன்மை உடையவனே, பழியை ஏற்றுக் கொண்ட பிறகும் நம்முடைய பெயருக்கு இழுக்கு நேர்ந்துவிட்டது என்று வருந்திச் சோர்ந்து  போகாதவனே உண்மையான வீரன் ஆவான்.  உண்மையான தொண்டனும் ஆவான். அவனே உண்மையான தலைவனும் ஆவான்.

வளர்ந்து வரும் துன்பங்கள்

மனிதனுக்கு நேர்கின்ற துன்பங்கள் பல்வேறு வகையான வளர்ந்து கொண்டே வருகின்றன.  பசியும் பிணியும் மட்டுமே ஆதிகாலத் துன்பங்களாக இருந்தன.  பின்னர் நாகரிக வளர்ச்சியில் மண்ணாசை, பெண்ணாசை, எனப் புதிய துன்பங்கள் பலப்பல தோன்றலாயின.  இந்த ஆசைகள் இடத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப முறை மாறி முன்னுரிமை பெற்று வருகின்றன.  இப்பொழுது பதவி என்ற புதிய ஆசையும்  தோன்றி வளர்ந்துவிட்டது.  நாளடைவில் இன்னம் பல்வேறு ஆசைகளும் தோன்றலாம்.

சந்தர்ப்பமும் சூழ்நிலையும்

இன்றைய மக்களாட்சியில் சாதாரண மனிதனின் சிக்கல்கள் பலவாகப் பெருகிவிட்டன.  சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் அவனை ஆளத் தொடங்கி விடுகின்றன.  அதனால் அவன் தனக்கத் தெரிந்தும் தெரியாமலும் தவறுகளைச் செய்யத் தலைப்படுகிறான்.  தவறு சய்யத் தலைப்படுகின்றவன் அதனால் வரும் இன்பங்களை மட்டும் ஏற்றக்கொள்ள விரும்புகிறானே ஒழியத் துன்பங்களை ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறான். நான் தவறு செய்யவில்லை என்று, ஒதுங்கிக் கொள்ளப் பார்க்கிறான்.  ஒதுங்க முடியாவிடில், நானல்ல, இதைச் செய்தது அவன்தான் என்று, தான் செய்த்தையே வேறு ஒருவன்மீது சுமத்திவிட்டு தப்பித்தும் கொள்கிறான்.  இன்றைய மனிதனுடைய அறிவும் ஆராய்ச்சியும் இத்தகைய தப்பித்தலுக்கே பயன்படுகின்றது.

ஏன் இந்த நிலை?

நல்லவர்கள் என்ற பெயரோடு இருக்கவே எல்லோரும் விரும்புகின்றார்கள்.  இது நியாயமான ஆசையும் கூட, ஆனால் நல்லதை எண்ணி நல்லதைப் பேசி, நல்லதைச் செய்து நல்லவர்கள் என்று பெயர் எடுத்தால் பரவாயில்லை.  ஆனால் கெட்டதை எண்ணினாலும் கெட்டதைப் பேசினாலும் கெட்டதையே செய்தாலும் அவர்களும் சமுதாயத்தில் நல்லவர்கள் என்ற பெயரோடு இருக்கவே விரும்புகிறாரகள்.  குழப்பமே இங்கேதான் தொடங்குகிறது.

விளம்பரம் தேடுகின்றான்

நல்லதைச் செய்யும் நல்லவர்கள் விளம்பரங்கள் தேடிக் கொள்வதில்லை.  மாறாக கெடுதலைச் செய்து விட்டுப் பணம் சேர்த்துக் கொண்ட,  பதவிகளைப் பிடித்துக் கொண்ட மனிதர்கள் மிகப் பெரிய விளம்பரங்களைச் செய்து, தங்களை நல்லவர்கள் என்று சமுதாயம் அங்கீகரிக்கும்படிச் செய்துவிடுகிறார்கள்.  அதனால் கெட்டவர்கள் எல்லாம் மிகவும் நல்லவர்கள் போலவும், நல்லவர்கள் எல்லாம் மிகவும் கெட்டவர்கள் போலவும் காட்சியளிக்கும் நிலை ஏற்பட்டுவிடுகின்றது.

தவறுகளை வெளிக் கொணர வேண்டும்

உயர்ந்த கொள்கைகளில்  ஆழ்ந்த பற்றும் அழுத்தமான நம்பிக்கையும் கொண்டவர்கள் தாம் மட்டும் நல்லவராக இருந்து கொண்டு தமது நல்ல தன்மைகளை நிலை நாட்டிக் கொண்டால் மட்டும் போதாது.  பிறர் செய்யும் கெட்ட செயல்களையும் அமைதியான முறையில் களைய முற்பட வேண்டும்.  அதில் வரும் இன்ப துன்பங்களை மனதார ஏற்றுக் கொள்ள வேண்டும். பழியே வரினும் இன்முகத்தோடு ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஒதுங்கி ஒதுங்கி

இன்று நாட்டில் நல்லவர்கள் எல்லாம் தங்களின் “நல்லவர்கள்” என்ற பெயரை நிலை நாட்டிக்  கொள்வதற்காகத் தீமையை எதிர்க்காமல் ஒதுங்கி ஒதுங்கிப் போகிறார்கள்.  இது நல்ல தன்மை என்று சொல்வதை விட ஒருவகையான சுயநலம் என்றே சொல்ல வேண்டும் இப்படியே எல்லோரும் போய்விடுவதால் தீமைகள் தலையெடுத்து ஆலமரம்போல் வளர்ந்துவிட்டன.  அதனால் தீமைகளே கோலோச்சுகின்றன.  நல்லவர்கள் ஒதுங்கி ஒதுங்கிப் போனதன் விளைவு அவர்கள் தற்பொழுது நசுங்கியும் போய்க்கொண்டு இருக்கிறார்கள்.  இது வளர்ந்து வரும் நாட்டிற்கு நல்லதல்ல.

அதனால் அவரவர்களால் இயன்ற அளவு தீமைகளைத் தகர்க்கவும், முடியாவிட்டால் தடுக்க வேண்டும். அதனால் தனிமனிதனுக்கு வரும் வெற்றி தோல்விகளை இன்ப துன்பங்களை,  பழி பாவங்களைப் பற்றிக் கவலைப்படாமல், எதிர்ப்புகளைப் பற்றி அஞ்சாமல் செயல்படவேண்டும்.  நமது நோக்கம் மட்டும் சமுதாய நலம் கருதியாக அமையுமானால் அத்தகையவர்களுக்கு வரும் துன்பங்களும் பழிபாவங்களும் பனிபோல் அகன்றுவிடும்.

முன்னோர்கள் வழியில்

கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே என்று பகவத் கீதை அறிவுறுத்துகிறது. அதனினும் ஒரு படி மேலாகச் சென்று,  உரிமையைப் பற்றி முதலில் நினைக்காதே. கடமையச் செய்வதுதான் உன்னுடைய வேலை.  உரிமை தானாக வரும் என்ற பொருளில் அப்பர் அடிகள் சொன்ன “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்பதும் இன்றைய மனித சமுதாயத்திற்குச் சொன்ன உயர்ந்த அறிவுரைகளாகும்.

தொண்டர்கள் ஆவோம்

இன்று எல்லோரும் தலைவர்கள் ஆகவே விரும்புகிறார்கள்.  போட்டிபோடுகிறார்கள். பல்வேறு சண்டை ச்ச்சரவுகளுக்கிடையே பல்வேறு இழப்புகளையும் கடந்து, ஏன்.. பல்வேறு உயிர்க் கொலைகளுக்குப் பிறகே தலைவர்கள் ஆகிறார்கள். அந்தத் தலைமைத் தன்மையைத் தக்க வைக்கத் தொடர்ந்து அத்தகைய காரியங்களில் ஈடுபட வேண்டியுள்ளது. நாம் தலைவர்கள் ஆக வேண்டாம். உண்மை வழி கரடு முரடானதும் அல்ல. மிக எளிய – பாதுகாப்பான வழி. நல்லதை செய்ய – நல்ல வழியில் செல்வம். நல்ல வழிகள் அடைபட்டுக் கிடந்தால் புதிய வழிகளை திருத்தி அமைப்போம்.  அதில் நமது பயணம் தொடரட்டும்.  உண்மையான மனிதனின் இலட்சியம் அதுவாகத்தான் இருக்க முடியும். நீங்கள் உண்மையான மனிதர்கள் ஆகுங்கள்.  உண்மையான மனிதர்கள்தான் சிறந்த தலைவர்கள் ஆவார்கள்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 2005

எளிது எளிது
நிறுவனர் நினைவுகள்
வெற்றி நமது விலாசமாகட்டும்
விற்பனையில் வியத்தகு சாதனை
சுனாமியில் மீண்ட டாக்டர் பெ. இளங்கோ
படிப்பாளிகளை படைப்பாளிகள் ஆக்குவோம்
செயலாக்குவோம்
சாதனையாளர்
முன்னேற்றத்தின் மூலதளங்கள்
ஸ்ரீராம் நிறுவனத்தின் வெற்றிக்கதை
எப்படி எப்படி எப்படி
சோதனை வெல்வோம்.. சாதனை கொள்வோம்!
நேர்காணல்
நீதான் வெற்றியாளன்
மலரும் மணமும்
நம்மைப் பிணைக்கும் சங்கிலி
எங்கும் எதிலும் வெற்றி
பேட்டி
உலகம் உங்கள் கையில்
வெற்றிக்கு கனவு காண்போம்
நிறுவனர் பக்கம்
உள்ளத்தோடு உள்ளம்