Home » Editorial » உள்ளத்தோடு உள்ளம்

 
உள்ளத்தோடு உள்ளம்


admin
Author:

சுனாமி என்னும் எமனின் பினாமி தமிழகத்தின் கடற்கரை நெடுகிலும் உயிரையும், உடைமைகளையம், உறையுள்களையும் பேரழிவுக்கு உள்ளாக்கி விட்டது. பேரழிவுகள் உலப் பொதுவானவை. எனினும் கடந்த பத்தாண்டுகளில் உலகில் பாதிக்கப்பட்டோரில் எண்பது மூன்று விழுக்காட்டினர் ஆசிய கண்டத்தினரே.  இதில் 24 விழுக்காட்டினர் இந்தியர். நம் நாடு பேரழிவுகளால் எளிதில் தாக்கப்படும் புவியியல் அமைப்பைப் பெற்றுள்ளது.  இந்தியாவில் மொத்த நிலப்பரப்பில் 54 விழுக்காடு நிலப்பரப்பு பூகம்ப  அபாயத்திற்குரியது.  நமது பேரழிவில் 60 விழுக்காடு புயல் மற்றும் வெள்ளத்தால்தான்.

ஆனால், இயற்கைப் பேரழிவுகளைச் சமாளிக்க நாட்டில் இதுவரை ஒருங்கிணைந்த திட்டவட்டமான ஏற்பாடோ, வழிகாட்டுதலோ  முன் தயாரிப்போ செயல்திட்டமோ நம்மிடம் இல்லை. பேரழிவின் இயல்பையும், தாக்கத்தையும் பின் விளைவுகளையும், பேரழிவைத் தொடர்ந்து ஆற்ற வேண்டிய பணிகளையும் எண்ணிப்பார்த்து பேரழிவு மேலாண்மை என்ற பல்துறை இயல் வளர்ந்த நாடுகளில்  உருவாகி சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.  பேரழிவு மேலாண்மையில் 1994 ஆம் ஆண்டின் யோகாமா செயல்திட்டம் உலக அளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்றாகும்.

இப்போதுதான் தேசியப் பேரழிவு நிர்வாக ஆணையம் அமைப்பது என மத்திய அரசு முடிவு செய்துள்ளது.  இயற்கை விபரீதங்களில் பூகம்பத்தை மட்டும்தான் முன் கூட்டியே அறிய இயலாது. மற்றபடி, புயல், வெள்ளம், சுனாமி ஆகியவற்றை முன்கூட்டியே அறிய இயலும்.  வங்கக்கடலிலும் இந்துமாக் கடலிலும் சுனாமி உணரும் கருவிகளை உடனே அமைக்க வேண்டும்.  வங்கக் கடலையொட்டிய நாடுகளுடன்  ஒருங்கினைந்த  வகையில் இத்திட்டம் அமைவது நல்லது.  சென்னை – அந்தமான் வானிலை மையங்கள் சுனாமி எச்சரிக்கை செய்வதில் தலைமைக் கேந்திரங்களாக விளங்கிட நிலையங்களை மேம்படுத்த வேண்டும்.  2002 ஆம் ஆண்டில் முதல் முறையாக வானிலை தகவலுக்கென்றே கல்பனா என்ற தனி செயற்கைக்கோள் செலுத்தப்பட்டது.  அவசியமாயின் இதற்கென்றெ மிகுதிறன் கொண்ட செயற்கைக்கோளைச் செலுத்த வேண்டும்.

சுனாமியால் உருக்குலைந்து போனவர்க்கு உதவிக்கரங்கள் உடனே நீண்டபோதும் அவற்றை நெறிப்படுத்தி உரியவர்க்கு முறையாக உடனே சேர்த்திட மாநில அரசில் தனித்துறை இல்லை. இந்த வகையில் உத்தராங்கல் மாநிலம் தனி இலாக்காவை ஏற்படுத்தி ஊருக்கெல்லாம் வழிகாட்டியாக உள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவும், உடையும், உறையுளும் அளிப்பது மட்டும் போதாது. உள்ளம் உடைந்து போயிருக்கிற அவர்களது உடனடித் தேவை தன்னம்பிக்கையே.  தமிழக அரசும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் சுனாமியால் மனம் உடைந்து போயிருக்கிற மக்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டுவதே இப்போதைய தலையாயப் பணியாக இருக்க வேண்டும்.

அன்புடன்,

க. கலைக்கண்ணன்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 2005

எளிது எளிது
நிறுவனர் நினைவுகள்
வெற்றி நமது விலாசமாகட்டும்
விற்பனையில் வியத்தகு சாதனை
சுனாமியில் மீண்ட டாக்டர் பெ. இளங்கோ
படிப்பாளிகளை படைப்பாளிகள் ஆக்குவோம்
செயலாக்குவோம்
சாதனையாளர்
முன்னேற்றத்தின் மூலதளங்கள்
ஸ்ரீராம் நிறுவனத்தின் வெற்றிக்கதை
எப்படி எப்படி எப்படி
சோதனை வெல்வோம்.. சாதனை கொள்வோம்!
நேர்காணல்
நீதான் வெற்றியாளன்
மலரும் மணமும்
நம்மைப் பிணைக்கும் சங்கிலி
எங்கும் எதிலும் வெற்றி
பேட்டி
உலகம் உங்கள் கையில்
வெற்றிக்கு கனவு காண்போம்
நிறுவனர் பக்கம்
உள்ளத்தோடு உள்ளம்