Home » Articles » பிள்ளைகளை சான்றோர் ஆக்குவதில் பெற்றோர் பங்கு

 
பிள்ளைகளை சான்றோர் ஆக்குவதில் பெற்றோர் பங்கு


admin
Author:

அதீத கண்காணிப்பும் கட்டுப்பாடும்

அறிவு வளர்ச்சி:

மழலை மாறி பிள்ளைகள் பேச ஆரம்பிக்கும் இரண்டு வயதிலிருந்து பெற்றோரின் கவனம் தீவிரமாகிறது. பலவிதமான பயிற்சிகளைத் தர தயாராகின்றனர்.  இரண்டாவது வயதிலேயே மழலையர் பள்ளியில்… சேர்த்துவிடும் பெற்றோரும் உண்டு.  படித்த பெற்றோர்கள் வசதியுள்ள பெற்றோர்கள் பிள்ளைகள் மேல் காட்டும் அக்கறை அதீதமானது. இயற்கையான, படிப்படிப்பாயான முன்னேற்றத்திற்கிணையாக அளிக்கப்படும் பயிற்சிகள் பிள்ளைகளின் சீரான அறிவு வளர்ச்சிக்கு உறுதுணைபுரியும்.    பொதுவாக 50% பிள்ளைகள் வயதிற்கேற்ப அதன் வளர்ச்சியில் சற்றுபின் தங்கினாலும் சில மாதங்களில் அல்லது அதிகமாக ஒரு வருடத்தில் முன்னேறிவிடும்.  மீதமுள்ள 25% பிள்ளைகள் தாமதமான வளர்ச்சி கொண்டவைகளாக இருக்கும்.

பொதுவாக மூன்று வயது வரை மூளையின் நியூரான்களின் வளர்ச்சி உச்சநிலையில் இருக்கும்.  நியூரான்களுக்கிடையே தொடர்புகள் குறைவாக இருக்கும்.  தற்காலி நினைவாற்றல்தான் அதிகம் இருக்கும்.  எனவேதான் குழந்தைகள் ஏமாந்துவிடும், மறந்து விடும். மின்தூண்டல்கள்.. மூலமே நினைவாற்றல் பெறும்.  வயதாக ஆக நியூரான்களுக்கிடையே இராசாயன மாற்றம் நடைபெறும் நிலை ஏற்பட்டு இதர நினைவாற்றலுக்கு வழி வகுக்கிறது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் நிலையை நன்கு அறிந்துகொள்ள வேண்டும்.  அந்த வயதில் உள்ள மற்ற குழந்தைபோல் நம் குழந்தை ஆக வேண்டும் என்று அவசரப்படக்கூடாது.

அவசரப்படும் பெற்றோர்!

இறைவன் படைப்பின் அதிஅற்புதம் குழந்தை.  நூறு வயது வரை வாழப்போகும் அதற்குத் தேவையான வளர்ச்சியை,, தொடர்ந்து சீராக நடக்கும் தன்மையை இயற்கை அளித்துள்ளது.  ஆனால்.. வகுப்பில் சேர்ந்தவுடன் தன்பிள்ளை விரைந்து பேசவேண்டும், எழுத வேண்டும், பாடவேண்டும்.

மதிப்பெண்களை பெற வேண்டும் என்று பல வேண்டல்கள் எதிர்பார்ப்புகள்.  இதனால் படிப்படியாக வரவேண்டிய சில வளர்ச்சிகளை முன்னரே எதிர்பார்த்து பயிற்சியளிப்பதால் பின்னால் பல சிக்கல்கள் வரலாம்.

“டேய் ராமு, விளையாடினது போதும்.  வா, வந்து எழுது”

“ஒழுங்காப் படி இல்லைணா பூச்சாண்டிக்கிட்டே புடிச்சிக் கொடுத்துடுவேன்”

” நா சொல்றபடிதான் நீ கேட்கணும்”

“இந்த பரிட்சையிலே நீ முதல் மார்க் வாங்கலே அடி உதைதான்”

மேற்சொன்னவாறு பயப்படுத்தி கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பெற்றோர் பலர் உண்டு. பிள்ளைகளின் ஒவ்வோர் அசைவையும் கண்காணித்து அதில் குறைகள் கண்டு கட்டுப்படுத்தும் பெற்றோர் அதனால் பிற்காலத்தில் வரக்கூடயபாதிப்புகளை அறியாமல் உள்ளனர்.

“ஐந்தாவது வரை நல்ல மார்க் எடுத்து படிச்சிட்டு இருந்தா, ஆறாவது, ஏழாவது வரும்போது கவனம் குறைஞ்சு, மார்க் குறைஞ்சு இப்போ எட்டாவதிலே எல்லாத்திலேயும்பெயில் மார்க் வாங்கறா.  என்ன பண்ணறதுண்ணே தெரியலை” என்று ஆலோசனைக்கு வரும் பெற்றோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருகிறது.

அடிப்படைக் காரணங்கள் எவை?

அளவிற்கு மீறிய கண்காணிப்புகளும், கட்டுப்பாடுகளுமே.

இதனால் பிளைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்

1. சுயசிந்தனை வளர்வதில்லை.

2. பிரச்சைனகளுக்கான தீர்வை தானாக கண்டுபிடிக்கவோ அல்லது துணிந்து முடிவெடுக்கவோ முடிவதில்லை.

3. தனித்த செயல்களின் கட்டுப்பாட்டால் ஏமாற்றம்.

4. பய உணர்வுகள், உடல்நலக் குறைவுகள்.

5. கூச்ச உணர்வுகள்

6. மிகக் குறைந்த நண்பர்கள் அல்லது நண்பர்களே இல்லாமை.

இவ்வகை பாதிப்புகளால் பிள்ளைகளுக்கு ஏற்படும் விளைவு.  கோபம், பள்ளியில் தோல்வி, பள்ளி பயம், உலகைப் பற்றிய பயம்.

பெற்றோர்களின் அளவிற்கு மீறிய கண்காணிப்புகளுக்கும், கட்டுப்பாடுகளுக்கும் காரணங்கள் எவை?

1. பெண் குந்தைகளுக்குப் பிறகு பிறக்கும் முதல் ஆண் குழந்தை.

2. ஒரே ஆண் குழந்தை

3. இரண்டில் ஒரு குழந்தை இறத்தல்.

4. குறைபாடான  குழந்தை

5. பெற்றோருக்கு 40 வயதிற்கு மேல் ஆனபின்பு பிறந்த குழந்தை

6. தொடர்ந்த கருச்சிதைவுகளுக்குப் பின்னர் பிறந்த குழந்தை

7. தாயோ தந்தையோ இறந்து போயிருத்தல்

பிள்ளைகளின் ஒருங்கிணைந்த சிறப்பான வளர்ச்சிக்கு பெற்றோர் செய்ய வேண்டிவை:

1. உற்சாப்படுத்துதல்.

2.  தன்னம்பிக்கை ஊட்டல்.

3. பொறுமையை வளர்த்தல்

4. பலவகை சூழல்களில் அவர்களை ஈடுபடச் செய்து தீர்வு காணல்.

5. அவர்களுடைய சுயமரியாதைக்கு.. மதிப்பளித்தல்

6. கலந்துரையாடல்

7. நல்ல நண்பர்களை அமைக்க உதவுதல்

8. பரிசளித்தல்

9. சுதந்திரமாக செயல்பட அனுமதித்தல் (நமது கண்காணிப்பில்)

உற்சாகமாய் சிறகடித்துப் பறக்கும் பட்டத்தைப் பார்க்கும்போது உவகை பிறக்கும். பட்டம் பறக்கவிடுதல் போல்தான் பிள்ளைகள் கண்காணிப்பும்.

பறக்கும் சுதந்திரம் பட்டத்திற்கு. ஆனால் அதன் எல்லையை தீர்மானிக்கும் கயிறு நம் கையில். தேவையானபோது அதைக் கட்டுப்படுத்தவும், கீழே இறக்கவும் உரிமை நம்மிடம் உள்ளது.

அதைப்போல பிள்ளைகளின் சுதந்திர மனோபாவத்திற்கு அதிக தடையில்லாமல், சுயமாக செயல்பட அனுமதிக்கலாம்.  ஆனால் பட்டத்தை இலக்கும் கயிறுபோல் எல்லைகளைத் தீர்மானிக்கும் உரிமை, கடமை நம்மிடம் இருக்க வேண்டும்.

(அடுத்த இதழில் சந்திப்போம்)

 

3 Comments

 1. M. J. SYED ABDULRAHMAN says:

  ஆஹா என்ன ஒரு அற்புதமான அரவணைக்கும் அன்பு குழந்தைஹளுக்கு உக்குவிக்கும் பெற்றோர்ககன நல்ல கட்டுரை
  நன்றி – சிறப்பு
  manosakti

 2. M. J. SYED ABDULRAHMAN says:

  நன்றி
  ஆஹா என்ன ஒரு அற்புதமான அரவணைக்கும் அன்பு குழந்தைஹளுக்கு உக்குவிக்கும் பெற்றோர்ககன நல்ல கட்டுரை
  நன்றி – சிறப்பு
  manosakti

 3. Thamilini says:

  இது நல்ல கட்டுரை. இதை படிக்கும் பெற்றோர் நன்றாக படிக்க வேண்டும் பின்பு தங்களுடைய பிள்ளைகளை வளர்க வேண்டும்.

Post a Comment


 

 


January 2005

முன்னேற்றம் தரும் முத்துக்கள்
உங்களின் சரியான எடை
எண்ணங்கள் மலரட்டும்
மனசே மனசே
நேரம் அறிந்து கணையைத் தொடுத்துவிடுங்கள்
நேர்காணல்
நிறுவனர் பக்கம்
உள்ளத்தோடு உள்ளம்
வளரும் தலைமுறைக்கு வழிகாட்டும் துணைவேந்தர்கள்
கடல் அரக்கன்
ஸ்ரீராம் நிறுவனத்தின் வெற்றிக்கதை
தன்னம்பிக்கை வளர தாய்மொழி
முன்னேற்றத்தின் மூலதனங்கள்!
நிறுவனர் நினைவுகள்
தன்னம்பிக்கை ஒன்றுதான்
விடியலை நோக்கி!
மலரும் மணமும்
இளமை எவ்வளவு
பிள்ளைகளை சான்றோர் ஆக்குவதில் பெற்றோர் பங்கு
பயம் என்ற மாயை
எதிர்மறை சூல்களை அடையாளம் காண்பது எப்படி?
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி!
இன்றைய இலக்கு
மனித வள மேம்பாடு
வெற்றி நிச்சயம்
கவிதையும் அழுகிறது
கோயில் வழிபாடு ஏன்?
திறந்த உள்ளம்