Home » Articles » இன்றைய இலக்கு

 
இன்றைய இலக்கு


பாரதிபாஸ்கரன் ஜி.கே
Author:

ஒரு படி மேலே
One Step Ahead

“கனவு காணுங்கள்’ குடியரசுத் தலைவர் இளைஞர்களுக்குக்கூறிய மிகப் பிரபலமான அறிவுரை. கனவு மனதுகு களிப்பூட்டுகிறது.  உணர்வுகளுக்கு உயிரூட்டுகிறது. உற்சாகம் தரும். உத்வேகம் ஊட்டும். கனவு, ஒரு சாதாரண மனிதனையும் சாதனையாளன் ஆக்குகிறது.  ஆகவேதான், மாண்புமிகு குடியரசுத் தலைவர் கூறுகிறார் “கனவு காணுங்கள்”.

கனவு என்பது தனித்தீவல்ல. அதீத கற்பனையில் மூழ்கி அந்தரத்தில் மிதப்பதல்ல.  கனவு கொள்ளும் நோக்கம். தெனாலிராமன் கதையில் வருமே.. குதிரையின் முன்னே கொள்ளைக் கட்டி ஓடவிடுவதுபோல்தான் – முன்னே இருந்த தன்னை நோக்கி இருக்கும் காந்த சக்தியே ‘கனவு’ .

கனவை நனவாக்குவதில்தானே கவனம் மொத்தமும் செலுத்த வேண்டும். திட்டமிடுதல், செயல்படுதல் இரண்டும் இணைந்து பயணிக்கிறபோது சாதனை பரிணமிக்கிறது.

இதுவரை சொன்னதெல்லாம் ஏதோ ஒரு ‘தியரி’ (Theory) போல் தெரிகிறதா?

எங்கிருந்து துவங்கலாம்?” – இதுதான் மிக முக்கிய கேள்வி – எங்கிருந்து? எப்பொழுது ? எப்படி? என்றெல்லாம் திட்டமிடலாம், தவறில்லை ஆனால், துவக்கம் மிக முக்கியம் – தொடக்கம் தான் தொடர்ச்சியாகும்.

‘கனவு’ மிக தொலைவில் உள்ள பிம்பம்.  அதை நோக்கிய பயணத்தில் நாம் வைக்கும் ஒவ்வொரு அடியும் கனவு நனவாகும் சாதனையின் பிரிக்கப் படமுடியாத ஓர் அங்கம்தான்.

நடக்க நடக்கத்தான் தூரம் குறையும்.

படிக்க படிக்கத்தான் பார்வை விரியும். புரிந்துகொள்வோம்.

உழைக்க மறுப்பவன் உயர்வதே இல்லை.

சுமக்க சுளிப்பவன் சகிப்பதே இல்லை. சோம்பல்தான் மனித முன்னேற்றத்திற்கு முதல் எதிரி. உழைக்க வேண்டும் என்கிற எண்ணமே சோம்பலை விரட்டியடிக்கும்.

சரி, உழைப்பு மீது விருப்பு எப்போது வரும்? வெகு சுலபம்.  தொலைதூரக்கனவுதான் சுவாசம், சுகம், சொந்தம், எல்லாம், என்றிருந்தால் உழைப்பின்மீது நாட்டம் தானே தோன்றும்.

இன்று சிந்துகிற வியர்வைத்துளியே நாளைய சாதனைக்கு அஸ்திவாரம். இன்றைய இலக்கு எட்டப்பட வேண்டும். அப்போதுதான் அடுத்த இலக்கைத் தொடமுடியும். அடுத்த பணியைத் தொடரமுடியும்.

இன்றைய பாடத்தை முடித்தால்தான் அடுத்த ஆண்டுத் தேர்வுக்கு மதிப்பெண் கிட்டும். இன்று, பள்ளி ஆட்டத்தை சிற்பாய்ச் செய்தாலே நாளைநாட்டுக்காக ஆடி சாதிக்க முடியும்.

உடனடி வேலையை உருப்படியாகச் செய்தால் அடுத்த பணியை அழகாய் முடிக்கலாம்.  திட்டப்படி அவ்வப்போதைய பணியை அவ்வப்போது செய்து வந்தாலே போதும். தொலைதூரக்கனவு கண்முன்னே மெய்ப்படும்.

ஆம், குறித்து வைத்துக் கொள்வோம்.  தொலைதூரக்கனவு என்பது நிகழ்கால இலக்குகளின் தொகுப்பு.

A listant dream is the lumulative figure of instant aims.

மீண்டும் ச (சி) ந்திப்போம்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2005

முன்னேற்றம் தரும் முத்துக்கள்
உங்களின் சரியான எடை
எண்ணங்கள் மலரட்டும்
மனசே மனசே
நேரம் அறிந்து கணையைத் தொடுத்துவிடுங்கள்
நேர்காணல்
நிறுவனர் பக்கம்
உள்ளத்தோடு உள்ளம்
வளரும் தலைமுறைக்கு வழிகாட்டும் துணைவேந்தர்கள்
கடல் அரக்கன்
ஸ்ரீராம் நிறுவனத்தின் வெற்றிக்கதை
தன்னம்பிக்கை வளர தாய்மொழி
முன்னேற்றத்தின் மூலதனங்கள்!
நிறுவனர் நினைவுகள்
தன்னம்பிக்கை ஒன்றுதான்
விடியலை நோக்கி!
மலரும் மணமும்
இளமை எவ்வளவு
பிள்ளைகளை சான்றோர் ஆக்குவதில் பெற்றோர் பங்கு
பயம் என்ற மாயை
எதிர்மறை சூல்களை அடையாளம் காண்பது எப்படி?
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி!
இன்றைய இலக்கு
மனித வள மேம்பாடு
வெற்றி நிச்சயம்
கவிதையும் அழுகிறது
கோயில் வழிபாடு ஏன்?
திறந்த உள்ளம்