Home » Articles » கோயில் வழிபாடு ஏன்?

 
கோயில் வழிபாடு ஏன்?


சூரியன்
Author:

இடங்கள்

கோயில்கள் அமைக்கப்பட்ட நிறைய இடங்கள் மலைகள், குன்றுகள்,கடற்கரைப் பகுதிகள் போன்றவை ஆகும்.  அந்த அமைதி மிக்க சூழல், தூய்மையான காற்று, இயற்கை அழகு அங்கு செல்லும்போது அந்தப்புறச் சூழ்நிலை மனதில் அமைதியை – ஆனந்தத்தை ஏற்படுத்தும்.

உயிர்ச்சக்தி

டாக்டர் ஆர்தர் என்ற ஆராய்ச்சியாளர் கூறுகிறார். மலைகள், மரங்கள், செடி, கொடிகள், இவைகள் உயிர்ச்சக்தியை ஈர்த்து தம்மைச் சுற்றி வைத்துள்ளன. பிரபஞ்சத்தில் உயிராற்றல் Cosmic energy நிரம்பியுள்ளது.  அவற்றை ஈர்த்து அவை வைத்துள்ளன.  அங்கே சென்று அவற்றுடன் இருக்கும் மனிதர்கள் அந்த ஆற்றலைப் பெற்றுக்கொள்ள முடியும் என்கிறார்.

ஆகவே மலைக்கோயில்களுக்குச் செல்லும்போது அத்தகைய பயனைப் பெறுகிறோம்.  நம் முன்னோர்கள் இவற்றை உணர்ந்து கோயில்களை அங்கு கட்டியிருக்கின்றனர்.

அடுத்த கோயில் அமைப்பு,கோயில் முன்னால் உள்ள தீபஸ்தம்பம் / சக்தியை ஈர்த்த தம்மைச் சுற்றி வைத்துள்ளதாகக் கூறுகின்றனர்.  அதன் வடிவ அமைபு – Structure Shape  அவ்வாறு உள்ளதாக்க் கூறுகின்றனர்.  அங்கு நாம் செல்லும்போது உயிர்ச்சக்தியை நாம பெற்று Charging அடைகிறோம்.

எண்ண அலைகள்

பல கோயிர்கள் சித்தர்கள் – ஞானிகள் இருந்த இடங்கள் என்று கூறுகின்றனர்.  அவர்களின் எண்ண அலைகள் ஆற்றல் மிக்கது.  அந்த எண்ண மண்டத்துக்குள் பிரவேசிக்கும்போது மனம் தெளிவாகும்.

கோயில்களுக்கு வரும் மனிதர்கள் பெரும்பாலும் நல்ல எண்ணங்களை பிரார்த்தனை செய்யும்போது எண்ணுவதால் அங்கு உடன்பாடு எண்ண அலை மண்டலம் உருவாகிறது  (Positive thoughts energy waves) அது நமக்கு நன்மையைக் கொடுக்கிறது.

பெறும் மனநிலை

ஆனால் இப்பயன்களையெல்லாம் பெறவேண்டுமானால் மனம் இவற்றைப் பெற்றுக் கொள்கிற – ஏற்றுக்கொள்கிற தன்மையில் இருக்க வேண்டும். ரேடியோ , டி.வி. அலைகளைப் பெற்றுக்கொள்ள டியூன் செய்வது போல் மனதை அவற்றை வாங்கிக்கொள்ளும் தன்மையில் வைக்க வேண்டும். அதற்கு மனதை ஓய்வு நிலையில்  (Relaxed State) வைக்க வேண்டும்.  அங்கு ஏதேனும் குறைகள் இருந்தால் – விபரீதமாக ஏதேனும் நிகழ்ந்தால் அது பற்றி அங்கு உடன் வந்தோரிடம் புலம்பி கொண்டிராமல் – வீடு வந்தபின்பு கோயில் பொறுப்பாளர் குழுவுக்கு கடிதம் எழுத வேண்டும். ஆலோசனைகை எழதலாம்.

உயரிய எண்ணத்தூண்டல்

ஒவ்வொரு உருவக் கடவுளைப் பார்க்கும் போதும் சில உடன்பாட்டு ஊக்கச் செய்திகளைப் பெறலாம்.

நடராஜரைப் பார்க்கும் போது – தொடர்ந்து அவர் நடனமாடிச் செயல்புரிவது போல் செயல்புரிவேன் – ( Dynamic) என்று பெறலாம்.

விநாயகரைப் பார்க்கும்போது  வரிந்து காது கொடுத்துக் கேட்பேன். கூரிய கண்களைப் போல் விழிப்புணர்வாய் இருப்பேன்.  மூக்கு நீளமாய் இருப்பதைப் போல் எதையும் நுனிப்புல் மேயாமல் ஆய்ந்து அறிவேன்.. போன்ற செய்திகளைப் பெறலாம்.

ராமர் பற்றி கம்பராமாயணத்தில்

‘இந்த இப்பிறவியில் இன்னொரு பெண்ணைச்

சிந்தனையாளும் தொடேன்’ என்ற ஏகபத்தினி விரதம் கொண்டவர் இராமர்.

என்று வருகிறது.  இதுபோன்ற அவரின் உயரிய குணங்களை இராமர் கோயில் எண்ணிப் பார்க்கலாம்.

பக்தி கொண்டு விசுவரூபம் எடுத்துக் கடலைத்தாண்டிக்குதித்துச் சீதையைக்கண்டவன் அனுமன், நானும் மனதில் அறிவு, ஆற்றல், சக்தி, தன்னம்பிக்கை கொண்டு விசுவரூபம் எடுத்து ஜெயிப்பேன் என்று அனுமனைப் பார்க்கும் போது எண்ணலாம்.

நிறைவுரை

மொத்தத்தில் எங்கும் நிறைந்த பேராற்றல் மிக்க பரம்பொருளிலிருந்து வந்தவர்கள் நாம் என்பதை நினைவூட்டிக் கொள்ள கோயில்களுக்குச் செல்லலாம்.

பரம்பொருளின் நினைவுகள் நமக்குச் சக்தியூட்டும்.

எப்படி ஒரு வெள்ளைத்துணியை மீண்டும் மீண்டும் நீலத் தண்ணீரில் நனைத்தால் நீலமாக மாறுகிறதோ அதுபோல் அடிக்கடி தியானம், கோயில் வழிபாடு இவற்றின் மூலம் பேரானந்த பெருஞ்சக்தியைப் தொடும்போது நாமும் பேராற்றல், பேரறிவு  பெற்று வெற்றியும் பெறலாம் சந்தோஷமும் பெறலாம்.  வாழ்த்துக்கள்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2005

முன்னேற்றம் தரும் முத்துக்கள்
உங்களின் சரியான எடை
எண்ணங்கள் மலரட்டும்
மனசே மனசே
நேரம் அறிந்து கணையைத் தொடுத்துவிடுங்கள்
நேர்காணல்
நிறுவனர் பக்கம்
உள்ளத்தோடு உள்ளம்
வளரும் தலைமுறைக்கு வழிகாட்டும் துணைவேந்தர்கள்
கடல் அரக்கன்
ஸ்ரீராம் நிறுவனத்தின் வெற்றிக்கதை
தன்னம்பிக்கை வளர தாய்மொழி
முன்னேற்றத்தின் மூலதனங்கள்!
நிறுவனர் நினைவுகள்
தன்னம்பிக்கை ஒன்றுதான்
விடியலை நோக்கி!
மலரும் மணமும்
இளமை எவ்வளவு
பிள்ளைகளை சான்றோர் ஆக்குவதில் பெற்றோர் பங்கு
பயம் என்ற மாயை
எதிர்மறை சூல்களை அடையாளம் காண்பது எப்படி?
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி!
இன்றைய இலக்கு
மனித வள மேம்பாடு
வெற்றி நிச்சயம்
கவிதையும் அழுகிறது
கோயில் வழிபாடு ஏன்?
திறந்த உள்ளம்