Home » Articles » திறந்த உள்ளம்

 
திறந்த உள்ளம்


admin
Author:

நிறைவான மனிதர்களை உருவாகும் நிகரற்ற கொள்கையோடு “தன்னம்பிக்கை” செய்திகள் தாங்கி வெளிவரும் தன்னம்பிக்கை இதழின் தன்னிகரற்றப் பணிக்கு சிறப்பு சேர்க்கும் வண்ணம் சிறந்து மிளிர்கிறது தன்னம்பிக்கை வழிகாட்டி (டைரி 2005)

சீ. அருள்மொழி காட்டூர்.சேலம்

வெறும் புகழ்ச்சி அல்ல. மகிழ்ச்சியில் எழுதுகிறேன். சென்ற இதழின் நிறுவனர் பக்கம் படித்தேன். எனக்குள் இருந்த ஓராயிரம் குப்பங்களுக்கு விடை கண்டேன்.  திடமாய் வாழக் கற்றுக் கொண்டேன். என்னைப் போல் இன்னும் அனைவரும் தூய்மையாக வேண்டும். தொடர்ந்து உற்சாகப்படுத்துங்கள்.

“தன்னம்பிக்கை”க்கு எனது கை என்றும் பாலமாய் இருக்கும்.

இராஜவேலுசாமி, ஈரோடுரோடு, பெருந்துறை

தங்களின் தன்னம்பிக்கை அக்டோபர் 2004 இதழைப் பார்க்கும் வாய்ப்பு நண்பர் புலவர் தி. குலோத்துங்கன் வீட்டில் கிடைத்து.  புரட்டிப்பார்த்தேன். பொதுவில் நன்றாக இருந்த. தன் முன்னேற்ற மாத இதழல் என்று அறவித்து இருக்கின்றீர்கள். மகிழ்ச்சி. இதழில் பாட்டுத தனத்துக்கும் பாவலர்களுக்கும் வாய்ப்பு தந்திருப்பது மேலும் மகிழ்ச்சியைத் தருகிறது. வரவேற்க்பட வேண்டிய ஒன்று.

தன் முனைப்பு, தன்னூக்கம், தன் எழுச்சியால் வரவேண்டியன.  இயற்கையாய் அவை வர (யாவருக்கும் புரியவர) படைப்புகளைப் பெற்றும் வெளியிடுங்கள். தன் எழுச்சிக்கு இடையூறாய் இருக்கும் அதனையையும் இனம் காட்டுங்கள். இதழுக்கு என் வாழ்த்துக்கள் பாராட்டுகள் வாழி.

இளஞ்சித்தன். சென்னை.

தன்னம்பிக்கை இதழில் வரும் கட்டுரைகள், கருத்துக்கள், கவிதைகள் இளைஞர்களை தூண்டி வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லுவதாக உள்ளது.  தன்னம்பிக்கை இதழை நமது ஜனாதிபதி ஐயா டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களுக்கு ஒரு  பிரதி அனுப்பி வைத்தால் அவரின் மூலம் இக்கருத்துக்கள் இந்தியா முழுவதும் சென்றடையும்.

சி. இராமேஷ் வெள்ளக்கோவில், ஈரோடு.

பேரறிஞர் அண்ணா, மூதறிஞர் இராஜாஜி, தமிழ்வாணன் இவர்கள் பள்ளி இறுதி வகுப்பிலே தோல்வியடைந்தவர்கள்.  விஞ்ஞானி அப்துல் கலாம் விமானப்படைத்தேர்வில் தோல்வியடைந்தவர்தான்.  திருபாய் அம்பானி உட்பட இவ்வறிஞர்கெல்லாம் மனந்தளராமல் உலகில் எதிர்நீச்சல் போட்டு வெற்றியின் சிகரத்தைத் தொட்டவர்கள் என்பதை படித்தபோது ‘தன்னம்பிக்கை’ விதை என் நெசஞ்சில் மட்டுமல்ல, அனைத்து வாசகர்க் நெஞ்சிலும் தூவபட்டது கண்டு புளகாங்கிதமடைந்தேன்.

புலவர் பறம்பை இரா. சு. பிரகாசம், திருச்சி.

சாதாரண மனிதனையும் உண்மையிலேயே சாதனையாளராக்கும் இல.செ.க. வின் ‘தன்னம்பிக்கை’ மாத இதழ். வாழ்க்கைக்கு வழிகாட்டியாக நின்று, வெற்றிப்படிகள் அமைத்துக் கொடுத்து சாதனை சிகரங்களை எட்டுவதற்கு ஏதுவாக அமைந்துள்ளது.

வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் ஒவ்வொருவர் கையிலும் ஏன்?  நெஞ்சத்திலும் இருக்க வேண்டிய ஒன்று தன்னம்பிக்கை.

கே. ஞானமணி பிள்ளை.  இந்தூர் – மத்தியப் பிரதேசம்

‘தன்னம்பிக்கை’ இதழ் பல்லாயிரக் கணக்கான, இளைஞர்களின் வாழ்வில் ஒரு மாபெரும் மாற்றத்தை உண்டு பண்ணி, வாழ்க்கையின் உச்சாணிக் கிளையிலே உள்ளனர் என அறிந்தேன்.  அனைவருகும் நம்பிக்கைநடச்த்திரமாக விளங்கி கலங்கரை விளக்கமா சுடர் ஒளி வீசிக் கொண்டு உள்ளீர்கள்.  தங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

எஸ்.பி. சிவம் முசிறி, திருச்சி.

சிந்தனைக் கவிஞர் கவிதாசனின் வளரும் தலைமுறைக்கு வழிகாட்டி கட்டுரை எந்த சோம்பல் மனங்களையும் நிச்சயம் புரட்டிப்போடும்.  பாரதத்தின் முதல் குடிமகன் உயர்திரு அப்துல்கலாம் அவர்களைப் பற்றி மிகத் தெளிவாக் கூறி சாதிக்க நினைப்போர்களின் நினைவுகளில் இலட்சிய நெருப்புக்கு எண்ணெய் ஊற்றிக் கனன்று நிற்கத் துணை புரிந்துவிட்டார். அவரது அனுபவங்களும் கவிதை வரிகளும் அரிமாவெனச் சிலிர்க்க வைத்து விடுகின்றன.

அ. இராப்பன். கருமத்தம்பட்டி, கோவை.

டிசம்பர் 2004 ‘தன்னம்பிக்கை’ இதழ் வரிக்கு வரி வாசகர்களுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டியது.  முன்னேறத் துடிப்பவனுக்கு வருடத்துகு 13 மாதங்கள் கவிஞர் கவிதாசனின் கண்டுபிடிப்பு, ஒரு வீரன் போரிட்டுத் தோற்கலாம். போர்க்களம் காணாமலே தோற்க்க்கூடாது.  எச். நடராஜன் அவர்கள் அனுபவ மொழிகள் மற்றும் உதிக்கிற சூரியன் பழையது, ஆனால் ஒவ்வொரு விடியலும் புதியது; போன்ற வைர வரிகள் சிங்கம்போல நம்மை சிலிர்த்தெழ வைக்கிறது.

செ. கணேசன் கந்தம்பாளையம், நாமக்கல்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2005

முன்னேற்றம் தரும் முத்துக்கள்
உங்களின் சரியான எடை
எண்ணங்கள் மலரட்டும்
மனசே மனசே
நேரம் அறிந்து கணையைத் தொடுத்துவிடுங்கள்
நேர்காணல்
நிறுவனர் பக்கம்
உள்ளத்தோடு உள்ளம்
வளரும் தலைமுறைக்கு வழிகாட்டும் துணைவேந்தர்கள்
கடல் அரக்கன்
ஸ்ரீராம் நிறுவனத்தின் வெற்றிக்கதை
தன்னம்பிக்கை வளர தாய்மொழி
முன்னேற்றத்தின் மூலதனங்கள்!
நிறுவனர் நினைவுகள்
தன்னம்பிக்கை ஒன்றுதான்
விடியலை நோக்கி!
மலரும் மணமும்
இளமை எவ்வளவு
பிள்ளைகளை சான்றோர் ஆக்குவதில் பெற்றோர் பங்கு
பயம் என்ற மாயை
எதிர்மறை சூல்களை அடையாளம் காண்பது எப்படி?
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி!
இன்றைய இலக்கு
மனித வள மேம்பாடு
வெற்றி நிச்சயம்
கவிதையும் அழுகிறது
கோயில் வழிபாடு ஏன்?
திறந்த உள்ளம்