Home » Articles » வளரும் தலைமுறைக்கு வழிகாட்டும் துணைவேந்தர்கள்

 
வளரும் தலைமுறைக்கு வழிகாட்டும் துணைவேந்தர்கள்


மதி
Author:

பேட்டி

டாக்டர் சி. இராமசாமி

துணை வேந்தர் வேளாண்மைப் பல்கலைக்கழகம்

வேளாண்மை தொழில்  குடும்பத்தில்
பிறந்திட்ட பெருந்தகை
தன்னம்பிக்கை நிறுவனர் அய்யா அவர்களின்
அணுக்க தோழரிவர்

சீரிய சிந்தனையாளர் – கருத்துக்களை
செம்மை படுத்துவதில் வல்லன்மை பூண்டவர
ஆய்ந்தவறிதில் ஆர்வமிக்க ஆய்வாளர்
நிர்வாகி என்பதற்கு எடுத்துக்காட்டாய் விளங்குபவர்

ஆயிரம் பிறைகளைக் கடந்து
அதற்கு மேலும் ஆய்ந்திலோர் ஆயிரம் பிறைகள் ஈட்டி
நூற்றாண்டு விழா காணும்
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக
துணைவேந்தரிவர்

இவர்தம் கருத்துச் செறிவை
பேட்டியாக நமக்கு வாங்கித் தருகிறார்
பேராசிரியர் பெரு. மதியழகன்

விவசாய குடும்பத்தில் பிறந்து வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கே துணைவேந்தராகி சாதனை படைத்துள்ளீர்கள். தடைக்கற்களை படிக்கற்களாக்கி வெற்றிகண்ட உங்கள் அனுபவங்களைப  பகிர்ந்து கொள்ளுங்கள்.

பொதுவாக எல்லோருக்கும் முன்னேற்றப் பாதையில் பல தடைகள் இருக்கும். என்னைப் பொருத்தவரை ஒரு திட்டமிட்ட முறையில் முடிந்த அளிவிற்கு விவேகாமாகவும், புதுமையாகவும் எடுத்த காரியங்களை செய்து கொண்டு வந்துள்ளேன்.  குறிப்பாக, அடைய வேண்டிய இலக்கை ஒருதொலை நோக்கு பார்வையுடன் உறுதி செய்து வந்தேன். அதற்காக முயற்சிகளை எடுத்து இலக்கை நோக்கிப் பயணம் செய்யும் பொழுது நாம் வெற்றியை அடைய முடியும். இதுதான் என்னுடைய முன்னேற்றத்திற்கு ஒரு அடிப்படையான அணுகுமுறை.

இல.செ.க. வுடன் உங்கள் தொடர்பு பற்றி மறக்க முடியாத நினைவுகளை வாசகர்களுக்கு சொல்ல முடியுமா?

அ) அவருடைய எழுத்துக்கள் என்னைக் கவர்ந்தன. குறிப்பாக, நமது இலக்கியங்களில் சொல்லப்பட்ட வேளாண்மை பற்றிய கருத்துக்கள், முறைகள் தொகுத்து எல்லோருக்கும் பயன்படும் வகையில் தந்துள்ளார்கள்.

ஆ) அவருடை அன்றில் பறவைகள் மீண்டும் மு.வ. வை நினைவுப்படுத்தியது.

இ) அவருடைய உயர்ந்த கருத்துக்கள், செயல்கள், எல்லோரிடமும் பழகும் தன்மை என்னைப் பாதித்தது.  வேளாண் பல்கலையில் தமிழ் ஆசிரியராக அவர் ஒரு முத்திரையை பதித்தார் என்பதில் மாறுபட்ட கருத்துக் கிடையாது.

உ) சோர்வுற்று கிடக்கும் தனிமனிதர்களுக்கு அவர் எழுதி முன்னேறுவதற்கான வழிகாட்டும் முறைகள் அவர் சொல்லிய சிந்தனைகள் என்னைப் பெரிதும் கவர்ந்தது.

ஊ) அவர்கள் வெளிநாடு செல்லும் பொழுதும், சென்று வந்த பிறகும், அவர் பரிமாறிய கருத்துக்கள் என் மனதில் இன்னும் பசுமையாக உள்ளது. அத்தோடு இளைஞர்கள் முன்னேறுவதற்கு அவர் நடத்திய சுய முன்னேற்ற பயிற்சி வகுப்புகள் என்னை வெகுவாக கவர்ந்தன.

உலகமயமாதல் என்ற நிலையில் தமிழக வேளாண்மையின் நிலை இனி எப்படி இருக்கும்?

உலகமயமாக்கப்பட்ட இந்த சூழலில், தமிழக வேளாண்மை நல்ல நிலையை எட்டிப்பிடிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக, பல வேளாண் பொருட்கள் ஏற்றுமதி செய வாய்ப்புள்ளன. அதற்கான தனியார் முயற்சியும் அரசின் திட்டங்களும் உருவாக்கப்பட்டு செயல்பட்டால் நாம் நிறைய ஏற்றுமதி செய்ய இயலும்.  அதனால் வளர்ச்சி அடைய இயலும்.  தமிழ்நாட்டில் வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட பொருட்கள் ஏற்றுமதி வாரியம் உருவாக்கி ஒற்றைச் சாளரமுறையில் ஏற்றுமதிக்குண்டான வாய்ப்புகளை ஊக்குவிக்க வேண்டும்.

இப்போதெல்லாம் விவசாய குடும்பங்களில் பட்டப்படிப்பு முடித்துவிட்டு வேலையில்லாத இளைஞர்கள் ஏராளமாக இருக்கிறார்கள்.  வேளாண்மை அல்லது அதைச் சார்ந்ததுறைகளில் சுயவேலை வாய்ப்புக்கு வழிகள் உண்டா?

வேளாண் பொருட்களின் தேவை உயர்ந்து கொண்டே போகிறது. 175 ஆக தற்பொழுது உள்ளது. வேளாண் பொருட்களை உற்பத்தி செய்து கூட்டு  முயற்சியாக நாம் விற்பனை செய்தால் (Group Marketing) சந்தையிலே நம் பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும்.  சந்தை நிலவரங்களை அறிந்து வேளாண் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டால் முன்னேற வழியுண்டு. வேளாண்மையில் சாதிக்க வேண்டும் என்ற மனப்பான்மை அவர்களுக்கு இருந்தால் சுய வேலைவாய்ப்புகள் நிறைய உண்டு.

சிறந்த நிர்வாகியாவது எப்படி?

முதலில் ஒரு நிறுவனத்தை நிர்வகிக்கும் பொழுது அங்கே உள்ள பல நிலைகளில் பணிபுரியும் / பணியாளர்களையும் நிர்வாக முடிவுகளை எடுப்பதில் பங்கேற்க செய்ய வேண்டும். அதிகாரங்களை எல்லா நிலைக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும்.  தனி மனிதர்களைவிட அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள நிர்வாகம் மற்றும் மேலாண்மை வழிமுறைகள் முக்கியம் பெற வேண்டும். குழுச் செயல்பாடுகளுக்கும் கூட்டு முயற்சிக்கும் முக்கியத்துவம் தர வேண்டும்.  எடுக்கும் முடிவுகள் எடுப்பதற்கான  காரணங்களும் வெளிப்படையாக இருக்க வேண்டும். இதுபோன்ற சில மேலாண்மை கொள்கைகளை கடைப்பிடிக்கும் பொழுது நாம் சிறந்த நிர்வாகி ஆகலாம்.

நீங்கள் ஒரு சிறந்த நிர்வாகி என்று அறிகிறோம்.  முடிவெடுப்பதில் சிக்கல்களைத் தீர்ப்பதில் தங்களின் ஏதேனும் ஓர் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

உதாரணமாக, கடந்த 8 ஆண்டுகளாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் புதிதாக விஞ்ஞானிகள் (உதவிப் பேராசிரியர்கள்) தேர்ந்தெடுக்கப்படவில்லை.  எடுக்க முடியாததற்கு, தமிழக அரசின் நிதித்துறை, அனுமதிக்கவில்லை. நான் நிதித்துறை சிறப்பு செயலாளரிடம் சென்று, உதவிப் பேராசிரியர்கள் பதவி நியமனம், தமிழக அரசு அல்லாத நிதி மூலங்களின் மூலம், செலவை ஏற்றுக் கொள்கிறேன் என்ற கருத்தை வைக்கவும், அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.  இது  போன்ற அணுகுமுறையின் மூலம் நாம் வெற்றியடையலாம்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் நூற்றாண்டு விழா இந்த மாதம் தொடங்க இருக்கிறது.  இந்தப் பல்கலைக்கழகத்தின் நூறு ஆண்டு சாதனைகளாக எதைக் கருதுகிறீர்கள்?

வேளாண்மை முன்னேற்றத்திற்கான நூறாண்டு கால மனிதவளத் தேவையை கோவை வேளாண் கல்லூரி பூர்த்தி செய்துள்ளது. இந்தியாவின் உணவுப் பஞ்சத்தை போக்குவதில், மிகுந்த பணி ஆற்றி உள்ளது. உலகிற்கு பேராசிரியர் எம்.எஸ். சுவாமிநாதன் போன்ற உயர்நிலை வேளாண் விஞ்ஞானிகளைத் தந்துள்ளது.  நானூறுக்கும் மேற்பட்ட உயர் விளைச்சல் பயிர் ரகங்களைத் தந்து வேளாண் பெருமக்கள் வாழ்வு வளம் பெற உதவியுள்ளது.

தொடரும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2005

முன்னேற்றம் தரும் முத்துக்கள்
உங்களின் சரியான எடை
எண்ணங்கள் மலரட்டும்
மனசே மனசே
நேரம் அறிந்து கணையைத் தொடுத்துவிடுங்கள்
நேர்காணல்
நிறுவனர் பக்கம்
உள்ளத்தோடு உள்ளம்
வளரும் தலைமுறைக்கு வழிகாட்டும் துணைவேந்தர்கள்
கடல் அரக்கன்
ஸ்ரீராம் நிறுவனத்தின் வெற்றிக்கதை
தன்னம்பிக்கை வளர தாய்மொழி
முன்னேற்றத்தின் மூலதனங்கள்!
நிறுவனர் நினைவுகள்
தன்னம்பிக்கை ஒன்றுதான்
விடியலை நோக்கி!
மலரும் மணமும்
இளமை எவ்வளவு
பிள்ளைகளை சான்றோர் ஆக்குவதில் பெற்றோர் பங்கு
பயம் என்ற மாயை
எதிர்மறை சூல்களை அடையாளம் காண்பது எப்படி?
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி!
இன்றைய இலக்கு
மனித வள மேம்பாடு
வெற்றி நிச்சயம்
கவிதையும் அழுகிறது
கோயில் வழிபாடு ஏன்?
திறந்த உள்ளம்