நம்மோடு உரையாடுகிறார் செயல் இயக்குனர் ஆர். கண்ணன்
வளமான வாழ்விற்கு வழிவகை யாத்து
வேலையற்ற பட்டதாரி இளைஞர் மற்றும்
முதியோர், மகளிர் வேறுபாடின்றி
சுயவேலை வாய்ப்புகளை ஆக்கித்தந்தும்
கிமாம்ப்புற பகுதிகளை நாடிச் சென்றும்
மக்கள் நலப்பணிகளையே செய்துவரும்
மகத்தான நிறுவனமே ஸ்ரீராம் சிட்ஸ்.
வங்கித் தொழில் போன்றதொரு முதலீடும் காப்பீடும்
இன்சூரன்ஸ் தொழிலோடும்
கடன்வழங்கி தொழில் வளர்த்தும்
முகவர்கள் களப்பணியாளர்கள் உழைப்பினோடும்
நினுவனத்தின் இட்டங்கள் வெற்றி பல பற்றிங்கே
நடைமுறையில் நன்மைகளை குவிக்கும் நிலை!
பொருளீட்டும் நிறுவனம் ஒன்று
அகிலம் போற்றும் அய்யன் திருக்குறளை
மாணவர் நெஞ்சத்தில் பதித்து
நெறிபடுத்தும் பணியினையும்
பாட்டுப்புலவன் பாரதிக்கு வழங்குகின்ற
பரிசுகளை குவை குவையாய் வழங்குகின்ற
நல்நெஞ்சத்து நிறுவனத்தின் செயல் இயக்குநர்
நம்நெஞ்சத்து நிறுவனத்தின் செயல் இயக்குநர்
கண்ணன் தொடர்கிறார் செயல் முறையை நன்றே!
உங்களைப் பற்றி….
நான சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவன். எனக்கு சொந்த ஊர் கும்பகோணம். நான் படித்தது மாயவரம் ஏ.வி.சி.கல்லூரியில். கல்லூயிரில் படித்து பட்டம்பெற்ற பிறகு வேலை தேடினேன்.
அப்போதைய காலகட்டத்தில் வேலை வாய்ப்பு என்பது இன்றுபோல் அவ்வளவு கஷ்டம் இல்லை. எனக்கு இரண்டு மூன்று இடங்களில் இருந்து வேலை வாய்ப்புகள் வந்தன. முதன் முதலில் வங்கி ஒன்றில் சாதாரண அலுவலராக பணியேற்றேன். கல்லூரி முடித்த உடனே வேலையில் சேர்ந்தேன். என் 23 ஆவது வயதில் பணியேற்ற ஓராண்டிலேயே 1968 – இல் பதவி உயர்வு பெற்றேன்.
வங்கியில் பணியாற்றிய நீங்கள் இப்படி ஒரு நிறுவத்தை நாடிய எண்ணம்..!
பல தனியார் வங்கிகளில் பணியாற்றியதின் பேரில் அவற்றில் கிடைத்த Service சேவை முறைகளை கற்றுத் தேர்ந்து எட்டு ஆண்டுகளுக்குப் பின் தனி நிறுவனம் தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றி பெற்றுள்ளோம்.
இவ்வெற்றியில் கவனிக்கத்தகுந்தது முகவர்களின் முயற்சி, களப்பணியாளர்களின் உண்மையான உழைப்பு. இப்படிப் பார்த்தால் பல பல வெற்றிக்குடும்பங்களின் அயராத சேவைகளை காட்டலாம்.
தஞ்சைசிவாவின் வெற்றிப்படிகள்
சட்டக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்று வழக்குரைஞராக பணியாற்ற வேண்டிய சிவா 20.9.1987 – ல் திருச்சி ஸ்ரீராம் நிறுவனத்தில் தம்மை முகவராக இணைத்துக் கொண்டு பணியாற்றினார். அவர் உழைப்பின் வெற்றியால் 1988 – ல் வளர்ச்சி அதிகாரி ஆனார்.
கடந்த 18 ஆண்டுகளில் 20 ஆயிரம் சந்தாதாரர்களை ஸ்ரீராமில் இணைத்துள்ளார். ஒரு கோடிக்குமேல் பணம் பெற்று தந்து அதில் 99.33% சதவீதம் ரெக்கவரி செய்யப்பட்டுள்ளது என்கிறார்.
ஸ்ரீராமின் பல திட்டங்களில் பங்கேற்று சாதனைகள் பல படைத்து நான்கு முறை வெளிநாடு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பினைப் பெற்ற இவர் கூறுகையில் என் சாதனைகளைப் பாராட்டி டோயோடா குவாலிஸ் கார் Tyoto Qualis Car) பரிசாக ஸ்ரீராம் நிறுவனம் வழங்கி உள்ளது. இந்த சாதனைக்கு நிறுவனத்தின் ஆக்கமும் ஊக்கமுமே என்று சொல்லுகின்றபோது என் சாதனைகளை உருவாக்கித் தந்தவர்கள் குழு மனப்பான்மையுடன் களத்தில் சளைக்காமல் உழைத்த முகவர்களைதான் என் சாதனைகள் சேரும்.
சோதனைகள் வரும்போதெல்லாம் அவற்றை சாதனைகளாக மாற்ற எனக்கு உறுதணை என்று சொல்லி (தன் துணைவியாரை பார்க்கிறார்)
சாதனை குடும்பத் தலைவி டாக்டர். ரெங்கநாயகி சிவா அவர்கள் தொடர்கிறார்
முகவர் பணியை சைக்கிளில் சென்றுதான் செய்தார். திட்டமிடல், சீரான அயராத உழைப்பு, சந்தாதாரர்களின் நம்பிக்கையை பெறுதல், அவர்கள் தேவை அறிந்து வண்கிம் செய்தல், திட்டங்களைப்பற்றி தெளிவான அறிஉ வெற்றியில் தனியாத தாகம், பெற்ற வெற்றியை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளல். நிறுவனத்தின் எண்ணங்களுக்கேற்ப களப்பணிகளை அமைத்து செயலாற்றுவது,
முகவர்களை திட்டத்தின்பால் ஈர்க்கும் அரவணைப்பு மேலே செல்ல வேண்டும் என்ற இலட்சியம். இவைகளே சைக்கிளில் சென்று கொண்டிருந்த இவர் குவாஸ் காரில் செல்லும் அளவிற்கு உயர்த்தியது. அரவணைப்பு மேலே செல்ல வேண்டும் என்ற அலட்சியம். இவைகளே சைக்களில் சென்று கொண்டிருந இவர் குவாஸ் காரில் செல்லும் அளவிற்கு உயர்த்தியது.
புதிய திட்டங்களை ஸ்ரீராம் நிறுவனம் அறிமுகப்படுத்தும் போது, அத்திட்டங்களைப் பற்றி தெரிந்து கொண்டு ஒரு Costomer போலவே கேள்விகளை கேட்டு, அறிமுகப்படுத்தும் புதிய திட்டங்களில் முழு தெளிவு பெறும் வகையில் உரையாடுவோம். செயல் திறனில் சற்றேனும் சளிப்பு ஏறுபடும்போது இப்போதைய நிலையை நினைவூட்டி வெற்றி என்ற இலட்சியத்தை மட்டுமே எண்ணத்தில் நிறுத்தும்படி செய்துவிடுவேன்.
நாங்கள் பெற்ற வெற்றியும், மகிழ்ச்சியும் ஒவ்வொரு முகவரும் அடைய வேண்டும் என்பதே எமது ஆவல்.

January 2005




























No comments
Be the first one to leave a comment.