Home » Articles » முன்னேற்றத்தின் மூலதனங்கள்!

 
முன்னேற்றத்தின் மூலதனங்கள்!


admin
Author:

காந்தியவாதியான தரம்பால் வெள்ளையர்கள் ஆட்சி நிலைப்பத்கு முன் உலகிலேயே அதிக விழுக்காடு எழுதப் படிக்கத்தெரிந்தவர்கள் இருந்த நாடு இந்தியா என்று எழுதினார். ஆம். இந்திய வரலாற்றை மேலும் ஆராய்ந்தால் உலகிலேயே அறிவியல் துறையில் முதன்முதல் அடியெடுத்து வைத்துச் சாதனைகள் பல செய்த நாடு நம்நாடு.

உலகில் முதல் பல்கலைக்கழகம் தட்சசீலத்தில் கி.மு. 700 இல் நிறுவப்பட்டது.  உலகின் பல நாடுகளில் இருந்து வந்து மாணவர்கள் படித்தனர்.  இங்கு மட்டும் பத்தாயிர் பேர் கல்வி கற்றுள்ளனர். அறுபது பாடப்பிரிவுகள் இப்பல்கலைக்கழகத்தில் இருந்துள்ளன.  கி.மு. 400 ஆம் நாற்றாண்டில் நாளந்தாப்பல்கலைக் கழகம் நிறுவப்பட்டது. அதேபோல மனிதனுக்குத் தெரிந்து ஆதி மருத்துவமனை ஆயுர்வேத்தின் தந்தை சரகர் வாழ்ந்த நாடு இது. இவருடைய காலம் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பர்  கல்வி வளத்திலும் பொருள் வளத்திலும் ஓங்கி இருந்தவர்கள். பல்வேறு படையெடுப்புகள், ஆதிக்கங்கள், கலாச்சார சீரழிவுகளுக்கு ஆட்பட்டு தற்போதைய நிலையில் உள்ளோம்.

கடந்த இதழ்களில் முன்னேற்றத்தின் முதல் தளமான கல்வியின் முக்கியத்துவம், இன்றைய நிலை, மாற்றியமைக்கப்பட வேண்டிய பாடத் திட்டங்கள், மறுசீரமைக்கப்பட வேண்டிய கல்வி நிலைய கட்டமைப்புகள் குறித்து காண்போம்.

அரசு கல்வி நிறுவனங்கள் மட்டுமல்ல. இதில் அரசு நிதி உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் தனியார் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள்.

1976 இல் 30 ஆக  இருந்த மெட்ரிக் பள்ளிகள்  1987 இல் 200 ஆகவும், 1999இல் 1000 என பெருகி சென்ற ஆண்டு முடிய 3360  ஆக வளர்ந்துள்ளன. அமெரிக்க போன்ற வளர்ந்த நாட்டில் கல்வியை இனி முழுமையாக அரசே ஏற்று  நடத்தும் என்று மீண்டும் அதிகாரத்திற்கு வெற்றி பெற்றுள்ள அதிபர் புஷ் தெரிவித்துள்ளார்.  வளர்ந்த நாடே கல்வியை அரசே ஏற்று நடத்தும் என்கிற போது நம்மைப்போன்ற நாடுகள் மிகவும் சிந்திக்க வேண்டும்.

தனியார் முன்வந்து கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தாமல் போயிருந்தால் நிலைமை இன்னும் மோசமாகியிருக்கும். அரசு வளர்ந்து வரும் தேவைக்கு ஏற்ப கல்வித்துறை வளர்ச்சியில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். அவ்வாறு அனுமதியளித்து தொடங்கப்பட்ட நிறுவனங்கள் அரசு நிர்ணயிக்கும் விதிமுறைகளை கடைபிடிக்கிறார்களா என்றாவது அதிகாரிகள் கண்கானித்திருக்க வேண்டும்.  அவ்வாறு செய்யப்படவில்லை.

வணிக நிறுவனங்கள் நடத்துவதைப்  போல இதுவும் பணம் காய்க்கும் நிறுவனமாக இப்போது ஆகிவிட்டதால் பல வணிகர்கள் கல்விநிறுவனம் நடத்தும் தொழிலைச் செய்து வருகிறார்கள்.  அவர்கள் கண்காணிக்கப்பட வேண்டியவர்கள்.  இவற்றுக்கெல்லாம் முன்பே இலக்கண இலக்கிய வளம் செரிந்த கல்விக்களமாக திகழ்ந்தது தமிழகம்.  உலகின் மூத்த தமிழர்கள் அவர்தம் மருத்துவம் சித்த மருத்துவம்.

சான்றாக ஒன்றைச் சுட்டுவதாயின், கும்பகோணத்தில் குழந்தைகள் தீவிபத்தில் சாம்பலான பிறகு அதிரடியாக பள்ளக் கூறைகள் மாற்றப்பட்டன.  கொடுமை என்ன வென்றால் பலதனியார் பள்ளிகளில் ஆங்கில வழி பயின்றவர்கள் அடுக்குமாடிக் கட்டடங்களிலும், தமிழ்வழி பயின்றவர்கள் ஓலைக் கூரைக் கொட்டகைகளிலும் ஒரே பள்ளியில் ஓரவஞ்சனையுடன் நடத்தப்பட்டதுதான்.  இது மாணவரிடையே தாழ்வுமனப்பான்மையை உருவாக்காதா?  இது மாற்று வடிவிலான தீண்டாமையன்றி வேறென்ன?  சேரன்மாதேவி குருகுலத்தில் நடந்த கொடுமைக்கு எதிராக அன்று பெரியார் கொதித்தெழுந்தார். இது நவீன தீண்டாமைதானே!

அரசு பள்ளிகளில், அரசு கல்லூரிகளில் பயிலுகின்றவர்களில் பெரும்பாலானவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களாகவே இருக்கிறார்கள்.  இயலவே இயலாது என்பவர்கள்தான் அரசு பள்ளிகளுக்கு தங்கள் குழந்தைகளை அனுப்புகிறார்கள். மற்றவர்கள் தனியார் பள்ளிகளுக்கே அனுப்புகிறார்கள்.

இதனால் சமூக தளங்களில் புதிய வேற்றுமைகளே வளர்த்துக் கொண்டிருக்கிறோம். இது களையப்பட வேண்டும். உடனே விழித்துக் கொண்டாக வேண்டும்.

உண்மையில் தனியார் பள்ளி ஆசிரியர்களைவிட மிகச்சிறந்த ஆற்றலாளர்கள் அரசு பள்ளியில் பணியாற்றுகிற ஆசிரியர்கள்.  காரணம் சிறப்பாக பயிற்சி பெற்றவர்கள். ஆனால் ஆசிரியர் மாணவர் விகிதம், மற்ற வசதிகள் மிகவும் குறைவு. அரசு மற்ற மானியங்களை எல்லாம் நிறுத்தியாவது கல்வித்துறைக்கு புதிய இரத்தத்தைப் பாச்சவில்லை என்றால் ஆரோக்கியமான சமூக மாற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் அது வழிவகுக்காது.

அடுத்த முன்னேற்ற நேரத்தில் கல்வியில் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியது பயிற்று முறையும், படிக்கும் முறையும் அதாவது கற்பிக்கும் முறையும், கற்றல் முறையும் (Teaching and Learning Methods).

எப்போதும் மாணவர்களை மையப்படுத்தி பாடத்தைக் கற்பிக்க வேண்டும்.  (Student Centered) ஆசிரியர் தன்னை மையப்படுத்தி ஒரு சர்வாதிகாரி போல கற்பிப்பது சிறந்த முறையாகாது.

ஷேக்ஸ்பியர் தம்முடைய நாடகம் ஒன்றில் பள்ளி செல்லும் குழந்தையை வர்ணிக்கும் போது புத்தகப் பையை சுமந்து கொண்டு விருப்பமின்றி நத்தைகளைப் போல பள்ளியை நோக்கி மெல்ல நகர்ந்து செல்கிறான் என்று குறிப்பிடுகின்றார். பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களை மையப்படுத்தி செயல்படுகிறவர்களாக இல்லாமல் சர்வாதிகாரிகளாக நடந்து கொள்வதால், குழந்தைகளுக்குக் கல்விக்கூடம் செல்வதென்றால் சுவையானதாக மகிழ்ச்சியானதாக இல்லாமல் சுமையானதாக, சித்தரவதைக் கூடமாக ஆகிவிடுகிறது.

கற்பித்தல் என்பது ஏதோ படித்துவிட்டு வந்து ஒப்பிப்பதல்ல. ஒரு சாதாரண ஆசிரியர் தான் படித்ததை அப்படியே  ஒப்பிப்பார்.  அதைவிட சற்று மேலான ஆசிரியர் தான் படித்ததை விளக்கிச் சொல்வார். ஒரு நல்ல ஆசிரியர் தான் சொல்லித்தருகிற செய்தியாவது பாத்திரமேற்று, பல்வேறு பாவனைகளுடன், குரலில் ஏற்ற இரக்கத்துடன் செயல் விளக்கத்துடனும் ற்பத்ததலுக்குத் துணையாகாமல் பாடங்கள், காட்சிக் கருவிகள் ஆகியவறைப் பயன்படுத்தியும் மாணவர்க்குச் மனச்சோர்வு நிகழாமல் ஆர்வத்துடன் பயிற்றுவிப்பார்.  ஒரு மிகச்சிறந்த ஆசிரியர், ஆசிரியர் பாடம் கேட்கும் மாணவர்கள் மனதை ஆட்கொண்டு விடுவார்.  (A port teacher tells. A good teacher demonstration.  The great teacher inspires)

கற்பித்தல் என்பதற்கு கல்வி உளவியளார் அளிக்கும் விளக்கம், யாதெனில், கற்றலுக்கு தூண்டவும், வழிநடத்தவும் ஏற்ற சூழ்நிலையை உருவாக்கி தருவதே ஆகும் என்பர்.  (Teaching is the process of arranging situation that stimulate and guide the learning activity in order to bring about desired chanes in the behaviour of the learners).

மாணவர்களிடையே கற்கும் திறனில் உள்ள வேறுபாட்டை புரிந்து திறன் குறைந்த மாணக்கரும் புரிந்து கொள்ளும் வகையில் கற்பித்தல் வேண்டும்.  பயமுறுத்தி அடித்து வதைத்து கற்பிப்பதால் கறலின் வேகம் தடைபடும்தேடலும், சிந்தனைக் தூண்டலும் தடைபடும்.  அச்சம், பயம் இருக்கும்பது சுதந்திரமாக சிந்திக்க முடியாது.  ஆசிரியர் மாணவர் இடைவெளி குறைக்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு மாணவனைப் பற்றியும் முழுமையாக அறிந்திருத்தல் சிறந்த ஆசிரியர்க்கு அழகு.   ஒவ்வொருவரிடம் உள்ள கற்றல்களை அடையாளங்கண்டு அவர்களை ஊக்கப்படுத்துவதும், பாராட்டுவதும் சிறப்பாம்.  கேட்ட கேள்விகளுக்கு விரைந்து பதிலளிக்கிற மாணவர்களையும் அளித்த பணிகளை விரைந்து முடிக்கிற மாணவர்களையும் சிறப்பித்து ஊக்கப்படுத்த வேண்டும். அதேசமயம் கற்றலில் பின்தங்கி இருப்போரை இகழ்வது கூடாது. அவர்களுக்கு ஏற்றபடி கற்பித்து முன்னிலைக்கு வர ஊக்கம் அளிப்பவரே, சிறந்த ஆசிரியர்.  ஒவ்வொரு மாணவன் நலனிலும் கவனம் எடுத்துக்கொண்டு பணியாற்றும் ஆசிரியர் அவர்கள் முன்னேற்றத்திற்கு பாடுபடுவது மட்டுமல்ல.  நாட்டின் முன்னேற்றதிற்கே பங்களிக்கிறார் என்பது பொருளாகும்.

ஆண்டுக்கு ஆண்டு தேர்ச்சி பெறுவோர் விழுக்காடு அதிகமாக வருவதாலேயே கல்வியின் தரம் மிகுதி என்று சொல்லிவட முடியாது.  பள்ளிப்படிப்பில் ஆயிரத்து நூறைத் தாண்டி மதிப்பெண் பெற்று வரும் மாணவருக்கு தமிழிலோ ஆங்கிலத்திலோ சுயமாக பிழையின்றி நான்குவரிகூட எழுதத்தெரியவில்லை என்றால் நமது கல்வியின் நிலை என்ன என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

மனம் பக்குவம் அடைவதற்கு முன்பே பெற்றோர்கள் LKG, UKG என்று ஆகிவிட்டது.  வளர்ந்த நாடுகளிலும் மற்ற வளரும் நாடுகளிலும் ஏழுவயது முடிந்து எட்டு வயதில்தான் பள்ளிக்கு அனுப்புகிறார்கள். முதல் வகுப்பில் சேர்க்கிறார்கள்.  நம் நாட்டில் தம்  குழந்தைகளை முந்திக் கொண்டு பள்ளியில் சேர்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பிறந்த தேதியைக்  கூட மாற்றி வயதை அதிகமாகக் காட்டிச் சேர்க்கிறார்கள்.

ஆசிரியர்கள் இந்தப் பிஞ்சுக் குழந்தைகளுக்கே வீட்டுப்பாடம் என்ற சுமக்கமுடியாத சுமையைத் தந்து மனப்பாடம் செய்து வரச் சொல்லி வதைக்கிறார்கள்.  மனனம் செய்தே படித்து வருகிற பழக்கம் கல்லூரி வரும்போது சுயமாக நான்கு வரிகளை எந்த மொழியிலும் எழுதத் தெரியவதில்லை.

– அடுத்த இதழில் தொடரும்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2005

முன்னேற்றம் தரும் முத்துக்கள்
உங்களின் சரியான எடை
எண்ணங்கள் மலரட்டும்
மனசே மனசே
நேரம் அறிந்து கணையைத் தொடுத்துவிடுங்கள்
நேர்காணல்
நிறுவனர் பக்கம்
உள்ளத்தோடு உள்ளம்
வளரும் தலைமுறைக்கு வழிகாட்டும் துணைவேந்தர்கள்
கடல் அரக்கன்
ஸ்ரீராம் நிறுவனத்தின் வெற்றிக்கதை
தன்னம்பிக்கை வளர தாய்மொழி
முன்னேற்றத்தின் மூலதனங்கள்!
நிறுவனர் நினைவுகள்
தன்னம்பிக்கை ஒன்றுதான்
விடியலை நோக்கி!
மலரும் மணமும்
இளமை எவ்வளவு
பிள்ளைகளை சான்றோர் ஆக்குவதில் பெற்றோர் பங்கு
பயம் என்ற மாயை
எதிர்மறை சூல்களை அடையாளம் காண்பது எப்படி?
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி!
இன்றைய இலக்கு
மனித வள மேம்பாடு
வெற்றி நிச்சயம்
கவிதையும் அழுகிறது
கோயில் வழிபாடு ஏன்?
திறந்த உள்ளம்