Home » Articles » பயம் என்ற மாயை

 
பயம் என்ற மாயை


மெர்வின்
Author:

மனித முன்னேற்றத்திற்கும் தடையாக இருப்பது பயம்தான்.  இதிலிருந்து விடுதலை அடைவதே உண்மையான லட்சியம் என்கிறார் தாகூர். கஷ்டங்களை சமாளிப்பதற்குரிய முதலாவது விதி என்னவென்றால் அதனைக் கண்டு பயப்படாமல் இருப்பதுதான்.

உண்மையில் கஷ்டங்கள் நம்மை ஒன்றும் செய்வதில்லை.  பயம்தான் நம்முடைய மனதை கலக்கி அறிவை மங்க வைக்கிறது.

நம்முடைய ஆற்றல்களை அதிகப்படுத்தவதற்கே கஷ்டங்கள் வருகின்றன.  உடல் பயிற்சியாய் உடலின் தசைகள் வலிமை அடைவத போல் நமக்கு வரும் கஷ்டங்களை எதிர்த்து நாம் நடத்தும் போராட்டத்தினால் உள்ளம் உறுதி அடையும்.  அதுவே செயலாற்ற வைக்கும்.

படைக்கு தலைமை தாங்கும் தலைவனே பயம் கண்டு போர்களத்தை விட்டு புறமுதுகு காட்டி ஓடிவிட்டால் படை வீரர்கள் களத்திலே எதிர்த்து நின்று போர்புரிவார்களா!

விமாத்தை ஓட்டும் விமானியின் உடலும உள்ளமும் உறுதியாக இருப்பது எப்படி அவசியமோ, அப்படியே வாழ்க்கை என்று விமாத்தைச் செலுத்தும் நாமும் வைரம் போல் ஒளி பொருந்தியதாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும்.

இதற்காக அட்லாண்டிக் சாசனம் என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கினார்கள்.  அப்பொழுது உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட் ‘மனிதர்களின் மிகப்பெரிய விரோதி பயம்.  இதிலிருந்து மனித சமாதயம் விடுவிக்கப்பட்டால் எதிர்காலம் குறித்த பாதுகாப்பு இல்லை’ என்று குறிப்பிட்டார்.

போர் மூளுவதற்கு அடிப்படைக் காரணம் உலக நாடுகளுக்கிடையே உள்ள அளவற்ற பயம்தான் என்பது ரூஸ்வெல்ட்டின் கணிப்பு.  இது வரலாற்று பூர்வமான உண்மைதான்.  இன்றைக்கும்கூட நாடுகளுக்கு இடையே உள்ள பயம், சந்தேகம்தான் அவ்வப்போது போர் சூழ்நிலைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

 

4 Comments

  1. M. J. SYED ABDULRAHMAN says:

    நல்ல கட்டுரை
    சிறிது பயம் இருப்பது நலம்
    நன்றி – சிறப்பு

  2. saleem says:

    வாழ்க்கையில் பயம் இருக்கணும் ,அனால் பயமே வாழ்க்கை ஆகி விடக்கூடாது

  3. ingurkumar says:

    BAYAM VELIYE YENGUM ILLAI . ATHU NAM MANATHUKKUL THAAN IRUKKU . AKAVE VERATTA VENDIYATHU NAM MANATHUKKUL IRUPPATAHAI THAAN

Post a Comment


 

 


January 2005

முன்னேற்றம் தரும் முத்துக்கள்
உங்களின் சரியான எடை
எண்ணங்கள் மலரட்டும்
மனசே மனசே
நேரம் அறிந்து கணையைத் தொடுத்துவிடுங்கள்
நேர்காணல்
நிறுவனர் பக்கம்
உள்ளத்தோடு உள்ளம்
வளரும் தலைமுறைக்கு வழிகாட்டும் துணைவேந்தர்கள்
கடல் அரக்கன்
ஸ்ரீராம் நிறுவனத்தின் வெற்றிக்கதை
தன்னம்பிக்கை வளர தாய்மொழி
முன்னேற்றத்தின் மூலதனங்கள்!
நிறுவனர் நினைவுகள்
தன்னம்பிக்கை ஒன்றுதான்
விடியலை நோக்கி!
மலரும் மணமும்
இளமை எவ்வளவு
பிள்ளைகளை சான்றோர் ஆக்குவதில் பெற்றோர் பங்கு
பயம் என்ற மாயை
எதிர்மறை சூல்களை அடையாளம் காண்பது எப்படி?
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி!
இன்றைய இலக்கு
மனித வள மேம்பாடு
வெற்றி நிச்சயம்
கவிதையும் அழுகிறது
கோயில் வழிபாடு ஏன்?
திறந்த உள்ளம்