![]() |
Author: மணவழகன் ஜே
|
சுய சோதனை
உங்கள் தொழலில் அல்லது வேலையில் நீங்கள் வளர்ச்சி அடைய வேண்டுமா? என்று கேட்டால் அனைரும் “ஆமாம்” என்றுதான் கூறுவார்கள். வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் உங்களைப் பற்றியும் ,உங்கள் தொழிலில் அல்லது வேலையில் உங்களுக்குள்ள “பலம்,பலவீனம்” பற்றி தெரியுமா? இதைக்கேட்டால் பெரும்பாலோர் ஓரளவு தெரியும் என்றும் கூறுவர்.
நீங்கள் வாழ்வில், தொழிலில், கல்வியில், பணியில் எதில் முன்னேற வேண்டும் என்றாலும் அதைப்பற்றிய சுய சோதனை அவசியம்.
ஏன்?
சுய பரிசோதனை செய்து கொள்வதன் முக்கியத்துவம், நாம் எங்கு இருக்கிறோம் (எந்த நிலையில்) இது போதுமா? முன்னேற்ற வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கண்டுகொள்ள உதவும். எங்கு இருக்கிறோம் என்பதைத் தெரிந்துக்கொண்டால்தான் எங்கு செல்ல வேண்டும் என்ற இலக்கினை நிர்ணயிக்க முடியும்.
பலம்
நீங்கள் ஈடுபட்டுள்ள விஷயங்களில் அதன் நேர்மறையான மாற்றத்திற்கு, முன்னேற்றத்திற்கு உதவிடும் வகையில் உள்ள உங்களது திறமைகள் உங்களது பலம்.
உதாரணமாக அழகான கையெழுத்து, நல்ல நினைவாற்றல் போன்ற திறமைகள் படிப்பில் நல்ல மதிப்பெண்பெற ஒரு மாணவனுக்கு இருக்கின்ற பலம். இதைப் போலவே பேச்சுத் திறமை எளிமையாக மக்களுடன் பழகுகிற திறமை, பலரை தெரிந்து வைத்திருத்தல் (வெகுஜனத் தொடர்பு) இன்சூரன்ஸ் கம்பெனி போன்றவற்றில் பணிபுரிவோருக்கு சிறந்த பலமாகும்.
பலவீனம்
முதலில் உங்கள் பலம் எது என்பதை அறியாமல் இருப்பதே, உங்களுடைய பலவீனம். நீங்கள் ஈடுபட்டுள்ள துறையில் உஙளது வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ள எந்த ஒரு விஷயமும் பலவீனம்தான்.
பத்தாம் வகுப்பு அல்லது பனிரெண்டாம் வகுப்பில் பயிலும் மாணவன் பொதுத்தேர்வினை சந்திக்கப் போகும் மாணவன் தனது நேரத்தினை தொலைக்காட்சி பார்த்தோ வேறு விளையாட்டுகளில் ஈடுபட்டுக் கொண்டு இருப்பதோ அவனுக்குள்ள பலவீனம். இந்த செயல்கள் அவன் பொதுத்தேர்வில் எடுக்க வேண்டிய மதிப்பெண்களைப் பாதிக்கும் என்பதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை.அவன் உழைப்பு அவனது முன்னேற்ற அறிக்கையில்தான் (Progress Report) முன்னேற்ற அறிக்கை அட்டை மாணவர்களுக்கு மட்டுமல்ல, நமக்கும் மிகவும் அவசியம்.
ஏன் புதிய தொழிலில் ஈடுபடுவதில்லை
சமீபத்தில் இளைஞர் குழுவினருடன் தன்னம்பிக்கை குறித்த பயிற்சியின் போது, ஒரு இளைஞர் தனது மீன் வளர்ப்பு தொழில் எப்படி நடைபெறுகிறது என்பதை விளக்கிக் கொண்டிருந்தார். இதுகுறித்து விவாதம் ஆரம்பிக்கும் முன்பே மற்றொரு இளைஞர் “போட்ட முதல் எப்போ டபுளாகும் (இரட்டிப்பாகும்)” என்று தெரிந்துகொள்ள ஆர்வமாக கேள்விகள் கேட்டார். ஒரு தொழிலின் ஆரம்பத்திலேயே அறிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் பல இருப்பினும் முதலீட்டினை இரட்டிப்பாக்கி லாபம் ஈட்டிவிடவேண்டும் என்பதே பெரும்பாலான இளைஞர்களின் எண்ணமாக இருக்கிறது.
இந்த உடனடி (லாட்டரி போன்ற ) லாபம் என்ற எண்ணம்தான் நம்மால் புதிய தொழில் தொடங்க இயலாத நிலைக்குக் கொண்டு செல்கிறது.
இதுவே புதிய தொழில் தொடங்க இயலாமைக்கு பெரும்பாலான இளைஞர்களுக்கு உள்ள பலவீனம்.
மேற்படி விஷயத்தை எப்படி பலமாக்கிக் கொள்வது?
ஒரு தொழில் ஆரம்பிப்பது என்பது லாபம் பெறதான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் உடனடியாக லாபம் மற்றும் அதிகமான லாபம் என்ற எண்ணம்தான் பிரச்சனைக்குரியது. நமது எச்சரிக்கை குணத்தினை புதிய தொழில் பற்றிய அனைத்து தகவல்களையும் திரட்டுவதற்காக பயன்படுத்த வேண்டும்.
உதாரணமாக மீன் வளர்ப்புத் தொழிலை ஆரம்பிப்பதாகக் கொண்டால், அந்தத்தொழில் நல்ல முறையில் நடந்து கொண்டிருக்கின்ற இடத்திற்குச் சென்று பார்வையிடுவதுட் முறையான பயிற்சியினைப் பெற்றுக்கொள்வது மேற்படிதொழிலில் லாபம் வரா விட்டாலும், கையை சுட்டுக்கொள்ளாத நிலையில் நம்மை வைத்திருக்கும் நஷ்டம் அடையாமல் ஒருதொழில் நடத்துவதே நமக்கு அனுபவம் என்ற “பலத்தினை” கொடுக்கிறது. இந்த அனுபவ பலத்தினை வைத்தக்கொண்டு அத்தொழிலில் முன்னேற வேண்டும்.
பலவீனங்களை அறிந்து அதை ஒவ்வொன்றாக நீக்கிக்கொடு வரவேண்டும். பலவீனங்களை அறிய ஒரு எளிய வழி, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 1999-ல் உங்களின் கல்வி,பொருளாதாரம், இருப்பிடம், மற்றும் உங்கள் நிலை (உதாரணமாக நீங்க உடுத்தியுள்ள உடைகள், அணிந்திருக்கும் காலனி, ஆபரணங்கள் ஆகியவகள் கூட உங்கள் முன்னேற்றத்தினை தெரிவிக்ககூடும்) என்ன என்பதை பட்டியல் இடுங்கள். 2005 -ல் எப்படி இருக்கிறீர்கள். தேய்பிறையாகவா அல்லது வளர் பிறையாகவா? பின்னடைவு ஏற்படிருந்தால்அதன் காரணங்கள் என்ன?இந்தக் காரணங்கள்தான் நமது பலவீனங்கள். அவற்றை ஒவ்வொன்றாக நீக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
பலம் அடைய!
முதலில் நல்ல இலக்கினை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். அந்த இலக்கினை அடைய திட்டமிட்டு உழையுங்கள். தினமும் உங்கள் முன்னேற்றத்தினை தன்னம்பிக்கை நாட்குறிப்பில் குறித்து வாருங்கள்.
1. நமது வளர்ச்சியினை பார்ப்பதே நமக்கு மிகப்பெரும் பலத்தினை தரும்.
2. நீங்கள் நிர்ணயித்துள்ள இலக்கு, அதனைச் சார்ந்த துறை குறித்த நல்ல நூல்களை படியுங்கள்.
3. முன்னேற்றத்தினை துரிதப்படுத்திக்கொள்ள அத்தொழில் சார்ந்த பயிலரங்குகளில் கலந்து கொள்ளுங்கள்.
4. உங்கள் துறை குறித்த பதுப்புது தகவல்களை தெரிந்துகொண்ட விஷயங்களை நடைமுறைப்படுத்துங்கள்.
5. தெரிந்துகொண்ட விஷயங்களை நடைமுறைப்படுத்துங்கள்.
6. வளமான வாய்ப்புகள் கிடைத்ததும் பயன்படுத்திக்கொள்ளுங்கள். இது உங்கள் பலத்தினை அதிகரிக்கும்! ‘பலமே வாழ்வு’ என்ற விவேகானந்தரின் பொன்மொழி உங்கள் வெற்றிக்கனிகளுக்கான வித்தாகும்.

January 2005




























No comments
Be the first one to leave a comment.