Home » Articles » மனசே மனசே

 
மனசே மனசே


செலின் சி.ஆர்
Author:

அவன் முகத்தைப் பார்த்து மறுக்க முடியல, சரின்னு சொன்னேன்.  இப்ப நல்லா அனுபவிக்கிறேன்.. இந்த வார்த்தைகளை சமீபத்தில் எத்தனைமுறை உச்சரித்து இருக்கிறீர்கள் என்பதைக் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். ஏனென்றால் , Assertive Person ஆக மாற முதலில் நீங்கள் செய்ய வேண்டியது இதிலிருந்துதான் துவங்குகிறது.  அது என்ன தெரியுமா?

“No…” சொல்லும் கலைதான்.

“Don’t say “yes” when you want to say “No…” இந்த பிரபலமான வரியை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். நூற்றுக்கு நூறு சத்தியமான,மிக மிக முக்கியமான வார்த்தைகள் இவை. யோசித்துப் பாருங்கள்.  பெரும்பாலான  சமயங்களில் உறவுகளிலும், அலுவலக் சூழலிலும் கசப்பான நிகழ்வுகளை நாம் சந்திக்க நேரிடுவது “மறுத்தலை” மறக்கும் போதுதான் என்பது தெளிவாய்  புரியும்.

ஆசையாய் கொடுக்கிறாங்க.  எப்படி எனக்கு ஒத்துக்காதுன்னு சொல்லமுடியும்?  அதான் சில்லி சிக்கன் சாப்பிட்டேன். இப்படி வயிற்றுலி உயிரை வாங்குமனு நா நினைக்கலியே…”

என்பது போன்ற சின்ன விஷயங்களுக்கும், அப்பா, அம்மா முகத்துக்காகத்தான் அந்த வரனை ஒத்துக்கிடேன்” அத்தனைபேர் முன்னால எப்படி வேண்டாம்னு மறுக்க முடியும்.  ஆனா இப்ப தினம் தினம் செத்துப்பிழைகிறப்பதான் யோசிக்கிறேன். அப்படியே தைரியமா “நோ” சொல்லிட்டு எல்லா விதத்திலேயும் எனக்கு பொருத்தமாயிருந்த ரகுவை கல்யாணம செஞ்சு வைக்க சொல்லியிக்கலாமேனு..”

என்பன போன்ற வாழ்வின் அதிமுக்கியமான விஷயங்களில் ஏற்படும் சிக்கல்களுக்கும் காரணம் பிடிக்காத விஷயங்களை மறுக்கும் தைரியமின்மைதான். அடுத்தவர் மனம் கஷ்டப்படுமா, சே.. சுத்தப் பட்டிக்காடு என்று என்னை நினைத்துக் கொள்வார்களோ, திமிர்பிடித்தவர் என்று நினைப்பார்களோ… என்றெல்லாம் யோசிப்பதற்கு முன்னால்,

உண்மையிலேயே இந்த செயல் என் மனதிற்குப் பிடித்திருக்கிறதா?

இவர்களுக்காக  “சரி” சொன்னால், பின்னாளில் என் நிம்மதி பாதிக்கப்படுமா?

ஒருவேளை வேண்டாம் என்று நான் மறுத்தால், அது என்னை பெரிய பிரச்சினைகளிலிருந்து காப்பாற்றுமா?

மற்றவர்களுக்கு எந்தப் பாதிப்பும் என்னால் இவ்விஷயத்தை மறுக்க முடியுமா?

ஒருவேளை இவர்களுக்காக இந்த விஷயத்தை நான் ஒத்துக்கொண்டாலும், முழு மனதோடு அக்காரியத்தில் ஈடுபடுவேனா?

பிற்காலத்தில் சே.. அன்றைக்கே மறுத்திருக்கலாமே என்று நான் யோசிக நேரிடுமா?

எனது ஒப்புதலுக்குப்பிறகு அச்செயலில் ஈடுபடும்போது எவ்வித சிக்கல்களுமின்றி நான் முழுமனதோடு வெற்றுபுமின்றி, புலம்புல்களுமின்றி நான் முழுமனதோடு ஈடுபடுவேனா, அல்லது அந்தக் காரியத்தையே சித்தது விடுமளவிற்கு என் விருப்பமின்மை தலைதூக்குமா?

இந்தக் கேள்விகளை பலமுறை உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.  சரியான பதில் இகடைக்கும்பவரை விடாதீகள். அந்தப் பதில்கள் சாதகமானவையாக இல்லாத பட்சத்தில் எவ்வித குறுகுறுப்பும், தயக்கமுமின்றி தைரியமாய் மறுத்துவிடுங்கள்.  உங்கள்முடிவில் நீங்கள் மற்றவர்களின் மனம் புண்படும்படியாகத்தான் மறுக்க வேண்டும் என்று எந்த அவசியமுமில்லை. இது முழுக்க முழுக்க என் நான் கருதி நான் எடுக்கும் முடிவுதானேயொழிய எக்காரணத்தைக்கொண்டும் உங்கள் மனதைப் புண்படுத்த அல்ல.. என்று எதிராளிக்குத் தெளிபடுத்துங்கள். இந்த  வேண்டுகோளை ஏற்றுக்கொள்ள நேர்ந்தால், நிச்சயம் பிரச்சினையும், அசௌகரியமும்தான் விளையும் என்று உங்கள் மனதிற்குப்படும் விஷயங்களை,தயவு தாட்சண்யமின்றி மறுத்தாலே நீங்கள் வலியுறுத்தும் தன்மையை 50% அடைந்து விட்டீர்கள் என்றுதான் அர்த்தம்.

ஒருவேளை நீங்கள் மறுக்கும்போது உறவுகளில் சின்ன சலசலப்பு ஏற்பட்டால் கூட அது அத்தோடு மறைந்துவிடுமேயொழிய உறவே முறிந்த போகும் அளவிற்கு விரிசல் ஏற்படாது. முடியாத காரியத்தை ஒப்புக்கொண்டு, அதை முழுவதும் செய்யவும் முடியாமல், அரைகுறையாய், வேண்டாவெறுப்பாய் செய்வதால் கிடைக்கும் கெட்டபெயரோ,பாதிப்போ நிச்சயமாய் நீங்கள் மறுக்கும்போது கிடைக்காது என்பதென்னவோ உண்மை.

இந்த ஒரு முயற்சி மட்டும் போதுமா?

ம்ஹீம்.. உங்களது தேவைகளை வேண்டுகோளை தயக்கமின்றி, உறுதியாக கேட்கும் திறன்….

ஒரு சிறிய உண்மைச் சம்பவத்தை உதாரணம் சொன்னால் உங்களுக்கு எளிதாகப் புரியும் என்றுநினைத்திகறேன்.ப இரபலமாகாத, இப்போதுதான் துவங்கியுள்ள ஆனால் ஓரளவு பெரியகம்பெனி ஒன்றின் மார்க்கெட்டிங் துறையில் வேலைபார்க்கும் ஒருவர் சமீபத்தில் என்னைச் சந்தித்தார்.  அவரது பிரச்சினை இதுதான்.  அடிக்கடி வெளியூர் போகவேண்டியவேலை அவருடையது.  அப்படி போவதற்கு முன் குறிப்பிட்ட தொகையைக் கொடுப்பார்கள்.  தங்குவதற்கும், உணவு மற்றும் வழிசெலவிற்கு.

அப்படிக் கொடுக்கும்போது ஒரு விஷயத்தை மறந்துவிடுவார்கள்.  சென்னையிலிருந்து கோயம்புத்தூர் வந்துபோக எவ்வளவு கொடுப்பார்களோ அதே அளவுதான் மும்பை சென்று வரவும்.  போக்குவரத்திற்கான டிக்கெட்தான் ஏற்கனவே எடுத்துக் கொடுத்தாகிவிட்டதே, அது போகத்தானே இந்த பணம் என்ற நினைப்பு அவர்களுக்கு.   ஆனால்,  இந்த நபரோ திண்டாடிப்போனார்.

சாப்பாடு செலவு, தங்குமிடத்திற்கான வாடகை எல்லாம் ஊருக்கு ஊர் வித்தியாசம் க ஒடுத்த பணத்தைவிட அதிகமாய் ஆகும் செவலை தன் கைக்காசைப் போட்டுசமாளித்துப் பார்த்தார். அதுவும் எத்தனை நாட்களுக்கு செய்ய முடியும்?  முக்கியமான மீட்டிங் சமயங்களில் இப்பிரச்சினையை சொல்ல வேண்டும் என்று நினைப்பார்.  ஆனால், கூச்சமாய், தயக்கமாயிருக்கும்.  சீப்பாகத் தன்னை நினைத்து விடுவார்களோ, இப்படி கேட்பது தன் மீது ஒரு மட்டமான அபிப்ராயத்தை உருவாகி விடுமோ, இது விரைவாய், வெகு வேகமாய் வளரக்கூடிய கம்பெனி.  இங்கு வேலை செய்யும் அல்லது பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பைத் தவறவிட்டு விடுவோமோ என்றெல்லாம் யோசித்தார்.  ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா…?  என்று மேலதிகாரி கேட்கும்போது சிரித்தபடி

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2005

முன்னேற்றம் தரும் முத்துக்கள்
உங்களின் சரியான எடை
எண்ணங்கள் மலரட்டும்
மனசே மனசே
நேரம் அறிந்து கணையைத் தொடுத்துவிடுங்கள்
நேர்காணல்
நிறுவனர் பக்கம்
உள்ளத்தோடு உள்ளம்
வளரும் தலைமுறைக்கு வழிகாட்டும் துணைவேந்தர்கள்
கடல் அரக்கன்
ஸ்ரீராம் நிறுவனத்தின் வெற்றிக்கதை
தன்னம்பிக்கை வளர தாய்மொழி
முன்னேற்றத்தின் மூலதனங்கள்!
நிறுவனர் நினைவுகள்
தன்னம்பிக்கை ஒன்றுதான்
விடியலை நோக்கி!
மலரும் மணமும்
இளமை எவ்வளவு
பிள்ளைகளை சான்றோர் ஆக்குவதில் பெற்றோர் பங்கு
பயம் என்ற மாயை
எதிர்மறை சூல்களை அடையாளம் காண்பது எப்படி?
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி!
இன்றைய இலக்கு
மனித வள மேம்பாடு
வெற்றி நிச்சயம்
கவிதையும் அழுகிறது
கோயில் வழிபாடு ஏன்?
திறந்த உள்ளம்