Home » Editorial » உள்ளத்தோடு உள்ளம்

 
உள்ளத்தோடு உள்ளம்


admin
Author:

புத்தாண்டு பொங்கல் திருநாளில் திட்டமிட்டுச் செயலாற்றுவோம்…

“காலம் சுழன்று கொண்டே இருக்கின்றது.  ஆண்டுகள் உருண்டோடுகின்றன.  நேரம் பறந்து கொண்டு இருக்கிறது.

கடந்த ஓராண்டு என்னென்ன செய்ய நினைத்தோம். அதில் எதை எதைச்செய்து முடித்தோம்.  எதை எதை செய்ய முடியாமல் விட்டு விட்டோம் என்று எண்ணிப்பாருங்கள்.  ஏன் செய்ய முடியவில்லை என்று எண்ணிப்பாருங்கள்.

இந்த வகையில் எண்ணிப் பார்ப்பது இந்த ஆண்டுத் திட்டம் தீட்டிச் செயல்படுவதற்குப் பெரிதும் உதவியாக இருக்கும்.

பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வழி என்ன?

தொழிலில், தோட்டத்தில், வீட்டில் செய்ய வேண்டிய மாறுதல்கள் மராமத்துக்கள் என்ன?

குடும்பத்தில் குழந்தைகளுக்குச் செய்ய வேண்டிய செயல்கள் என்னென்ன?

பொதுக் காரியங்களில் நாம் எந்த அளவு பங்கு கொள்ள வேண்டும்?

நாம் எண்ணுவதும் பேசுவதும் செய்வதும் சரியானதாக இருக்கிறதா?  என்று நம்மை நாமே சுய சோதனை செய்தல்.

இந்த வகையில் உங்கள் சிந்தனையைச் செலுத்துங்கள் திட்டமிடுங்கள் – செயல்படுங்கள்.”

மேற்கண்ட கருத்துக்களை சனவரி 1990 தன்னம்பிக்கை இதழின் வாயிலாக நிறுவனர் அய்யா நமக்கு வழங்கி சென்றிருக்கிறார்கள்.

இன்றைய புத்தாண்டு பொங்கள் திருநாளில் தன்னம்பிக்கை மாத இதழுக்காக, அதன் கருத்துக்களை முன்னெடுத்துச் செல்வதற்காக கடந்த ஆண்டில் என்னென்ன செய்தோம் என்பதை எண்ணிப் பாருங்கள்.

டாக்டர் சிவலிங்கம் என்னும் தன்னம்பிக்கையாளர் ஐந்து பேருக்கு தன் செலவில ஆண்டு சந்தா செலுத்தியதுடன் பல நண்பர்களை சந்தா செலுத்த வைத்தார்கள்.

ஒவ்வொரு தன்னம்பிக்கை வாகரும் ஓரிருரை சந்தாரராக்கி தன்னம்பிக்கை வாயிலாக தனிமனிதன் முன்னேற்றத்திற்கு வழிசெய்தால் சமுதாய முன்னேற்றம் வளர்ச்சிப் பெற்று நாட்டிலும் வீட்டிலும் இன்பம் பொங்கும்.

இவ்வாண்டில் ஒரு திட்டத்தை தீட்டுங்கள்.  திட்டம் தீட்டுவது செயல்பட வழிவகுக்கும்.

(க. கலைக்கண்ணன்)

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2005

முன்னேற்றம் தரும் முத்துக்கள்
உங்களின் சரியான எடை
எண்ணங்கள் மலரட்டும்
மனசே மனசே
நேரம் அறிந்து கணையைத் தொடுத்துவிடுங்கள்
நேர்காணல்
நிறுவனர் பக்கம்
உள்ளத்தோடு உள்ளம்
வளரும் தலைமுறைக்கு வழிகாட்டும் துணைவேந்தர்கள்
கடல் அரக்கன்
ஸ்ரீராம் நிறுவனத்தின் வெற்றிக்கதை
தன்னம்பிக்கை வளர தாய்மொழி
முன்னேற்றத்தின் மூலதனங்கள்!
நிறுவனர் நினைவுகள்
தன்னம்பிக்கை ஒன்றுதான்
விடியலை நோக்கி!
மலரும் மணமும்
இளமை எவ்வளவு
பிள்ளைகளை சான்றோர் ஆக்குவதில் பெற்றோர் பங்கு
பயம் என்ற மாயை
எதிர்மறை சூல்களை அடையாளம் காண்பது எப்படி?
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி!
இன்றைய இலக்கு
மனித வள மேம்பாடு
வெற்றி நிச்சயம்
கவிதையும் அழுகிறது
கோயில் வழிபாடு ஏன்?
திறந்த உள்ளம்