Home » Articles » எண்ணத்தில் முதன்மை கொள்வோம்

 
எண்ணத்தில் முதன்மை கொள்வோம்


கவிதாசன்
Author:

– சிந்தனைக் கவிஞர் கவிதாசன்

வண்ணம் குழம்பினால் ஓவியம்
எண்ணம் தெளிந்தால் காவியம்
புத்தும்புது எண்ணங்கள் மலர்ந்தால்
பூஞ்சோலையாகும் நமது வாழ்க்கை!

வாழ்க்கை என்பது அன்பில் தொடங்கி நம்பிக்கையில் தொடரும். ஓர் அதிசயப்பயணம். மன அரங்கில் மலரும் எண்ணங்களின் வலிமையைப் பொறுத்தே உங்களுடைய செயல்கள் எழுச்சி கொள்கின்றன. எழுச்சிமிகு செயல்களே வெற்றிக் கனிகளைப் பறிக்கும் கரங்கள். அத்துடன் கனவுகளே எண்ணங்களைக் கருத்தரிக்கின்றன. புத்தம்புதுக் கனவுகள் மனதில் சூழ்கொள்ளும் வித்த்தில் மனதைத் தூய்மையாகவும் எதிர்மறை எண்ணங்களின் சுவடுகள் இல்லாதவாறும் வைத்துக்கொள்ள வேண்டும். மேலும் யோகாசனம், தியானம் போன்ற சுய செம்மைப்பாட்டுப் பயிற்சிகளால் எப்பொழுதும் மனதை அமைதியாகவும் தெளிவாகவும் வைத்துக்கொள்ள இயலும். மனம் மகிழ்ச்சியுடனும் உத்வேகத்துடனும் திகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும். ஏனென்றால் மனநிலையைப் பொருத்தே சொற்களும், செயல்களும் அமைகின்றன. இதைத்தான் “மனம் போல் வாழ்வு” என்றனர் நமது முன்னோர்கள். ஆகவே வெற்றி பெறுவதற்கு முதலில் உங்களுடைய மனதைப் பக்குவப்படுத்துங்கள். மனம் தெளிவில்லாமல் குழப்பத்தில் இருக்குமானால் அச்சமும் பயமும் அதில் சூழ்கொள்ளும். ஆகவே மனதை தெளிவாகவும், தன்னம்பிக்கையுடனும் வைத்துக்கொள்வது உங்களுடைய வெற்றிக்கு முதல்படியாகும்.

சாதனைகளின் அணிவகுப்பு

மலர்ந்த எண்ணங்களில் வெறிக் கனிவளர்கும் உத்வேகத்தோடு செயல்படும் நீங்கள் ஒன்றை உணர்ந்து கொள்ள வேண்டும். அதாவது வெற்றி என்பது உங்களுடைய உழைப்பிற்கு கிடைக்கும் முதல் மரியாதை. சாதனைகளே உங்கள் வெற்றிப் பாதையில் உள்ள மைல்கற்கள். உங்களுடைய சாதனைகளின் அணிவகுப்பை ஒவ்வொரு நாளும் உள்ளத்தில் நிகழ்த்துங்கள். கடந்த காலத்தில் நீங்கள் அடைந்த வெற்றியை எண்ணிப் பார்க்கும் போது மனதில் உற்சாகமும், மகிழ்ச்சியும் தவழும். வெற்றியைவிட, வெற்றியை எண்ணிப்பார்க்கும் உணர்வுகளே அதிகப்படியான மகிழ்ச்சியைக் கொடுக்கின்றன. மேலும் வெற்றி பெறும் பழக்கமுடையவராக நீங்கள் திகழ்வற்கு இத்தகைய ஒத்திகை உரமாகவும் ஊக்குவிப்பாகவும் அமையும். மேலும் வெற்றி பெறுவதை உங்களுடைய பழக்கமாக(Winning Habit) மாற்றிக் கொள்ளுங்கள். சிறுசிறு வெற்றியும் மனதில் மகிழ்ச்சியைத் தூவும் போது, பெரிய வெற்றிக்கு மனம் வேட்கை கொள்கின்றது.

மேலும் கடந்த காலத் தோல்விகளில் மனம் மூழ்கும் போது, உங்களின் ஆற்றலும் சக்தியும் குறைந்து விடுகின்றது. அப்படியென்றால், தோல்விகளைப் பற்றி எண்ணக்கூடாது என்று அர்த்தம் அல்ல, தோல்வியை நினைத்துக் கவலைப்படாமல், ஒரு ஆராய்ச்சி மாணவனைப் போல் கவனமாக உங்களுடைய தோல்விகளை ஆராயத் தொடங்க வேண்டும். கவலைப்படுவதற்கும், ஆராய்ந்து தோல்விக்கான காரணங்களைக் கண்டறிவதற்கும் உள்ள வேறுபாட்டை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள் என நம்புகின்றேன்.

எண்ணமே வெற்றி

உங்களுடைய மனம் முழுவதும் ஆக்க சிந்தனைகள் பூத்துக் குலுங்கட்டும். தோல்விகளைப் பற்றி எண்ணுவதையும், அச்சப்படுவதையும் தவிர்த்து நடந்து விடுமோ, இது இப்படி நடந்து விடுமோ? என்று பயப்படுவதை மனதிலிருந்து அப்புறப்படுத்திவிட்டு “எது நடந்தாலும் நடக்கட்டும் அதை ஏணியாகவோ, பாடமாகவோ ஏற்றுக்கொண்டு, தொடர்ந்து முயல்வேன்ம என்ற தன்னம்பிக்கையுடன் எதையும் அணுக்க் கற்றுக் கொள்ளுங்கள். “வெற்றி பெறுவேன்ம என்ற எண்ணமே வெற்றி பெறுவதற்கான வலிமையையும்,, தன்னனம்பிக்கையையும் கொடுப்பதுடன், வெல்வதற்கான சூழ்நிலையையும் உருவாக்கிக் கொடுக்கின்றது.

முன்னேற்றச் சிந்தனைகள்

முன்னேற்றத்திற்கான சிந்தனைகளை எப்பொழுதும் நெஞ்சில் வளர்த்துக் கொண்டே இருங்கள். ஆக்கப் பூர்வமான எதையும் சிந்திக்காமல் விட்டால் மனதில் இயற்கையாகவே எதிர்மறை எண்ணங்கள் தோன்றும். ஆகவே எதிர்மறை எண்ணங்கள் தோன்றுவதைத் தவிர்க்க, மனதில் எப்பொழுதும் வெற்றிச் சிந்தனைகளை உருவாக்கிக்கொண்டே இருங்கள். எதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் என்றால், உங்களுடைய எதிர்காலத் திட்டங்கள், உங்களுடைய தொழிலில் அல்லது பணியில் நீங்கள் அடைய விரும்பும் இலக்கு. குடும்ப வாழ்க்கையில் அடைய விரும்பும் இலக்கு என்று எதையும் விசாலமாகவும், ஆழமாகவும் சிந்தித்துக் கொண்டே இருங்கள். அவ்வாறு சிந்திக்கும் போது “இது சாத்தியமா? என்று எண்ணாமல், உங்களுடைய ஆற்றலுக்கும், சக்திக்கும் உட்பட்ட எதுவும் சாத்தியமே என்ற உறுதியுடன் எண்ணுங்கள். முடியும் என்று உளமாற நினைத்து, முயலும்போது எதையும் உங்களால் சாதிக்க முடியும். அதாவது முடியும் என்ற எண்ணமே எதையும் முடிக்கும் சக்தியையும் ஆற்றலையும் நமக்குக் கொடுக்கின்றது.

இனிமையானவராகுங்கள்.

உங்களைப்பற்றி நீங்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? என்பதும் மற்றவர்களைப் பற்றி என்ன எண்ணம் கொண்டிருக்கிறீர்கள் என்பதும் தான் உங்களுடைய எண்ணங்களை வடிவமைக்கின்றது. அதாவது, உங்களைப் பறி உயர்வாகவும் மற்றவர்களைப் பற்றி மதிப்பாகவும் நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தால் மனதில் ஆக்க சிந்தனையும் விருப்பு உணர்வும் உலா வருகின்றது. உங்களுக்கு இருக்கும் தனித்தன்மையையும் திறமைகளையும் எண்ணி மகிழுங்கள். அவ்வாறு செய்யும் போது, மற்றவர்களுக்கும் ஏதவாவது சிறப்புப் பண்புகளும் தனித் திறமைகளும் இருக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள். மனம் சமநிலையில் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் நாம் மற்றவர்களின் திறமையையும் போற்ற வேண்டும் என்கிறேன். உங்களுக்கு நீங்கள் சிறந்தவராகத் திகழும் போதுதான மற்றவர்களுக்கும் இனிமையானவர்களாக இருப்பீர்கள்.

வெற்றி என்பது என்ன?

வெற்றி என்பது என்ன? என்று சிந்தித்துப் பாருங்கள். வெற்றி என்பதை ஒவ்வொருவரும் ஒவ்ஒரு விதமாகப்பொருள் கொள்கின்றார்கள். பெரும்பாலும், பணம் சேரப்பதைத் தான் வெற்றி என்று நினைக்கிறார்கள். சிலர் புகழ் பெறுவதை வெற்றி என்று எண்ணுகிறார்கள். இன்னும் சிலர்பெரும்பதவியை பிடிப்பதை வெற்றி என்று முயல்கின்றார்கள். இன்னும் சிலர் பெரும் பதவியை பிடிப்பதை வெற்றி என்று முயல்கின்றார்கள். பள்ளி மாணவன், முதல் வகுப்பில் தேச்சி பெறுவதை வெற்றி என்று கருதுகிறான் இவ்வாறு வெற்றி என்பது, அவரவர்களின் மனதையும் தேர்யையும் பொருத்து பொருள் கொள்கின்றார்களே தவிர, வெற்றி என்பது இதுதன் என்று யாராலும் உறுதியாக அறுயிட்டுச் சொல்ல முடியாது. சுருக்கமாச் சொன்னால், விரும்பியதை அடைவது வெற்றி, அடைந்ததை விரும்புவது மகிழ்ச்சி.

மனக் கதவுகளை திறங்கள்

மனக்கதவுகளை மூடிவைத்து விட்டு, முன்னேற்றக் காற்றை உங்களால் சுவாசிக்க முடியாது. ஆகவே வெற்றியின் விழுதுகள் நீள்வதற்கு ஏதுவாக உங்களுடைய மனக்கதவுகளை எப்பொழுதும் திறந்து வையுங்கள். மனதில் புதுப் புதுக் கருத்துக்கள் நுழைந்தால்தான் புதுப்புதுச் சிந்தனைகள் தோன்றும். ஆக்கப் பூர்வமான சிந்தனைகள்தான் படைப்பாற்றலாக உருவெடுக்கின்றன. படைப்பாற்றல் மூலமாக உங்களை வெளிஉலகிற்கு உணர்த்த முடியும். உங்களுடைய உள்ளத்தில் பதிந்துள்ள ஆற்றல்,சமுதாயத்திற்கு நன்மை தரும் செயல்களாக மலர வேண்டும். அப்பொழுதுதான் உங்களுடைய வாழ்க்கை எதிர்காலத்திற்கு வரலாறாக மாறும். ஆம்! வரலாறுகளைப் படிப்பதோடு, வரலாறுகளையும் படைக்க வேண்டும். பிறந்துள்ளது வெற்றி பெறவே தவிர தோல்விக்கான காரணங்களைத் தொகுத்துத் தருவதற்கல்ல. ஆகவே புத்துணர்சசியோடும் பொறுப்புணர்ச்சியோடும் செயல்படுங்கள். உங்களால் நிச்சயம் சாதிக்க முடியும்.

உள்ளங்கையில்
உலகம் சுழல
உள்ளத்தில் தன்னம்பிக்கைச்
சுடரினை ஏற்றிடு தோழா!

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 2004

நீங்களும் எழுத்தாளராகலாம்
அறிவும் வெற்றியும்
மகிழ்ச்சி மிக சுலபம்
எண்ணத்தில் முதன்மை கொள்வோம்
தேர்வு
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி
வளரும் தலைமுறைக்கு வழிகாட்டி
உள்ளத்தோடு உள்ளம்