Home » Articles » எங்கும் வெற்றி எதிலும் வெற்றி

 
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி


இராமநாதன் கோ
Author:

– டாக்டர் ஜி இராமநாதன்

சாத்தியமா?

காலை இழந்தவர் நாட்டியமாடுகிறார்!

அழகே இல்லாதவர் கதாநாயகனாக இருக்கிறார்!

செவிடானவர் இசைமேதையானார்!

குருடானவர் கதாசிரியர் ஆனார்!

திக்கு வாயால் பேசமுடியாதவர் சிறந்த பேச்சாளராக இருக்கிறார்.

குள்ளமானவர் உயர்ந்த தலைவராக இருக்கிறார்!

வறுமையில் வாடியவர் பெரும் செல்வந்தராக புரள்கிறார்.

இதையெல்லாம் பார்த்தால் ஒருபுறம் ஆச்சரியம். மறுபுறம் இது கூட சாத்தியமா? என்ற கேள்வி.

ஆனால் அத்தனையும் உண்மை.

அதெப்படி?

விசயத்திற்கு வருமுன் ஒரு உண்மையைப் பார்ப்போம்.

நியூட்டன்

அவன், தாயின் வயிற்றில் கருவாக இருந்தபோது தந்தையை இழந்தான். அவனுடைய தாய் இரண்டாவது கணவரை திருமணம் செய்தபோது பாட்டியிடம் தள்ளப்பட்டான். தன்னுடைய பசியைப் போக்க தோட்டத்தில் வேலை செய்து பாட்டிக்கு உதவினான். இதனால் இளம் வயதிலேயே அவனுக்கு தாழ்வு மனப்பான்மை வந்து விட்டது.

யாராவது புதியவர்களைப் பார்த்தால் கூனிக்குறுகி ஒளிந்துகொள்வான்.

யாரிடமாவது பேசுவதானால் தயங்கி, மென்று விழுங்கி, நடுங்கி, சொல்ல வந்ததை சொல்ல முடியாமல் வார்த்தைகளை விழுங்கி விடுவான்.

இதனால் உடன்படித்தவர்களெல்லாம் ‘சோமாறி’ என கிண்டலடித்தனர். ஒருநாள் அப்பள்ளியிலேயே பெரிய உருவம் படைத்த ஆணவ மாணவன் அவனை தோளில்தட்டி கிண்டலடித்த போது, யாருமே எதிர்பார்க்காத விதத்தில் அச்சிறுவன் ஆணவமான பயில்வானை அலாக்கா தூக்கி கீழே தள்ளினான்.

அன்றுஉ முதல் அவ்வூரே அச்சிறுவனை உயர்வாகப் பார்த்து. அதைவிட அப்போதுதான் அச்சிறுவனுக்கு தன்மீது சுயமதிப்பு வந்தது.

அதன் விளைவாக புவி ஈர்ப்பு சக்தி, பொருளின் அசைவுகள்போன்ற எண்ணற்ற அரிய கண்டுகிடிப்புகளைக் கண்டுபிடிக்க முடிந்தது. அவர்தான் சர் ஐசக் நியூட்டன். எல்லோருக்கும் அப்படியொரு சந்தர்ப்பம் வந்துதான் சுயமதிப்பு வரவேண்டியதில்லை.

சுயமதிப்பில்லாதவர்கள் என்ன நினைக்கிறார்கள்?

“தன் பெற்றோர்கள் தகுதிகுறைந்தவர்கள். தான் ஒரு ஏழ்மையானவன்தான் ஒரு அறவருப்பானவன். தன்னை நண்பர்கள்மதிப்பதில்லை; தன்னுடைய உடை பொருத்தமானாக இல்லை; உறவினர்கள் யார் இருக்கிறார்கள்? தன்னுடைய நிறம் கவரிச்சியில்லை; பேச்சு தெளிவாக இல்லை; தனக்கு அறிவு குறைவுதான்; வாய்ப்புகளே கிடைப்பதில்லை; எந்த தொழிலுபும் தோல்வி; தன் குடும்பம் தாழ்வானது வருமானம் போதாது; சூழ்நிலைகள் சரியில்லை; செய்த்தெல்லாம் தவறாகிவிட்டது. தன்னைப்பற்றி பிறர் என்ன நினைப்பார்கள்? தான் பலவீனமானவன்; எதிர்காலமே சூன்யம்தான்”.

இப்படியெல்லாம் மனதில் எண்ணி நேரத்தைக் கழிப்பவர்களால் எதைச் சாதிக்க முடியும்?

இவர்களுக்கு எப்படி இந்த மனநிலை உண்டாயிற்று?

பெற்றோர்களால், ஆசிரியர்களால்,உறவினர்களால், நண்பர்களால், சமூகத்தினரால், ‘நீ தாழ்ந்தவன்’ என்று முத்திரை குத்தப்பட்டாலும், அவர்களுடைய மனதில் தாழ்வானவன் என்று ஏற்றுக் கொண்டதால் உண்டான விளைவே இந்த மந்தநிலை.

எப்படி போக்குவது?

ஒரு கம்பியூட்டரை எடுத்துக்கொண்டால் அதில் என்னென்ன புரோகிராம்களை புகுத்தினோமோ அதற்கேற்பவே செயல்படும். நம் மனநிலையும் அப்படித்தான். சுய மதிப்பில்லாதவர்கள், தங்களுடைய மனநிலையிலுள்ள புரோகிராம்களை மாற்றிப் புகித்தினால் அவர்களும் தன்னம்பிக்கை பெற்றுசாதனை படைக்க முடியும்.அதெப்படி? “நீங்கள் திறமையானவர்தான். இதுவரை சாதிக்காமலிருந்தாலும் இனிமேல் நிச்சயமாக முடியும். எதிர்காலம் உங்களுக்காக வாய்ப்புகளை அள்ளித்தரக் காத்திருக்கிறது. என்ற நம்பிக்கையை மனதில் புகுத்தி அன்றாட செயல்பாடுகளில் மாற்றங்களை தொடங்குங்கள்.

நீங்கள் செய்வதுசரியாக இருந்தும் உங்களையாராவது குறை சொன்னால், அதற்காக உங்கள் செயல்முறைகளை மாற்றாதீர்கள்.

கூட்டமான மனிதர்களைச் சந்திக வேண்டிய சந்தர்ப்பம் வந்தால் தயங்கி ஒதுங்காமல் நேரடியாக எதிர்கொள்ளங்கள்.

பிறர் திறமையாகச் செயல்பட்டால் உற்சாகமாக பாராட்டுங்கள்.

நீங்கள் ஏதாவது தவறு செய்துவிட்டால் சம்பந்தப்பட்டவரிடம் நீங்களே வழிய சென்று ஒப்புக்கொள்ளுங்கள். முடிந்தால் உங்கள் தவறை வெளிப்படையாக நண்பர்களிடம் சொல்லி கலகலப்பாகச் சிரியுங்கள்.

தவறை மறைக்க பொய்க்காரணங்களை ஒருபோதும் சொல்லாதீர்கள்.

உங்களைப் பற்றிய உங்கள் பாரம்பரியம் பற்றிய பெருமைகளைப் பிறரிடம் பேசாதீர்கள்.

பிறருடைய குறைகளைக் கேலி செய்யாதீர்கள்.

எந்த வேலையை எடுத்தாலும் அதை முழுமையாகச் செய்து முடியுங்கள்.

உங்களுடைய சாதனைகளைப் பிறரிடம் பெருமையாகப்பேசாதீர்கள். அப்படி பேசுகிற வாய்ப்பு ஏற்பட்டாலும் மிகைப்படுத்தாமல் பேசுங்கள்.

ஏதாவது புதிய ஒன்றை செய்ய முனையும்போது, சம்பந்தமில்லாதவர்களிடமெல்லாம் ஆலோசனை கேட்காதீர்கள். (தேவைப்படுகிற ஓரிருவரைத்தவிர)

ஒரு விழாவிற்குத் தாமாகச் செல்லும்போது எல்லோரும் உங்களையே பார்ப்பதாக நினைக்காதீர்கள்.

பலர் முன்னிலையில் உங்களிடம் ஒரு கேள்வியைக் கேட்டால், உங்களுக்குப் பதில் தெரிந்தால், தயக்கமில்லாமல் பதில் சொல்லுங்கள்.

பிறரிடம் விவாதம் செய்யும்சூழ்நிலை ஏற்பட்டால், சத்தமிட்டு பேசாமல் அமைதியாக நிதானமாக உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.

அவ்வப்போது தனிமை கிடைத்தால் கண்ணை மூடி, உடலின் தலை முதல் கால் வரை தளர்வு செய்யுங்கள்.

உங்களிடம் இல்லாத்தை இருப்பதை போலபோலியாகப் பேசுவதையோ செயல்படுவதையோ செய்யாதீர்கள்.

பிறர் உங்களைவிட உயர்வான பொருட்களை வைத்திருப்பதைப் பார்த்து உங்களை தாழ்வாக எண்ணுவதோ, அதற்காக ஏங்குவதோ செய்யாதீர்கள்.

பிறருடைய உயர்வுகளை நினைத்து பொறாமைப் படாதீர்கள்.

சுயமதிப்பும் முன்னேற்றமும் இனி உங்களுக்குத்தான்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 2004

நீங்களும் எழுத்தாளராகலாம்
அறிவும் வெற்றியும்
மகிழ்ச்சி மிக சுலபம்
எண்ணத்தில் முதன்மை கொள்வோம்
தேர்வு
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி
வளரும் தலைமுறைக்கு வழிகாட்டி
உள்ளத்தோடு உள்ளம்