Home » Editorial » உள்ளத்தோடு உள்ளம்

 
உள்ளத்தோடு உள்ளம்


admin
Author:

பூமி சற்று புரண்டு படுத்ததால் (நில அதிர்ச்சி) ஈரானில் இறந்து போனவர்கள் எழுபதினாயிரம். குலை குலையாகக் கொத்துக் கொத்தாக அல்லவா செத்து மடிந்தார்கள்.  பூவும் பிஞ்சுமாய் உயிரோடு பூமியுள் புதையுண்டு போவது போவது என்ன கொடுமை. அணைந்து போன தீபங்களுக்கு தன்னம்பிக்கை தனது அஞ்சலியை செலுத்துகிறது.

அறிவாற்றல், அறிவியல், வளர்ச்சியால் சோதனைகளை எதிர்கொண்டு அளப்பரிய சாதனைகளை நிகழ்த்திக் காட்டுகிற மனிதன் இயற்கையின் சிறிய சீற்றத்தக் கூட எதிர்கொள்வதில் திக்குமுக்காடிப் போய்விடுகிறான்.

இயற்கைக்கு எதிரான நமது நடவடிக்கைகளே இது போன்ற பேரழிவுகளுக்குக் காரம் என்கிறார்கள் ஞானிகள். இனியேனும் இயற்கையோடு இயைந்த வாழ்வுக்கு முந்திச் செல்ல முயல்வோம். நிகழப் போகிற நிலநடுக்கத்தை பூமிப்பந்தின் இன்னொரு பகுதியில்  விஞ்ஞானம் உணர்த்தி யிருக்கிறது.  ஆனால் பாதிக்கப்பட்ட மண்ணில்  இருந்த கருவிகள் பலனளிக்காததால் இந்தப் பாதகம் நிகழ்ந்து விட்டது.  இதுபோன்ற இயற்கை சீற்றத்தை முன்ன்றிவிக்கும் உபகரணங்கள் உலகெங்கும் இருக்க வழி செய்வோம்.

உலகில் மனிதர்கள் பெரும்பாலும் அதிகம் அஞ்சுவது மரணத்திற்கே. ஒவ்வொரு மனிதனின் மிக உயர்ந்த விருப்பமும் வெகுநாள் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்பதுதான்.  நிலையாமையின் உண்மையை, இயற்கையின் எதார்த்த்தை இயல்பாக ஏற்றுக் கொள்கிற எவரும் தன்னம்பிக்கையோடு வாழ்க்கையில் சவால்களை எதிர்கொள்ள முடியும்.

உறக்கமே ஒரு மரண ஒத்திகைதான்.  மனிதன் மட்டுமே உணர்வுகளால் ஆளப்படுகிற ஓர் இராசயனக் கலவை. இந்தக் கலவையை அவன் தன் எண்ணங்களால், தன்னம்பிக்கையால் மாற்றியமத்துக்கொள்கிற வித்த்தில் அவனுள் ஏற்படும் இராசயன மாற்றமே எதையுமே எதிர்கொள்ளும், எப்போதும் வெல்லும்…!  வாழ்க வளமுடன்..!  வாழ்க மானுடம்.

அன்புடன்,
ஆசிரியர்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 2004

நீங்களும் எழுத்தாளராகலாம்
அறிவும் வெற்றியும்
மகிழ்ச்சி மிக சுலபம்
எண்ணத்தில் முதன்மை கொள்வோம்
தேர்வு
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி
வளரும் தலைமுறைக்கு வழிகாட்டி
உள்ளத்தோடு உள்ளம்