Home » Articles » திடமான தன்னம்பிக்கை

 
திடமான தன்னம்பிக்கை


கணேசன் கு
Author:

– கு. கணேசன், திருச்சி

இலட்சியக்கனவே வெற்றிக்கு வித்து

வெற்றியினை அடைவதற்கு இலட்சிக் கனவு முக்கியம் என்பதை சென்ற இதழில் தெரிந்து கொண்டோம். இப்போது அந்தக் கனவினை நனவாக்கத் தேவையான திடமான தன்னம்பிக்கையைப் பற்றிக் காண்போம். “யானையின் பலம் அதன் தும்பிக்கையிலே மனிதனின் பலம் அவனின் நம்பிக்கையிலே”. நம்பிக்கை தான் ஒருவனை வாழ்வில் எல்லா வழிகளிலும் முன்னேற்றம் அடையச் செய்கின்றது. சிறந்த திடமான தன்னம்பிக்கை கொண்டவனை எந்தச் சூழ்நிலையிலும் யாராலும் வெற்றி கொள்ள முடியாது.

வெற்றியிலும் கர்வம் இல்லாத தன்னம்பிக்கை

எந்தப் பெரிய வெற்றியானாலும் கர்வம் வராத மனிதர்கள்தான் இன்று பலராலும் விரும்ப몮படுகிறார்கள். ஓர் ஆண்/ பெண்ணின் அழகு என்பது அவர் தம் தோற்றத்தினாலோ அல்லது நடை, உடை, பாவனைகளினாலோ தெரிவதில்லை. அதவர்களின் செயல்களின் மூலமாகத்தான் தெரிகின்றது. தன்னம்பிக்கை உள்ள ஒருவன் வாழ்வில் சிறப்பான பல சாதனைகளைச் செய்து தொடர்ந்து முன்னேற்றம் காண்பான். அப்போதும் எவன் ஒருவருனுக்கு துளிகூட கர்வம் வராமல் இருக்கின்றானோ அவனின் தன்னம்பிக்கையின் மூலம் அடைந்த வெற்றியினையும், உயர்வையும் கண்டு மக்கள் அவனுக்குத் தலை வணங்குவார்கள்.

“உண்மைச் சொல்லி நன்மையைச் செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்; நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்” என்ற கண்ணதாசனின் பாடல் வரிகள் இன்றைக்கும் என்றைக்கும் நிதர்சனமான உண்மை.

வாழ்வே ஒரு சவால் – சமாளி

நாம் எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் இயற்கைக்குமுன்னால் வெகு சாதாரணம். இரண்டே நிமிடத்தில் இன்றைய நம் நிலைமை தலைகீழாக மாறி விடமுடியும். இதற்கு நேற்றைய இந்திராகாந்தி முதல் இன்றைய கல்பனா சாவ்லா பவரை உள்ளவர்களின் வாழ்க்கை நமக்கு ஒரு பாடமாக அமையும். சிறப்பான உன்னத நிலையில் இருநவர்கள் ஒரு நொடிப்பொழுதில் மரணம் மூலம் முடிவை எய்தினர். இதனைக் கருத்தில் கொண்டு இருக்கும் வரை தன்னம்பிக்கையுடன் வாழந்து நமக்கும் பிறருக்கும் நன்மை பயக்குமாறு வாழ்வோமா. இன்றை நடைமுறை வாழ்க்கை ஒரு சவால். சவாலில் நாம் வெற்றி பெறுகிறோமா அல்லது தோல்வி அடைகிறோமா என்பது முக்கியமல்ல சாவலை நாம் எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதுதான் முக்கியம். அந்தத் தன்னம்பிக்கையுடன் கூடிய ஆண்/ பெண் தான் இப்பொழுது தேவை.

நம்பினார் கெடுவதில்லை

நம்பிக்கை உள்ளவன் எல்லாப் பிரச்சினைகளிலும் வாய்ப்பைக் காண்கிறான். நம்பிக்கை இல்லாதவன் எல்லா வாய்ப்புகளிலும் சில பிரச்சினைகளைக் காண்கிறான். நம்பினார் கெடுவதில்லை. இது நான்கு மறை தீர்ப்பு. எவர் ஒருவர் மேலும் மேலும் நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு வளர்கிறாரோ அவர் மகிழ்ச்சியான வளமான வாழ்வை எய்துவார்.

இயற்கை வளம் மிக்க நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது உலகறிந்த உண்மை. வளமிக்க பல இயற்கை வளங்கள் உள்ளன. மனிதவளம் மிகுதியாக உள்ளது. ஆனால், மனவளம் மட்டும் இல்லை. இதனால் நாம் வளர்ந்தநாடு என்ற தன்மையை இன்னும் அடைய முடியவில்லை இயற்கை வளம், மனித வளம், மனித நேய வளம் இவை மூன்றும் இணைந்தால் உலகில் சாதிக்க முடியாத்துத எதுவுமே இல்லை.

தேவை நல்ல மாற்றம்

தன் மீது நம்பிக்கை, தனக்குள்ள ஆற்றல் மீது நம்பிக்கை, தனது வாய்ப்புக்களின் மீது நம்பிக்கை இவை இருந்தால் திடமான தன்னம்பிக்கைதானாக வரும். திடமான தன்னம்பிக்கையின் அடிப்படையில் நம் சிந்தனை, சொல், செயல், திட்டம் இவற்றை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். இன்று உலகில் மாற்ற முடிந்த ஒன்று உண்டு என்றால் அது நாம் மட்டுமே. அவரவர்கள் தன்னை மட்டுமே மாற்றிக் கொள்ள முடியும். வேறு ஒருவரையும் மாற்ற முடியாது. எப்படி ஒரு சிறு ஆலம் விதைக்குள் மாபெரும் ஆலமரம் உறங்கிக் கொண்டிருக்கிறதோ அது போன்று அற்பமாகத் தோன்றுகின்ற நமக்குள் ஒரு மாபெரும் சக்தி உறங்கிக்கொண்டுள்ளது. அது உடனே தட்டி எழுப்பட்ட வேண்டும்.


இறைவனின் கருணை மழை

பல மாதங்களாக மழை இல்லாத ஓர் ஊரில் மழைவேண்டி கூட்டுப் பிரார்த்தனை. ஆறு, குளம், கிணறு போன்ற அனைத்து நீர் நிலைகளும் வற்றி உள்ள நிலையில் மழை வேண்டி நடைபெறும். அனைத்து மத கூட்டுப் பிரார்த்தனைக்கு அனைவரும் வெறும்கையுடன் கையை வீசிக்கொண்டு வர, ஒரே ஒரு சிறுமி மட்டும் மிகுந்த நம்பிக்கையோடு குடையுடன் வந்தாளாம்.. அவளின் திடமான தன்னம்பிக்கைச் சிதைத்து விடாமல் ஏமாற்றமல் இறைவன் மழையைப் பொழிந்தார் என்று ஒரு கர்ண பரம்பரைக் கதையைக் கூறுவார்கள்.

எனவே, நல்ல மன மாற்றத்துடன் திடமான தன்னம்பிக்கையுடன் செயலாற்றினால் வெற்றி இலக்கை சுலபமாக அடைவது உறுதி.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2004

கடவுள் பிரபஞ்சம் மனிதன்
மனித வளமேம்பாடு
வியர்வைத் துளிகளை விதைப்போம்
யாமறிந்த சிலம்பொலியார்
சிகரத்தை நோக்கி…
பொங்கல் வாழ்த்து
ஆசையும் ஆரோக்கியமும்
உள்ளத்தோடு உள்ளம்
சிறந்த நண்பர்கள் வெற்றியின் தூண்கள்
கேட்காதீர்கள் கொடுக்கப்படும்
மனதின் ஆற்றலை வளர்க்கும் மலேசியவாவின் தமிழ்க் காதலர்
திடமான தன்னம்பிக்கை
நிரந்திர வெற்றிக்கு உழைத்திடுவோம்
கொடிது கொடிது.. திறமையில் வறுமை
நம்மைப் பிணைக்கும் சங்கிலி
நினைவாற்றல் பயிற்சி வித்தகர்
பொங்கல் சூளூரை!
ஆசிரியர் சு.செ. ஆண்டு பல வாழ்க!
தாரக மந்திரம்
வளரும் தலைமுறைக்கு வழிகாட்டி
தாத்தா சொன்ன தன்னம்பிக்கைக் கதை
நீங்களும் எழுத்தாளராகலாம்
பவளவிழா காணும் பண்பாளர்
சித்திரச் சிலம்பின் வித்தகப் பரல்
உளிபட்டால் சிலையாகலாம் உழைத்திட்டால் வளமாகலாம்
புத்தாண்டில் புறப்படு!
மாணவர் பெற்றோர் பக்கம்