Home » Articles » தாத்தா சொன்ன தன்னம்பிக்கைக் கதை

 
தாத்தா சொன்ன தன்னம்பிக்கைக் கதை


நிலா
Author:

– கவிஞர் நிலா

தோட்டத்துக் கிணற்றில் மின்மோட்டார் ஓடிக்கொண்டிருந்தது. கமலம் பாட்டி அழுக்குத் துணிகளை எல்லாம் துவைத்து மோட்டார் தண்ணீரில் அலசிக்கொண்டிருந்தார். தாத்தா தக்காளி பாத்திகளுக்கு தண்ணீர் பாச்சிக் கொண்டிருந்தார்.

குழந்தைகள் தமிழ்வேந்தனும், இசையமுதும் தண்ணீர் ஓடிவரும் வாய்க்காலில் நடந்தபடியே தாத்தா விடம் வந்தனர்.

குழந்தைகளா… இங்க சேத்துக்குள்ள வரவேண்டாம். அப்படியே போய் தண்ணீர் பாய்ச்சாத பக்கத்துப் பாத்திகள்ல தக்காளி ஒண்ணு இரண்டு பழுத்து இருக்கு அதப் பறிச்சு எடுங்க என்றார்.

தாத்தா.. நீங்க மடைதிருப்பிக்கிட்டே ஒரு கதை சொல்லுங்க. நானும் அண்ணாவும் கதை கேட்டுகிட்டே தக்காளி பறிக்கிறோம் என்றாள் இசை.

சரி உங்களுக்கு ஒரு தக்காளி கதை சொல்றேன். கேளுங்க என்றார்.. தக்காளி கதையா சொல்லுங்க என்றனர் குழந்தைகள்…

அமெரிக்காவில் ஒரு துப்புரவுத் தொழிலாளி இருந்தார். வீடுகள்ல, ஆபீசுகள்ல கழிவறைய சுத்தம் செய்யறதுதானு அவருடைய தொழில். ஒருநாள், ஓர் ஆபிசுக்குப் போய் வேலை கொடுங்கன்னு கேட்டார். இங்க எதுவும் வேலையில்ல போப்பான்னு சொல்லிட்டா அந்த ஆபிசு நிர்வாகி. சரிதான்னு புறப்பட்டார்.

உடனே அன்னக்கி காலையில செய்தித் தாள்ல படிச்சது ஞாபகம் வந்துச்சி, ஏப்பா.. கொஞ்சம் நில்லு.. இங்க வான்னார் அந்த ஆபிசர்.

இந்தா.. நியூயார்க் நகரத்துல பெரிய கம்பியூட்டர் ஆபீசு இருக்கு. துப்பரவு வேலைக்கு ஆள் வேணும்னு விளம்பரம் வந்திருக்கு. நீ அங்க போய் கேட்டுப்பார்ன்னு ஆபிசர் சொன்னார்.

அவர் உடனே புறப்பட்டு நியூயார்க்குப் போனாரு. அங்க அந்தப் பெரிய கம்ப்யூட்டர் கம்பெனிக்கு போய் சேர்ந்தார். அங்க இருந்த நிர்வாகிகிட்ட விசயத்தைச் சொன்னார்.

அப்படியா..! சரி விண்ணப்பத்த பூர்தி பண்ணி கொடுங்க என்று ஒரு படிவத்தைக் கொடுத்தாங்க. அவர் அதை வாங்கி, எழுதி விண்ணப்பத்தைத் திரும்பக் கொடுத்தா.

வாங்கிப் பார்த்ததும் கேட்டாங்க. ஆமா! உங்க ஈ – மெயில் ஐ.டி.என்ன?

அதுக்குத் துப்பரவுத் தொழிலாளி எனக்கு ஈ- மெயில் ஐ.டி இல்லீங்கன்னு சொன்னார். அப்படியா! ஈ – மெயில் ஐ.டி. கூட இல்லாத உங்களுக்கு இங்க வேலையில முதல்ல கிளம்புங்கன்னு சொல்லிபுட்டார். இவரு எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். நான் ரொம்ப சுத்தமா கழிவறையைக் கழுவுவேன். வேலை கொடுங்க என்று மன்றாடினார். பயனில்லை.

ரொம்ப சோகமா கம்பியூட்டர் கம்பெனிய விட்டு வெளியே வந்தார். எப்படியும் வேலை உறுதியின்னு நினைச்சு வந்தார். வீட்டுக்குத் திரும்பிப் போகக்கூட கையில் பணம் இல்லை.

சட்டைப் பையில் கைவிட்டுப் பார்த்தார். வெறும் 10 டாலர்தான் இருந்தது. ஊருக்குப் போக வழியில்லை. அதனால கால் போனபடி நடந்துகிட்டே இருந்தார். நகரத்து விட்டு ரொம்ப தூரம் வந்துட்டார். சாலையோரத்துல தக்காளி தோட்டம், சப்போட்டா தோட்டம், ஆப்பிள் தோட்டம் கண்ணுல பட்டது, வேலிக்கு வெளியே ரோட்ல இரண்டு பழம் விழுந்திருந்தது. அதை எடுத்து சாப்பிட்டார். நடக்க மேலும் தெம்பு வந்திருச்சி. நடந்துகிட்டே இருந்தார். கடைசியா ஓர் ஊருக்குப் போய் சேர்ந்தார்.

அந்த ஊர்ல தக்காளி விளையாததால ரொம்ப தேவை இருந்தது. உடனே துப்புரவுத் தொழிலாளி என்ன செய்தார் தெரியுமா? அவர் வர வழியில் ஓர் இடத்துல தக்காளி விளையரத பார்த்தாரு இல்லையா? அது ஞாபகத்துல வந்தது. மறுபடியும் வந்தவழியே திரும்பி போய் அவருகிட்டே இருந்த 10 டாலருக்குத் தக்காளி வாங்கி வந்து இந்த ஊர்ல 20 டாலருக்குத் தக்காளி வாங்கிவந்து இந்த ஊர்ல 20 டாலருக்கு வித்தார். இந்த 10 டாலர்தான் அவருடைய முதலீடு. பிறகு தக்காளி வித்து கோடீசுவரனாயிட்டாரு.

இப்ப கணக்கு வழக்கு, பில்போடறதுக்கு எல்லாம் கம்பியூட்டர் தேவைப்பட்டது. நகரத்துல அவர் முன்ன வேலை தேடிப்போன கம்பியூட்டர் கம்பெனி ஞாபகத்துக்கு வந்தது. உடனே கார்ல கிளம்பி கம்பியூட்டர் கம்பெனிக்கு போனாரு. போனவு கம்பியூட்டர் வாங்க வந்திருக்கேன்னாரு.

அவர உட்காரச் சொல்லி குடிக்க குளிர்பானம் எல்லாம் கொடுத்து விட்டு சரி உங்க பேரு, முகவரி சொல்லுங்கன்னாங்க. அதை எழுதிகிட்டு அப்புறமா உங்க ஈ-மெயில் ஐ.டி. என்ன அப்படின்னாங்க.. ஈ-மெயில் ஐ.டி. எனக்கு இல்லைன்னு சொன்னாரு. அதனால் என்ன இப்பவே ஒரு ஈ-மெயில் ஐ.டி. உங்க பேருக்கு உருவாக்கிடலாம்னு சொன்னாங்க.

அதுக்கு அவரு சொன்னாரு. அதெல்லாம் ஒன்னும் வேணாமுங்க. ஈ-மெயில் ஐ.டி. இருந்திருந்தா இந்த ஆபிசுல நிறைய கழிவறையை கழுவிகிட்டுதான் இருந்திருப்பேன். அது இல்லாததாலதான் அன்னைக்கு நீங்க வேலை கொடுக்க இன்னைக்கு நான் கோடீசுவரனாயிருக்கேன். அப்படின்னாரு.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2004

கடவுள் பிரபஞ்சம் மனிதன்
மனித வளமேம்பாடு
வியர்வைத் துளிகளை விதைப்போம்
யாமறிந்த சிலம்பொலியார்
சிகரத்தை நோக்கி…
பொங்கல் வாழ்த்து
ஆசையும் ஆரோக்கியமும்
உள்ளத்தோடு உள்ளம்
சிறந்த நண்பர்கள் வெற்றியின் தூண்கள்
கேட்காதீர்கள் கொடுக்கப்படும்
மனதின் ஆற்றலை வளர்க்கும் மலேசியவாவின் தமிழ்க் காதலர்
திடமான தன்னம்பிக்கை
நிரந்திர வெற்றிக்கு உழைத்திடுவோம்
கொடிது கொடிது.. திறமையில் வறுமை
நம்மைப் பிணைக்கும் சங்கிலி
நினைவாற்றல் பயிற்சி வித்தகர்
பொங்கல் சூளூரை!
ஆசிரியர் சு.செ. ஆண்டு பல வாழ்க!
தாரக மந்திரம்
வளரும் தலைமுறைக்கு வழிகாட்டி
தாத்தா சொன்ன தன்னம்பிக்கைக் கதை
நீங்களும் எழுத்தாளராகலாம்
பவளவிழா காணும் பண்பாளர்
சித்திரச் சிலம்பின் வித்தகப் பரல்
உளிபட்டால் சிலையாகலாம் உழைத்திட்டால் வளமாகலாம்
புத்தாண்டில் புறப்படு!
மாணவர் பெற்றோர் பக்கம்