Home » Articles » நீங்களும் எழுத்தாளராகலாம்

 
நீங்களும் எழுத்தாளராகலாம்


பெருமாள் முருகன்
Author:


தொடர்.. 1

– பெருமாள் முருகன்

எழுதுவதிலும் வாசிப்பதிலும் நீங்கள் ஆர்வமுடையவர் எனில் அ. மாதவையா என்னும் பெயரை அறிந்திருப்பீர்கள். அல்லது எங்காவது போகிற போக்கில் கேட்டாவது இருப்பீர்கள். அ. மாதவையா, தமிழ் நாவல் முன்னோடி ஆசிரியர்களுள் ஒருவர். ‘பத்மாவதி சரித்திரம்ய என்றொரு நாவல் எழுதியிருக்கிறார். அந்நாவல் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிகாலத் தமிழ்நாட்டு வாழ்க்கையை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளது.

கலை ஆர்வம் கூடாதா?

அந்நாவலில் நாடகம் பார்ப்பது குறித்த செய்திகள் வருகின்றன. நாடகம் பார்ப்பவர்கள் யாராக இருக்க முடியும்? நிச்சயம் கீழ்த்தரமான, சாதியால் இழிந்தத மக்களாகத்தான் இருப்பார்கள் என்கிறது நாவல். ‘உயர்ந்த’ சாதிகளில் பிறந்தவர்களுக்கு இத்தகைய கலை ஆர்வம் இருக்கக்கூடாதா? கூடாது. இருப்பின் அவர்கள் மோசமான நடத்தையுள்ளவர்கள் என்பதில் சந்தேகமில்லை. நாடகம் பார்ப்பவர்களைப் பற்றியே இப்படி ஒரு கருத்து இருக்குமானால், அதில் நடிப்பவர்களைப் பற்றிச் சமூகம் எப்படிக் கருதியிருக்கக்கூடும்?

நாடகம் பற்றி மட்டுமல்ல, நாவல்களை வாசிப்பது பற்றியும் மோசமான அபிப்ராயங்கள் தான் நிலவின. குடும்ப몮 பெண்கள் நாவல்களை வாசிக்க மாட்டார்கள். அப்படி வாசித்தால் அவர்கள் கெட்டுப் போய்விடுவார்கள் என்னும் கருத்துக்களைத் திரு.வி.க. போன்ற பெரும் அறிஞர்களே கூறியிருக்கிறார்கள்.

இன்றைக்கு இந்தக் கருத்து மாறியிருக்கிறதா?

மாணவப் பருவத்தில் இருக்கும் ஒருவர் நாவல், சிறுகதை ஆகிய நூல்களை வாசிப்பதைப் பெற்றோர் அனுமதிக்கிறார்களா? நம் சமூகம் அதனை ஊக்குவிக்கிறதா? படிப்பதென்றால் அது பாடப்புத்தகமாகத்தான் இருக்க வேண்டும். பிற நூல் எல்லாம் ‘கதைப் புத்தகங்கள்’ கதைப் புத்தகங்களைப் படிக்கிறவன் உருப்பட முடியுமாழ இது தான் நம் சமூகத்தின் பொதுக்கருத்து.

பொழப்பத்தவன்

சரி, ஒருவன் கவிதை எழுதுகிறான், கதைகள் எழுதுகிறான் என்றுசொன்னால் கை நீட்டி வரவேற்கிறார்களா? அவனுக்குப் பெயர் ‘வேலப் பொழப்பத்தவன்’. அதாவது எந்த வேலைக்கும் லாயக்கற்றவன். பொறம்போக்கு. கவிதை எழுதுவதை எல்லாம் விட்டுவிட்டு உருப்படியான வேலை எதையாவது செய்கிற வழியைப் பார் என்று உபதேசம் செய்ய ஆயிரக்கணக்கான பேர் தயாராக இருக்கிறார்கள்.

நமக்குத் தொழில் கவிதை

பாரதிராஜாவின் ‘கிழக்கே போகும் இரயில்’ திரைப்படக் கதாநாயகன் ஒரு கவிஞன். ஆனால் வேலையற்றவன். (‘நமக்குத் தொழில் கவிதை’ என்று பாரதியார் சொல்லியிருக்கிறார். மகாகவியே கூறினாலும் கவிதை எழுதுவதைத் தொழிலாக அங்கீகரிக்க நம் சமூகம் தயாரில்லை) அவன் தங்கை திருமணத்தின் போது எல்லோரும் மொய்ப் பணம் கொடுக்கிறார்கள். இந்தக் கவிஞனான அண்ணனோ வாழ்த்துப்பா எழுதி அதை வாசிக்கிறான். உடனே உறவுக்கூட்டம் கவிஞனைக் கேலி செய்து அவமானப்படுத்தி விடுகிறது. இதுதான் எதார்த்த நிலை.

குழந்தையின் மேல் கோபம்

ஒரு குழந்தைக்குப் படிப்பில் அவ்வளவாக ஈடுபாடில்லை. குறைந்த மதிப்பெண்தான் பெறுகிறது. ஆனால் ஓவியம் தீட்டுவதில் அபார ஈடுபாடு. பார்ப்பதை எல்லாம் வரைந்து தள்ளும். எழுதுவதற்கு வளையாத அதன் விரல்கள் வரைவதற்கென்றால் எப்படி வேண்டுமானாலும் வளையும்.

இப்படியோர் அற்புத்த் திறமை கொண்டிருக்கும் குழந்தையைப் பெற்றோர் மெச்சுகிறார்களா? உறவினர்கள் அதிசயித்துப் பாராட்டுகிறார்களா? அதெல்லாம் ஒன்றுமில்லை. வீட்டுப்பாடம் எழுதுவதற்குத்தான் விரல்கள் குவிய வேண்டும். ஏதாவது வரையக் குவிந்தால் விரல்களை நறுக்கி விடுவேன் ( காய்கறி நறுக்கிப் பழக்கம்) என்று அம்மா எச்சரிக்கிறாள். குழந்தை வாங்கும் மதிப்பெண்களை யாராவது கேட்டுவிட்டால் போதும் தந்தைக்குக் குழந்தை மேல் கோபம் எகிறும். அந்தக் குழந்தை பெற்றிருக்கும் அபாரத் திறமைக்காக எத்தனை வசவுகள்; மிரட்டல்கள், அடிகள், நம் சமூகம் கலைகளின் மீது கொண்டிருகும் ஈடுபாடு அத்தகையது.

குழந்தைகள் பிறக்கும்போதே ஸ்டெதாஸ்கோப் சகிதமாகப் பிறந்துவிட்டால் நல்லது என்று நினைக்கிறார்கள், பெற்றோர்கள். மருத்துவராக வேண்டும். இல்லாவிட்டால் குறைந்தபட்சம் பொறிஞராகவாவது ஆக வேண்டும். இரண்டைத் தவிர வேறு எந்தத் துறையைப்பற்றியும் மரியாதை கிடையாது.

சிற்பக் கல்லூரி

அதுவும் சில துறைகளைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் கூட இல்லை. தமிழ்நாட்டில் சிற்பக் கல்லூரி இருக்கிறது, ஓவியக் கல்லூரிகள் இருக்கின்றன. நாடகத் துறையில் முதுகலைப் படிப்புகள் இருக்கின்றன. ஆனால் இவற்றப் பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்ழ இப்படிப்புகளுக்குக் கிடைக்கும் வேலை வாய்ப்புகள் பற்றியும் தெரியாது.

திரைபடக் கல்லூரி பற்றி ஓரளவு தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால் அதிலும்கூடத் தம் பிள்ளைகள் ஈடுபடுவதைப் பெரும்பாலானோர் விரும்புவதில்லை.

கலைத்துறை ஆர்வம், ஈடுபாடு பற்றி இத்தகைய மோசமான சூழல் ஏன் நிலவுகிறது? அதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன.

எழுதப்படாத சட்டங்கள்

முக்கியமாக, வாழ்க்கை பற்றி நம் சமூகம் கொண்டிருக்கும் மதிப்பீடுகள். சமூக ஒழுங்கு என்று சிலவற்றை வரையறுத்து வைத்திருக்கிறோம். அவை எழுதப்படாத சட்டங்களாக மனித மனங்களில் உலவி வருகின்றன. படிப்பு, வேலை, திருமணம், குடும்பம், பிள்ளைப்பேறு, பிள்ளைகளின் திருமணம் என்னும் ஒழுங்கு வட்டத்திற்குள் இயங்கும் மனிதனையே சிறந்தவனாக, சரியானவனாகச் சமூகம் கருதுகின்றது.

கலைத்துறை ஈடுபாடு என்பது இந்தச் சமூக ஒழுங்கைச் குலைத்துவிடும் எதிரி.

வேடிக்கை மனிதர்கள்

கலைகளில் ஈடுபாடு கொண்டவன் ஏன்கனவே வகுத்து வைத்திருக்கும்ம நியதிகளைக் கேள்வி கேட்கிறான். அவற்றில் இருக்கும் அபத்தங்களைச் சுட்டிக் காட்டுகிறான். அவற்றை மீறுகிறான். குறைந்த பட்சம், சமூக ஒழுங்கு உட்பட்ட ‘வேடிக்கை மனிதர்களின்ய வாழ்க்கையின் மீதான தன் அதிருப்திகளை வெளிப்படுத்துகிறான். அப்படி இருப்பதைத்தான் கேடாகப் பார்க்கிறது சமூகம்.

எதிரியைத் தேர்வு செய்

சமூக ஒழுங்குக்கு உட்பட்ட வேடிக்கை மனிதர்களில் ஒருவராக்க் காலம் கழிக்க நினைக்கிறீர்களா? சமூக ஒழுங்கைக் குலைக்கும் எதிரியாக மாற விரும்புகிறீர்களா?

‘எதிரி’யைத் தேர்வு செய்தால் மேற்கொண்டு நீங்கள் இந்தத் தொடரை வாசிக்கலாம்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2004

கடவுள் பிரபஞ்சம் மனிதன்
மனித வளமேம்பாடு
வியர்வைத் துளிகளை விதைப்போம்
யாமறிந்த சிலம்பொலியார்
சிகரத்தை நோக்கி…
பொங்கல் வாழ்த்து
ஆசையும் ஆரோக்கியமும்
உள்ளத்தோடு உள்ளம்
சிறந்த நண்பர்கள் வெற்றியின் தூண்கள்
கேட்காதீர்கள் கொடுக்கப்படும்
மனதின் ஆற்றலை வளர்க்கும் மலேசியவாவின் தமிழ்க் காதலர்
திடமான தன்னம்பிக்கை
நிரந்திர வெற்றிக்கு உழைத்திடுவோம்
கொடிது கொடிது.. திறமையில் வறுமை
நம்மைப் பிணைக்கும் சங்கிலி
நினைவாற்றல் பயிற்சி வித்தகர்
பொங்கல் சூளூரை!
ஆசிரியர் சு.செ. ஆண்டு பல வாழ்க!
தாரக மந்திரம்
வளரும் தலைமுறைக்கு வழிகாட்டி
தாத்தா சொன்ன தன்னம்பிக்கைக் கதை
நீங்களும் எழுத்தாளராகலாம்
பவளவிழா காணும் பண்பாளர்
சித்திரச் சிலம்பின் வித்தகப் பரல்
உளிபட்டால் சிலையாகலாம் உழைத்திட்டால் வளமாகலாம்
புத்தாண்டில் புறப்படு!
மாணவர் பெற்றோர் பக்கம்