Home » Articles » பவளவிழா காணும் பண்பாளர்

 
பவளவிழா காணும் பண்பாளர்


தமிழன்பன் ஈரோடு
Author:

சிலம்பொலி சு. செல்லப்பன் வாழ்க!

செல்லப்பன் என்பது
ஒரு மனிதனின் பெயரல்ல!
செல்லப்பன் என்பது
பண்பின் பெயர்!

இவர் பேச்சுக்கு
விடுமுறை என்ற
பேச்சுக்கே இடமில்லை!
இவர் மண்டைக்குள்
ஆயிரம் புலவர்கள் வாழ்கிறார்கள்!

எழுதியவரே மறந்துவிட்ட
கவிதையும்
இவரது நினைவில் இருக்கும்!

இவர் தொடங்கி வைக்காத
இலக்கிய மன்றம்.. எது என்றால்
இதுவரைத் தொடங்கப்படாத
இலக்கிய மன்றம் தான்!

கைத்தட்டலோடு மட்டும்
ஊர் திரும்பும்
பேச்சாளர் யார் என்று
காட்டச் சொன்னால்
இவரைத்தான் காட்டுவர்!

ஒவ்வொரு நாளும்
அந்திச் சூரியன்
இவர் பேச்சை
அள்ளிக் கொண்டு
மறைகிறது!
மறுநாள் மனப்பாடம்
செய்துகொண்டு
திரும்புகிறான்!

அதியனும் பேகனும்
குமணனும் ஓரியும் – என்று
வள்ளல்கள் தோன்றிய நாடு
கொங்கு நாடு
தமிழுக்குச் செய்த கொடை
எங்கள் செல்லப்பனார்!

– ஈரோடு தமிழன்பன்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2004

கடவுள் பிரபஞ்சம் மனிதன்
மனித வளமேம்பாடு
வியர்வைத் துளிகளை விதைப்போம்
யாமறிந்த சிலம்பொலியார்
சிகரத்தை நோக்கி…
பொங்கல் வாழ்த்து
ஆசையும் ஆரோக்கியமும்
உள்ளத்தோடு உள்ளம்
சிறந்த நண்பர்கள் வெற்றியின் தூண்கள்
கேட்காதீர்கள் கொடுக்கப்படும்
மனதின் ஆற்றலை வளர்க்கும் மலேசியவாவின் தமிழ்க் காதலர்
திடமான தன்னம்பிக்கை
நிரந்திர வெற்றிக்கு உழைத்திடுவோம்
கொடிது கொடிது.. திறமையில் வறுமை
நம்மைப் பிணைக்கும் சங்கிலி
நினைவாற்றல் பயிற்சி வித்தகர்
பொங்கல் சூளூரை!
ஆசிரியர் சு.செ. ஆண்டு பல வாழ்க!
தாரக மந்திரம்
வளரும் தலைமுறைக்கு வழிகாட்டி
தாத்தா சொன்ன தன்னம்பிக்கைக் கதை
நீங்களும் எழுத்தாளராகலாம்
பவளவிழா காணும் பண்பாளர்
சித்திரச் சிலம்பின் வித்தகப் பரல்
உளிபட்டால் சிலையாகலாம் உழைத்திட்டால் வளமாகலாம்
புத்தாண்டில் புறப்படு!
மாணவர் பெற்றோர் பக்கம்