Home » Articles » வியர்வைத் துளிகளை விதைப்போம்

 
வியர்வைத் துளிகளை விதைப்போம்


கவிதாசன்
Author:

– சிந்தனைக்கவிஞர் கவிதாசன்

திட்டமிட்டு உழைக்கும்போது
திசைகள் தோறும் வெற்றி!
எட்டாத்து உலகில் எதுவுமில்லை
இதை உணர்த்துவதே முயற்சி!

உயர்விற்கும் உழைப்பே அடிப்படைத் தேவை. உழைப்பைப் புறக்கணித்து விட்டு உங்களால் வாழ்க்கையில் முன்னேற முடியாத்து. உழைக்கத் தயங்குகின்றவர்களை வெற்றி ஒதுக்கி வைத்துத விடுகின்றது. வரலாறுகளும், அவர்களைப் பதிவு செய்யாமல் புறக்கணித்து விடுகின்றது. ஆகவே உழைப்பே உங்கள் மூச்சுக் காற்றாகட்டும். நொடிகள் தோறும் அறிவுப்பூர்வமாக உழைத்துக் கொண்டே இருங்கள். உழைப்பினால் கிடைக்கும் பலன்களின் தொகுப்பே நமது வெற்றியாகும். இதைத்தான் “வெற்றி என்பது விபத்தல்ல அது வியர்வைத் துளிகளின் விளைச்சல்” என்று குறிப்பிடுவேன். விதைக்கும் காலத்தில் உறங்கிவிட்டால் அறுவடை நாள்களில் ஆனந்தப் பட முடியுமா? அது போலவேதான் உழைக்கும் பொழுதை உதறித் தள்ளி விடுகின்றவர்கள், முன்னேற்றத்தின் முகவரியை அறிந்து கொள்ளாமலேயே வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றார்கள். உழைப்பே வெற்றியின் விதை என்பதை உர்ந்து செயல்படுங்கள். உங்களால் சாதிக்க முடியாத்து என்று எதுவுமில்லை என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.

அறிவுப்பூர்வமாக உழைப்போம்

ஏதோ கடனுக்காக வேலை செய்கிறேன் என்ற மனநிலையில் உங்களுடைய பணியைச் செய்யக்கூடாது. எப்பணி அதை உள்ளத்தின் ஈடுபாட்டோடும் அறிவுப் பூர்வமாகவும் செய்யக் கற்றுக்கொள்ள வேண்டும். அதாவது எந்தெந்தப் பணிகளை எப்படியெப்படிச் செய்ய வேண்டுமோ, அந்தந்தப் பணிகளை அதற்குரிய முறையிலும் நேர்த்தியுடனும் செய்ய வேண்டும். செய்ய வேண்டிய பணிகளை முறையாகத் திட்டமிட்டு உழைக்கின்ற போது உங்களால் செய்ய முடியாத்து என்று எதுவுமே இல்லை என்பதை நீங்களே உணர்ந்து கொள்வீர்கள். ஆகவே எப்பணியை செய்வதாயினும் உணர்ச்சிப் பூர்வமாக அணுகாமல் அறிவுப்பூர்வமாகவும் நடைமுறை சாத்தியத்தோடும் அணுகுங்கள். அறிவுப்பூர்வமாக உழைப்பதற்கு உங்களுடைய அறிவுத் திறனைத் தொடர்ந்து வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும். உங்களுடைய அறிவின் ஆழம் வெளிப்படும் வித்ததில் உங்களுடைய செயல் ஒவ்வொன்றும் இருக்க வேடும். அப்பொழுதுதான் உங்களுடைய தனித்தன்மையை இந்த உலகம் புரிந்துகொள்ளும் அதற்கு, நீங்கள் செய்யும் பணி எதுவாயினும் அதைக் கொஞ்சம் ஆய்வு செய்து, அதில் உள்ள நுட்பங்களைப் புரிந்துகொண்டு பின்னர் அதை அறிவுப் பூர்வமாக அவ்வப்போது மாற்றி அமைத்துக் கொண்டே இருங்கள். ஏனென்றால் மாற்றமே முன்னேற்றத்தின் முதல் நிலை.

புதியன கற்போம்

காலத்தின் மாறுதல்களால் நீங்கள் செய்துவரும் பணிகளிலும் மாற்றம் நிகழக்கூடும். அவ்வாறு நிகழும் மாற்றங்களை முன்கூட்டியே அனுமானத்து அறிந்து கொண்டு, அதற்கேற்ப புதிய திறன்களை கற்றுக்கொள்வதே புத்திசாலித்தனமாகும். அவ்வாறு புதிய திறமைகளை வளர்த்துக்கொள்ளத் தவறினால், நாம் அதனால் தொழில்ட்டமும் தேக்கமும் ஏற்படக்கூடும். ஆகவே புதியனவற்றைக் கற்றுக்கொள்ளும் ஆர்வமும் துடிப்பும் உங்களிடம் நிலையாக இருக்க வேண்டும். புது திறன்களைக் கற்றுக் கொள்ளும்போதுதான் நெஞ்சில் தெளிவும் தன்னம்பிக்கையும் மிளிர்கின்றது. கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக பல விஷயங்களைத் தெரிந்து கொள்வதோடு நின்று விடாதீர்கள். அவ்வாறு செய்வதால் எந்தவிதப் பயனும் இல்லை. ஏனென்றால் விதைக்காக விதைகள் விளைச்சலைக் கொடுப்பதில்லை. அதுபோல செயலாக்கம் பெறாத கருத்துக்களால் எந்தவித முன்னேற்றமும் கிடைக்கப்போவதில்லை. ஆகவே நீங்கள் எத்தனை புதிய திறமைகளைக் கற்றுக்கொள்கின்றீர்கள் என்பதைவிட, அத்திறமைகளை எவ்வாறு உங்கள் வாழ்க்கையல் பயன்படுத்தி முன்னேறுகின்றீர்கள் என்பதே முக்கியம். அதாவது கற்பதைவிட, அவற்றைக் கடைப்பிடிப்பதே முக்கியமானது.

மாற்றத்தை ஏற்போம்

செய்கின்ற பணியில் ஏற்படும் மாற்றங்கள் ஏற்றுச்செய்கின்ற பண்பட்ட மன நிலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதாவது பணியில் ஏற்படும் மாறுதல்களுக்கு பொருத்தமான மனநிலையை உருவாக்கிக்கொள்ளுங்கள். மனநிலையில் மாறுதல் ஏற்படுவதற்குரிய புதிய கருத்துக்களையும் மாற்றுக் கருத்துக்களையும் மனதில் உள்வாங்கிக் கொள்வதுடன்,, அவற்றின் அடிப்படையில் புதிய கோணத்தில் சிந்திக்கவும் தொடங்குங்கள். அதன் காரணமாக மனதில் நிகழும் மாற்றங்கள் புதிய எண்ணங்களை உருவாக்கும். புதுபுது எண்ணங்களால் உங்களுடை செயல்களில் வேகமும் நுட்பமும் ஏற்படுகின்றது. அதன் காரமாக, சிக்கலான பணியையும் உங்களால் எளிதில் செய்து முடிக்கமுடிகின்றது. அத்துடன், இதுகாறும் பெரிதாகத் தெனபட்ட பிரச்சினைகளும் எளிதாகவே தோன்றத் தொடங்கும். ஆகவே மாற்றத்தை ஏற்றுக்கொண்டு, புதிய சிந்தனைகளை உருவாக்கும் மனம் படைத்தவர்களாக இன்றே மாறி விடுங்கள். முன்னேற்றப் பாதையில் முதல் அடியை எடுத்து வையுங்கள்.

உழைக்கும் நேரம்

ஒவ்வொரு நாளும் எத்தனை மணிநேரம் உழைக்கின்றீர்கள்? என்று எண்ணிப்பாருங்கள். உழைக்கும் நேரமே உங்களுடைய முன்னேற்றத்திற்காக நீங்கள் விதைக்கும் நேரம். எவ்வளவு நேரம் உழைக்கின்றீர்கள்? என்று கேட்கும்போது உங்களுடைய மனதில் என்ன தோன்றுகின்றது? உழைக்கும் நேரம் குறைவாக இருக்கின்றது என்றா? அதிகமாக இருக்கின்றது என்றா? திருப்தியாக இருக்கின்றது என்றா? இல்லை, உழைப்பதற்கு நான் துடிக்கின்றேன். ஆனால் என்ன செய்தென்றே தெரியவில்லை என்றா? எதுவாயினும் அதற்கு என்ன காரணம் என்றும் சிந்திக்கத் தொடங்குங்கள். உழைக்கும் நேரம் குறைவாக இருப்பின் அதை உடனே அதிகரிக்க முயற்சி செய்யுங்கள்! என்ன செய்வதெனத் தெரியவில்லை என்றால், உங்களுடைய இலட்சியம் என்ன என்பதை இன்னும் நீங்கள் முடிவு செய்யவில்லை என்று பொருள். ஆகவே முதலில் உங்களுடைய இலட்சியத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள்.

சிந்தித்து செயல்படுங்கள்

எதைச் செய்வதாயினும் அதைப்பற்றி சிறிது நேரமாவது சிந்திக்க வேண்டும். அதாவது அதைச் செய்வது என்பதைவிடவும் அதை எவ்வாறு செய்வது என்பதும் மிகவும் முக்கியமானதாகும். உழைப்பில் விவேகமும் வேகமும் கை கோர்க்க வேண்டும். ஒன்றைச் செய்துவிட்டு “இப்படிச் செய்துவிட்டேன்! அப்படி செய்திருக்கலாமே” என்று எண்ணிக் கொண்டிருப்பதைவிட, உங்களுடைய அறிவின் எல்லைக்கு எட்டிய வரையில் தீர்க்கமாக சிந்தித்துப் பின்னர் செயல்பட்டால், பின்னர் வருந்த வேண்டிய வாய்ப்பு குறைந்துவிடும். என்னதான் சிந்தித்தாலும் ஒரு சில வேளைகளில் செயலில் தொய்வும் பிரச்சினைகளும் துளிர்விடக் கூடும். ஆனால் அதற்காக நீங்கள் மனம் சிதைந்து விடக்கூடாது. அந்தத் தோல்விகளையே வாழ்க்கைப் பாடமாக வாசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

தன்னம்பிக்கை வளரும்

உள்ளத்தில் உற்சாகமும் உழைப்பில் ஈடுபாடும் இருந்தால் தன்னம்பிக்கை தானாக வளரும். உழைக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியே உள்ளத்தில் உற்சாகத்தை ஏற்படுத்துகின்றது. ஆகவே உழைப்பே உயர்வின் ஒரே வழி என்பதை உர்ந்து வியர்வைத் துளிகளைக் கொடு வெற்றி மாலையை உருவாக்குங்கள். மேலும் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்க உழைப்பவர்களுக்கு உடல்நலமும் ஊக்கமும் தானாகவே ஏற்படும். உடலில் சக்தியும், உள்ளத்தில் ஊக்கமும் நிறைந்து இருக்கும் போது, உலகமே உங்களின் விளையாட்டு மைதானமாக உங்களுக்குத் தெரியும். சவால்களும், எதிர்ப்புகளும் உங்கள் விழிகளுக்கு வெறும் தூசுகளாகவே தென்படும். அத்துடன், உள்ளத்தில் தோன்றும் தன்னம்பிக்கையும், இலட்சிய தாகமும் உங்களை மென்மேலும் ஊக்கப்படுத்தி உற்சாக்கமூட்டும். அதனால் வெற்றி மேல் வெற்றி உங்கள் வந்து சேரும். ஆம், வியர்வைத் துளிகளே உங்களுடைய வெற்றியின் விதைகள் என்பதை உணர்ந்து கொண்டு, நொடிகள் தோறும் வியர்வைத் துளிகளைச் செயல் என்னும் வயல்களில் விதையுங்கள். வெற்றியின் அறுவடைக்கு உலகமே உங்கள் பின்னால் வரும்.

முயலுங்கள்!
முடியாது என்பது கிடையாது
என்பதை உணருங்கள்!

ஆம்!
“முடியாது” என்பதைக்கூட
முயற்சித்த பிறகுதான்
முடிவு செய்யவேண்டும்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2004

கடவுள் பிரபஞ்சம் மனிதன்
மனித வளமேம்பாடு
வியர்வைத் துளிகளை விதைப்போம்
யாமறிந்த சிலம்பொலியார்
சிகரத்தை நோக்கி…
பொங்கல் வாழ்த்து
ஆசையும் ஆரோக்கியமும்
உள்ளத்தோடு உள்ளம்
சிறந்த நண்பர்கள் வெற்றியின் தூண்கள்
கேட்காதீர்கள் கொடுக்கப்படும்
மனதின் ஆற்றலை வளர்க்கும் மலேசியவாவின் தமிழ்க் காதலர்
திடமான தன்னம்பிக்கை
நிரந்திர வெற்றிக்கு உழைத்திடுவோம்
கொடிது கொடிது.. திறமையில் வறுமை
நம்மைப் பிணைக்கும் சங்கிலி
நினைவாற்றல் பயிற்சி வித்தகர்
பொங்கல் சூளூரை!
ஆசிரியர் சு.செ. ஆண்டு பல வாழ்க!
தாரக மந்திரம்
வளரும் தலைமுறைக்கு வழிகாட்டி
தாத்தா சொன்ன தன்னம்பிக்கைக் கதை
நீங்களும் எழுத்தாளராகலாம்
பவளவிழா காணும் பண்பாளர்
சித்திரச் சிலம்பின் வித்தகப் பரல்
உளிபட்டால் சிலையாகலாம் உழைத்திட்டால் வளமாகலாம்
புத்தாண்டில் புறப்படு!
மாணவர் பெற்றோர் பக்கம்