Home » Articles » எங்கும் வெற்றி எதிலும் வெற்றி

 
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி


இராமநாதன் கோ
Author:

நீங்கள் எப்படி?
டாக்டர்.ஜி. இராமநாதன்

பிரபல பாடகர் சுமார் நாற்பது ஆண்டுகளாக இசையுலக சாம்ராஜ்யத்தின் ராஜாவாக வாழ்ந்தவர். அவருடைய பாடல்கள் பட்டி தொட்டிகளிலெல்லாம் ரசிக்கப்படுகிறது.

ஆனால் அவருக்கு வாழ்க்கையே வெறுப்பு. தனக்கு உரிய கௌரவம் இல்லை என்ற மனக்குறை. தன்னுடைய கடந்த வாழ்க்கையைப் பற்றிய விரக்தி. இதற்கு மேல் அத்துறையில் பெரிய சாதனைகளை படைக்க முடியாது என்று கூட சொல்லலாம்.

அப்படிப்பட்ட மனிதருக்கு ஏன் மகிழ்ச்சியில்லை. அவரது சாதனைகள் வெற்றியில்லையா?

அந்தக் கால ராஜாக்களின் வாழ்க்கையையும் நமது நடைமுறை வாழ்க்கையையும் சற்று ஒப்பிட்டுப் பார்ப்போம்.

அரசர்களுக்கு பெரிய அரண்மனை இருந்தது. இப்போது நம்மில் பலருக்கும் போதுமான அளவில் வீடு உள்ளது. அவர்களுக்குக் கிடைத்தது போல திருப்தியான உணவு, நீர் போன்ற வசதிகள் இருந்த இடத்திலேயே கிடைக்கின்றன.

அந்தக் காலத்தில் இல்லாத மின்சார வசதிகள், டி.வி, சினிமா, போக்குவரத்து வசதிகள் உள்பட எண்ணற்ற அம்சங்களை ஒப்பிட்டால் பழையகால ராஜாக்களைவிட அதிக வசதிகளை இன்றைய சராசரி மனிதன் அனுபவிக்கிறான் என்றாலும், அவனுக்கு ஏன் மகிழ்ச்சியில்லை. இதெல்லாம் வெற்றியில்லையா?

நம் வெற்றிகளைப் பாதிக்கின்ற விஷயங்களை இங்கு ஆய்வோம்.

மன உளைச்சலால் அமைதியின்மை.

கடந்த காலத்தின் கசப்பான நினைவுகளை சுமந்து கொண்டேயிருத்தல்.

சுயநலத்தை மட்டுமே எண்ணி பிறருக்கு உதவாமை.

குறுகிய கண்ணோட்டத்தால் புதிய வாய்ப்புகளை இழத்தல்.

மிகச் சிறிய பிரச்சனைகளையும் பெரிதாக்கிப் பார்த்தல்.

பணம் மட்டுமே பெரிது என்ற வகையில் பண்புகளைத் தவறுதல்.

நல்ல அம்சங்களை மறந்து விடுதல்.

பிறர் ஏதாவது விமர்சித்தால் உடனே மனமுடைதல்.

வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வுகளை ஏற்காமை.

புதுமையாக செயல்படாமல், விருப்பமில்லாத வேலையை செய்து கொண்டிருத்தல்.

எல்லா நேரங்களிலும் எதாவது ஒரு கவலையை சுமந்து கொள்ளுதல்.

ஏதாவது ஒன்றுடன் தம்மை ஒப்பிட்டு தாழ்த்திக் கொள்ளுதல். ( பிற மனிதர்களுடைய பதவி, பணம், புகழ்)

நமக்குள் வாய்ப்புகளால் உள்ள நல்ல அம்சங்களைவிட அதன் சிக்கல்களால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளோம் என்றால் அது மிகையாகாது. குறிப்பாக வேலை செய்யுமிடம், செய்தித் தொடர்பு சாதனங்களான பேப்பர், டி.வி. போன்றன, சமூக சூழ்நிலையில் உள்ள குறைபாடுகள், அரசியல் நிலை போன்ற பல்வேறு காரணங்களால் மனிதனின் மனதில் குழப்பங்கள் நிறைந்து விடுகின்றன.

ஓஷோ சொல்கிறார்;

” வாழ்க்கையின் மிகப்பெரிய விஷயங்களே கிடையாது. சிறு சிறு சம்பவங்களினாலேயே நமது வாழ்க்கை உருவாகிறது”

எப்படிச் செயல்படுகிறீர்கள்?

எப்படி எழுதுகிறீர்கள்?

எப்படி நடக்கிறீர்கள்?

எப்படிப் பேசுகிறீர்கள்?

என்ன பேசுகிறீர்கள்?

இவற்றைச் சார்ந்தே பெரும்பாலும் விஷயங்கள் உள்ளன. இந்த எல்லா தகவல்களுக்கும் பிறப்பிடம் சிந்தனையே.

சிந்தனைகள் சுத்தாமக உயர்வாக இருந்தால் மிகச்சிறிய விஷயங்களும் பெரியதாக மாறுவதை உணருவீர்கள்.

சிந்தனைகளிலிருந்து செயல்களும் செயல்களிலிருந்து வெற்றிகளும் உருவாகின்றன.

( தொடரும்…….)

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2003

அனைத்தும் உணர்!
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க
வெற்றி முகம்
இமயமும் தாழட்டும்….
பல்வேறு திறன்களை வளர்ப்போம்
பார்க்கும் கோணத்தை மாற்றுங்கள்
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி
ஒரு மணி நேரப் படிப்பு 10 நிமிட புத்துணர்வு
உள்ளத்தோடு உள்ளம்
தோள்கள் தொட்டு பேசவா
பப்பாளிப் பழம்