Home » Articles » இமயமும் தாழட்டும்….

 
இமயமும் தாழட்டும்….


ராஜ்கவி
Author:

கனவெனும் மாளிகைக்
கதவுகள் திறக்கவே
உழைப்பை நீ கையில் எடு….

நனவாகும் எல்லாமே
நாளைய பொழுதிலே
நம்பிக்கை யோடிரு….

உதிக்கின்ற சூரியனும்
உன்புகழ் பாடட்டும்
ஒய்வுக்கு ஒய்வுகொடு….

விதியென்று ஒன்றில்லை
எல்லாமும் மதிதானே
விழிதிறந்து வானம் தொடு…

ஒரு நாள் வாழ்வெனினும்
ஒளிவீசி மணம்வீசி
உதிர்கின்ற மலரைப் பாரு….

அருஞ்செயல்கள் செய்யாமல்
அணைவதென்ன வாழ்க்கையென்று
அதுசொல்லும் சேதியைக் கேளு…

மலரட்டும் பொற்காலம்
மனிதா உன் வியர்வையிலே
மகுடம் இங்கு உன்கையிலே….

தலைமுறைகள் வாழ்த்தட்டுமெ
சாதனைகள் ஓங்கட்டும்
தாழட்டும் இமயமலையே….!

சி.சு. முருகேசன்
நெல்லை.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2003

அனைத்தும் உணர்!
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க
வெற்றி முகம்
இமயமும் தாழட்டும்….
பல்வேறு திறன்களை வளர்ப்போம்
பார்க்கும் கோணத்தை மாற்றுங்கள்
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி
ஒரு மணி நேரப் படிப்பு 10 நிமிட புத்துணர்வு
உள்ளத்தோடு உள்ளம்
தோள்கள் தொட்டு பேசவா
பப்பாளிப் பழம்