Home » Articles » வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க

 
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க


சண்முக வடிவேல் இரா
Author:

தொடர் (15)

என்னடா கல்யாணம் பண்ணியே, பொண்டாட்டி வீட்டில எதுனாச்சும் தந்தாங்களா?”

புதுமாப்பிள்ளை இதற்குப் பதில் சொல்கிறார்,

” சட்டைக்கு வேண்டிய பட்டனெல்லாம் குடுத்திருக்காரு. தவணை முறையில் ஒவ்வொரு கையா குடுப்பாறாம். அப்புறமா முன் பக்கம் பின்பக்கம்னு தருவாராம்… ஃப்ரண்ட் வீல இப்பத் தருவாராம். அடுத்த மாசம் பேக் வீலாம். இருபத்து நாலு தவணையில் பைக் தருவாராம்.

இவ்வாறு மாப்பிள்ளை மாமனாரை நண்பரிடம் கேலியாகக் குறிப்பிடுகிறார். தவணை முறை வந்த பின் இவ்வாறான கேலி கிண்டல்கள் சகஜமாகி விட்டன.

தவணை முறையில் பொருள்களை வாங்குவது என்பது நடுத்தர மக்களிடம் செய்யப்படும் வியாபாரத் தந்திரம்.

தவணை முறையில் எல்லாப் பொருள்களையும் வாங்கலாம். தேவையானதையும் வாங்குகிறோம். தேவையற்றதையும் வாங்குகிறோம்.

முதலில் தரவேண்டிய தொகை குறைவு என்பது ஒரு கவர்ச்சியான அம்சம் ஃபிரிட்ஜ் வீட்டில் இருப்பது இன்று ஒரு அந்தஸ்தின் அடையாளம். ஃபிரிட்ஜ் தேவையோ இல்லையோ கௌரவம் தேவை.

முழுத்தொகையும் தந்து வாங்க நம் பொருளாதார நிலை இடந்தரவில்லை. சரிதவணை முறையில் தருகிறேன் என்கிறார்கள். வாங்கித்தான் போடுவோமே என்று ஆசைப்படுகிறது மனம். மனைவியின் தொண தொணப்பு குறையும். வெய்யில் நேரத்தில் ஜில்லென்று தண்ணீர் குடிக்கலாம். தயிர் புளிக்காதாமே! குழம்பை ஒரு வாரம் வைத்துக் கொள்ளலாமாம்! இப்படிச் சில நப்பாசைகள்.

வீட்டில் அதற்கென இடமில்லை. அதனாலென்ன மனம் இருந்தா மார்க்கமுண்டு. முன் ஹாலில் ஒரு ஓரம். எலக்ட்ரீஷியனுக்குக் கொஞ்சம் வேலை. அழைத்து வந்து ஏற்பாடு செய்துவிட வேண்டியதுதான். கொஞ்சம் செலவாகுமோ? ஆகிந்தான். குழம்பை ஒரு வாரம் வைத்துக்கொள்வதென்றால் கொஞ்சம் செலவுதான் ஆகும்! கரண்ட் பில் கூடுதலாகும். ஆகட்டுமே. தயிர் புளிக்காமல் இருக்குமே!

மனம் பலவாறாகத் தள்ளாடித் தள்ளாடிப் பின் ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறது! என்ன முடிவு? இன்றே கடைக்குப் போய் வாங்கிவிடுவது என்றும் எலக்ட்ரீஷியனை உடனே போய் அழைத்து வருவது என்றும் முடிவாகிறது.

ஆரம்பத்தில் ஆயிரம் ரூபாய்தான். பிறகு தொடர்ந்து மாதா மாதம்? காய்களிகளை வைத்தால் அப்படியே இருக்கும் என்றார்கள். மாதாந்திரத்தவணை கட்டிவிட்டால் காய்கறி வாங்குவது என்பதே என்பதே கஷ்பமாகி விடுகிறது.

காற்கறி வாங்கி ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதைவிட ஃப்ரிட்ஜ் வாங்கி கௌரவத்தைப் பாதுகாப்பதுதான் முக்கியமாகிவிட்டது. முதற்கோணல் முற்றுங்கோணல் என்பது போல, ஃப்ரிட்ஜ் வாங்கியாயிற்று. அதில் வைத்துக் காப்பாற்ற கூல் டிரிங்க்ஸ் வேண்டாமா? அதில் ஒரு பத்து பாட்டில் வாங்கிவந்து வைப்பதும் வருவோர்க்கு அதில் ஒன்றை உடைத்துக்கொடுத்து கௌரவம் பெறுவதும் இதற்காகவே வரும் நண்பர்களின் தொகை அதிகமாவதும் கட்டுப்டியாகிற செலவா?

வீட்டில் மோர் வைத்துச் சாப்பிட்டதும் வருவோர்க்கும் அதையே தந்து அருந்தச் செய்த்தும் நமக்கும் பிறர்க்கும் உடல் நலத்துக்கு உகந்ததாக இருந்தநிலை மாறி, அதிகமாகச் செலவு செய்து உடல்நலக்கோட்டை வருவித்துக் கொள்கிறோமே, இது தேவைதானா? எண்ணிப் பார்க்க வேண்டிய விஷயம்.

ஆரம்பத்தில் குறைவான தொகையைத் தந்து பொருளை எடுத்துவந்து விடுகிறோம் என்பதால் தவணை முறை நம்மைக் கவர்ந்திழுக்கிறது. ஆனால், அதற்கான வட்டி முதலியவைகளைக் கட்டிமுடித்துக் கண்க்குப் பார்த்தால்தான் தெரிகிறது. எவ்வளவு அதிகம் கொடுத்திருக்கிறோம் என்பது.

எந்தவொரு பொருளையும் வாங்குவதற்கு முன் இது நமக்குத் தேவையா? என்பதைப் பலமுறை சிந்திக்க வேண்டும்.

நான் பலபேர் வீடுகளில் பார்த்திருக்கிறேன் ” வாங்குவம் கிளீனர்” ஒன்று இருக்கும். அப்படியே இருக்கும். உபயோகிப்பது என்பது எப்போதோ நடைபெறுகிற திருவிழா தான். 4000, 5000 என்று அதில் பணமுடக்கம். பெரிய பங்களாக்களில் அது தேவைப்படலாம். எளிய நம் வீட்டுக்கு அது தேவையாற்றதுதானே! அந்தக் கருவியை ஒரு மூலையில் பார்க்கும் போதெல்லாம் ” 5000 போன அதிசயமாக ” த் நம்மை எரிச்சல் படுத்துகிறது.

அதிகப்படியான வட்டிதொகையை இழக்கிறோம். இழந்து, வீட்டிற்கு அன்றாடப் பயன்பாட்டுக்கு உதவாத, அதிகச் செலவை உண்டாக்கக் கூடிய ஒன்றை வாங்கிவந்து வீட்டை அடைத்து வைக்கிறோம்.

பொருள் வாங்கும் முன் சற்று அதிகமாகச் சிந்தித்தால் வீட்டிலுள்ளவர்கள் நம்மைக் ” கருமி ” என்றும் ” கஞ்சன் ” என்றும் ” அனுபவிக்கத் தெரியாத அப்பாவி” என்றும் இகழ்வார்கள் என்பது உண்மை தான். ஆனால், பணம் கைவிட்டுப் போனதும் அன்றாடச் செலவுக்கே அல்ல்ல் படும்போது இவர்கள் உதவப்போகிறார்களா? அப்போதும் நம்மை இவர்கள் இகழத்தான் போகிறார்கள். கருமி என்று ஏசுவதோடு இருக்கட்டும். பின்னர்” கையாலாகாதவன் ” என்ற வசவை வேறு வாங்கிக்கட்ட வேண்டுமா?

சில்லறையாக இவ்வாறு செலவு செய்து விட்டால், பின் நம்முடைய பெருங்கனவுகளான வீடு, மகள் திருமணம் முதலியவற்றுக்கு பெருங்கடன் வாங்கப்போகிறோமா? பெரிய அளவில் கடன் வாங்க நாம் தயாராயிருந்தாலும், கொடுப்பதற்கு யார் தயாராக இருக்கிறார்கள்?

” நான் ரெடி நீங்க ரெடியா?” என்று பாடிக் கொண்டு போகத்தான் முடியுமா?

அவசர அவசியம் என்று கருதி அதிக வட்டிக்குக் கடன் வாங்கியவர்களின் கதியைப் பார்த்திருக்கிறோம்!.

என் நண்பர் ஒருவருக்கு பத்தாயிரம் ரூபாய் தேவைப்பட்டது. அவசரம் என்பதால் 100க்கு மாதாமாதம் வட்டி கட்டவே கஷ்தப்பட்டார். அசலை எவ்வாறு திருப்ப முடியும்?

ஒரு சமயம் கடன்தந்தவர் அசலைக் கேட்டு வற்புறுத்தினார். 3 ரூபாய் வட்டிக் கடனை அடைக்க 5 ரூ வட்டியில் கடன் வாங்கினார். வட்டிக்கு மாதா மாதம் கடன் வாங்கு வட்டி தரவேண்டிய நிலை.

கந்துவட்டி, மீட்டர் வட்டி என்று மாறி மாறிப் போய் இன்று மூன்று லட்சரூபாய் கடன்காரராக இருக்கிறார். இவர் நிலை பரிதாபகரமானது.

பத்தாயிரம்தான் கடன் வாங்கினார். இரண்டு லட்சத்து தொண்ணூறாயிரம் வட்டிதான். ‘ வட்டியே மனுஷனைச் சாப்பிட்டுடும்’ என்பார்கள். இவரைச் சாப்பிட்டுவிட்டதே!

ஒவ்வொரு பொருளையும் வாங்கும் முன்பு ஒரு முறைக்கு ஒன்பது முறை சிந்திக்க வேண்டும். அப்பொருள் இல்லாமலே சமாளிக்கலாம் என்றால் சமாளித்துவிடுவதே அறிவுடைமை. சிறிதளவே பணம் செலுத்தினால் போதும் என்பது நம்மைப் பிடிக்க வீசப்படும் தூண்டில் என்பதை மறவாமல் இருப்போம்.

அதிக வட்டிக்குப் பணம் கொடுப்பவர்கள் சற்றே எண்ணிப் பார்த்தால், அது எவ்வளவு கொடுமை என்பது தெரியும். அதிக ஆதாயத்துக்கு ஆசைப்பட்டால்” உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணா” என்று ஆகலாம். கவனமாக இருப்போம்.

நான் தனிக்குடித்தனம் செய்யப்புறப்பட்டேன். என் தந்தையார் தன் அனுபவ அறவால் எனக்கு இரண்டு அறிவுரைகளை மட்டும் முதலாகத் தந்து குடியமர்த்தினார்.

1. கடன் வாங்காதே

2. ஜாமீன் கையெழுத்துப் போடாதே.

இவை இரண்டையும் இன்று வரை மறவாமல் கடைப்பிடித்து வருகிறேன்.

செலவுக்குக் கடன் வாங்குகிறோம் என்றால் வருவாயைக்காட்டிலும் அதிகமாகச் செலவிடுகிறோம் என்று பொருள். செலவைக்குறைக்க வேண்டும் என்று உணர வேண்டும். ஜாமீன் கையெழுத்துப் போட்டால் அவர் கடனை அடைக்காத போது நாம் அகப்பட்டுக் கொள்வோம். பொருள் நட்டமும் நட்பு நட்டமும் வந்துசேரும்.

தனியாக குடிவந்தேன். நான், என் மனைவி, ஒரு பெண்குழந்தை எனச் சிறிய குடும்பந்தான். 22 ஆம் தேதி வந்தது. கையில் காசே இல்லை. தந்தையாருக்குத் தந்த வாக்குறுதியின் படி கடன் வாங்கவும் இல்லை. வெளியில் சென்றால் டீ குடிக்கும்படி சந்தர்ப்பம் வாய்க்கும். ” கையில் பணமில்லாத போது டீ ஒரு கேடா?” என்று வெளியில் செல்வதே இல்லை.

திருவாரூரில் அறிஞர் அண்ணா பேசும் கூட்டம். பேச்சைக் கேட்க ஆசை. போனால் செலவுக்குக் கையில் காசு இல்லை. இரவு உணவு முடித்தபின், படுக்கையில் படுத்தால் தூக்கமும் வரவில்லை.

எவ்வளவு தொலைதூரமெல்லாம் போய் அண்ணா பேச்சைக் கேட்டிருக்கிறோம். நம் ஊரிலேயே வந்து அண்ணா பேசுகிறார். கேட்டகாமல்இருந்துவிடலாமா? புறப்படு என்ற மனத் தூண்டல்.

துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு புறப்பட்டேன். இரவு உணவு முடித்தபின், படுக்கையில் படுத்தால் தூக்கமும் வரவில்லை.

எவ்வளவு தொலைதூரமெல்லாம் போய் அண்ணா பேச்சைக் கேட்டிருக்கிறோம். நம் ஊரிலிலயே வந்து அண்ணா பேசுகிறார். கேட்காமல் இருந்துவிடலாமா? புறப்படு என்ற மனத் தூண்டல்.

துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு புறப்பட்டேன். இரவு 10.00 மணி. அண்ணா இன்னும் வரவில்லை. இதோ வருகிறார். அதோ வருகிறார் என்று கூறுகிறார்கள்.

அப்போது பார்த்து என் நெருங்கிய நண்பர் வந்தார். ” ஐயா இங்கயா நிக்கிறீங்க? வாங்க ஒரு டீ குடிச்சிட்டு அந்த வீட்டுத் திண்ணையில உட்காரலாம். நல்ல இடம். வாங்க முதல்ல போயி ஒரு டீ குடிப்போம்”. என்று அவசரப்படுத்தினார்.

எனக்கும் டீ குடிக்கவேண்டிய நிலைதான். காசில்லை அவர் காசை எதிர்பார்த்து நாம் போகலாமா? வேண்டாம். என்று நினைத்து ” டீ வேண்டாம் வயிறு என்னவோ போல் இருக்கிறது ” என்றேன்.

” எல்லாம் டீ குடிச்சா சரியாயிடும். வாங்க, இப்ப அண்ணா வந்திடுவார். அமைதியாப் பேச்சு கேக்கலாம்” என்று வற்புறுத்தவே

” ஐயா என்னய்யா நீங்க? எதுவேணும்னாலும் சாப்பிடலாம். காசு இருக்கு வாங்க”.

இதுவரையாரிடமும், ‘ காசு இருக்கா?’ ன்னு கேட்காத நான் அன்று கேட்டது நண்பருக்கு மட்டுமல்ல எனக்கே ஆச்சரியமான ஆச்சிரியந்தான். எனினும் கடன் வாங்கக்கூடாது என்ற உறுதியைக் காக்கவே அவ்வாறு கேட்க நேர்ந்தது. என்பதை நினைக்கும்போது இனிய அனுபவமாகவே இருக்கிறது.

(தொடரும்…..)

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2003

அனைத்தும் உணர்!
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க
வெற்றி முகம்
இமயமும் தாழட்டும்….
பல்வேறு திறன்களை வளர்ப்போம்
பார்க்கும் கோணத்தை மாற்றுங்கள்
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி
ஒரு மணி நேரப் படிப்பு 10 நிமிட புத்துணர்வு
உள்ளத்தோடு உள்ளம்
தோள்கள் தொட்டு பேசவா
பப்பாளிப் பழம்